search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபானம்"

    • மதுபான கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கிராம மக்களும் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கானத்தான்காடு, சண்முகநாதபுரம் பஞ்சாயத்தில் அரசு மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர், கோட்டாட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், வட்டாட்சியர், காவல்துறை சார்பு ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

    கானாத்தான்காடு கிராமத்தில் 500க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை அருகே டாஸ்மாக் மதுபானகடை அமைக்க ஏற்பாடுகள் நடந்தது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சண்முகநாதபுரம் ஊராட்சியில் மதுபானகடையை அமைக்ககூடாது என்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் மதுரை ஐகோர்ட்டில் தடை ஆணை பெற்றுள்ளனர். தடையை மீறி நேற்று கடை திறக்கப்பட்டதால் கிராம மக்கள் கடை முன்பு திரண்டனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிந்தனர். காவல்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    நேற்று இரவு தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரிடம் மேல் முறையீடு செய்தனர். மதுபானகடையை உடனே அகற்ற வேண்டும் இல்லை என்றால் ஊராட்சியில் உள்ள அனைத்து கிராம மக்களும் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

    • லாட்ஜ்களில் தங்குவதை விட செலவு குறைவு என்பதால் தற்போது இதுபோன்ற ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.
    • வீடுகளில் தனியார் மது பார் நடத்த ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கட்டணம் வழங்கி லைசென்ஸ் பெற்று கொள்ள வேண்டும் என உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்து உள்ளது.

    டேராடூன்:

    இந்தியாவில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களுக்கு செல்வோர் அங்கு லாட்ஜில் அறை எடுத்து தங்குவது வழக்கம்.

    தற்போது சுற்றுலா தலங்களில் லாட்ஜ்களுக்கு மாற்றாக ஹோம் ஸ்டே தங்கும் வசதிகள் அதிகரித்து வருகிறது. இது சுற்றுலா தலங்களில் வசிப்போர் தங்கள் வீடுகளில் சுற்றுலா பயணிகள் தங்க ஒன்று அல்லது 2 அறைகளை ஒதுக்கி கொடுத்து அங்கே அவர்கள் விரும்பும் நாட்கள் வரை தங்கி செல்ல அனுமதிப்பார்கள்.

    இதற்காக விருந்தினர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையையும் பெற்று கொள்வார்கள். இது லாட்ஜ்களில் தங்குவதை விட செலவு குறைவு என்பதால் தற்போது இதுபோன்ற ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.

    அந்த வகையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் வீடுகளிலேயே தனிநபர்கள் பார் நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    வீடுகளில் நடத்தப்படும் பார்களில் 60 லிட்டர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மது பானங்கள் வைத்து கொள்ளலாம். 9 லிட்டர் அளவுக்கு பீர் பாட்டில் வைத்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    வீடுகளில் தனியார் மது பார் நடத்த ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கட்டணம் வழங்கி லைசென்ஸ் பெற்று கொள்ள வேண்டும் என உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்து உள்ளது. இந்த லைசென்ஸ் பெறுவோர் வருமான வரி கட்டுவோராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

    மேலும் மாநில கலால் துறைக்கு ரூ.50 ஆயிரம் டெபாசிட் கட்ட வேண்டும் என்றும் அறிவித்து உள்ளது.

    இது தவிர வீடுகளில் நடைபெறும் தனியார் மதுபார்களில் 21 வயதுக்கு குறைந்தோருக்கு எக்காரணம் கொண்டும் மதுபானம் வழங்க கூடாது. மிலிட்ரி மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. ஒரு பாக்ஸ் ஒயின் மட்டுமே வைத்து கொள்ள வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளது.

    மலைப்பாங்கான இந்த மாநிலத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கவே இதுபோன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

    • புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சீர்காழி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
    • 650 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கோவில் பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50) இவரது வீட்டின் பின்புறம் உள்ள வயலில் புதுச்சேரி சாராயம் மற்றும் குறைந்த விலை மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சீர்காழி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று ஆறுமுகம் வீட்டின் பின்புறம் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள வயலில் புதுச்சேரி மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் 650 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் தப்பியோடிய ஆறுமுகத்தை தேடி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடிப்பழக்கத்தை அரசாங்கம் பணமாக்கக் கூடாது என்று உமா பாரதி கூறினார்.
    • மது விற்பனைக்கு எதிராக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதே மதுபானக் கடையில் பாஜக தலைவர் மாட்டுச் சாணத்தை வீசினார்.

