என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தென்னங்கன்று"
- தனக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை, மா உள்ளிட்ட மரங்களை அதிகளவில் வளர்த்து வருகிறார்.
- தென்னங் கன்றை ஒரு கூடையில் எடுத்து திப்பணம்பட்டியில் இயங்கி வரும் அரசு பள்ளி மாணவர்களிடையே நேரில் சென்று காண்பித்து வருகிறார்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்-மீனாட்சிபுரம் சி எஸ்.ஐ.சர்ச் தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் தானியேல்(வயது 80). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை, மா உள்ளிட்ட மரங்களை அதிகளவில் வளர்த்து வருகிறார். தனது தோட்டத்தில் பதியம் வைத்து புதிதாக வளர்க்கப்படும் மரக்கன்று களை தனது காலி விளை நிலங்களில் ஊன்றி வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பதியம் வைத்து தென்னங்கன்றுகள் வளர்த்தபோது அதில் ஒரு தேங்காயில் இருந்து இரு தென்னங்கன்றுகள் முளைவிட்டு வந்ததை கண்டு ஆச்சரியமடைந்தார். ஏனெனில் ஒரு தேங்காயில் இருந்து ஒரு தென்னை கன்று தான் எப்பொழுதும் முளைக்கும். ஆனால் இதில் 2 தென்னங்கன்றுகள் முளைத் துள்ளது. தற்பொழுது ஓய்வு பெற்ற ஆசிரியர் தானியேல் வளர்ந்த அந்த தென்னங் கன்றை ஒரு கூடையில் எடுத்து திப்பணம்பட்டியில் இயங்கி வரும் அரசு பள்ளி மாணவர்களிடையே நேரில் சென்று காண்பித்து வருகிறார்.
மேலும் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் அதிசயமாக வளர்ந்துள்ள தென்னங்கன்றுகளை தொடர்ந்து காண்பிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
தானியேல் தான் செல்லும் இடங்களுக்கு கையிலேயே அந்த தென்னங்கன்றை எடுத்துச் செல்வதால் பொதுமக்களும் அதனை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
- விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர்கள் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், வடக்கு மாங்குடி ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வடக்கு மாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கனகராஜ் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர்கள் விவசாயிகள், என பலரும் கலந்து கொண்டனர்.
- பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
- 101 தென்னங்கன்றுகள் மண்ணரிப்பை தடுக்கும் பொருட்டு நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் நடப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தாழ்ந்தொண்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்று வந்தது.
அதன் நிறைவாக திருமுல்லைவாசல் கடற்கரை ஓரங்களில் நெகிழிகள் பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை எடுத்து தூய்மைப்படுத்தும் பணிகளும், அதன்பின்னர் பள்ளியின் ஓவிய ஆசிரியர் மகாதீர் குடும்பத்தார் அளித்த 101 தென்னங்கன்றுகளை மண்ணரிப்பை தடுக்கும் பொருட்டு நாட்டு நலப்பணி த்திட்ட மாணவர்களால் நடப்பட்டது.
உதவித் தலை மையாசிரியரும், திட்ட அலுவலருமான ராசேந்திரன் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டார்.
இதில் மாணவர்கள்,கிராமமக்கள் பங்கேற்றனர்.
- முதல் கட்டமாக நெட்டை-குட்டை ரக தென்னங்கன்றுகள் 700 வந்துள்ளது.
- அதிக எண்ணிக்கையில் தென்னங்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
மடத்துக்குளம்:
கூலி ஆட்களுக்கு பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் பல விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் விவசாயிகளுக்கு தரமான தென்னங்கன்றுகள் சரியான விலையில் கிடைக்கும் வகையில் மடத்துக்குளம் வேளாண்மைத்துறை அலுவலகத்தில் தென்னங்கன்றுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள பண்ணையில் தரமான தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் தென்னங்கன்றுகளை விவசாயிகளுக்கு வினியோகிக்கும் வகையில் வேளாண்மைத்துறை அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
தற்போது முதல் கட்டமாக நெட்டை-குட்டை ரக தென்னங்கன்றுகள் 700 வந்துள்ளது.இந்த ரகத்தை இளநீர் மற்றும் தேங்காய் உற்பத்திக்கு பயன்படுத்தலாம்.அதனை ஒரு கன்று ரூ. 125 என்ற விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்.
தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தையோ அணுகலாம். புதிதாக நடவு செய்யும் வகையில் அதிக எண்ணிக்கையில் தென்னங்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.மடத்துக்குளம் வட்டாரத்துக்கு நடப்பு ஆண்டில் 2500 தென்னங்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
- மண் மாதிரி எவ்வாறு சேகரிக்க வேண்டும் என செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
- உழவன் செயலில் மண்வளம் அட்டையினை தாங்களே பதிவிறக்கம் செய்தல் வேண்டும்.
மதுக்கூர்:
வேளாண்மைத் துறையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் அருகே நெம்மேலி கிராமத்தில் உள்ள 300 குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வீதம் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நெம்மேலி கிராம ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சனி ராஜராஜன் செய்திருந்தனர்.
வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் தங்கள் வயல்களில் மண் மாதிரியினை சேகரித்து வழங்குமாறும் மற்றும் உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல் மற்றும் இடுபொருள் பதிவு செய்தல் குறித்தும், உழவன் செயலியில் உள்ள 21 விதமான பயன்பாடுகள் குறித்தும் விவசாயிகளிடம் விளக்கமாக எடுத்துக் கூறினார்.
மேலும் வேளா ண்மை துறையின் வழிகாட்டுதலின்படி தற்சமயம் நடை பெறவிருக்கும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு 27.7.23 முதல் 29.7. 23 வரை கேர் பொறியியல் கல்லூரி வளாகம் திருச்சியில் நடைபெற இருப்பதால் அனைத்து விவசாயிகளுக்கும் கலந்து கொண்டு பயனடையுமாறும் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயிகளான இருளப்பன், பெரமைய ன் சேதுராமன், நாராயணசுந்தரம் , தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் அண்ணாதுரை மற்றும் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி தென்னங்கன்றுகள் பராமரி த்தல் குறித்து விவசாயிகளிடம் கூறினார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகிதா மண் மாதிரி சேகரிக்கும் முறை குறித்தும் பரிந்துரைக்கப்பட்ட உரத்தினை பயன்படுத்தி மண்வளத்தினை மேம்படு த்திக் கொள்ளுமாறு தெரிவித்தார்.
வேளாண்மை உதவி அலுவலர் முருகேஷ் மண் மாதிரி எவ்வாறு சேகரிக்க வேண்டும் என செயல்விளக்கத்தின் மூலம் நேரடியாக விவசாயிகளிடம் காண்பித்தார்.
வேளாண்மை அலுவலர் இளங்கோவன் மண் மாதிரி சேகரிக்க தேவையான ஆவண குறிப்புகள் மற்றும் உழவன் செயலில் மண்வளம் அட்டையினை தாங்களே பதிவிறக்கம் செய்தல் குறித்தும் விவசாயிகளிடம் தெரிவித்தார்.
இலவசமாக வழங்கப்படும் தென்ன ங்கன்றுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜு மற்றும் பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர் இளமாறன் ஆகியோர் விவசாயிகளை பதிவு செய்தனர்.
- கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
- 11 விவசாயிகளுக்கு பண்ணை கருவிகளின் தொகுப்பு வழங்கப்பட்டது.
மதுக்கூர்:
மதுக்கூர் அருகே உள்ள தளிக்கோட்டை பஞ்சாயத்தில் 300 குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் வீதம் தளிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன் தலைமையில் வழங்கப்பட்டது.
அட்மா திட்டத்தின் கீழ் தனிக்கோ ட்டை பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகளின் கால்நடை களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் கால்நடை உதவி மருத்துவர் இளவரசி மூலம் நடத்தப்பட்டது.
இதில் 60 குடும்பங்களை சேர்ந்த விவசாயிகளின் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து சத்து மாத்திரை மற்றும் உன்னி நீக்க மருந்துகள் 100 சதவீத மானியத்தில் இலவசமாக வழங்கப்பட்டது.
வேளாண்மை அலுவலர் இளங்கோ , துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி, வேளாண்மை உதவி அலுவலர் ராமு ஆகியோர் விவசாயிகளின் திட்ட வாரியான தேவைகளை பதிவு செய்து தென்னங்கன்றுகளை வழங்கினர்.
