search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து இந்தியா தொடர்"

    • இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக நேற்றைய பயிற்சியில் விராட் கோலி பங்கேற்கவில்லை.
    • டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    ஓவல்:

    ரோகித்சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    இத் அடுத்து இந்தியா-இங்கிலாந்து அணிகள் 3 ஆட்டம் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று முதல் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது போட்டி 14-ந் தேதியும், 3-வது போட்டி 17-ந் தேதியும் நடக்கிறது.

    இந்நிலையில் காயம் காரணமாக நேற்றைய பயிற்சியில் விராட் கோலி பங்கேற்கவில்லை. விராட்சி கோலிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதில் இடுப்பில் அவருக்கு காயம் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும், முதல் ஒருநாள் போட்டியில் அவர் விளையாட வாய்ப்பில்லை என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    • சேசிங்கில் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற்றார்.
    • சூர்யகுமார் யாதவிற்க்கு தற்போது பல்வேறு தரப்பிலும் இருந்தும் பெரிய அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது. இதில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தோல்வியடைந்திருந்தாலும் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் சூர்ய குமாரின் பேட்டிங் மிரட்டலாக இருந்தது. அவர் அடித்த ஒவ்வொரு ஷாட்டும் அற்புதமாக இருந்தது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

    இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் அடித்த இந்த சதத்தின் மூலம் மேலும் சில சாதனைகளுக்கு அவர் சொந்தக்காரராக மாறியுள்ளார். நான்காவது இடத்தில் களமிறங்கிய இந்திய அணியின் முன்னணி வீரரான ராகுலுக்கு பிறகு சதம் அடித்த ஒரே வீரர் இவர்தான் என்ற சாதனையையும் சூர்யகுமார் படைத்துள்ளார்.

    ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நான்காவது வீரராக களமிறங்கிய ராகுல் சதம் அடித்து அசத்தியிருந்தார். அதனை தொடர்ந்து அதே நான்காவது இடத்தில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 48 பந்துகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த சதத்தினை பூர்த்தி செய்தார். டி20 கிரிக்கெட்டில் சேசிங்கில் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.ரோஹித் சர்மாவின் அதிகபட்ச ரன்கள் (118 ரன்கள்) என்கிற சாதனையை ஒரு ரன்னில் அவர் தவற விட்டு ஆட்டமிழந்து வெளியேறினார்.

    சூர்யகுமார் யாதவிற்க்கு தற்போது பல்வேறு தரப்பிலும் இருந்தும் பெரிய அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே இப்போட்டி முடிந்து சூர்யகுமார் யாதவின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் ஆட்டநாயகன் ரீஸ் டாப்லீ ஆகியோர் பாராட்டிய வேளையில் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

    • முதல் போட்டி நாளை ஓவல் மைதானத்தில் நடக்கிறது. 2-வது போட்டி 14-ந் தேதியும், 3-வது போட்டி 17-ந் தேதியும் நடக்கிறது.
    • 20 ஓவர் போட்டி தொடரை கைப்பற்றியதால் அந்த உத்வேகத்தை ஒரு நாள் போட்டியிலும் தொடர இந்திய அணி முயற்சிக்கும்.

    ஓவல்:

    ரோகித்சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    முதல் ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 49 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வென்றது. நாட்டிங்காமில் நேற்றுநடந்த 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அடுத்து இந்தியா-இங்கிலாந்து அணிகள் 3 ஆட்டம் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகின்றன.

    முதல் போட்டி நாளை ஓவல் மைதானத்தில் நடக்கிறது. 2-வது போட்டி 14-ந் தேதியும், 3-வது போட்டி 17-ந் தேதியும் நடக்கிறது.

    20 ஓவர் போட்டி தொடரை கைப்பற்றியதால் அந்த உத்வேகத்தை ஒரு நாள் போட்டியிலும் தொடர இந்திய அணி முயற்சிக்கும்.

