search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூஸ்டர் தடுப்பூசி"

    • 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், முன்கள பணியாளர்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் அச்சமின்றி இலவச பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த 12 வயது மேற்பட்ட மாணவர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனை வருக்கும் கொரோனா முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு அதன் மூலமும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், முன்கள பணியாளர்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட 60 வயதுக்குட்பட்ட மக்கள் அனைவருக்கும் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் வருகின்ற அடுத்த மாதம் 30-ந் தேதி வரை அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் அச்சமின்றி இலவச பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொரோனாவின் புதிய அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.
    • உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    ஜெனீவா:

    கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது.

    தற்போது புதிய உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் மற்றும் அதன் துணை வகை மாறுபாடுகளில் பல நாடுகளால் நோய் தொற்று பரவி வருகிறது.

    இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறும்போது, "கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இது சுகாதார அமைப்புகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது மேலும் அழுத்தம் கொடுக்கிறது. இறப்புகளின் போக்கு அதிகரித்து வருவது குறித்தும் கவலைப்படுகிறேன்.

    ஒமைக்ரானின் துணை வகைகளான பி.ஏ.4 மற்றும் பி.ஏ.5 போன்றவை உலகம் முழுவதும் பாதிப்புகள், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவது மற்றும் இறப்பு ஆகியவற்றின் அலைகளை தொடர்ந்து இயக்குகின்றன என்று கூறி இருந்தார்.

    இந்த நிலையில் புதிய கொரோனா வைரஸ் அலைகள் வர வாய்ப்பு உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமி நாதன் கூறியதாவது:-

    கொரோனாவின் புதிய அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு புதிய மாறுபாடும் மிகவும் பரவக்கூடியதாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை தவிர்க்கக் கூடியதாகவும் இருக்கும். அதிக எண்ணிக்கையில் பாதிப்பு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுதல் இருக்கலாம். தற்போது மாறி வரும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து நாடுகளும் தரவு சார்ந்த திட்டத்தை வைத்திருக்க வேண்டும் என்றார்.

    சமீப காலமாக உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3 மாதமாக இல்லை.
    • பூஸ்டர் தடுப்பூசி முறையாக போட்டுக்கொண்டால் பேரிடரில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

    சென்னை:

    பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை சென்னை எழும்பூரில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் 4-ம் அலையை எதிர்கொள்ளும் வகையில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நிலை உள்ளது.

    அதனால் பூஸ்டர் முன்எச்சரிக்கை தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் இலவசமாக 2950 மையங்களில் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இதுவரையில் தமிழகத்தில் 11 கோடியே 63 லட்சத்து 18 ஆயிரத்து 727 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மத்திய அரசு நல்ல திட்டத்தை அறிவித்து உள்ளது.

    தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3 மாதமாக இல்லை. எனவே பூஸ்டர் தடுப்பூசி முறையாக போட்டுக்கொண்டால் பேரிடரில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். 3 கோடியே 45 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

    முதல் மற்றும் இரண்டாம் தவணையை சேர்த்து 4 கோடியே 77 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும்.

    இலவச பூஸ்டர் தடுப்பூசி 75 நாட்களுக்குள் போடப்பட வேண்டும் என்பதால் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் மெகா தடுப்பூசி முகாம் இனி வருங்காலங்களில் நடத்தப்படும்.

    வருகிற 24-ந்தேதி 50 ஆயிரம் இடங்களில் மெகா சிறப்பு முகாம் நடத்தப்படும். அதில் 3 தடுப்பூசிகளும் போடப்படும். எல்லா பிரிவினருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்.

    முதல்-அமைச்சர் நன்றாக இருக்கிறார். இன்றோ, நாளையோ வீடு திரும்புகிறார். ஜனாதிபதி தேர்தலில் அவர் ஓட்டு போடுவார்.

    குரங்கு அம்மை நோய் கேரளாவில் ஒருவருக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் தமிழக-கேரள எல்லையில் 13 இடங்களில் தொடர் கண்காணிப்பு நடக்கிறது.