அட்மாதிட்ட அலுவலர்கள் சுகிர்தா, ராஜு, அய்யா மணி ஆகியோர் குடல் புழு நீக்க கால்நடை மருத்துவ முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் .
மேலும் 11 விவசாயிகளுக்கு பண்ணை கருவிகளின் தொகுப்பு உதவி விதை அலுவலர் இளங்கோ மற்றும் கலையரசன் மூலம் பதிவு செய்து 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது.
பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர் இளமாறன் முன்னுரிமைக்கு பதிவு செய்யாத விவசாயிகளை உழவர் செயலியில் பதிவு செய்து உதவினார்.
அட்மா திட்ட அலுவலர்கள் விவசாயிக ளுக்கு உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் நன்மைகள் குறித்து எடுத்துக் கூறினர்.
வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி நடப்பு நிதியாண்டில் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து அதன் மானிய விகிதம் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.
இதில் முன்னோடி விவசாயிகள் அண்ணா துரை, ஜெயமணி , சக்திவேல், அன்பழகன் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்படும்.
- 2500 தென்னங்கன்றுகள் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில விவசாய பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜீத் சங்கர் தொடங்கி வைத்தார்.
வக்கீல் அருண் ஷோரி முன்னிலை வகித்தார்.
முதல் கட்டமாக 2500 தென்னங்கன்றுகளை வீடு வீடாக சென்று காங்கிரஸ் கட்சியினர் வழங்கினர். தொடர்ந்து, இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்படும் என சுர்ஜித் சங்கர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நடேசன் மற்றும் வட்டார தலைவர் வேனுகோபால், முன்னாள் வட்டார தலைவர் கனகராஜ், நாகை நகர தலைவர் உதய சந்திரன், மாவட்ட இணை செயளாலர் பாரதிராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் தெய்வானை, வட்டார பொருளாளர் மணிஷ், பஞ்சாயத்து தலைவர் ரவிகுமார், இளைஞரணி தலைவர் சுரேஷ், நகர துணை தலைவர் கார்த்தி, நகர துணை செயலாளர் நாகேந்திரன், மாவட்ட துணை தலைவர் மகளிர் அணி மாலா, நகர செயலாளர்கள் சுரேஷ், ஹரி, சென்னை ராஜா, ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருட்கள் பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
- தென்னங்கன்று மற்றும் வேளாண் கருவிகள் ஆகியவை உரிய நபர்களிடம் சேர்ந்துள்ளதா என ஆய்வு.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்ட திட்ட செயல்விளக்கங்களைகள ஆய்வு செய்து உதவி வேளாண்மை அலுவலர்கள் பணியை வேளாண்மை துணை இயக்குநர் விஜயலட்சுமி மற்றும் உதவி இயக்குநர் ஜெயசீலன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஏரி வேலூர் கிராமத்தில் பருத்தியில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை செயல்விளக்கம் திடல் ஆகியவற்றை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட விவசாயியிடம் திட்டம் பற்றி விளக்கி ஆலோசனை வழங்கினர்.
அரித்துவாரமங்கலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தையும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
மேலும் ஆலங்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருட்கள் பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
மேலும் ஆலங்குடி, நார்தாங்குடி, ஆகிய பகுதிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தென்னங்கன்று மற்றும் வேளாண் கருவிகள் ஆகியவை உரிய நபர்களிடம் சேர்ந்துள்ளதா ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் போது வலங்கைமான் வட்டார வேளாண்மை அலுவலர் சூர்யமூர்த்தி, உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவலிங்கம், சரவணன், சிரஞ்சீவி, சப்தகிரிவசன் உடன் இருந்தனர்.
- வேளாண்மை துறை சார்பில் விவசாயிகள் மற்றும் நலிந்த ஏழைப் பயனாளிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்க வரவழைக்கப்பட்டுள்ளது.
- அதிகாரிகள் அலட்சியமாக தென்னங்கன்றுகளை வைத்து இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
திருவள்ளூர்:
பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 43 ஊராட்சிகள் உள்ளது. அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகள் மற்றும் நலிந்த ஏழைப் பயனாளிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்க வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தென்னை கன்றுகளை முறையாக பாதுகாக்காமல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள ஆண்கள் கழிவறையில் வைத்து உள்ளனர்.
