search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வானிலை மையம்"

    • சென்னை மற்றும் புறநகரில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
    • சில இடங்களில் லேசான காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    சென்னை:

    சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று சென்னையில் 35.3 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு பகல் வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளனர்.

    டானா சூறாவளி காரணமாக காற்றின் திசையில் ஏற்பட்ட மாற்றத்தால் பகல் நேர வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். புயல் காற்றின் திசையை வடகிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மாற்றியது, புயலைச் சுற்றி காற்று குவிந்ததால், சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் பகல் வெப்பநிலை அதிகரித்து வறண்ட வானிலை காணப்படுகிறது.

    அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் அதிகபட்சமாக 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை இருக்கலாம் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு, சென்னை மற்றும் புறநகரில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

    தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறும்போது, சென்னையில் சில இடங்களில் லேசான காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தென் மாவட்டங்களான மதுரை, கன்னியா குமரியில் பெய்த மழையின் தீவிரம் குறையும் என்றனர்.

    • 19 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் அறிவிப்பு.
    • கன்னியாகுமரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு.

    இன்று காலை 10 வரை ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டலம் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே இந்திய வானிலை மையம் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைக் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தின் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.
    • சென்னையின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

    • அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
    • அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    • லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்ததாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது. இதனால், தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுயுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை, தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, நாமக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
    • குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

    சென்னை:

    மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதனால், தமிழகத்தில் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுயுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது:-

    வடமேற்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று விசாகப்பட்டினத்துக்கு கிழக்கே 120 கி.மீ. தொலைவிலும், கோபால்பூரில் (ஒடிசா) இருந்து தெற்கு- தென்மேற்கு திசையில் 180 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

    தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

    நாளை மறுநாள் முதல் முதல் 6-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.
    • சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    மத்திய மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக் கடலில் புதிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. நேற்று வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

    அடுத்த 36 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

    கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள் நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி திருப்பத்தூர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
    • லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    மத்திய மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும்.

    அதற்கடுத்த 2 நாட்களில், மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

    தமிழகத்தில் சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

    நாளை முதல் செப் 4-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

    குஜராத்தின் தரைப்பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெல்ல நகர்ந்து இன்று அரபிக் கடலில் புயலாக மாறும். இதற்கு 'அஸ்னா என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த புயல் நாளை, நாளை மறுநாள் கடற்பரப்பை விட்டு நகர்ந்து வடகிழக்கு அரபிக் கடலை அடையும்.

    பொதுவாக, ஆகஸ்ட் மாதத்தில் அரபிக் கடலில் புயல்கள் உருவாவதில்லை. முன்னதாக 60 ஆண்டுகளுக்கு முன்பு 1964-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அரபிக் கடலில் புயல் உருவானது.

    • தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.
    • 3-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும்.

    சென்னை:

    மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவானது. இதனால் வடமாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருந்த போதிலும் தமிழகத்தில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை.

    இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

    தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

    3-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும்.

    தரைக்காற்று வேகமாக வீசக்கூடும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    • பருவமழை வழக்கத்தைவிட அதிகமாக மழை பெய்தது.
    • சென்னையில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    ஆண்டுதோறும் தென் மேற்குப் பருவமழை ஜூன் 1-ந் தேதி தொடங்கி செப்டம்பா் இறுதி வரை நீடிக்கும். இந்த காலக் கட்டத்தில் தமிழகத்துக்கு பெரிதளவு மழை இருக்காது. இருப்பினும் மேற்குத்தொடா்ச்சி மலை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்.

    இந்த நிலையில், இந்த ஆண்டில் தமிழக கடலோர பகுதிகளில் உருவாகிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் வழக்கத்தைவிட அதிகமாக மழை பெய்தது.

    அதன்படி, தமிழகம் முழுவதும் ஜூன் 1 முதல் நேற்று (8-ந் தேதி) வரையிலான தென்மேற்கு பருவமழை இயல்பாக 137.6 மி.மீ. பதிவாக வேண்டிய நிலையில், இந்த ஆண்டில் 230 மி.மீ. (92.4 மி.மீ. அதிகம்) மழை பதிவா னது. இது இயல்பைவிட 67 சதவீதம் அதிகமாகும்.

    அதிகபட்சமாக நீலகிரியில் 1,015 மி.மீ., கோவையில் 754.2 மி.மீ., காஞ்சிபுரத்தில் 473.1 மி.மீ. மழை பதிவானது. குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 12.9 மி.மீ. மழை பெய்துள்ளது.

    சென்னையில் பல இடங்களில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, சென்னையில் ஜூன் 1 முதல் நேற்று வரை இயல்பாக 205.3 மி.மீ. மழை பதிவாகும் நிலையில், இந்த ஆண்டில் 430.3 மி.மீ. (225 மி.மீ.அதிகம்) பெய்துள்ளது.

    அதாவது இயல்பைவிட 112 சதவீதம் அதிக மழை பதிவாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது.
    • வட மாநிலங்களில் கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. வட மாநிலங்களில் கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருவதால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும்.

    நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை லேசான மழை பெய்யும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அதிகபட்ச வெப்ப நிலை 31 முதல் 32 டிகிரி செல்சியசை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்ப நிலை 26 முதல் 27 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளது.

    ×