    விமான நிலையங்களிலும் அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று உணவு சாப்பிடக்கூடிய இடங்களில் அதிகம் பரவுகிறது. அதனால் ஓட்டல்களில் சமூக இடைவெளியுடன் உணவு அருந்த வலியுறுத்தப்படும்.

    முக கவசம் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு அவசியம் அணிய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், பொது சுகாதார துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் உடனிருந்தனர்.

    • பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில் 43 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.
    • மேலும் தேவையான அளவு தடுப்பூசி வருகிறது என்று சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

    சென்னை:

    கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி மட்டுமே பேராயுதமாக கருதப்படுவதால் அதனை தகுதி உள்ள அனைவரும் செலுத்தி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

    நாடு முழுவதும் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி பெரும்பாலானவர்கள் செலுத்திக்கொண்ட நிலையில் முன்எச்சரிக்கை என்று சொல்லக்கூடிய பூஸ்டர் தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கட்டணத்துடன் போடப்படுகிறது.

    2 தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் முடிந்த நிலையில் உள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதி உள்ளவர்கள் என மத்திய அரசு அறிவித்தது.

    2-வது தவணை தடுப்பூசிகள் செலுத்தி கொண்டு பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியிருந்தும் பலர் பணம் செலுத்தி போட முன்வரவில்லை. தமிழகத்தில் மிக குறைந்த அளவிலேயே பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான கால அவகாசம் 6 மாதமாக குறைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியதால் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதினார்.

    இதையடுத்து முன் எச்சரிக்கை பூஸ்டர் தடுப்பூசி 75 நாட்களுக்கு மட்டும் இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் 75-வது பொன் விழா சுதந்திர தினத்தையொட்டி இன்று (ஜூலை 15) முதல் செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை 18 முதல் 59 வயது உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்றும் அதனை தகுதியுள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது.

    இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்று முதல் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

    சென்னையில் அமைச்சர் மா.சுப்பிமணியன் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார்.

    இதே போல அனைத்து மாவட்டங்களிலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை உள்ளாட்சி பிரதிநிதிகள் தொடங்கி வைத்தனர். 18 முதல் 59 வயதுள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதி உள்ளவர்கள் என்றாலும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் அல்லது 26 வாரங்கள் முடிந்து இருக்கக்கூடியவர்தான் போட வேண்டும்.

    அதன் அடிப்படையில் தமிழகத்தில் தற்போது பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி ஒரு கோடியே 35 லட்சம் பேருக்கு இன்னும் போட வேண்டியுள்ளது. இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதி உடையவர்களாக 3½ கோடி பேர் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    பூஸ்டர் தடுப்பூசி போட தொடங்கும் இந்த நாளில் கோவிஷீல்டு பூஸ்டர் செலுத்தக்கூடியவர்கள் 3 கோடியே 13 லட்சத்து 38 ஆயிரத்து 545 பேரும், கோவேக்சின் செலுத்தக் கூடியவர்கள் 41 லட்சத்து 88 ஆயிரத்து 276 பேரும் உள்ளனர்.

    கடந்த ஜனவரி மாதம் 15-ந்தேதிக்கு முன்னதாக 2 தவணை தடுப்பூசியும் செலுத்தியவர்கள் இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி போடலாம்.

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.

    இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் அனைத்து சுகாதார துணை இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி பூஸ்டர் தடுப்பூசி இன்று முதல் 75 நாட்களுக்கு போடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். அரசு கொரோனா மையங்களில் இலவசமாக செலுத்த வேண்டும்.

    18 வயதுக்கு மேற்பட்ட வர்கள் 2 தவணை தடுப்பூசியும் செலுத்தி 6 மாதங்கள் முடிந்திருக்க வேண்டும். முதல் மற்றும் 2-வது தவணை எந்த தடுப்பூசி போட்டுக் கொண்டார்களோ அதே நிறுவனத்தைச் சேர்ந்த பூஸ்டர் தடுப்பூசியே செலுத்த வேண்டும். மாற்றி போடக்கூடாது.