    இந்திய அணியில் ஷிகர் தவான், கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், ஹர்த்திக் பாண்ட்யா, முகமது சமி, ஜடேஜா, சாகல், பிரசித் கிருஷ்ணா உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஜோரூட், பேர்ஸ்டோவ், மொயின் அலி, பென்ஸ்டோக்ஸ், ஜேசன்ராய், டேவிட் வில்லி ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    20 ஓவர் போட்டி தொடரை இழந்துள்ளதால் ஒருநாள் தொடரை கைப்பற்ற இங்கிலாந்து அணி முனைப்பு காட்டும்.

    இரு அணிகளும் சமபலம் வாய்ந்துள்ளது என்பதால் இத்தொடர் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இரு அணி வீரர்கள் வருமாறு:-

    இந்தியா: ரோகித்சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், கோலி, இஷான் கிஷன், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், ஜடேஜா, சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, அக்சர் படேல், சாகல், முகமது சமி, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்.

    இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜேசன் ராய், ஜோரூட், பேர்ஸ்டோவ், லிவிங்ஸ்டன், பிலிப் சால்ட், பென்ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, மொய்ன் அலி, ஹாரி புருக், சாம் கர்ரன், கிரேக் ஓவர்டன், பிரைடன் கார்சே, பார்கின்சன், டாப்லே.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 215 ரன்களை குவித்தது.
    • இந்திய வீரர் சூர்யகுமார், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தது.

    நாட்டிங்காம்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று நாட்டிங்காமில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 215 ரன்களை குவித்தது. அந்த அணியில் டேவிட் மலான் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 39 பந்துகளில் 77 ரன்களை குவித்தார். லிவிங்ஸ்டோன் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 216 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரிஷப் பண்ட் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். விராட் கோலி, ரோகித் சர்மா தலா 11 ரன்னில் அவுட்டாகினர். 31 ரன்களுக்குள் இந்தியா 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர், சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்தார். அய்யர் நிதானமாக ஆட சூர்யகுமார் அதிரடியில் இறங்கினார். மைதானம் முழுவதும் பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் 48 பந்துகளில் முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 55 பந்துகளில் 117 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் டி 20 தொடரை வென்றது.

    • இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் அதிரடியாக ஆடி 77 ரன்களை குவித்தார்.
    • டேவிட் மலான், லிவிங்ஸ்டோன் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 84 ரன்களை சேர்த்தனர்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று நாட்டிங்காமில் நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் 18 ரன்னிலும், ஜேசன் ராய் 27 ரன்னிலும், பிலிப் சால்ட் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து இறங்கிய லிவிங்ஸ்டோன், டேவிட் மலானுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பாக ஆடினார். முதலில் நிதானமாக ஆடிய மலான் பின்னர் அதிரடியில் இறங்கி அரை சதம் கடந்தார். அவர் 39 பந்துகளில் 77 ரன்களை குவித்து அவுட்டானார். மொயீன் அலி டக் அவுட்டானார்.

    லிவிங்ஸ்டோன் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 215 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 216 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    • இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
    • இந்தியா 2 போட்டிகளில் வென்று 2-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.

    பர்மிங்காம்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    சவுத்தம்டனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது டி20 போட்டியில் 49 ரன் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று நாட்டிங்காமில் நடக்கிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.

    இங்கிலாந்து அணி: ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (கேப்டன் ), டேவிட் மாலன், பிலிப் சால்ட், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி புரூக், கிறிஸ் ஜோர்டான், டேவிட் வில்லி, ரிச்சர்ட் கிலீசன், ரீஸ் டோப்லே.

    • இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து 121 ரன்களுக்கு சுருண்டது.
    • புவனேஷ்வர் குமார், பும்ராவின் சிறப்பான வேகப்பந்து வீச்சால் இந்தியா வெற்றி.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்திற்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டையும், பும்ரா, சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புவனேஷ்வர்குமார், ஸ்விங் முறை பந்து வீச்சு மூலம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறினார்.

    டி20 கிரிக்கெட்டில் பந்து நீண்ட நேரம் ஸ்விங் ஆனது தமக்கு ஆச்சரியமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியதில் ஆச்சரியமில்லை என்றும், அவர் தெரிவித்தார்.

