என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிரச்சாரம்"
- மீனாம்பாறை பகுதியில் சுமார் 40 சென்ட் பரப்பளவில் அரசு நிலம் உள்ளது.
- பட்டா வழங்கும் வரை யாரும் இடத்தை ஆக்கிரமிக்க கூடாது.
பல்லடம், செப்.22-
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி மீனாம்பாறை பகுதியில் சுமார் 40 சென்ட் பரப்பளவில் அரசு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நேற்று மீனாம்பாறை மற்றும் அவரப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூடாரம் அமைத்து ஆக்கிரமிக்க முயன்றனர்.இது பற்றி தகவல் அறிந்து வந்த பல்லடம் வருவாய் ஆய்வாளர் அனிதா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் பொதுமக்கள் காலி செய்ய மறுத்தனர். அப்போது வருவாய் ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆய்வுக்குப்பின் பட்டா வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும். ஆக்கிரமிப்புகளை நீங்களே அகற்றிக் கொள்ளுங்கள். இல்லையெனில் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்படும். பட்டா வழங்கும் வரை யாரும் இடத்தை ஆக்கிரமிக்க கூடாது.
மீறினால் கம்பி வேலி அமைத்து இடத்தை பாதுகாப்பதுடன் பொது பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார்.
- பெரம்பலூரில் மின் ஊழியர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்
- ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டு பிரசுரம் விநியோகம்
பெரம்பலூர்,
அனைத்து வீடுகளிலும் தற்போதுள்ள மின்சார ரீடிங் மீட்டருக்கு பதிலாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை அமல்படுத்திட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனை கண்டித்தும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், மின் ஊழியர்களின் வேலையிழப்புகள் குறித்தும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள உழவர் சந்தை முன்பு விழிப்புணர்வு பிரசார இயக்கம் நடந்தது. மாநில செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். இதில் மின் ஊழியர்கள் உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
- வருகிற 30-ந் தேதி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் டெல்லி நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம்.
- போராட்டம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர்.
முத்துப்பேட்டை:
100 நாள் வேலை திட்டத்திற்கு தேவையான நிதியை குறைத்து வழங்கியுள்ள மத்திய அரசை கண்டித்து வருகிற மே 30-ந் தேதி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் டெல்லி நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.
இந்தநிலையில் நேற்று முத்துப்பேட்டை அடுத்த பாண்டி, வேப்பஞ்சேரி ஊராட்சி மற்றும் மங்கலூர் கிளைகளில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராஜா, ஒன்றிய செயலாளர் சிவசந்திரன், ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அன்பு செல்வம், சுப்ரமணியன், மங்கல் சம்பத், காசிநாதன் ஆகியோர் சந்தித்து போராட்டம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அப்போது, பாண்டி ஊராட்சியில் 20-க்கும் மேற்ப்டட தொழிலாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்ட விவசாய தொழிலாளர் சங்கத்தினருக்கு நிதி அளித்து பாராட்டினர்.
- விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. பட்டியலின அணி சார்பாக சென்னையில் சங்கர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. பட்டியலின அணி சார்பாக சென்னையில் சங்கர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.
விழுப்புரம் பா.ஜ.க. தெற்கு மாவட்ட தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.ஏ.டி. கலிவரதன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பட்டியலின அணி மாவட்ட நிர்வாகிகள், ராஜசேகர், அங்காளன், நாகராஜ், கலையரசன், முரளி, சதாசிவம் , பார்த்திபன், வெங்கடேசன், சுந்தர்ராஜன், எல்.குமாரசாமி, குபேரன், பிரியா, ஆன்மீக பிரிவு மாவட்ட நிர்வாகிகள் சந்திரசேகரன், வெங்கட்ராமன், சுரேஷ் குருக்கள், விக்கிரவாண்டி ஒன்றிய நிர்வாகிகள் வெங்கடகிருஷ்ணன், ஞானவேல், முருகன், தங்கராசு, காணை ஒன்றிய நிர்வாகிகள் வினோத், பிரச்சார பிரிவு மாவட்ட நிர்வாகிகள் தனசேகரன், சுகுமார், குணசேகரன், பாலா, விழுப்புரம் நிர்வாகிகள் விஜயன், குமரகுரு, ஆறுமுகம், திருக்கோவிலூர் நிர்வாகிகள் பத்ரி நாராயணன், பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர்கள ஜோதி, ராஜா, நாகராஜ், செல்வகுமார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தியாகு, மேற்கு நிர்வாகி ஜெயசீலன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் தலைவர் பிரபாகரன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார், ஞானவேல், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் எஸ்.சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் நடைபெற்றது
- வட்டார கல்வி அலுவலர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கை குறித்த வாகன பிரச்சாரம் நடைபெற்றது. அக்கட்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை பிரச்சார வாகனத்தை வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆடல் பாடல், விளையாட்டு செயல்பாடுகள் வாயிலாக பாடங்களை கற்றுக் கொள்ளும் என்னும் எழுத்தும் திட்டம், அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கான புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. பெற்றோர்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரகாஷ், ஆசிரியர் பயிற்றுனர் பாரதிதாசன், சுரேஷ்குமார், இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரஹமத்துல்லா மற்றும் பள்ளி மேலாண்மைகுழு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.
- பேராவூரணி வட்டாரத்தில் 15 இடங்களில் பிரச்சார வாகன விழிப்புணர்வு நடைபெற்றது.
- அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு குறித்து எடுத்து கூறப்பட்டது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி தலைமையில் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் நடைபெற்றது.