    பொதுமக்கள் கூடும் இடங்கள், அலுவலகங்கள், ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும்.

    பள்ளி, கல்லூரிகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறப்பு முகாம்களை நடத்தலாம். சிறப்பு முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியவுடன் அதற்கான சான்றிதழ் ஆன்லைன் வழியாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில் 43 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. மேலும் தேவையான அளவு தடுப்பூசி வருகிறது என்று சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

    பூஸ்டர் தடுப்பூசி செப்டம்பர் 30-ந்தேதி வரை செலுத்தப்படும் நிலையில் 4 கோடியே 15 லட்சத்து 75 ஆயிரத்து 995 பேர் தகுதி உள்ளவர்களாக இருப்பார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    • இந்தியாவில் 87 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.
    • பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான இடைவெளி 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்ள கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகின்றன. கடந்த ஆண்டு ஜனவரி 16ந்தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

    இதேபோல் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. ஏப்ரல் 10ம்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது. இரண்டாவது டோஸ் செலுத்திய பிறகு பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான இடைவெளி 9 மாதங்களில் இருந்து 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வரும் 15ம் தேதி முதல் 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளலாம். நாட்டின் 75வது சுதந்திர தின நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு, ஜூலை 15ம் தேதியில் இருந்து 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதுபற்றி மத்திரி அனுராக் தாகூர் கூறுகையில், "நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. இந்த கொண்டாட்டத்திபோது, ஜூலை 15ம் தேதி முதல் அடுத்த 75 நாட்கள் வரை, 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

    அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி இந்திய மக்கள் தொகையில் 96 சதவீதம் பேர் முதல் தவணையும், 87 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். 18 வயது முதல் 59 வயதுக்குட்பட்ட 77 கோடி மக்களில் 1 சதவீதத்திற்கும் குறைவான நபர்களே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் மொத்தம் 16 கோடி பேர் பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதி வாய்ந்தவர்கள். இவர்களில் 26 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதன் காரணமாக தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது.
    • சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது.

    பெய்ஜிங்:

    கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவில் தான் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதன்பிறகு பல நாடுகளுக்கும் தொற்று பரவிய நிலையில் பல நாடுகளும் பொதுமுடக்கத்தை அறிவித்தன. தற்போது தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதன் காரணமாக தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது.

    எனினும் உருமாறிய கொரோனா வைரசால் தற்போது சில நாடுகளில் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

    அந்தவகையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. அந்தநாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உருமாறிய பிஏ.5 வகை தொற்று வேகமாக பரவி வருகிறது.

    இதனால் அங்கு கடந்த சில நாட்களாக பாதிப்பு 400-ஐ தாண்டி பதிவாகி வரும் நிலையில், தெற்கு கடலோர பகுதியில் அமைந்துள்ள மக்காவ் பிராந்தியத்திலும் பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

    இந்த பிராந்தியத்தில் தான் உலகின் மிகப்பெரிய சூதாட்ட விடுதிகள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் தொற்று பரவல் காரணமாக சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு மக்காவ் பிராந்தியத்தில் உள்ள அனைத்து சூதாட்ட விடுதிகளும் நேற்று மூடப்பட்டன.

    இதற்கிடையே பெய்ஜிங் நகரிலும் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் பொதுமுடக்கம் அமலாக்கப்படலாம் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

    • திருச்சியில் 95 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி முதல் போடும் பணி நிறைவடைந்துள்ளது.
    • பள்ளிகளில் தடுப்பூசி போடாத குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதற்கு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.

    திருச்சி:

    திருச்சியில் திருவெரும்பூர் பகுதியில் உள்ள பள்ளியில் மெகா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. 98.6 சதவீதத்தினர் தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதில் திருச்சியில் 95 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி முதல் போடும் பணி நிறைவடைந்துள்ளது.