    இங்கிலாந்திற்கு எதிராக அவர்களது சொந்த நாட்டில் 3-0 என்ற கணக்கில் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றினால் நன்றாக இருக்கும் என்று அவர் ஒப்புக்கொண்டார்

    தாம் நேர்மறையாகவே சிந்திப்பதாகவும், டெஸ்ட் போட்டிகளில் தமக்கு எந்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை சிறப்பாக செய்ய முயற்சிப்பேன் என்றும் புவனேஷ்வர் குமார் குறிப்பிட்டார்.

    • முதலில் ஆடிய இந்தியா ரோகித் சர்மா, ஜடேஜா அதிரடியால் 170 ரன்களை எடுத்தது.
    • இந்தியாவின் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட், பும்ரா, சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று பர்மிங்காமில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய ரவீந்திர ஜடேஜா 46 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ரோகித் சர்மா 31 ரன்னும், ரிஷப் பண்ட் 26 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஜோர்டான் 4 விக்கெட், கிலீசன் 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி முன்னணி வீரர்களை வெளியேற்றினர்.

    அந்த அணியில் அதிகபட்சமாக மொயீன் அலி 35 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    கடைசி கட்டத்தில் டேவிட் வில்லி அதிரடியாக ஆடி 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியுள்ளது.

    இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட், பும்ரா, சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

    • இந்தியாவின் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 49 ரன் எடுத்தது.
    • இங்கிலாந்து வீரர் ரிச்சர்ட் கிலீசன் ரோகித், கோலி உள்ளிட்ட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று பர்மிங்காமில் நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் இறங்கினர். இந்த ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

    அணியின் எண்ணிக்கை 49 ஆக இருந்தபோது ரோகித் சர்மா 20 பந்தில் 2 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 31 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய விராட் கோலி ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரை தொடர்ந்து ரிஷப் பண்ட் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சூர்யகுமார் யாதவ் 15, ஹர்திக் பாண்ட்யா 12, தினேஷ் கார்த்திக் 12, ஹர்ஷல் படேல் 13, புவனேஷ்வர் குமார் 2 ரன்னில் வெளியேறினர்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் ரவீந்திர ஜடேஜா பொறுப்புடன் ஆடினார்.

    இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 46 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் ஜோர்டான் 4 விக்கெட், கிலீசன் 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.

    • இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.
    • முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 50 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    பர்மிங்காம்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    சவுத்தம்டனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று பர்மிங்காமில் நடக்கிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.

    இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

    இங்கிலாந்து அணி: ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (கேப்டன் ), டேவிட் மாலன், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி புரூக், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், டேவிட் வில்லி, ரிச்சர்ட் கிலீசன், மாட் பார்கின்சன்.

    • இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
    • டி20 போட்டிகளில் 300 பவுண்டரிகள் அடித்த ஒரே வீரராக அயர்லாந்தை சேர்ந்த பால் ஸ்டிர்லிங் உள்ளார்.

    இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. ரோகித் சர்மா தலமையிலான இந்திய அணி முதல் டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

    முதல் டி20 போட்டியில் இடம் பெறாத விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், பும்ரா ஆகியோர் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர். இந்த போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

    பால் ஸ்டிர்லிங்

    பால் ஸ்டிர்லிங்

    டி20 போட்டிகளில் 300 பவுண்டரிகள் அடித்த ஒரே வீரராக அயர்லாந்தை சேர்ந்த பால் ஸ்டிர்லிங் உள்ளார். அவர் 325 பவுண்டரிகள் அடித்துள்ளார். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் 298 பவுண்டரிகள் அடித்துள்ளனர். இன்றைய போட்டியில் இருவரும் 2 பவுண்டரிகள் விளாசினால் பால் ஸ்டிர்லிங் சாதனையுடன் இணைவார்கள்.

    இந்திய அணி வீரர்கள் விவரம்:-

    ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், இஷான் கிஷன், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா , அவேஷ் கான், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக்

    • முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
    • 3 போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20  தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டி 20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் அரைசதத்துடன், 4 விக்கெட்டும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்த ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

    ரோகித் சர்மா தலைமையில் டி20 போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 13-வது வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் டி20 போட்டியில் தொடர்ந்து அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    முதல் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த விராட்கோலி, பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 3, 4 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    ×