என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 233227"
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரியை சேர்ந்த பத்மா, எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி என்ற 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டனர்.
- வீட்டில் ஒரு சிறுவனை சித்ரவதை செய்ததாக கூறி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள எலத்தூணரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரியை சேர்ந்த பத்மா, எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி என்ற 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலி மந்திரவாதி ஷபி, ஆயுர்வேத டாக்டர் பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் வீட்டில் இருந்து நரமாமிசமும் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் பத்தினம் திட்டா மாவட்டம் மலையாளப்புழா என்ற இடத்தில் சித்து வேலைகளில் ஈடுபட்டு வந்த பெண் மந்திரவாதி ஷோபனா என்பவரும் சிக்கினார்.
இவர் வீட்டில் ஒரு சிறுவனை சித்ரவதை செய்ததாக கூறி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஜாமீனில் வந்த அவர் மீண்டும் அதுபோன்ற மந்திரவாத செயல்களை செய்து வந்தார்.
இந்த நிலையில் பெண் மந்திரவாதி ஷோபனா வீட்டில் இருந்து நேற்று காலை சிறுவன் ஒருவன் அழும் சத்தம் கேட்டது. இது பற்றி அக்கம் பக்கத்தினர், அந்த பகுதியை சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரிடம் தெரிவித்தனர். அவர்கள் பெண் மந்திரவாதி வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு ஒரு அறையில் சிறுவன் ஒருவன் இருந்தான். அந்த சிறுவனிடம் வாலிபர்கள் விசாரித்த போது தன்னையும், தனது பெற்றோரையும், பெண் மந்திரவாதி அடைத்து வைத்திருப்பதாக கூறினான்.
உடனே வாலிபர் சங்க நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பெண் மந்திரவாதி ஷோபனா வீட்டுக்குள் அதிரடியாக சென்றனர். அங்குள்ள அறைகளை சோதனை செய்தனர். இதில் ஒரு அறையில் அந்த சிறுவனும், அவனது பெற்றோரும் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் 3 பேரையும் மீட்ட போலீசார், அவர்கள் எதற்காக அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் என விசாரித்தனர். இது பற்றி சிறுவனின் தந்தை கூறும்போது, ஒரு மோசடி வழக்கில் என்னை போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கில் இருந்து வெளியே வர பெண் மந்திரவாதியை சந்தித்து பேச வந்தேன். இதற்காக ஒரு சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என அவர் கூறினார்.
அந்த பூஜைக்கான பணத்தை நான் கொடுக்க வில்லை. எனவே என்னையும், எனது மனைவி மற்றும் மகனை அவர் ஒரு அறையில் அடைத்து வைத்துவிட்டார். கடந்த 4 நாட்களாக இங்குதான் நாங்கள் அடைக்கப்பட்டிருந்தோம், என்றார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறுவனை நரபலி கொடுக்க பெண் மந்திரவாதி திட்டமிட்டாரா? என்றும் விசாரணை நடக்கிறது.
இதற்கிடையே போலீசார் வருவதை அறிந்து பெண் மந்திரவாதி ஷோபனா அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- போலீசார் முகமது ஷபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை கைது செய்தனர்.
- நரபலியை பார்த்த சாட்சியங்கள் இல்லாததால் டிஜிட்டல் ஆதாரங்களை போலீசார் தயாரித்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
தர்மபுரி பகுதியை சேர்ந்த பத்மா என்ற பெண் கேரளா மாநிலம் கொச்சி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார்.
பத்மா, நீண்ட நாட்களாக உறவினர்களுடன் பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கேரளா சென்று அவரை தேடினர். இதில் பத்மா, அதே பகுதியை சேர்ந்த முகமது ஷபி என்பவரால் கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது.
போலீசார் முகமது ஷபியை பிடித்து விசாரித்தனர். இதில் முகமது ஷபியும், பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த மந்திரவாதி பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் சேர்ந்து நரபலி கொடுத்தது தெரியவந்தது. பத்மாவுடன் கொச்சி பகுதியை சேர்ந்த ரோஸ்லி என்ற பெண்ணும் நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் முகமது ஷபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நரபலி கொடுக்கப்பட்ட தர்மபுரி பெண் பத்மா, ரோஸ்லி ஆகியோரின் உடல் பாகங்களை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து கைதான 3 பேரையும் சம்பவம் நடந்த வீட்டிற்கு அழைத்து சென்று போலீசார் ஆதாரங்களை திரட்டினர். மேலும் அவர்கள் வீட்டின் பிரிட்ஜ்ஜில் இருந்த மனித மாமிசத்தையும் கைப்பற்றினர்.
பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்ட 3 பேரும் தங்களை ஜாமீனில் விடுவிக்க கோரி கோர்ட்டில் மனு செய்தனர். அதனை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் கைதான 3 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். முதற்கட்டமாக தர்மபுரி பெண் பத்மா நரபலி வழக்கில் 200 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தயாரித்து உள்ளனர். பெரும்பாவூர் கோர்ட்டில் இன்று இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.
அதில் விஞ்ஞானபூர்வ ஆதாரங்களை போலீசார் இணைத்துள்ளனர். நரபலியை பார்த்த சாட்சியங்கள் இல்லாததால் டிஜிட்டல் ஆதாரங்களை போலீசார் தயாரித்துள்ளனர். முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர் ரோஸ்லி வழக்கில் போலீசார் 2 வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது.
- பத்மாவதியின் சொந்த ஊரான எர்ரப்பட்டி கிராமத்திற்கு பெரும்பாலை போலீசார், உளவுப்பிரிவு போலீசார், வருவாய்த்துறையினர் சென்று விசாரணை நடத்தினர்.
- புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை தோண்டி எடுத்த கோட்டயம் போலீசார் பத்மாவின் உடலை அடையாளம் காட்ட அவரது உறவினர்களை வரவழைத்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், நாகவதி அணை அருகேவுள்ள எர்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன். இவரது மனைவி பத்மா. சில வருடங்களாக கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள பொன்னுருன்னி பகுதியில் வசித்து வந்தார். கடவந்திரா என்ற இடத்தில் லாட்டரி விற்று வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 26-ம் தேதி லாட்டரி விற்பனைக்காக சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், கொச்சி போலீசார் விசாரித்தனர். இதேபோல், கொச்சி காலடி பகுதியை சேர்ந்த ரோஸ்லின் (50) என்ற பெண்ணும் சில மாதங்களுக்கு முன் காணாமல் போனார்.
2 பேரின் செல்போன் எண்களை வைத்து நடத்திய விசாரணையில், அவர்கள் கடைசியாக பத்தனம்திட்டா அருகே திருவல்லா என்ற இடத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் இருவரும் நரபலிக்காக கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, கொச்சியை சேர்ந்த முகமது ஷாபி என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து பத்மாவதியின் சொந்த ஊரான எர்ரப்பட்டி கிராமத்திற்கு பெரும்பாலை போலீசார், உளவுப்பிரிவு போலீசார், வருவாய்த்துறையினர் சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை தோண்டி எடுத்த கோட்டயம் போலீசார் பத்மாவின் உடலை அடையாளம் காட்ட அவரது உறவினர்களை வரவழைத்தனர்.
அவர்கள் அங்கு சென்று அடையாளம் காட்டினர். இதையடுத்து பல்வேறு சட்டரீதியான நடவடிக்கைகள் முடிந்து இன்று பத்மாவின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பத்மாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு நாளை அடக்கம் செய்யப்படும் என்று உறவினர்கள் கூறியுள்ளனர்.
- இறந்த தந்தையின் உயிரை எப்படியாவது உயிர்த்தெழ நினைத்து குழந்தையை நரபலி கொடுக்க முடிவெடுத்துள்ளார்.
- குற்றம் சாட்டப்பட்ட அந்த பெண் நரபலி திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
தென்கிழக்கு டெல்லியில் உள்ள கிழக்கு கைலாஷ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது தந்தையின் உயிரை மீட்டெடுக்க 2 மாத குழந்தையை கடத்தி நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தந்தை மீது அதீத பாசம் கொண்ட பெண், இறந்த தந்தையின் உயிரை எப்படியாவது உயிர்த்தெழ நினைத்து குழந்தையை நரபலி கொடுக்க முடிவெடுத்துள்ளார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்தை அடுத்து, அந்த பெண் தனது திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு முன்பு 24 மணிநேரத்தில் குழந்தையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட அந்த பெண் நரபலி திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
- கைதான லைலா, தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி எர்ணாகுளம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு செய்தார்.
