என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 234754"
- வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த பிரபாகரன் மனைவியிடம் குடிக்க டீ தருமாறு கேட்டார்.
- அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.
அம்பத்தூர்:
அயனாவரம், பாளையம் பிள்ளை நகரை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சுப்ரியா(வயது34). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டு ஆகிறது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த பிரபாகரன் மனைவியிடம் குடிக்க டீ தருமாறு கேட்டார். ஆனால் சுப்ரியா டீ தயார் செய்ய தாமதமானதாக தெரிகிறது.
நீண்ட நேரம் கழித்து அவர், கணவர் பிரபாகரனுக்கு சூடான டீயை கொடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் அந்த சூடான டீயை வாங்கி மனைவி சுப்ரியாவின் மீது ஊற்றினார். இதில் சுப்ரியாவின் தோள்பட்டை மற்றும் கை வெந்தது. அவர் அலறி துடித்தார். பின்னர் அவர் கணவரிடம் கோபித்துக்கொண்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். உடல் வெந்த சுப்ரியாவை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு சுப்ரியா சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அயனாவரம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்த பிரபாகரனை கைதுசெய்தனர்.
- வேலையிடத்தில் பசியைப் போக்க தேநீரோ மற்ற பானங்களோதான் அவருக்கு உணவு என்று ஆகிப்போனது.
- தேநீரும் சத்து பானங்களும்தான் என அனிமாவின் உணவுமுறை அமைந்துவிட்டது.
மேற்குவங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டம், சியாம் பஜார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெல்தியா கிராமத்தைச் சேர்ந்தவர் அனிமா சக்ரவர்த்தி. 76 வயதான இவர், மகன், பேரன்பேத்திகளையும் பார்த்துவிட்டார்.
இளம் வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக, வீட்டு வேலைசெய்து அந்த வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்தார். அப்போது வேலை செய்யும் இடங்களில் தரப்படும் மீந்துபோன உணவை, வீட்டுக்கு எடுத்துவந்து பிள்ளைகளுக்கு கொடுத்துவந்துள்ளார்.
அதில் பெரும்பாலும் அவருக்கென எதுவும் மிஞ்சாது. வேலையிடத்தில் பசியைப் போக்க தேநீரோ மற்ற பானங்களோதான் அவருக்கு உணவு என்று ஆகிப்போனது.
வாழ்க்கையோட்டத்தில் அந்த வேலையை அவர் விட்டு விட்டபோதும், உணவுப் பழக்கம் மாறவில்லை. தேநீரும் சத்து பானங்களும்தான் என அனிமாவின் உணவுமுறை அமைந்துவிட்டது.
கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக அவர் திட உணவு உட்கொள்ளவில்லை என்றபோதும், ஆரோக்கியமாகவே இருக்கிறார். முதலில் அந்த கிராமத்துக்காரர்களுக்கே இதுகுறித்து தெரியாமல் இருந்தது.
தெரிந்தபிறகு அவர்கள் வியப்பும் திகைப்பும் அடைந்தனர். ஆனால் உரிய ஊட்டச்சத்துகள் கிடைத்தால் போதும்; திட உணவுதான் எடுக்கவேண்டும் என்பது அவசியம் இல்லை என்கிறார்கள், மருத்துவர்கள்.
மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு, திரவ வடிவில்தானே உடலுக்குத் தேவையான ஊட்டம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு இதனால் எந்த பாதகமும் இல்லைதானே என விரிவான விளக்கத்தையும் மருத்துவர்கள் அளிக்கிறார்கள்.
- பெண் போலீசிடம் அவதூறு பேசியதாக நாகர்கோவில் கைதி மீது வழக்கு
- 2020-ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைதானவர்
நாகர்கோவில் :
சமூகவலைதளங்களில் ஏதாவது ஒரு வீடியோ அவ்வப்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்துவது தற்போது வாடிக்கையாகி வருகிறது.
கடந்த 2 தினங்களாக தலையில் கட்டுடன் போலீஸ் வேனில் இருக்கும் கைதி நான் யார் தெரியுமா?... என்ன செய்வீர்கள்?... நான் ஒடுகிறேன் சுடு...சுடு... என கூறுவதோடு போலீசாரை ஆபாச வார்த்தைகளால் பேசும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
இது பற்றி விசாரித்த போது, ரகளையில் ஈடுபட்டவர் குமரி மாவட்ட கைதி என தெரியவந்தது.
அவரது பெயர் தனேஷ் (வயது 25). குமரி மாவட்டம் இரணியலை அடுத்த நெய்யூர், சாக்கியான் கோடு பகுதியைச் சேர்ந்த அவர், கடந்த 2020-ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைதாகி நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கு சிறை சுவரில் மோதி தலையில் காயம் அடைந்த அவரை, ஆயுதப்படை போலீசார் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்ற போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சிகிச்சைக்கு செல்லும் வழியில் தனேஷ் திடீரென 'டீ' வேண்டும் என கேட்டு உள்ளார். கைதியை அழைத்துச் செல்லும் போது வேறு எங்கும் வாகனத்தை நிறுத்த முடியாது என கூறிய போலீசார், ஆஸ்பத்தி ரிக்குச் சென்றதும் டீ வாங்கித்தருவதாக கூறி உள்ளனர்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த தனேஷ், டீ கேட்டு தகராறு செய்ததோடு ஆபாச வார்த்தைகளையும் உபயோகித்துள்ளார். மேலும் தனது சட்டையை கழற்றிய அவர், நான் ஒடுகிறேன். சுடு... சுடு.. என போலீசாரிடம் கூறுகிறார். அவரை போலீசார் சமரசம் செய்கின்றனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைர லாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கைதி தனேஷ், அடிக்கடி இது போல போலீசாரிடம் வாக்குவாதம் செய்வார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. நேற்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த, ஆயுதப்படை பெண் போலீஸ் அஞ்சு (20) மற்றும் போலீசார் அழைத்துச் சென்று உள்ளனர்.
கோர்ட்டில் ஆஜராகி விட்டு திரும்பும் போது, தனேஷ் ஆபாச வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்டு உள்ளார்.இதுகுறித்து கோட்டாறு போலீசில், பெண் போலீஸ் அஞ்சு புகார் கொடுத்துள்ளார்.
அதில், தனேஷ் ஆபாச மாக பேசியதோடு, பணி செய்யவிடாமல் தடுத்ததாக குறிப்பிட்டு இருந்தார். அதன் பேரில் போலீசார் விசா ரணை நடத்தி தனேஷ் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்