    இன்று இதுவரையில் தமிழகம் முழுவதும் 3 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த பணியானது இன்று ஏழு மணி வரை நடைபெறும். அதைத்தொடர்ந்து தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆய்வு பணியில் ஈடுபட இருக்கிறோம். பக்ரீத் பண்டிகை என்பதால் இஸ்லாமியர்கள் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தடுப்பூசி போடாதவர்களை தேடி கண்டுபிடித்து போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பள்ளிகளில் தடுப்பூசி போடாத குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதற்கு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.

    பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் முதலில் தொய்வு ஏற்பட்டது. இதற்காக தற்போது மறுபடியும் அதிக விழிப்புணர்வு செய்து வருகிறோம். பொருளாதாரம் முடங்காமல் இருக்க தொழிலாளர்களுக்கு நிறுவன முதலாளிகள் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்த வழிவகை செய்து கொள்ளுங்கள்.

    இன்னும் 10 நாட்களில் தமிழக முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசம் எனும் திட்டத்தை கொண்டு வருவோம். நீட் தேர்வு குறித்து விரைவில் நல்ல தகவல் அறிவிக்கப்படும்.

    நாமக்கல் சித்த மருத்துவ கல்லூரி திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. சித்த பல்கலைக்கழகங்கள் சென்னையில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி அரசு மருத்துவமனையில் திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் மருத்துவமனைகள் சரி செய்யப்படும்.

    நோயாளிகள் தற்போது எங்கேயும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலமாக 89 ஆயிரத்து 55 விபத்துகளில் சிக்கியவர்களுக்கு அரசு சார்பில் உதவிகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், கோட்டத் தலைவர் மதிவாணன், கவுன்சிலர்கள் கொட்டப்பட்டு தர்மராஜ், கே.கே.கே.கார்த்திக், கோவிந்தராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணியின்போது பயணிகள் முகக்கவசம் அணிந்து பயணிக்க கண்டக்டர்கள் அறிவுறுத்த வேண்டும்.
    • டிரைவர், கண்டக்டர்கள் தங்களது கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு சுத்தம் செய்து பாதுகாப்பாக பணிபுரிய வேண்டும்.

    சென்னை:

    சென்னை புறநகரில் கொரோனா பரவி வருவதால் மாநகர பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

    இது குறித்து மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் சார்ந்த திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லைப்புற பகுதிகளில் மாநகர போக்குவரத்து கழகம் பஸ்சை இயக்கி வருகிறது. எனினும், கொரோனா தொற்று பரவுதலை அறவே தவிர்த்திடும் பொருட்டு அனைத்து விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல் நெறி முறைகளின்படி தவறாது பின்பற்றப்பட வேண்டும் என அனைத்து மாநகர போக்குவரத்து பணியாளர்களுக்கும் ஏற்கனவே சுற்றறிக்கை படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அதனை அறவே தவிர்த்திடும் பொருட்டு அனைத்து மாநகர போக்குவரத்து கழக டிரைவர், கண்டக்டர்கள் அனைவரும் தமது பணியின்போது கண்டிப்பாக கீழ்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை தவறாது கடைபிடித்தல் வேண்டும் என மீண்டும் இச்சுற்றறிக்கை வழி அறிவுறுத்தப்படுகிறது.

    அனைத்து டிரைவர், கண்டக்டர்கள் முகக்கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும்.

    பணியின்போது பயணிகள் முகக்கவசம் அணிந்து பயணிக்க கண்டக்டர்கள் அறிவுறுத்த வேண்டும்.

    டிரைவர், கண்டக்டர்கள் தங்களது கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு சுத்தம் செய்து பாதுகாப்பாக பணிபுரிய வேண்டும்.

    கண்டக்டர்கள் பணியின்போது எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்குதலை அறவே தவிர்த்திட வேண்டும்.