- மனு விசாரணைக்கு வந்த போது லைலாவுக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த பத்மா, ரோஸ்லி என்ற 2 பெண்கள் கடத்தி கொலை செய்யப்பட்டனர். அவர்களை நரபலி கொடுத்ததாக மந்திரவாதி முகமது ஷபி, மற்றும் பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களை 12 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே கைதான லைலா, தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி எர்ணாகுளம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது லைலாவுக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் லைலாவுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று அவர்கள் வாதிட்டனர். இதையடுத்து லைலாவின் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
- டி.என்.ஏ. பரிசோதனை முடிவு வந்ததும் போலீசாரின் விசாரணை தீவிரம் அடையும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கைதான 3 பேரிடமும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த பத்மா மற்றும் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி என்ற 2 பெண்கள் கடத்தி நரபலி கொடுக்கப்பட்டனர்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக எர்ணாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் எர்ணாகுளத்தை சேர்ந்த மந்திரவாதி முகமது ஷபி, இலத்தூரை சேர்ந்த பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களின் வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது அங்கிருந்து பத்மாவின் உடல் பாகங்களை கைப்பற்றினர். 56 துண்டுகளாக வெட்டப்பட்டு பிரிட்ஜில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாமிசத்தை கைப்பற்றிய போலீசார் அவற்றை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே கைதான 3 பேரும் தங்களுக்கு 12 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதையடுத்து கைதான 3 பேரிடமும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்த கொலை செய்யப்பட்டவர்களின் உடல் பாகங்களை டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
டி.என்.ஏ. பரிசோதனை முடிவு வந்ததும் போலீசாரின் விசாரணை தீவிரம் அடையும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக டி.என்.ஏ. பரிசோதனை முடிவுக்காக போலீசார் காத்திருக்கிறார்கள்.
அதன்பின்பு இந்த வழக்கில் மந்திரவாதிக்கு உதவிய நபர்கள் யார்? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றிய தகவல்களும் வெளியாகும் என தெரிகிறது. இதனால் இனி வரும் நாட்களில் இந்த வழக்கு மேலும் சூடு பிடிக்கும் என்று தெரிகிறது.
- நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடல் 56 துண்டுகளாக வெட்டப்பட்டு, கொலையாளிகள் அதனை சமைத்து சாப்பிட்டதாகவும் கூறப்பட்டது.
- பகவல் சிங்-லைலா தம்பதியின் வீட்டில் உள்ள பிரிட்ஜில் இருந்து சுமார் 10 கிலோ நரமாமிசமும் கைப்பற்றப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தர்மபுரியை சேர்ந்த பத்மா, எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி என்ற 2 பெண்கள் மாயமானார்கள்.
இது தொடர்பாக எர்ணாகுளம் போலீசார் முகமது ஷபி என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பத்தினம்திட்டா, இலத்தூரை சேர்ந்த பகவல் சிங்-லைலா தம்பதியின் வீட்டில் அவர்களை கொலை செய்ததாக கூறினார்.
அதன்பேரில் போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களை 12 நாள் காவலில் எடுத்து போலீசார் நடத்திய விசாரணையின் போது கொலை செய்யப்பட்ட 2 பேரும் நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்தது.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து தினமும் புதுபுது தகவல்கள் வெளியானது. நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடல் 56 துண்டுகளாக வெட்டப்பட்டு, கொலையாளிகள் அதனை சமைத்து சாப்பிட்டதாகவும் கூறப்பட்டது.
மேலும் பகவல் சிங்-லைலா தம்பதியின் வீட்டில் உள்ள பிரிட்ஜில் இருந்து சுமார் 10 கிலோ நரமாமிசமும் கைப்பற்றப்பட்டது.
இதுபற்றி கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜ் கூறும்போது, இந்த வழக்கை அறிவியல் பூர்வமாக விசாரித்து வருகிறோம். சைபர்கிரைம் போலீஸ் உதவியுடன் தடயங்களையும் சேகரித்து வருகிறோம்.
அதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதனை கோர்ட்டில் தெரிவிப்போம் என்றார்.
இந்த நிலையில் நரபலி வழக்கில் கைதான மந்திரவாதி முகமது ஷபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் சார்பில் கேரள ஐகோர்ட்டில் வக்கீல் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கில் மந்திரவாதி உள்பட 3 பேருக்கும் கீழ் கோர்ட்டு 12 நாள் போலீஸ் காவல் வழங்கியதை ஏற்க முடியாது. இந்த வழக்கில் போலீசார் தினமும் கட்டுக்கதைகளை கூறிவருகிறார்கள். மேலும் போலீசார் அவர்களை தொடர்ந்து சித்ரவதை செய்து வருகிறார்கள். அவர்கள் தொடர்ந்து தவறான தகவலை பரப்பி வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மந்திரவாதிக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முகமது ஷபி கூறியபடி, பகவல் சிங்-லைலா தம்பதியினர் வீட்டின் பிரிட்ஜில் சுமார் 10 கிலோ நரமாமிசத்தை பதுக்கி வைத்துள்ளனர்.
