என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலீசார் விசாணை"
- கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
ஈரோடு:
ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜாபர். இவர் அந்த பகுதியில் உணவு கடை வைத்து நடத்தி வருகின்றார். நேற்று இரவு 12 மணியளவில் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3000 பணம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. அதன் அருகே உள்ள மற்றொரு குளிர்பான கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று மர்ம நபர்கள் பணம் இல்லாததால் திரும்பி சென்று விட்டனர்.
மேலும் குளிர்பானம் கடை அருகே ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றவர் இன்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப் பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.26 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு போய் இருந்தது. இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 3 கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருப்பது அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- வங்கி லாக்கரில் வைத்திருந்த 50 பவுன் நகை மீட்பு
- போலீசார் வழக்குப்பதிவு
வேலூர்:
வேலூர் தொரப்பாடியில் ஐ.டி. ஊழியர் வீட்டில் திருடிய உறவினர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலையில் வங்கி லாக்கரில் வைத்திருந்த 50 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.
வேலூர் தொரப்பாடி ராம்சேட்நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 42), ஐ.டி. ஊழியர். இவருடைய மனைவி மோகனப்பிரியா (40), அரசுப்பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு மகதி என்ற மகள் உள்ளார். பாலாஜி தனது தாயார் உஷாராணி மற்றும் மனைவி, மகளுடன் அடுக்குமாடி வீட்டில் வசித்து வருகிறார்.
பாலாஜி கடந்த 3-ந் தேதி திருப்பதிக்கும், தாயார் திருவண்ணாமலை மாவட்டம் கடலாடியில் உள்ள கோவிலுக்கும், மனைவி, மகள் மூஞ்சூர்பட்டில் நடந்த கோவில் திருவிழாவிற்கும் சென்றனர்.
உஷாராணி சாமி தரிசனம் செய்துவிட்டு மாலை வீடு திரும்பினார். வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோவை திறந்து அதில் வைத்திருந்த 50 பவுன் நகைகளை மர்ம கும்பல் திருடி மிளகாய்பொடியை தூவி விட்டு சென்றிருந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பாகாயம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உஷாராணி மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில், பாலாஜியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான குடிநீர் சுத்திகரிக்கும் எந்திரம் விற்பனை, பழுது பார்க்கும் வெங்கடேஷ் (40) என்பவர் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பாலாஜி வீட்டின் பீரோவில் இருந்து 50 பவுன் நகையை திருடியதும், அவற்றை திருவண்ணாமலையில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் வைத்திருப்பதும், வேலை சரியாக இல்லாததால் உறவினர்கள் தன்னை மதிக்கவில்லை என்று திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வெங்கடேஷை கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து திருவண்ணாமலையில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் வைத்திருந்த 50 பவுன் நகையை மீட்டனர்.
- காயம் அடைந்தவர்கள் புல்தானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- விபத்து காரணமாக அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலை பகுதியை சேர்ந்த பக்தர்கள் சிலர் ஒரு ஆம்னி பஸ்சில் அமர்நாத் யாத்திரைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் ஹிங்கோலிக்கு திரும்பினர். பஸ் மல்காபூர் பகுதியில் உள்ள நந்தூர் நாகா மேம்பாலத்தில் வந்தபோது அந்தவழியாக நாசிக் நோக்கி தனியார் ஆம்னி பஸ் சென்றது. இந்த பஸ் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றது.
அப்போது எதிர்பாராதவிதமாக 2 ஆம்னி பஸ்களும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 20 பேர் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து பலியானவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். காயம் அடைந்தவர்கள் புல்தானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான காயம் அடைந்த 32 பயணிகளுக்கு அருகிலுள்ள குருத்வாராவில் முதலுதவி அளிக்கப்பட்டது. விபத்து காரணமாக அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கடந்தா 13-ம் தேதி,பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தால் மனமுடைந்த சரண்யா, பூச்சி மருந்தை குடித்தார்.
- ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
ஐதராபாத்:
தெலங்கானா மாநிலம், எல்லாரம் கிராமத்தை சேர்ந்தவர் மல்லி கார்ஜுன ராவ் (31). இவரது மனைவி சரண்யா (29).
கடந்தா 13-ம் தேதி,பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தால் மனமுடைந்த சரண்யா, பூச்சி மருந்தை குடித்தார்.
இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு மல்லிகார் ஜூனராவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர், ஆம்புலன்ஸில் சரண்யாவின் உடலை ஏற்றிவிட்டு, பின்னால், பைக்கில் சென்றார்.
அப்போது, எதிரே வந்த லாரி வேகமாக மோதியது. இந்த விபத்தில் மல்லிகார்ஜுன ராவ் சம்பவ இடத்திலேயே பலியானார். தாயும், தந்தையும் இறந்ததால் இவர்களின் 2 பிள்ளைகளும் கதறி அழுதனர். இது அனைவரின் மனதையும் கலங்கச் செய்தது.
- கோவை நோக்கி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
- விபத்தால் அந்தப் பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
பல்லடம்:
கோவை காட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் மூர்த்தி ( வயது 51),டேவிட் ராஜ் (33), சுரேஷ் (36) , வெள்ளிமலை (33) ஆகிய 4 பேரும் ஜீப்பில் கோவையில் இருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஜீப்பை வெள்ளிமலை ஓட்டி வந்தார். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே உள்ள பெரும்பாளி என்ற இடம் அருகே சென்ற போது முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் ஜீப்பில் வந்த 4 பேருக்கும், எதிரே வந்த காரில் பயணம் செய்த உடுமலையை சேர்ந்த திராவிடமணி (69) ,அவரது மனைவி மீனாட்சி (56) ,மகள் கிருத்திகா (29,)ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூர்த்தி (51) ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
பலத்த காயமடைந்த மற்றவர்களுகுகு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் தனியார் மருத்துவமனையிலும் கோவை தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர். இந்த விபத்தால் அந்தப் பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்