என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாலை அகலப்படுத்தும் பணி"
- ரூ.71.15 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டது
- நெடுஞ்சாலை துறை, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது
வேலூர்:
வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் நவீன வசதிகளுடன் விமான நிலையம் அமைக்க முதற்கட்டமாக ரூ.32.52 கோடியில் 120 ஏக்கர் பரப்பளவில் சிறிய ரக விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக விமான ஓடுதளம், தகவல் மற்றும் தொலை தொடர்பு கட்டுப்பாட்டு அறை, நிர்வாக அலுவலகம், தங்கும் விடுதி, கார் பார்க்கிங், ஹோட்டல், பயணிகள் மற்றும் விமானிகள் ஓய்வறை உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.
இப்பணிகளை முடித்து சுற்றுச்சுவர் கட்டவும், ரன்வே விரிவுப்படுத்தவும் விமான நிலையத்தின் நடுப்பகுதியில் அப்துல்லாபுரம்-தார்சாலை வருவதால் அந்த சாலை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அதற்கு மாற்றாக விமான நிலையத்தின் அருகே ரூ.71.15 கோடியில் புதிய சாலை அமைக்கப்பட்டது. தற்போது, விமான நிலையத்திற்கு தடுப்பு வேலி, உள்ளிட்ட அடிப்படை பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், விமான நிலையத்திற்கு செல்லும் சாலை, இரு வழி சாலையாக உள்ளது.
விமான நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, அதிகப்படியான வாகனங்கள் வந்து செல்லும் என்பதால், 2 வழி சாலையை, 4 வழி சாலையாக மாற்ற மாநில நெடுஞ்சாலை துறை, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதையடுத்து, 4 வழி சாலையாக மாற்ற ரூ.71.80 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது, சாலை அகலப்படுத்தும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
- சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
- இச்சாலையை அகலப்படுத்தும் பணிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வெள்ளக்கல் பகுதியில் இருந்து ஈசல்பட்டி வரை உள்ள சுமார் 7 கிலோமீட்டர் நீள சாலை உள்ளது.
இச்சாலை வழியாக அதிக அளவில் சரக்கு வாகனங்களும் பள்ளி கல்லூரி பேருந்துகள் மற்றும் விவசாய பொருட்கள் சந்தை படுத்துவதற்காக காய்கறிகள், பூக்கள், பால் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் வாகனங்கள் அதிக அளவில் பயணிப்பதால் குறுகிய சாலையாக இருப்பதால் வாகனங்கள் எளிதில் செல்வதற்கு ஏதுவாக சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
அதனை அடுத்து பிரதம மந்திரி கிராம சாலைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் இச்சாலையை அகலப்படுத்தும் பணிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஏழு கிலோமீட்டர் நீள முள்ள இச்சாலையை சுமார் 8 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அகலப்படுத்தும் பணி மற்றும் சிறு பாலங்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்குவதற்காக பூமி பூஜை போடும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சாலை அகலப்படுத்தும் பணியை தொடங்கி வைப்பதற்காக வந்த பொழுது கனமழை பெய்தது.
அப்பொழுது மழையை யும் பொருட்படுத்தாமல் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் அனைவரும் ஒன்றிணைந்து சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். அங்கு கூடி இருந்த பொதுமக்கள் அனை வருக்கும் இனிப்புகளை வழங்கினர்.
இந்த அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் தி.மு.க கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, நல்லம்பள்ளி ஒன்றிய குழு துணை தலைவர் பெரியண்ணன், தாதநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பழனி அறிவு, ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- திருமங்கலம் அருகே சாலை அகலப்படுத்தும் பணியால் புதியதாக அமைக்கப்பட்ட கழிவுநீர்உறிஞ்சு குழாய் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
- தற்போது அரசுநிதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது என வேதனை தெரிவித்தனர்.