    அனைத்து கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கூ றப்பட்ட அறிவுறுத்தல்களை டிரைவர், கண்டக்டர்கள் தவறாது பின்பற்றுவதை உறுதி செய்தல் வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் இந்த ஆண்டு இதுவரை 2,882 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மத்திய சுகாதாரத் துறை மந்திரி மாண்சுக் மாண்டவியா தலைமையில் நடந்த கொசுக்களால் பரவும் நோய்களான டெங்கு, மலேரியா போன்ற நோய்களின் நிலை பற்றியும், அதை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

    இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

    தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் இந்த ஆண்டு இதுவரை 2,882 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது 140 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் 21 ஆயிரம் கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    மேலும் தமிழகத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேலும் கொசு ஒழிப்பு பணிகளுக்கான கொசு ஒழிப்பு தெளிப்பான் எந்திரங்களும், பூச்சி கொல்லி மருந்துகளும் போதிய அளவில் இருப்பில் உள்ளன.

    தமிழ்நாட்டில் மலேரியா நோய் தொற்று பெருமளவில் குறைந்து வருகிறது. சென்ற ஆண்டு 772 பேரும், இந்த ஆண்டு இதுவரை 140 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    தமிழ்நாட்டில் 17 மாவட்டங்கள் மலேரியா நோய் பரவல் இல்லாத மாவட்டங்களாக உள்ளது. மலேரியாவை முற்றிலும் ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    யானைக்கால் நோய் ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நோய் பரவல் இல்லாத நிலைக்கான சான்று பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தமிழக அரசு சார்பில் யானைக்கால் நோயாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வீதம் உதவித் தொகை 8,023 பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.9.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஜப்பானிய மூளைக் காய்ச்சலால் இதுவரை 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி திட்டம் தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதநகர், மதுரை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய 14 மாவட்டங்களில் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு 9-ல் இருந்து 15 மாதங்களுக்கும், 16-ல் இருந்து 24 மாதங்களுக்கும் 2 தவணைகளில் செலுத்தப்பட்டு வருகிறது.

    மேற்கூறிய அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விரிவாக எடுத்துரைத்தார்.

    மேலும் தமிழ்நாட்டில் 78,78,980 கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன எனவும் அவற்றை பயன்படுத்தி தமிழ்நாட்டில் 18 வயது முதல் 59 வயதுக் குட்பட்ட அனைருக்கும் அரசு கொரோனா தடுப்பூசி மையங்களிலேயே முன் எச்சரிக்கை தவணை தடுப்பூசி (பூஸ்டர்) போட அனுமதிக்குமாறும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது.
    • கொரோனாவின் மறுதாக்கம் எண்ணிக்கை குறைந்து வருவதை கண்டுபிடித்துள்ளனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. தமிழகத்திலும் கொரோனா பரவல் கடந்த ஒரு வாரமாக உயர்ந்தபடி உள்ளது.

    ஒமைக்ரான் பிஏ4 மற்றும் பிஏ5 வகை வைரசுகள் அதிகளவு பரவுவதால்தான் கொரோனா தாக்கம் அதிகரித்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே ஒமைக்ரான் பிஏ2.75 ரக வைரசும் மிக வேகமாக பரவுவதாக இஸ்ரேல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    இன்று காலை நிலவரப் படி இந்தியாவில் 16 ஆயிரத்து 649 பேருக்கு கொரோனா பரவல் ஏற்பட்டிருப்பது முடிவு செய்யப்பட்டுள்ளது. பரிசோ தனைக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

    தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2,672 பேருக்கு பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. திங்கட்கிழமை 2,654 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. நேற்று அந்த எண்ணிக்கை 2,662 ஆக உயர்ந்தது.

    தமிழகத்தில் தற்போது கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 765 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் சுமார் 8 ஆயிரம் பேர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளனர். அவர்களில் கணிசமானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் 4-வது அலை உருவாகிவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கும் அதிரடி நடவடிக்கை இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தற்போது நாடுமுழுவதும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அப்போது கொரோனாவின் மறுதாக்கம் எண்ணிக்கை குறைந்து வருவதை கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் மறுதாக்கத்தின் அளவு தொடர்ந்து குறைந்த படி உள்ளது.