- ரோஸ்லி, பத்மாவை நரபலி கொடுக்கும் முன்பு முகமது ஷபி ஏற்கனவே ஒரு பெண்ணை நரபலி கொடுத்ததாக கூறினார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் பத்தினம்திட்டாவை அடுத்த இலத்தூரில் தமிழக பெண் பத்மா, எர்ணாகுளம் பெண் ரோஸ்லி ஆகியோர் நரபலி கொடுக்கப்பட்டனர்.
இது தொடர்பாக எர்ணாகுளத்தை சேர்ந்த முகமது ஷபி கைது செய்யப்பட்டார். மந்திரவாதியான இவருடன் தொடர்பில் இருந்த பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
பகவல் சிங்குடன் பேஸ்புக் மூலம் தொடர்பை ஏற்படுத்தி கொண்ட முகமது ஷபி, அவரை செல்வந்தர் ஆக்குவேன் எனக்கூறியே பெண்களை கடத்தி நிர்வாண பூஜை நடத்தி நரபலி கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.
நரபலி கொடுத்த பெண்களின் உடலை 56 துண்டுகளாக வெட்டி அவற்றை சமைத்து சாப்பிட்டதுடன், மீதி இருக்கும் மாமிசத்தை பிரிட்ஜில் பாதுகாப்பாக வைக்கவும் கூறியுள்ளார்.
முகமது ஷபி கூறியபடி, பகவல் சிங்-லைலா தம்பதியினர் வீட்டின் பிரிட்ஜில் சுமார் 10 கிலோ நரமாமிசத்தை பதுக்கி வைத்துள்ளனர்.
பகவல் சிங் வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது அங்கிருந்து நரமாமிசத்தை கைப்பற்றிய போலீசார் அதனை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் நரமாமிசத்தை பதுக்கி வைத்தது ஏன்? என்று கேட்டபோது, அதனை விற்றால் அதிக பணம் கிடைக்கும் என்று முகமது ஷபி கூறியதாக கைதான லைலா போலீசாரிடம் தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-
ரோஸ்லி, பத்மாவை நரபலி கொடுக்கும் முன்பு முகமது ஷபி ஏற்கனவே ஒரு பெண்ணை நரபலி கொடுத்ததாக கூறினார். அந்த பெண்ணின் மாமிசத்தை ரூ.20 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக கூறினார்.
பெங்களூருவில் இருந்து வந்த மந்திரவாதிகள் அதனை வாங்கி சென்றதாகவும் தெரிவித்தார். இதனை நம்பித்தான் நாங்கள் வீட்டில் நரமாமிசத்தை பாதுகாப்பாக வைத்தோம், என்றார்.
இதுபற்றி கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜ் கூறும்போது, நரமாமிசம் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை. பகவல் சிங், லைலாவை ஏமாற்றவே முகமது ஷபி இப்படி கூறியுள்ளார்.
என்றாலும் நாங்கள் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான ஆதாரங்களையே சேகரித்து வருகிறோம். இதில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. விரைவில் அதனை கோர்ட்டில் சமர்ப்பிப்போம், என்றார்.
- முகமது ஷபி, மேலும் ஒரு பெண்ணை இதுபோல நரபலி கொடுத்தார் என்று லைலா கூறினார்.
- முகமது ஷபி, மேலும் ஒரு பெண்ணை இதுபோல நரபலி கொடுத்தார் என்று லைலா கூறினார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தமிழக பெண் பத்மா உள்பட 2 பேர் கடத்தி கொலை செய்யப்பட்டனர். இதில் பத்மாவின் செல்போனில் கடைசியாக பேசிய நபரை போலீசார் பிடித்து விசாரித்தபோது அவர்தான் பத்மாவை கொலை செய்தது தெரியவந்தது. எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த அவரது பெயர் முகமது ஷபி.
மந்திரவாதியான இவர் பத்தினம்திட்டா, இலத்தூரில் மசாஜ் வைத்தியம் செய்து வந்த பகவல் சிங், அவரது மனைவி லைலாவுடன் சேர்ந்து இக்கொலையை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
கைதான 3 பேரையும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ரோஸ்லி என்ற பெண்ணை 4 மாதங்களுக்கு முன்பு கடத்தியதாகவும், அவரை இலத்தூர் வீட்டிற்கு அழைத்து வந்து நிர்வாண பூஜை நடத்தி நரபலி கொடுத்ததாக தெரிவித்தனர்.
