search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷிகர் தவான்"

    • வெஸ்ட் இண்டீசில் போட்டிகளை அனுபவித்து விளையாடுவோம்.
    • இங்குள்ள வானிலை கொஞ்சம் வித்தியாசமாகவும் இருக்கும்.

    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

    ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா, கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி போர்ட்-ஆப்-ஸ்பெயினில் நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரடிப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடர் குறித்து வீரர்கள் மத்தியில் இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் கூறியதாவது:-

    வெஸ்ட் இண்டீசில் போட்டிகளை அனுபவித்து விளையாடுவோம். இங்குள்ள வானிலை கொஞ்சம் வித்தியாசமாகவும் இருக்கும்.

    ஒவ்வொருவரும் தங்களது திறனை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். அந்த வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாடி உள்ளனர். இதில் நிறைய புன்னகை, நிறைய வெற்றிகள் கிடைத்தன.

    வெஸ்ட் இண்டீசில் நாம் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவோம். நமது திறமையை வெளிப்படுத்தவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று கூறினார்.

    இதற்கிடையே இன்றைய போட்டியில் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது. அவருக்கு முழங்காலில் லேசான காயம் உள்ளதாகவும், காயத்தின் தீவிர தன்மை குறித்து மருத்துவ ஆலோசனை பெறப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    • இருவரும் இணைந்து 5,108 ரன் எடுத்து உள்ளனர்.
    • ஒருநாள் போட்டியில் தொடக்க விக்கெட்டுக்கு 5 ஆயிரம் ரன்னை எடுத்த 4-வது ஜோடி ரோகித் சர்மா-தவான் ஆவார்கள்.

    ஓவல்:

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 25.2 ஓவர்களில் 110 ரன்னில் சுருண்டது. கேப்டன் பட்லர் அதிகபட்சமாக 30 ரன் எடுத்தார்.

    பும்ரா 19 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். முகமது ஷமி 3 விக்கெட் டும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய இந்தியா 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா 58 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 76 ரன்னும், ஷிகர் தவான் 54 பந்தில் 31 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர்.

    ரோகித்சர்மா- தவான் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 5 ஆயிரம் ரன் எடுத்து சாதனை படைத்தது. இருவரும் இணைந்து 5,108 ரன் எடுத்து உள்ளனர். 112 இன்னிங்சில் இந்த ரன்னை தொட்டுள்ளனர். ஒருநாள் போட்டியில் தொடக்க விக்கெட்டுக்கு 5 ஆயிரம் ரன்னை எடுத்த 4-வது ஜோடி ரோகித் சர்மா-தவான் ஆவார்கள்.

    தெண்டுல்கர்-கங்குலி 6,609 ரன்னுடன் முதல் இடத்தில் உள்ளனர். கில்கிறிஸ்ட்-ஹைடன் (ஆஸ்திரேலியா) ஜோடி 5,379 ரன்னுடன் 2-வது இடத்திலும், கிரீனிட்ஜ்- ஹெய்ன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) ஜோடி 5,150 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளது. 

    • கங்குலி மற்றும் டெண்டுல்கர் 136 இன்னிங்ஸில் 6609 ரன்கள் எடுத்துள்ளனர்.
    • தவான் மற்றும் ரோஹித் 111 இன்னிங்ஸ்களில் 4994 ரன்கள் குவித்துள்ளனர்.

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரையும் வெல்லும் நோக்கத்தில் இந்திய அணி களமிறங்குகிறது.

    இதில், ரோகித் சர்மா - ஷிகர் தவான் ஜோடி சாதனை ஒன்றை படைக்கவுள்ளது. இதன்மூலம், தொடக்க ஜோடியாக ஒருநாள் போட்டிகளில் 5000 ரன்களை கடந்த 2-வது இந்திய ஜோடி என்ற சாதனையை படைப்பார்கள்.

    முதல் இடத்தில் சச்சின் - கங்குலி ஜோடி உள்ளனர். ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலிக்கு பிறகு ரோகித் மற்றும் தவான் இந்தியாவின் இரண்டாவது வெற்றிகரமான தொடக்க ஜோடிகளாக இருந்துள்ளனர்.

    5000 ரன்களை எட்டுவதற்கு இன்னும் 6 ரன்கள் மட்டுமே தேவை. தவான் மற்றும் ரோஹித் 111 இன்னிங்ஸ்களில் 4994 ரன்கள் குவித்துள்ளனர். கங்குலி மற்றும் டெண்டுல்கர் 136 இன்னிங்ஸில் 6609 ரன்கள் எடுத்துள்ளனர்.

    ஒட்டுமொத்தமாக ரோகித்-தவான் ஜோடி நான்காவது இடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் ஆஸ்திரேலியா அணியின் கில்கிறிஸ்ட் மற்றும் மேத்யூ ஹெய்டன் 114 இன்னிங்ஸில் 5372 ரன்களும் 3-வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஜோடிகளான கார்டன் கிரீனிட்ஜ் மற்றும் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் 102 இன்னிங்ஸில் 5150 ரன்களும் எடுத்துள்ளனர்.

    ரோஹித் மற்றும் தவானை விட அதிக சதம் அடித்த தொடக்க வீரர்களாக கங்குலி மற்றும் டெண்டுல்கர் மட்டுமே உள்ளனர்.

    • இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூலை 22ம் தேதி தொடங்குகிறது.
    • இதில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஜூலை 22-ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் உடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட், முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும், துணைக் கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம் வருமாறு:

    ஷிகர் தவான், ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்குர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

    • டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது.
    • ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற பல வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், மிடில் ஆர்டர் பேட்டிங், ஸ்பின் காம்பினேஷன், வேகப் பந்துவீச்சு என அனைத்தும் உறுதியாகிவிட்டது.

    சூர்யகுமார் யாதவ் - ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோரிடையே 4ம் வரிசை பேட்டிங்கிற்கான போட்டி நிலவுகிறது.

    மேலும், ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பிவரும் வேளையில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிவருவதால் விக்கெட் கீப்பர் யார் என்பதும் கேள்வியாக உள்ளது.

    இந்நிலையில், தொடக்க வீரரான ஷிகர் தவானுக்கு டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பேசிய சுனில் கவாஸ்கர், ஷிகர் தவான் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பில்லை. டி20 உலக கோப்பைக்கான அணியில் ஷிகர் தவானை எடுப்பதாக இருந்திருந்தால் இங்கிலாந்து தொடரிலாவது அவர் இடம்பெற்றிருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் இல்லை. எனவே டி20 உலக கோப்பைக்கான அணியில் அவருக்கு இடம் இருக்காது. என்னைப் பொறுத்தமட்டில் ரோகித்தும் கே.எல்.ராகுலும் தொடக்க வீரர்களாக இறங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

    ×