வட்டார கல்வி அலுவலர்கள் கலாராணி, அங்கையர்கண்ணி ஆகியோர் பெற்றோரிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேம்பையன், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண், இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் ராமநாதன் மற்றும் தன்னார்வலர்கள் சந்ரோதயம், ராஜேஸ்வரி, தனலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பேராவூரணியில் நடைபெற்ற பிரச்சார வாகன தொடக்க நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேசன், ஆசிரியர் பயிற்றுனர்கள் சரவணன், முனிசாமி, சிவமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி வட்டாரத்தில் 15 இடங்களில் பிரச்சார வாகன விழிப்புணர்வு நடைபெற்றது.
அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசுப்பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு, 14 வகையான விலையில்லா நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் குறித்து எடுத்து கூறப்பட்டது.
- திட்டச்சேரி பஸ் நிலையத்தில் பிரச்சார வாகனத்தை வரவேற்கும் நிகழ்ச்சி நடைெபற்றது.
- திருக்கண்ணபுரம், கோட்டூர், வடகரை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட பள்ளி கல்வி துறை சார்பில் நம் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் என்ற பிரச்சார வாகனத்தை நாகையில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். பிரச்சார வாகனம் நேற்று முன்தினம் திட்டச்சேரி வந்தடைந்தது. திட்டச்சேரி பஸ் நிலையத்தில் பிரச்சார வாகனத்தை வரவேற்கும் நிகழ்ச்சிநடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார்.வட்டார கல்வி அலுவலர்கள் ரவி,ஜெயந்தி,வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு)சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திட்டச்சேரி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வேம்பு வரவேற்றார். இதில் தமிழக அரசு பள்ளிகளில் உள்ள வசதிகள்,நலத்திட்ட உதவிகள் மற்றும் இட ஒதுக்கீடு பயன்பாடுகள் ஆகியவற்றை விளக்கி மாற்று ஊடக மைய யாழிசை கலைக்குழுவினரால் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதில் ஆசிரியர்கள் நடராஜன், பிரபாகரன், பொற்கொடி, அகல்யா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.தொடர்ந்து வாகனத்தில் திருமருகல், திருச்செங்காட்டங்குடி,திருக்கண்ணபுரம், கோட்டூர்,வடகரை உள்ளிட்ட பகுதிகளிலும் பிரச்சாரம் செய்யப்பட்டது.
- திருக்காட்டுப்பள்ளி சுற்று வட்டார கிராமங்களுக்கு சென்று பிரச்சார பணிகளில் ஈடுபடும்.
- பூதலூரில் பிரச்சார வாகனம் மேற்கொள்ளப்பட்டது.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்து அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்க விழா பூதலூர் வட்டாரத்தில் பூதலூர் வட்டார கல்வி அலுவலர்கள் ரமாபிரபா, கோமதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தலைவர் மெய்யழகன், பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன், பேரூராட்சி துணைத் தலைவர் ரமணி, பேரூராட்சி கவுன்சிலர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள வசதிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் மற்றும் இட ஒதுக்கீடு பயன்பாடுகள் ஆகியவற்றை விளக்கும் பிரச்சார வாகனம் திருக்காட்டுப்பள்ளி சுற்று வட்டார கிராமங்களுக்கு சென்று பிரச்சார பணிகளில் ஈடுபடும். திருக்காட்டுப்பள்ளி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் முருகானந்தம் வரவேற்று, நன்றி கூறினார்.
இதேபோல பூதலூரில் பிரச்சார வாகனம் பிரச்சாரம் மேற்கொண்டது.
- மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகிறது.
- அரசுப் பள்ளிகளில் கடந்த 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் தொடங்கி வைத்தார் .
நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் திருநாவு க்கரசு, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவித் திட்ட அலுவலர் ரமேஷ் குமார், உதவி திட்ட அலுவலர்ரா மலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பிரச்சார வாகனம் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்க ப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து பொது மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்து கிறது. மேலும் பொது மக்களுக்கு அரசு பள்ளிகளில் மாணவ ர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து துண்டு பிர சுரங்கள் வழங்கப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் கடந்த 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இவ்வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெற தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொதுமக்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார்.
- தீ தொண்டு வார விழாவை முன்னிட்டு நடைபெற்றது
- ரெயில் நிலையத்தில் துண்டு பிரசுரம் விநியோகம்
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் செந்துறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பாக தீ தொண்டு வார விழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) அழகானந்தம், சரவணன், சிங், செந்தமிழ்செல்வன் ஆகியோர் அடங்கிய குழு செந்துறை ரெயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கினர்.
- உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
- தீ விபத்து தடுப்பு குறித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் ஒரு வாரம் தீ தொண்டு நாள் வாரம் அனுசரிக்கப்பட உள்ளது.தீயணைப்பு பணிகளின் போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்ப ட்டது.
திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலைய அதிகாரி சகாயராஜ், போக்குவரத்து அதிகாரி முருகன் ஆகியோர் தீயணைப்பு வீரர்கள் நினைவாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னார்கள் .
இந்தநிகழ்ச்சியில் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டனர்.வரும் 20 ம் தேதி வரை தீ விபத்து தடுப்பு குறித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.
- தூய்மை குறித்த விழிப்புணர்வு பிரசாரம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வருகிறது
- கலெக்டர்,நகர்மன்ற தலைவர், ஆணையர்உள்ளிட்டோர் பங்கேற்பு
பெரம்பலூர்,
பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்னும் தலைப்பில் நகரப் பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. தூய்மையான சுற்றுச்சூழலை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தன்னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் தீவிர தூய்மைப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், ஒவ்வொரு மாதமும் 3-வது புதன்கிழமைகளில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை குறித்த விழிப்புணர்வு பிரசாரம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், நகராட்சி ஆணையர் ராதா மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்