பின்னர் பத்மாவை கடந்த மாதம் இதுபோல கடத்தி வந்து அவரையும் நரபலி கொடுத்ததாக கூறினர். அடுத்தடுத்து 2 பெண்கள் நரபலி கொடுத்ததாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து போலீசார் முகமது ஷபி, பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரை 12 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். மேலும் 3 பேரிடமும் தனித்தனியாகவும் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் நரபலி கொடுக்கப்பட்ட பத்மாவின் உடலை 56 துண்டுகளாக வெட்டி சமைத்து சாப்பிட்ட தகவல் வெளியானது. மேலும் உடல் உறுப்புகளை வெட்டி எடுத்து அதனை பிரிட்ஜில் பத்திரமாக வைத்திருப்பதாகவும் கூறினர்.
இதையடுத்து போலீசார் 3 பேரையும் இலத்தூர் வீட்டிற்கு அழைத்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் பிரிட்ஜில் இருந்த நரமாமிசத்தை கைப்பற்றினர். அவற்றை ஆய்வுக்கு அனுப்பிய போலீசார், டி.என்.ஏ. பரிசோதனைக்கும் ஏற்பாடு செய்தனர்.
இதற்கிடையே இலத்தூர் பகவல் சிங் வீட்டிற்கு முகமது ஷபி சில மாணவிகளை அழைத்து வந்தது தெரிய வந்தது. அந்த மாணவிகள் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணை நடந்து வந்த நிலையில் முகமது ஷபியின் கைகளில் இருந்து 2 பெண்கள் தப்பியதாக தகவல் வெளியானது. இதில் ஒரு பெண் இலத்தூர் வீடு வரை சென்று அதிர்ஷ்டவசமாக தப்பியதாகவும், இன்னொரு பெண், முகமதுஷபி அழைத்தும் அவருடன் செல்ல தாமதம் காட்டியதால் தப்பிய விபரமும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் கைதான பகவல் சிங்கின் மனைவி லைலாவை தனியாக அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் முகமது ஷபி, மேலும் ஒரு பெண்ணை இதுபோல நரபலி கொடுத்தார் என்று லைலா கூறினார்.
அந்த பெண்ணை நரபலி கொடுத்து அவரது உடல் உறுப்புகளை நல்ல விலைக்கு விற்றதாக முகமது ஷபி கூறியதாக லைலா போலீசாரிடம் கூறினார். மேலும் அந்த பெண் யார்? எப்போது அவர் கொலை செய்யப்பட்டார் என்ற விபரம் தனக்கு தெரியாது எனவும் தெரிவித்தார்.
இதுபற்றி போலீசார் உடனடி விசாரணை மேற்கொண்டனர். அதில் உடல் உறுப்புகள் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை என தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். பகவல் சிங்கை நம்பவைக்கவே முகமது ஷபி இதுபோன்று கூறியிருக்கலாம் எனவும் போலீசார் கூறினர்.
கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜ், இதுபற்றி கூறும்போது, இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான ஆதாரங்களை திரட்டி வருகிறோம். எங்களின் சைபர் கிரைம் போலீசார் பல்வேறு முக்கிய தகவல்களை கண்டுபிடித்துள்ளனர். அதுபற்றிய விபரங்கள் கோர்ட்டில் தெரிவிக்கப்படும் என்றார்.
- பத்தினம்திட்டா இலத்தூரில் நரபலி நடந்த வீடு இலத்தூர் சந்திப்பில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
- ஆட்டோவில் பலரும் பயணம் செய்து நரபலி வீட்டை பார்த்து செல்கிறார்கள்.
பத்தினம்திட்டா இலத்தூரில் நரபலி நடந்த வீடு இலத்தூர் சந்திப்பில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு இப்போது போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீட்டை சுற்றி தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வீட்டை பார்க்க தினமும் பத்தினம் திட்டா பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் இலத்தூரில் இறங்கி நரபலி வீட்டை பார்க்க ஆட்டோக்களை தேடி அலைந்தனர். இதையடுத்து இலத்தூரில் ஆட்டோ ஓட்டும் டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவில் அறிவிப்பு சீட்டு ஒன்றை ஒட்டியுள்ளார்.