    கடந்த ஜூன் மாதம் 10-ந்தேதி எடுத்த ஆய்வின்படி கொரோனா வைரசின் மறுதாக்கம் 1.9 ஆக இருந்தது. தற்போது அது 1.5 ஆக குறைந்துள்ளது.

    கொரோனா பாதித்த ஒவ்வொருவரும் தலா 2 பேருக்கு அதை பரவ விடுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த மறுதாக்கம் ஒன்று என்ற அளவுக்கு கீழ் குறையும்போது கொரோனா பரவல் வீழ்ச்சி அடையத் தொடங்கும்.

    தொற்றுநோய் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆய்வு படி கொரோனா வைரஸ் இன்னும் சில தினங்களுக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிடும். அதன் பிறகு அது கட்டுப்பாட்டுக் குள் வந்துவிடும் என்று மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    ஆனால் மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், 'ஒவ்வொரு அலை ஏற்படும் போதும் இத்தகைய உயர்வு வருவது வழக்கமானது தான். பொதுமக்கள் முக கவசம் அணிந்து தங்களை தனிமைபடுத்திக்கொண்டால் பிறகு வைரஸ் பரவல் குறைந்துவிடும்.

    கொரோனா அறிகுறி உள்ளவர்களுடன் நெருங்கி பழகுவதை தவிர்த்தாலும் அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் தற்போது தினமும் சுமார் 30 ஆயிரம் பேரிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் அதிக பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களில் 740 பேர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 269 பேர் ஆக்சிஜன் படுக்கையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 59 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

    இணைநோய் இருப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ நாயகம் அறிவுறுத்தி உள்ளார்.

    கொரோனா தாக்கம் இன்னும் சில தினங்களில் குறையும் என்று சொல்லி உள்ள நிபுணர்கள் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். மராட்டிய மாநிலத்தில் கொரோனா வீழ்ச்சி 16 சதவீதமாக வந்திருப்பதை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளனர்.

    டெல்லியில் 40 சதவீதமும், அரியானாவில் 27 சதவீதமும், உத்தரபிர தேசத்தில் 22 சதவீதமும் கொரோனா பரவல் குறைந்துள்ளது. விரைவில் தமிழகத்திலும் இதே நிலை வரும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தாக்கம் 7 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. தமிழகத்தில் தற்போது கொரோனா அதிகரித்தாலும் இன்னும் சில தினங்களில் அது குறையத் தொடங்கிவிடும் என்று நிபுணர்கள் பழைய கொரோனா அலையுடன் ஒப்பிட்டு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளனர்.

    • 2020-2021-ம் ஆண்டுகள் கொரோனாவின் பிடியில் சிக்கி திணரும் சூழ்நிலைக்கு உள்ளானது.
    • டெல்டா பிளஸ் வைரஸ் மனித குலத்தையே பந்தாடி விட்டது என்று சொல்லலாம்.

    கொரோனா தொற்று அச்சுறுத்தல் 2019-ம் ஆண்டு இறுதியில் உருவானபோது அது உலகையே முடக்கிப் போடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 2020-2021-ம் ஆண்டுகள் கொரோனாவின் பிடியில் சிக்கி திணரும் சூழ்நிலைக்கு உள்ளானது.

    இதற்கு முக்கிய காரணம் கொரோனா வைரசில் ஏற்பட்ட பிறழ்வுகள்தான். கொரோனா வைரஸ் எத்தகைய தன்மையில் இருக்கிறது என்பதை ஆய்வு செய்து கொண்டிருக்கும் போதே அது மாற ஆரம்பித்துவிட்டது.

    ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் வைரஸ் என்று கொரோனா மாறிக் கொண்டே இருந்தது. இந்த மாற்றங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலும் டெல்டா பிளஸ் வைரஸ் மனித குலத்தையே பந்தாடி விட்டது என்று சொல்லலாம்.

