என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 233572"
- வெவ்வேறு சம்பவங்களில் 3 பேருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், ஹரி, திலீப் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை நெல்பேட்டை, காயிதே மில்லத் நகரை சேர்ந்த சுல்தான் சையது இப்ராஹிம் மகன் அன்வர் முகமது (வயது 21). இவர் நேற்றிரவு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் ஒரு சிறுவனை மிரட்டிக் கொண்டிருந்தது. இதனை அன்வர் முகமது தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியது.
இதுகுறித்து விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் வசிக்கும் ரஹமத்துல்லா (46), அப்துல்லா, முஹம்மது இஸ்மாயில் மற்றும் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அவனியாபுரம், காமராஜர்நகரைச் சேர்ந்தவர் முத்துக்காளை (26). இவரது சகோதரர் வல்லரசு (22). இவரும், அதே பகுதியில் வசிக்கும் விக்னேஸ்வரன் என்பவரும் ஒன்றாக சேர்ந்து தண்ணீர் வியாபாரம் செய்து வந்தனர். இதில் அவர்களுக்கு முன் விரோதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று இவர்க ளுக்குள் பிரச்சினைஏற்பட வல்லரசுவை விக்னேஸ்வ ரன் மற்றும் அவரது ஆதர வாளர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.
இது தொடர்பாக முத்துக்காளை அவனியா புரம் போலீசில் புகார் கொடுத்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரன், மாரி ச்செல்வம், பெருங்குடி, வாஞ்சிநாதன் தெரு தங்கராஜ் மகன் சதீஸ்வரன் (18) ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை கீரைத்துறை, காமராஜபுரம், ஜார்ஜ் ஜோசப் தெருவை சேர்ந்த கதிர்வேல் மகன் விஜயகுமார் (23). சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் இவரை அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பியது. இதுகுறித்து கீரைத்துறை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், ஹரி, திலீப் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.
- மூதாட்டியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- கோவில் அருகே அமர்ந்திருந்த வாலிபரிடம் கேள்வி கேட்டதற்கு ஆத்திரமடைந்த அவர் நிர்மலாவை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
கொண்டலாம்பட்டி:
சேலம் அருகே உள்ள வீராணம் கொய்யாத்தோப்பு பகுதிகள் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த பச்சையப்பன் மனைவி நிர்மலா (வயது 60) என்பவர்தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் அல்லிக்குட்டை கணபதி நகர் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் அசோக்குமார் (வயது 22).
இந்த கோவிலில் வெகுநேரமாக அங்கேயே அமர்ந்து இருந்துள்ளார்.இதைக்கண்ட நிர்மலா ஏன் இங்கே அதிக நேரமாக இருக்கிறாய் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அசோக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நிர்மலாவின் கழுத்தில் குத்தி உள்ளார்.
நிர்மலாவின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து நிர்மலாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அசோக்குமாரை பிடித்து வீராணம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கத்தியை காட்டி மிரட்டி, ரூ.210-ஐ பறித்து சென்றார்.
மதுரை
மதுரை சோலை அழகுபுரம், திருப்பதி நகரச் சேர்ந்தவர் செண்பகமூர்த்தி (வயது 39). இவர் நேற்று கருப்பாயூரணி, பாரதிபுரம் தெருவில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர், கத்தி முனையில் ரூ.10 ஆயிரத்தை பறித்து சென்றனர்.
இது தொடர்பாக செண்பகமூர்த்தி, மாட்டுத்தாவணி போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பாயூரணி சீமான் நகர், நூல் பட்டறை தெரு ஜான் பிரிட்டோ, கே.புதூர் சங்கர் நகர் சதாம் உசேன் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மதுரை அழகப்பன் நகர், காந்திஜி தெருவை சேர்ந்தவர் முருகன் (51). இவர் நேற்று ஜெய்ஹிந்த்புரம் எல்.எல். ரோடு சந்திப்பு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த சதீஷ்குமார் என்ற பிரதர்ஸ் சதீஷ், கத்தியை காட்டி மிரட்டி, ரூ.210-ஐ பறித்து சென்றார். இது தொடர்பாக முருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஜெய்ஹிந்த்புறம் போலீசார், சதீஷ்குமாரை கைது செய்தனர்.
- வியாபாரியை கத்தியால் குத்திய அண்ணன்- தம்பி கைது செய்யப்பட்டனர்.