அதில் இலத்தூர் நரபலி வீட்டிற்கு செல்ல ரூ. 50 கட்டணம் என்று குறிப்பிட்டு உள்ளார். அந்த ஆட்டோவில் பலரும் பயணம் செய்து நரபலி வீட்டை பார்த்து செல்கிறார்கள். இதன்மூலம் தினசரி தனக்கு ரூ.1200 வரை வருமானம் வருவதாக அந்த ஆட்டோ டிரைவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
- இலத்தூரில் நரபலி நடந்த வீட்டில் போலீசார் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
- வீட்டின் அனைத்து பகுதிகளையும் கைரேகை நிபுணர்களும் சோதித்து வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் பத்தினம்திட்டாவை அடுத்த இலத்தூரை சேர்ந்தவர் பகவல் சிங். இவரது மனைவி லைலா.
இவர்களுக்கும் எர்ணாகுளத்தை சேர்ந்த முகமது ஷபி என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. முகமது ஷபி மந்திரவாதி என அறிமுகப்படுத்தி கொண்டு அவர்களிடம் பழகி உள்ளார்.
மேலும் நரபலி கொடுத்தால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்று கூறியுள்ளார். அதனை நம்பிய பகவல் சிங்கும், அவரது மனைவி லைலாவும் இலத்தூர் வீட்டில் நரபலி கொடுக்க ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து முகமது ஷபியே நரபலி கொடுக்க பெண்களை கடத்தி வந்துள்ளார். எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி மற்றும் தர்மபுரியை சேர்ந்த பத்மா ஆகியோரை இலத்தூருக்கு கடத்தி சென்றார்.
பகவல் சிங் வீட்டில் அவர்கள் இருவரையும் வைத்து நிர்வாண பூஜை நடத்தி நரபலி கொடுத்துள்ளார்.
பின்னர் அவர்களின் உடலை 56 துண்டுகளாக வெட்டி குக்கரில் போட்டு சமைத்து சாப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் முகமது ஷபி, பகவல் சிங், லைலா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின்போது அவர்கள் நரமாமிசம் சாப்பிட்டார்களா? என்று கேட்டபோது 3 பேருமே அதனை ஒப்புக்கொண்டுள்ளனர். இது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று அவர்களுக்கு எர்ணாகுளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற்றது. மேலும் 3 பேரின் டி.என்.ஏ. மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே இலத்தூரில் நரபலி நடந்த வீட்டில் போலீசார் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். வீட்டின் அனைத்து பகுதிகளையும் கைரேகை நிபுணர்களும் சோதித்து வருகிறார்கள்.
இது தவிர இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களையும் கண்டுபிடிக்க போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
- பத்மா நரபலி கொடுக்கப்பட்ட தகவல் வெளியாகி 6 நாட்கள் ஆன நிலையில் இன்னும் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.
- தனது தாயாரின் எஞ்சிய பாகங்களை தந்து அவருக்கு இறுதி சடங்கு செய்ய அனுமதிக்க வேண்டும்.
கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட தர்மபுரி பெண் பத்மாவின் மகன்கள் செல்வராஜ், சேட் ஆகியோர் எர்ணாகுளத்தில் தங்கி உள்ளனர்.
அவர்கள் தாயார் பத்மாவின் உடலை அங்கிருந்து சொந்த ஊருக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளனர். பத்மா நரபலி கொடுக்கப்பட்ட தகவல் வெளியாகி 6 நாட்கள் ஆன நிலையில் இன்னும் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.
பத்மாவின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருப்பதால், அவை பத்மா உடல் தானா? என்பதை கண்டுபிடிக்க அவரது மகன்களிடம் இருந்து ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன்முடிவுகள் வந்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்.
இந்த நிலையில் பத்மாவின் மகன் செல்வராஜ், கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் தனது தாயாரின் எஞ்சிய பாகங்களை தந்து அவருக்கு இறுதி சடங்கு செய்ய அனுமதிக்க வேண்டும்.
கடந்த 11-ந் தேதி முதல் எர்ணாகுளத்தில் தான் இருக்கிறோம். எங்களது டி.என்.ஏ. பரிசோதனை முடிவு வந்தபின்னர்தான் உடலை ஒப்படைப்போம் என போலீசார் கூறுகிறார்கள்.
அதனை விரைவாக முடித்து உடலை ஒப்படைக்க கேரள அரசு ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று கூறியுள்ளார். இதுபோல தமிழக முதல்வருக்கும் பத்மாவின் மகன்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்