search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூமிபூஜை"

    • கமுதி முஷ்டகுறிச்சியில் பஸ் நிறுத்தம் கட்ட பூமிபூஜை நடந்தது.
    • இதில் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிளி மற்றும் நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி-கீழ்குடி சாலையில் உள்ள முஷ்டகுறிச்சி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி மக்கள் மெயின் ரோட்டுக்கு வந்து தான் மற்ற ஊர்களுக்கு செல்ல முடியும். இங்கு பஸ் நிறுத்தம் இல்லாததால், வெளியூர் செல்பவர்கள், வெயில் மற்றும் மழையில் நின்று சிரமப்படும் நிலை இருந்தது. இங்கு பஸ் நிறுத்தம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்று தெற்கு மாவட்ட தி.மு.க. கவுன்சிலர் போஸ் சசிக்குமார் தனது மாவட்ட கவுன்சில் நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிறுத்த கட்டிடம் கட்ட ஒப்புதல் அளி்ததார். இதையடுத்து பூமி பூஜை நடந்தது. இதில் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிளி மற்றும் நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்கும் பணி பூமிபூஜையுடன் இன்று தொடங்கியது
    • தற்போது அந்த சிற்ப கல் தூண்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ராஜகோபுர பகுதியில் வீர வசந்தராயர் மண்டபம் அமைந்து உள்ளது. இங்கு கடந்த 2018-ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீர வசந்தராயர் மண்டபம் முற்றிலும் கருகி சேதம் அடைந்தது.

    இதனைத் தொடர்ந்து தமிழக சிற்ப கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியுடன் மண்டபத்தை பாரம்பரிய முறைப்படி புனரமைப்பது என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்காக அரசு 18.10 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து இருந்தது.

    இந்த நிலையில் வீர வசந்தராயர் மண்டபத்தை சீரமைப்பதற்காக நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கல்குவாரியில் இருந்து கற்கள் வெட்டி எடுக்கப் பட்டு, மதுரைக்கு கொண்டு வரப்பட்டது.

    அந்த பிரம்மாண்ட கற்கள், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான செங்குளம் கிராமத்தில் பத்திரமாக பாதுகாக்கப் பட்டன. அங்கு குவாரி கற்களை, சிற்பத் தூணாக மாற்றும் பணி மும்முரமாக நடந்து வந்தது. தற்போது அந்த சிற்ப கல் தூண்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. இதன் ஒரு பகுதியாக முதல் சிற்பத் தூண் நிர்மாணிக்கும் பணி, இன்று காலை நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜை நடத்தி மறுசீரமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அங்கு மறுசீரமைப்பு பணிகள் மும்முரமாக தொடங்கி நடந்து வருகிறது. வீர வசந்தராயர் மண்டபத்தில் ஒட்டு மொத்தமாக 40 தூண்கள் நிர்மாணிக்கப்பட உள்ளன. இதற்கான வேலைகள் படிப்படியாக தொடங்கி நடந்து வருகிறது.

    வீர வசந்த ராயர் மண்டப பூமிபூஜையின் போது கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், மீனாட்சி அம்மன் கோயில் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்படுகிறது.
    • 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாயும் அமைக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி வெங்கடாபுரம் ஊராட்சி லைன் கெல்லை கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்படுகிறது.

    அதே போல், கவேரிப்பட்டணம் குண்டலப்பட்டி ஊராட்சி கே.மோட்டூர் கிராமத்தில், கே.ஆர்.பி., அணை வலதுபுற கால்வாய் மீது சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பாலம் அமைக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி ஒன்றியம் அகசிப்பள்ளி ஊராட்சி வேட்டியம்பட்டி கிராமத்தில், மாநில நிதிக்குழு மானியத்தில், 6 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கல்வெட்டும், 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாயும் அமைக்கப்படுகிறது.