- ரூ.10ஆயிரம் வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளை விற்றுள்ளார்
மதுரை
ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்தவர் விமல் ஆனந்த் (வயது 30). இவர் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். அவரிடம் சோழவந்தானை சேர்ந்த நவீன் ரூ.10ஆயிரத்துக்கு மோட்டார் சைக்கிளை விற்றார்.
இந்தநிலையில் அச்ச ம்பத்து பாக்கியலட்சுமி நகரை சேர்ந்த முத்துப்பாண்டி மகன்கள் ஜெயபால்(22), கோபால் (26) ஆகியோர் விமல் ஆனந்தை தேடி வந்தனர்.
அவர்கள், சோழவந்தான் நவீன் விற்ற மோட்டார் சைக்கிள் எங்களுக்கு சொந்தமானது என்றுகூறி அதை தந்துவிடுமாறு கேட்டனர். அதற்கு விமல் ஆனந்த், "என்னிடம் அவர் ரூ.10ஆயிரம் வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளை விற்றுள்ளார். அந்த பணத்தைப் பெற்றுத்தந்தால் மோட்டார் சைக்கிளை தருவதாக கூறினார்.
இதனை தொடர்ந்து அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரம் அடைந்த 2 பேரும் விமல் ஆனந்தை கத்தியால் குத்தி விட்டு தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன்-தம்பி ஜெயபால்,கோபால் ஆகியோரை கைது செய்தனர்.
- 4 மளிகை கடைகளில் அடுத்தடுத்து திருட்டு நடந்ததால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 4 ஆயிரம் மதிப்புடைய சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்றனர்.
வடவள்ளி:
கோைவ தொண்டாமுத்தூரில் கோவை வடவள்ளி -சிறுவாணி சாலையில் ஏராளமான மளிகை கடைகள், குடியிருப்புகள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த சில 2 நாட்களாக இந்த பகுதியில் உள்ள மளிகை கடைகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சிறுவாணி சாலையில் உள்ள மளிகை கடை ஒன்றில் நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 4 ஆயிரம் மதிப்புடைய சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்றனர்.
மேலும் அதே பகுதியில் உள்ள சுரேஷ், செந்தில்குமார் ஆகியோரின் மளிகை கடைகளில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மளிகை பொருட்களையும் அள்ளி சென்றுள்ளனர். நேற்று காலை கடைக்கு வந்த உரிமையாளர்கள் திருட்டு போன சம்பவம் அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கிடையே இடையர்பாளையம் ரோட்டில் உதயகுமார் என்பவரின் கடையை உடைத்து ரூ.7 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கடையில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை பார்வையிட்டார்.
அப்போது, நள்ளிரவு நேரத்தில் 3 நபர்கள் கையில் கத்தி, கடப்பாரையுடன் சுற்றி திரிகின்றனர். பின்னர் ஆட்கள் யாராவது வருகிறார்களா என நோட்டமிடும் அவர்கள், ஆட்கள் வராததை உறுதி செய்து கொண்டு, கடையின் அருகே சென்று கடை பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்து பணத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இந்த காட்சிகளை தனது செல்போனில் ஏற்றிய அவர், வியாபாரிகள் குழுவில் பகிர்ந்தார். தற்போது இந்த காட்சிகள் வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த காட்சிகளை பார்த்த வியாபாரிகள், தொடர்ந்து நடந்து வரும் திருட்டு சம்பவத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கவும் வியாபாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
ெதாண்டாமுத்தூர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மளிகை கடையில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சேக்முகமது, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜயகுமாரியை சரமாரியாக குத்தியுள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி :
தக்கலை அருகே உள்ள காப்புவிளை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமாரி (வயது45). கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், மணலியில் சாலையோரம் ஒட்டல் நடத்தி வருகிறார்.
இவருக்கும் இரவிபுதூர் கடை பகுதியை சேர்ந்த சேக்முகமது (55) என்பவருக்கும் சுமார் 6 மாதமாக பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்நேற்று காலை விஜயகுமாரியிடம் மது குடிக்க சேக்முகமது பணம் கேட்டு உள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சேக்முகமது, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜயகுமாரியை சரமாரியாக குத்தியுள்ளார்.
படுகாயம் அடைந்த விஜயகுமாரியை அருகில் உள்ளவர்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது சம்பந்தமாக தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்