என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 233562"
- தகவல் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அரசு பிரமாண பத்திரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
- 2017-18-ம் நிதியாண்டில் சராசரி தினசரி இழப்பு ரூ. 9 கோடியாக இருந்தது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழக நிறுவனங்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அரசு போக்குவரத்து கழகங்கள் தற்போது தினந்தோறும் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அரசு போக்குவரத்து கழகங்களில் தினமும் ரூ.15 கோடி இழப்பு ஏற்படுகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.25 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அரசு பிரமாண பத்திரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. 2017-18-ம் நிதியாண்டில் சராசரி தினசரி இழப்பு ரூ. 9 கோடியாக இருந்தது.
சமீபத்தில் சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி 2021-22-ம் ஆண்டில் தினசரி இழப்பு ரூ.18 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனாலும் சராசரி தினசரி இழப்பு 2022 ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி வரை ரூ.14.8 கோடியாக உள்ளது.
கடந்த ஆண்டு அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.12,007 கோடி வருவாய் கிடைத்தது. இதில் ரூ.6,705.69 கோடி வருவாய் டிக்கெட் கட்டணம் மூலம் வந்தது. மேலும் ரூ.5,256.86 கோடி வருவாய் விளம்பரம் உள்ளிட்ட இதர வகைகளில் இருந்து கிடைத்தது.
ஆனால் கடந்த ஆண்டு அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.16,985 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. ஊழியர்களின் சம்பளத்துக்காக ரூ.9,015 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது 53 சதவீதம் ஆகும். எரிபொருளுக்காக ரூ.4,815.94 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இது 28 சதவீதம் ஆகும்.
பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு இலவச பயணத்தை வழங்கி வருகிறது. இதற்கான கட்டணத்தை அரசு, போக்குவரத்து கழகத்துக்கு செலுத்தி வருகிறது. கடந்த 2020-21-ம் ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் அரசு மூலம், போக்குவரத்து கழகத்துக்கு கிடைக்கும் தினசரி வருவாய் ரூ.73.64 லட்சமாக குறைந்தது. அது 2022-23 நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை தினசரி வருமானம் ரூ.1.7 கோடியாக உயர்ந்துள்ளது.
செலவுகளை குறைப்பதற்காக சமீப ஆண்டுகளாக போக்குவரத்து கழக நிறுவனங்கள் பல வழித்தடங்களில் பஸ்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளன. இதன் காரணமாக 2019-20 மற்றும் 2022-23 ஆண்டுகளுக்கு இடையில் ஒரு நாளைக்கு அரசு பஸ்களின் மொத்த பயண தூரம் 83.65 லட்சம் கிலோ மீட்டரில் இருந்து ரூ.77.81 லட்சம் கிலோ மீட்டராக குறைந்துள்ளது. பஸ் சேவைகளின் எண்ணிக்கையும் 19,290-ல் இருந்து 18,723 ஆக குறைந்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் எரி பொருள் செலவுகள் ரூ.955 கோடி அதிகரித்துள்ள போதிலும் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி முதல் பஸ் கட்டணம் உயரவில்லை.
- மழையினால் பெரும் நஷ்டம் என்று விவசாயிகள் வேதனை
- நுாற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர் சாய்ந்து நீரில் மூழ்கின
அகரம்சீகூர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்குட்பட்ட அகரம்சீகூர் பகுதிகளில் கோடை காலத்தில் வழக்கமான அளவைவிட இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனத்தின் காரணமாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது இதன் காரணமாக அகரம்சீகூர் பகுதிகளில் விவசாய பொதுமக்கள் பொதுவாக நெல் சாகுபடியையே அதிகம் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் 120 ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் சாய்ந்து மழை நீரில் மூழ்கின. மேலும் நெற்பயிர்கள் நன்கு முதிர்ச்சி அடை ந்துள்ளதால் தேங்கி நிற்கும் மழை நீரில் சாய்ந்து முளைக்க தொடங்கியுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.மேலும் இப்பகுதியில் அறுவடை செய்தவர்களும் வைகோலை தங்களின் வயல்வெளியில் குவியலாக வைத்திருந்தனர். அதுவும் தற்போது வீணாகிவிட்டது. தொடர் மழையின் காரணமாக அகரம்சீகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்துள்ள தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு நெல் மூட்டைகளை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் நெல் மூட்டைகளை வயல் பகுதியிலேயே வைத்து மூடி பாதுகாத்து வருகிறோம்.இந்நிலையில் நேற்று வானம் மேகமூட்டத்துடனே காணப்படுவதால் அறுவடை பணியை மேற்கொள்ளாமல் உள்ளோம். இதே நிலை நீடித்தால் நெற்பயிர்கள் அனைத்தும் வீணாகும் நிலை ஏற்படும்.நாங்கள் கடன் வாங்கி பயிரிட ப்பட்டுள்ளோம் தற்போது பெய்த கனமழை எங்களுக்கு பெரும் அளவில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து எங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாய பொதுமக்கள் கூறினார்கள்.