திருமங்கலம்
திருமங்கலம் ஒன்றியத்தி ற்குட்பட்ட நடுக்கோட்டை கிராமத்தில் பொதுநிதியில் ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவுநீர் உறிஞ்சுகுழாய் கடந்த 4 தினங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதன் மூலமாக நடுக்கோட்டை ஊராட்சி கீரியகவுண்டபட்டி காலனியில் இருந்து வரத்து கால்வாய் வழியாக வரும் கழிவு நீர் இந்த புதிய உறிஞ்சுகுழாயில் சுத்திகரிக்கப்பட்டு அங்கிருந்து நடுக்கோட்டை மைக்குடி அருகே கால்வாயில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேலக்கோட்டையில் இருந்து பாரபத்தி வரையில் செல்லும் திருமங்கலம் - காரியாபட்டி ரோட்டி னை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்துள்ளனர். தற்போது 5 மீட்டர் அகலத்திலுள்ள இந்த ரோடு 7 மீட்டராக அகலப்படுத்தும் பணிகளை தொடங்கி யுள்ளனர். இதன் மூலமாக வாகன போக்குவரத்து மைக்குடி விலக்கில் இருந்து கீழக்கோட்டை, நடுக்கோட்டை, மேலக்கோ ட்டை விலக்கு வரையில் சாலை பணிகள் தொடங்கி யுள்ளன.
முதற்கட்டமாக தற்போது கீழக்கோட்டை கிராமத்தில் சாலையோரத்தில் பள்ளம் தோண்டப்பட்டு ரோடு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாள்களில் இந்த பணி அடுத்துள்ள நடுக்கோட்டை பஞ்சாயத்து எல்லையில் நடைபெறும். அப்போது புதியதாக நடுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் உறிஞ்சு குழாய் அருகே சாலைபணி நடைபெறும் உள்ளதால் உறிஞ்சுகுழாய் இடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுநிதி ரூ. 1 ஒரு லட்சத்து 30 ஆயிரம் வீணாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை பொறி யாளர் சுந்தரவடிவே லுவிடம் கேட்ட போது சாலை அகலப்படுத்தும் பணிகள் விரைவில் நடைபெறும் என நாங்கள் ஏற்கனவே திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நடுக்கோட்டை ஊராட்சியில் தகவல் கூறிவிட்டோம். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாமல் சாலை அகலப்படுத்தும் இடத்தில் உறிஞ்சுகுழாய் அமைத்துள்ளனர். அதன்மீது தான் சாலை அகலப்படுத்தும் பணிகள் செல்லும் என்றார்.
கீழக்கோட்டை கிராம மக்கள் கூறுகையில் இரண்டு துறை அதிகாரிகளும் முதலிலேயே கலந்து ஆலோசித்து பணிகளை தொடங்கி இருக்கலாம். தற்போது அரசுநிதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது என வேதனை தெரிவித்தனர்.
- புவனகிரியில் ஆபத்தான பயணத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
- அந்த இடத்தில் சாலை அகலப்படுத்தும் பணிக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
கடலூர்:
புவனகிரி- குறிஞ்சிப்பாடி செல்லும் முக்கிய பிரதான சாலை. இந்த சாலை வழியாக ஏராளமான பஸ்கள், வாகனங்கள் செல்வது வழக்கம்.
இந்த சாலையில் மேல மணக்குடி என்னும் இடத்தில் குறுகிய வளைவு உள்ளது. இதனால் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டது. இதனை அறிந்த வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் தமிழக அரசுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் அந்த இடத்தில் சாலை அகலப்படுத்தும் பணிக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இன்னும் சில மாதங்களில் மழை காலங்கள் ஆரம்பித்துவிடும், அப்படி கனமழை பெய்ய தொடங்கினால் முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்படும். இந்த வழியாக கடலூர், பாண்டி, சென்னை மற்றும் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் முக்கிய சாலை.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் இதனை பார்வையிட்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டு சென்றுள்ளார். மாவட்ட கலெக்டர் எந்த நிலையில் இந்த பணியை பார்த்தாரோ அதே நிலையில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகையால் அகலப்படுத்தும் பணியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் உத்தரவிட வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்