இதனை பார்க்கும் விவசாயிகளும், பயனாளிகளும் மிகவும் மனவேதனை அடைந்து வருகிறார்கள். அதிகாரிகள் அலட்சியமாக தென்னங்கன்றுகளை வைத்து இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விவசாயிகளுக்கு சேர வேண்டிய நலத்திட்ட உதவிகளை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- வைத்தீஸ்வரன் கோவிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
- விழாவில் பொது மக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது
சீர்காழி:
தமிழக முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் விழா மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் அறிவுறுத்தலின்படி மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினருமான சுவாமிநாதன் ஏற்பாட்டில் 500 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொருளாளர் மகா.அலெக்சாண்டர், பேரூராட்சி செயலாளர் அன்புச்செழியன், பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், அவை தலைவர் சந்திரமூர்த்தி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்த், துணை செயலாளர் இராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி கமலநாதன், பேரூர் கழகப் பொருளாளர் ராஜசேகர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வைத்தீஸ்வரன் கோவில் கடைவீதியில் திமுக பேரூராட்சி கழகம் சார்பில் திமுகவின் கொடியை ஏற்றி பொது மக்களுக்கு தென்னங்கன்று மற்றும் இனிப்புகள் வழங்கி தமிழக முதல்வரின் 70 வது பிறந்தநாளை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 7 கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்படுகிறது.
- முதற்கட்டமாக 1200 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் வட்டார வேளாண்மை-உழவர் நலத்துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள வேட்டாம்பாடி, வீசாணம், தளிகை, கோனூர், பெரிய
கவுண்டம் பாளையம், சிலுவம்பட்டி, மாரப்ப நாயக்கன்பட்டி ஆகிய 7 கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்படுகிறது.
கிராம ஊராட்சிக்கு ஒரு பண்ணைக்குடும்பத்திற்கு தலா 2 தென்னங்கன்றுகள் வீதம் 300 பண்ணைக் குடும்பங்களுக்கு 600 தென்னங்கன்றுகள் வீதம் வழங்கப்பட்டவுள்ளது. முதற்கட்டமாக 1200 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
தென்னங்கன்றுகள் வழங்கும் முகாம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வேட்டாம்பாடி கிராமத்தில் நடைபெற்றது. அதுசமயம் நாமக்கல் வட்டார அட்மா தலைவர் பழனிவேல் தலைமையில் வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா முன்னிலையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டது. இம்முகாமினை வேளாண்மை அலுவலர் ரசிகபிரியா, உதவி வேளாண்மை அலுவலர் கோபிநாத், வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் ஏற்பாடு செய்தி ருந்தனர்.
- கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் நடந்தது.
- 300 விவசாயிகள் தங்கள் விவரங்களை பதிவிட்டு தென்னங்கன்றுகளை பெற்று சென்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருமலை சமுத்திரத்தில் வேளாண் அனுபவ பணிக்காக வந்திருக்கும் பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி மாணவிகள் தீபிகா, தம்மஸ்ரீ, தீபிகா, தனுஷா, தர்ஷினி, திவ்யா, திவ்யசரிகா, இலக்கியா, இனிதா, காயத்ரி கிருஷ்ணகுமார் ஆகியோர் வேளாண்மை இயக்குனர் அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாமில் கலந்து கொண்டு விவசாயிகளின் விவரங்களை பதிவு செய்து அவர்களுக்கு இரண்டு தென்னம் கன்றுகளை வழங்கினர்.
இந்த விழாவை வேளாண்மை இயக்குனர் அய்யம்பெருமாள் தொடங்கி வைத்தார்.
வேளாண்மை உதவி அலுவலர் பெட்ரிக் இளையராஜா இந்த முகாமை வழிநடத்தி தென்னங்கன்றுகளை வழங்கினார்.
இந்தச் திட்டத்தின் கீழ் 300 விவசாயிகள் தங்களது விவரங்களை பதிவிட்டு தென்னங்கன்றுகளை பெற்று சென்றனர் .
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்