    அதன்பிறகும், கொரோனாவின் தாகம் தீரவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ந் தேதி கொரோனா வைரஸ் பல்வேறு பிறழ்வுகளை சந்தித்து ஒமைக்ரான் என்ற புதிய வடிவத்துக்கு சென்றது. தென் ஆப்பிரிக்கா நாடுகளில் முதன் முதலாக ஒமைக்ரான் தாக்கத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

    அது தொடர்பான ஆய்வுகள் தொடங்கியபோதே ஒமைக்ரான் 5 வகையாக துணை மாற்றங்களை கொண்டிருப்பது தெரிந்தது. அதாவது பிஏ-1, பிஏ-2, பிஏ-3, பிஏ-4, பிஏ-5 ஆகிய 5 வகைகளாக ஒமைக்ரான் பரவியது. மிக குறுகிய காலத்திற்குள் உலகின் அனைத்து நாடுகளையும் ஒமைக்ரான் ஆக்கிரமித்தது.

    இதனால் ஏற்பட்ட மிகப்பெரிய நன்மை என்ன வென்றால் ஒமைக்ரான் ஆதிக்கம் பெருக பெருக டெல்டா பிளஸ் வைரசின் கொடூரம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தற்போது உலகம் முழுக்க ஒமைக்ரான் வைரஸ்தான் ஆக்கிரமித்து இருக்கிறது.

    ஒமைக்ரான் வைரசாக கொரோனா மாறிய பிறகு அதன் ஆற்றல் குறைந்து போனது. பரவும் வேகம் அதிகமாக இருந்தாலும் அது மக்களை முடக்குவது மிக மிக குறைவாக உள்ளது. இதனால் ஒமைக்ரானை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக தற்போது உலகம் முழுவதும் இயல்பு நிலை திரும்பியிருக்கிறது.

    இந்த நிலையில்தான் கடந்த 2 வாரங்களாக இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. தமிழகத்திலும் உஷாராக வேண்டிய நிலைக்கு செல்லும்படி கொரோனா துரத்திக்கொண்டு இருக்கிறது.

    தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை மட்டும் 15 ஆயிரத்துக்கு மேல் சென்றுவிட்டது. எனவே முகக்கவசமும், தடுப்பூசியும் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே இந்தியாவில் மீண்டும் வேகம் எடுத்துள்ள ஒமைக்ரான் வைரஸ் பற்றி இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது கொரோனாவின் புதிய வடிவமான பிஏ-2.75 என்ற வகை வைரஸ் நாடு முழுவதும் பரவி இருப்பதை கண்டுபிடித்தனர்.

    குறிப்பாக இந்தியாவில் 10 நகரங்களில் இந்த புதிய வகை வைரஸ் தாக்கம் மிக மிக அதிகளவு இருப்பதாக இஸ்ரேல் விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர். மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி, காஷ்மீர், உத்தரபிரதேசம், அரியானா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய 10 மாநிலங்களில் புதிய வகை ஒமைக்ரான் இருப்பதாக இஸ்ரேல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

    இந்தியாவை தவிர இந்த புதிய வகை வைரஸ் மேலும் 7 நாடுகளில் பரவி இருப்பதை உலக சுகாதார மையம் ஏற்கனவே கூறியுள்ளது. இந்த புதிய பிஏ 2.75 வைரஸ் வேகம் எந்தளவுக்கு உள்ளது? அது மனிதர்களை தாக்கும்போது எத்தகைய பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது? இது எவ்வளவு காலம் நீடிக்கும் ஆற்றலுடன் இருக்கும்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகாணும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

    பிஏ2.75 வகை வைரஸ் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரவில்லை என்றும், அது இந்தியாவில் தான் உருவானது என்றும் இஸ்ரேல் விஞ்ஞானிகள் ஆணித்தரமாக சொல்கிறார்கள். ஆனால் இதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சமீரன் பாண்டா மறுத்துள்ளார். அவர் கூறுகையில், 'கொரோனா வைரசில் பிறழ்வுகள் ஏற்படுவது தற்போது மிக மிக சகஜமான ஒன்றாக உள்ளது. அடிக்கடி  கொரோனா வைரஸ் பிறழ்வு வந்து கொண்டே தான் இருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்தியாவில்தான் இந்த மாற்றம் நிகழ்ந்தது என்பதை ஏற்க இயலாது' என்றார்.