- கடந்த சில நாட்களாக முட்டை விலை 440 காசுகளாக நீடித்ததால் முட்டை வியாபாரிகள் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுவதாக கூறி வருகிறார்கள்.
- பண்ணையாளர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் தினசரி 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 440 காசுகளாக நீடித்ததால் முட்டை வியாபாரிகள் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுவதாக கூறி வருகிறார்கள்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவான நெக் நிர்ணயம் செய்யும் கொள்முதல் விலைக்கே பண்ணையாளர்கள் விற்பனை செய்ய வேண்டும். ஆனால் வியாபாரிகள் பண்ணையாளர்களிடம் நெக் விலையில் இருந்து 25 முதல் 70 காசு வரை குறைத்தே கொள்முதல் செய்து வந்தனர்.
இதை அடுத்து நாமக்கல் முட்டை விலை நிர்ணய ஆலோசனை குழுவான நெஸ் பேக் உருவாக்கப்பட்டு மைனஸ் விலையை பரிந்துரை செய்து வருகிறது. ஆனாலும் இந்த விலையில் இருந்து குறைத்தே வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் பண்ணையாளர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால் முட்டை கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியிருப்பதாவது:-
வியாபாரிகள் நெக் விலையில் இருந்து குறைத்து முட்டை கொள்முதல் செய்வதால், பண்ணையாளர்களுக்கு ஒரே மாதத்தில் ரூ.180 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது.
மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் அரசே முட்டை விலையை நிர்ணயம் செய்கிறது. அதேபோல் தமிழக அரசும் கொள்முதல், விற்பனை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்.
கோடை காலம் தொடங்கி உள்ளதால் மேலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அரசு உடனடியாக இது குறித்து முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- அனைத்து நெல் கொள்முதல் நிலையங் களிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும்.
- தண்ணீர் புகுந்து பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாகி பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமை தாங்கினார். இதில் கோட்ட அளவிலான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவர் ரவிச்சந்தர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவையாறு புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்ட வேண்டும். தஞ்சாவூர் கோட்டத்தில் உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங் களிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கக்கரை சுகுமாரன் கொடுத்துள்ள மனுவில், ஒரத்தநாடு சுற்று வட்டார பகுதியில் சில இடங்களில் சம்பா அறுவடை பணி தொடங்கிவிட்டது. எனவே தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செல்லப்பன் பேட்டை கிராமத்தை சேர்ந்த ராஜாங்கம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, செல்லப்பன்பேட்டை கிராமத்தில் மழை நீர் செல்ல வழி இன்றி வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனால் மழை பெய்யும் நேரங்களில் அந்தப் பகுதியில் உள்ள வயலுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாகி பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வாய்க்காலை மீட்டு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விசைப்படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்களை வாங்குவதற்கு நாகை துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான மீன் வியாபாரிகள் திரண்டனர்.
- 5 லட்சம் வரை டீசல் உள்ளிட்ட செலவு செய்து கடலுக்கு சென்ற தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்து கடந்த 14ம் தேதி நள்ளிரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் இன்று அதிகாலை கரை திரும்பினர். பெருத்த எதிர்பார்ப்புடன் சென்ற மீனவர்களுக்கு போதிய அளவு மீன்கள் கிடைக்காததால், ஏமாற்றத்துடன் கரை திரும்பியுள்ளனர்.
ஏராளமான விசைப்படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்களை வாங்குவதற்கு நாகை துறைமுகத்தில் காலை முதல் ஆயிரக்கணக்கான மீன் வியாபாரிகளும், மீன் பிரியர்களும் திரண்டனர். வழக்கமாக அதிகமாக கிடைக்ககூடிய வாவல், வஞ்சரம், பாறை உள்ளிட்ட மீன்கள் குறைந்த அளவிலேயே கிடைத்ததாகவும், மீன்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக 700 ரூபாய்க்கு விற்பனையான நண்டு மற்றும் இறால் 600 ரூபாய்க்கு விற்பனையாவதாகவும், 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வஞ்சரம், வாவள் 600 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிலோ 400 ரூபாய்க்கு விற்பனையான பாறை மீன் 200 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்பனையான விலை மீன்கள் 250 ரூபாய்க்கும், கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையான கனவா 340 ரூபாய்க்கும், நாகை துறைமுகத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
2 லட்சம் முதல் 5 லட்சம் வரை டீசல் உள்ளிட்ட செலவு செய்து கடலுக்கு சென்ற தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும், பிடித்து வரப்பட்ட மீன்கள் செலவினங்களை ஈடுகட்டவே சரியாக இருக்கும் என வேதனை தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்