    கூலியம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், அம்மனேரி கிராமத்தில் 6 லட்சத்து 68 ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலையும், மற்றொரு இடத்தில் 4 லட்சத்து 93 ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலையும், 3 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாயும், ஒரு லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இரண்டு இடங்களில், முள்கம்பி வேலி மற்றும் கிரீன் செட்டும், சவுளூரில் 9 லட்சத்து 60 ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலை என மொத்தம் ரூ.82 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் ஒன்றிய செயலா ளர்கள் கன்னியப்பன், சோக்காடி ராஜன், பையூர் ரவி, மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, ஐ.டி.பிரிவு செயலாளர் வேலன் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், கட்சியின் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தரைமட்ட நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது.
    • 37.05 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் ஊராட்சியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சபரி நகர் மேல்நிலைத் தொட்டியில் இருந்து வடுகபாளையம் ரோடு மீன் குட்டை வரை 37.05 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையும், சித்தம்பலம் புதூரில் ரூ.10 லட்சம் மதிப்பில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்கும் விழாவும் நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு சித்தம்பலம் ஊராட்சி தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம், பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் புவனேஸ்வரி வரவேற்றார். திருப்பூர் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும்,திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் எம்.எல்.ஏ., இந்த நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தும், சாலை பணியை துவக்கி வைத்தார்.இதில் பல்லடம் முன்னாள் நகராட்சி தலைவர் பி.ஏ.சேகர்,சிவசக்தி சுப்பிரமணியம்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பானுப்பிரியா,வார்டு மெம்பர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பரமசிவம், ராஜேஸ்வரன், பானுமதி,பாலகுமார் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மக்களுக்கு போதிய அளவு குடிநீர் வருவதில்லை.
    • குடிநீர் குழாய் விரிவாக்க பணிகள் செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் ஊராட்சி மின் நகர், மகாவிஷ்ணு நகர் உள்ளிட்ட இடங்களில் குடிநீர் குழாய் இணைப்பு பற்றாக்குறையால் அந்த பகுதி மக்களுக்கு போதிய அளவு குடிநீர் வருவதில்லை.இதையடுத்து மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.6.5 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் விரிவாக்க பணிகள் செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவர் விஜயகுமார்,சண்முகசுந்தரம்,கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் ராமசாமி, சுப்பிரமணியம், மணியன், தங்கராஜ் சித்ரா மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பட்டக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் புதிய தார்சாலை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.
    • தார்சாலை அமைக்கும் பணியினை பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் யூனியன் பட்டக்குறிச்சி, அரியூர், பாறைப்பட்டி ஆகிய பகுதிகளில் ரூ.1.18 கோடியில் புதிதாக தார்சாலை அமைப்பதற்கு பூமிபூஜை நடைபெற்றது. யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொறியாளர் அருள்நாரயணன், ஊராட்சி மன்ற தலைவர் கலா ஜெயக்குமார், ஒன்றிய கவுன்சிலர் லில்லிபுஷ்பம், கிளை செயலாளர்கள் அரியூர் முருகையா, பட்டக்குறிச்சி சத்தியராஜ், உள்ளார் விக்கி, மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • பாலமேடு அருகே ஊராட்சி நடுநிலைப்பள்ளிக்கு ரூ.31 லட்சம் மதிப்பில் புதிய கட்டிட பூமிபூஜை நடந்தது.
    • அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் வலையபட்டி பள்ளிக்கு ஸ்மார்ட் டி.வி. வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலையபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30.82 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் பஞ்சு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வள்ளி, பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி இதயச்சந்திரன், வாட்டார கல்வி அலுவலர்கள் ஆஷா, ஜெஷிந்தா, தலைமை ஆசிரியர் ஞானசேகரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரமேஷ்ராஜா, இல்லம் தேவி கல்வி ஒன்றிய பொறுப்பாளர் சுதாகர், ஒப்பந்ததாரர் கண்ணன் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற கலை திருவிழாவில் மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் வலையபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்கள் பல்வேறு பரிசுகளை பெற்றனர். அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக நமக்கு நாமே திட்டத்தின் மூலம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் வலைய பட்டி பள்ளிக்கு ஸ்மார்ட் டி.வி. வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.

    • சிமெண்ட் சாலை, வடிகால்கள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது.
    • பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை பேரூராட்சியில் ரூ.1.50 கோடி மதிப்பில் சிமெண்ட் சாலை, வடிகால்கள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது.

    பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை வகித் தார். செயல் அலுவலர் மனோகரன், துணை தலைவர் அப்துல்கலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பேருராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் கிருஷ்ணன், மணிவண்ணன், லிங்கோஜிராவ் ,ஸ்ரீதர், சுமதி ,ரியானா பேகம், நாசிமா, கெளரி சென்னிரா, பிரேமா சேகர் மற்றும் அவைத்தலைவர் சீனிவாசன், துணை செயலாளர் இதயத்துல்லா, பொருளாளர் வெங்கடேஷ், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், மேலும் நாகராஜ், மஞ்சு, ஆனந்த் ,சல்மான் ,உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    • இளம்புவனம் கிராமத்தில் நீர் தேக்க தொட்டி கட்டும் பணிக்கு பூமி பூஜை விழா நடைபெற்றது.
    • எட்டயபுரத்தில் ரத்ததான முகாமையும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள இளம்புவனம் கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி கட்டும் பணிக்கு பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், எட்டயபுரம் பேரூர் செயலாளர் பாரதி கணேசன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், ஊராட்சி தலைவர் முத்து குமார், எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி, கோவில்பட்டி முன்னாள் நகராட்சி தலைவர் சங்கர பாண்டியன், நடுவிற்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் ஆழ்வார் உதயகுமார், தொழிலதிபர் முனியசாமி, வார்டு செயலாளர்கள் பிச்சை, அருள் சுந்தர், மயில்ராஜ் மகளிர் அணி முருகலட்சுமி, முத்துமாரி உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் எட்டயபுரத்தில் நியூ ஷாலோம் மிஷன் அறக்கட்டளை மற்றும் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்த தான முகாமையும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், எட்டயபுரம் நகர செயலாளர் பாரதி கணேசன், பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.
    • பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    ஓசூர்,

    ஒசூர் சட்டமன்ற தொகுதி, ஒசூர் ஒன்றியம் தொரப்பள்ளி ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நிதியிலிருந்து மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அனிதாமுனிராஜ் ஏற்பாட்டில் சுமார் 7 லட்சம் மதிப்பில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.

    இதையொட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஒசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் துணை மேயர் ஆனந்தய்யா, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தம்மா, மற்றும் ராமமூர்த்தி, வார்டு உறுப்பினர்கள், கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ. 1கோடியே 4 லட்சம் மதிப்பில் 6 அறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்தை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

    மங்கலம் :

    திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சியில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கும், பாரதிபுரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கும் கூடுதல் வகுப்பறைகள் வேண்டுமென ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்தை நேரில் சந்தித்து மனு அளித்தார். இந்தநிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பள்ளிகல்வித் துறைக்கு வழங்கியுள்ள சிறப்பு நிதியிலிருந்து இடுவாயில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கு ரூ. 65,26,000 மதிப்பில்நான்கு அறைகளும், பாரதிபுரத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிக்கு ரூ. 1கோடியே 4 லட்சம் மதிப்பில் 6 அறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார்.

    இதையடுத்து பாரதிபுரம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் புதிய அறைகள் கட்டுவதற்கான பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இடுவாய் ஊராட்சி தலைவர் கணேசன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சிஒன்றிய பொறியாளர் கற்பகம் , ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பரமசிவம் , பள்ளி தலைமை ஆசிரியர் காளீஸ்வரி சுப்பிரமணியம் , ஆண்டிபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் சென்னியப்பன் ,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரி , கணேசன் , சுப்பிரமணி , ஒப்பந்ததாரர் தமிழ்செல்வன் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். புதிய பள்ளி அறைகள் கட்டுவது குறித்து அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதல்நிதி ஒதுக்கி தந்த தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர்,தொடர் முயற்சி எடுத்த ஊராட்சி மன்ற தலைவர்,ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு ஆசிரியர்கள் சார்பிலும் பள்ளிமேலாண்மை குழு சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    • ராஜபாளையம் அருகே நடந்த அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட பூமிபூஜையில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    • கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்,

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி சேத்தூர் பேரூராட்சியில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சேத்தூர் பேரூராட்சி, வார்டு 15 முகவூர் ரோடு தேவேந்திரகுல வேளாளர் பெரிய தெருவில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அங்கன்வாடி மையம் அமைக்க தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.

    அதன்பின்னர் ராஜபா ளையம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் வார்டு 15 முகவூர் ரோடு தேவேந்திரகுல வேளாளர் பெரிய தெருவில், வார்டு 4 போலீஸ் ஸ்டேஷன் தெரு மற்றும் வார்டு 12 அய்யனார் கோவில் தெரு ஆகிய 3 பகுதியிலும் தாமிர பரணி குடிநீருக்கென தனியாக நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    இந்நிகழ்ச்சியில் பேரூ ராட்சி தலைவர் பாலசுப்பிர மணியன், துணை தலைவர் காளீஸ்வரி மாரிச்செல்வம், ஒன்றியதுணை செயலாளர் குமார், பேருராட்சி செயல் அலுவலர் வெங்கட் கோபு மற்றும் கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×