    அவர் மேலும் கூறுகையில், 'இந்த புதிய வகை வைரசால்தான் தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரிக்கிறதா? என்பதை யும் உறுதிபடுத்த இயலாது' என்று கூறி விட்டார்.

    இஸ்ரேல் விஞ்ஞானிகளின் அறிக்கையால் இந்திய விஞ்ஞானிகள் புதிய வைரஸ் குறித்த அடுத்தக் கட்ட ஆய்வை தொடங்கியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது.
    • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவல் வேகமாக உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் தொடக்கத்தில் 200-க்கு குறைவாக இருந்த தொற்று படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

    குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவல் வேகமாக உள்ளது. சென்னையில் 1,066 பேருக்கு நேற்று புதிதாக தொற்று பரவியுள்ளது.

    தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து பரிசோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை எச்சரித்து உள்ளது.

    இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முகக் கவசம் கட்டாய மாக்கப்பட்டுள்ளது. அதிக மாணவர்கள் கொண்ட தனியார் பள்ளிகளில் வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் நெருக்கமாக அமர வேண்டிய நிலை உள்ளது.

    அதனால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடும் என்பதால் ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது காலை-மாலை என 2 ஷிப்டாக வகுப்புகளை நடத்தலாமா? என தனியார் பள்ளிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.

    வாரத்தில் தற்போது 5 நாட்கள் வகுப்புகள் நடை பெறுகிறது. கூட்டத்தை குறைக்கும் வகையில் வகுப்புகளை 2 ஆக பிரித்து மாணவர்களை வரவழைக்கலாமா? என ஆலோசிக்கின்றனர்.

    ஒவ்வொரு வகுப்பில் உள்ள மாணவர்களை 2 ஆக பிரித்து ஒருநாள் விட்டு ஒருநாள் (3 நாட்கள்) வகுப்புகளை நடத்தலாமா? என பெற்றோரிடம் கருத்து கேட்கப்படுகிறது.

    10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளை தவிர மற்ற வகுப்பு மாணவர்களை சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைத்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் கருதுகிறார்கள்.

    வரும்முன் காப்போம் என்ற அடிப்படையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஒருசில தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் கருத்துக்களை கேட்டு உடனடியாக நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது.

    தொற்று பாதிப்பு குறையும் பட்சத்தில் வழக்கமாக வகுப்புகளை தொடர்ந்து நடத்தலாமா என ஆலோசித்து வருகின்றனர்.

    இதுகுறித்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் குலேசன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.நந்தகுமார் கூறியதாவது:-

    தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாணவர்கள் நலனை கருத்தில் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஒருநாள் விட்டு ஒருநாளாகவோ, காலை மற்றும் மாலை ஷிப்டு முறையிலோ வகுப்பு நடத்தலாமா? என பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பள்ளிகள் திறந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. இப்போதுதான் பாடம் நடத்த தொடங்கியுள்ளனர். ஆனால் தொற்று அதிகரித்து மாணவர்கள் பாதிக்கப்பட்டால் பள்ளி முழுமையாக மூட வேண்டிய நிலை வரும்.

    முன் எச்சரிக்கையாக தொற்று குறையும் வரை மாணவர்களை பாதியாக குறைத்து வகுப்புகளுக்கு வரவழைப்பது பாதுகாப்பாக இருக்கும் என்பதால் பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யலாம் என கூறப்பட்டு உள்ளது. அரசின் உத்தரவை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×