    பாஜக ஆளும் மாநிலத்தில் மது விற்பனைக்கும் அருந்துவதற்கும் எதிரான பிரச்சாரத்தை மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான உமா பாரதி மேற்கொண்டுள்ளார்.

    அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலம் ஓர்ச்சா நகரில் உள்ள மதுபானக் கடையின் முன்பு சாலைகளில் திரிந்த மாடுகளை இழுத்து கட்டி அதற்கு வைக்கோல் ஊட்டினார். பின்னர், பசும்பால் குடிக்கவும், மதுவைத் தவிர்க்கவும் என்று மதுவிற்கு எதிராக கோஷம் எழுப்பினார்.

    கோவில்களுக்கும், அரண்மனைகளுக்கும் பெயர் பெற்ற நிவாரி மாவட்டத்தில் உள்ள ஓர்ச்சா நகரத்தில் மதுபானம் விற்கும் கடையின் முன் நின்று, பசுக்களைக் கட்டிவிட்டு, "பசும்பால் குடிக்கவும்.. மதுவை தவிர்க்கவும்" என்ற பிரசாரத்தை மேற்கொண்டார்.

    மேலும் அவர், குடிப்பழக்கத்தை அரசாங்கம் பணமாக்கக் கூடாது என்றும் கூறினார்.

    மது விற்பனைக்கு எதிராக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதே மதுபானக் கடையில் பாஜக தலைவர் மாட்டுச் சாணத்தை வீசினார். மார்ச் 2022ல், போபாலில் உள்ள ஒரு மதுபானக் கடை மீது கல் எறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருச்சி மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை நடந்தது
    • 71 பேர் கைது-942 மதுபாட்டில்கள் பறிமுதல்

    திருச்சி:

    குடியரசு தின விழாவை முன்னிட்டு நேற்று தமிழக முழுவதும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் அதனை கண்டு–கொள்ளாமல் முன்ன–தாகவே ஒரு சிலர் மது–பானங்களை வாங்கி பதுக்கி வைத்துக் கொண்டு சட்ட–விரோதமாக கள்ளச்சந்தை–யில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர். திருச்சி மாநகரில் டாஸ் மாக் மதுபான கடைக–ளுக்கு அருகாமையில் நின்று கொண்டு மது பிரியர்க–ளுக்கு விரும்பிய மது பாட்டில்களை விற்பனை செய்தனர். ஒரு பாட்டிலுக்கு அளவுக்கு ஏற்ப ரூ.50 முதல் ரூ.200 வரை விலை கூடுதல் விலை நிர்ணயம் செய்து விற்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து திருச்சி மாநகர போலீசார் ஆங்காங்கே ரோந்து சென்று சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 31 பேரை கைது செய்தனர். அவர்கள் வசம் இருந்து 280 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதேபோன்று திருச்சி புறநகர் பகுதியில் முசிறி மற்றும் திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மது வேட்டையில் இறங்கினர். இதில் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 40 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 662 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    இதில் மணிகண்டம் நடுப்பாகலூர் பகுதியில் வீட்டில் பாண்டிச்சேரி மதுபான பாட்டில்கள் பதுக்கிய ஜெயராமன் (வயது 37) என்பவரை திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தரசு, இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் தனிப்படை போலீ–சார் கைது செய்தனர். அவரி–டமிருந்து 180 பாண்டிச்சேரி மதுபான பாட்டில்கள் பறி–முதல் செய்யப்பட்டது. திருச்சி மாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை வெளிப்படையாக நடந்தது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது.

    • டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை மதுபானகடைகள் அனைத்தும் மூட வேண்டும்.
    • மேற்படி நாட்களில் மதுபா னங்கள் ஏதும் விற்பனை செய்யக்கூடாது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், முத்துப்பேட்டை தர்ஹா பெரிய கந்தூரி விழா தொடர்பாக 25.11.2022 கொடியேற்றம் மற்றும் 04.12.2022 அன்று சந்தனகூடு நடைபெறவுள்ளதை முன்னிட்டு 25.11.2022 வெள்ளி கிழமை மற்றும் 04.12.2022 ஞாயிற்று கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு முத்துப்பேட்டை மற்றும் முத்துப்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லரைவிற்பனை மதுபா னகடைகள் அனைத்தும் மூடவும் அன்றைய நாட்களை விடுமுறை நாட்களாக அறிவித்து முத்துப்பேட்டை மற்றும் முத்துப்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை மதுபானகடைகள் அனைத்தும் மூடவும், மேற்படி நாட்களில் மதுபா னங்கள் ஏதும் விற்பனை செய்யக்கூடாது என தொடர்புடைய டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு ஆணையிடப்படுகிறது.

    மேற்படி ஆணையை செயல்படுத்த தவறும்ப ட்சத்தில் தொடர்புடைய மதுபானக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர்காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • அரசு அனுமதி இல்லாமல் விற்பனைக்காக வெளி மாநில மதுபாட்டில்கள் 48 அடங்கிய 14 அட்டைப்பெட்டிகள் வீட்டில் வைத்திருந்ததை போலீசார்கள் கண்டுபிடித்தனர்.
    • அப்துல் கனி அண்ணன் தம்பிகளான சஞ்சீவி, முரளி ஆகிய இருவருக்கும் 1 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.2 ஆயிரமும் அபராதம் விதித்தனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் பகுதியில் கடந்த 8.12 2016 அன்று அப்போதைய பாபநாசம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் செந்தில், அன்பழகன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கோவில் தேவராயம்பேடை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சஞ்சீவி வயது 34 அவரது அண்ணன் முரளி 40 ஆகிய இருவரும் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயற்சி செய்தார்கள்.

    உடனே அவர்களைப் பிடித்து விசாரணை செய்தபோது அரசு அனுமதி இல்லாமல் விற்பனைக்காக வெளி மாநில மதுபாட்டில்கள் 48 அடங்கிய 14 அட்டைப்பெட்டிகள் வீட்டில் வைத்திருந்ததை போலீசாார்கள் கண்டுபிடித்தனர்.

    பின்னர் அங்கிருந்த 672 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து பாபநாசம் போலீசார்கள் வழக்கு பதிவு செய்து அண்ணன் தம்பிகளான சஞ்சீவி, முரளி ஆகிய இருவரையும் கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர் படுத்திருந்தனர்.

    வழக்கை விசாரணை செய்த பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல் கனி அண்ணன் தம்பிகளான சஞ்சீவி, முரளி ஆகிய இருவருக்கும் 1 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.2 ஆயிரமும் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.

    • 13-வது வார்டு பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி தனியார் மதுபான பார் திறக்க முயற்சி நடக்கிறது.
    • இது குறித்து மாவட்ட கலெக்டர், வட்டாட்சியர் ஆகியோருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே பொன்மனை பரவூர் பகுதியில் தனியார் மதுபான பாருக்கான கட்டுமான பணி நடைபெற்று வந்தது.

    இதையடுத்து பொன் மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் பொன்மனை சந்திப்பில் நேற்று மாலை நடைபெற்றது. போராட்டத்தில் உறுப்பினர் ஜாஸ்மினி, பெண்கள், குழந்தைகள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் ஜான் போஸ்கோ, அ.தி.மு.க. மோகன்குமார், கம்யூனிஸ்டு பிரசாத், தி.மு.க. சேம் பெனட் சதீஷ், நாம் தமிழர் கட்சி சீலன், சமூக ஆர்வலர் சர்வேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரதிநிதிகள் தனியார் மதுபான பார் திறப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் பேசினார்கள். இந்த போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வர்கள் கலந்து கொள்ள வில்லை.

    இது குறித்து பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் கூறுகையில், பொன்மனை பேரூராட் சிக்குட்பட்ட 13-வது வார்டு பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி தனியார் மதுபான பார் திறக்க முயற்சி நடக்கிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர், வட்டாட்சியர் ஆகியோருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை.

    இதனால் பொதுமக்களுடன் அனைத்து கட்சியினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உடனே தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் தொடர்ந்து அப்பகுதியில் மதுபான கடை திறக்க முயற்சி செய்தால் பொது மக்களுடன் சேர்ந்து மிக பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என கூறினார்.

    போராட்டத்தின் முடிவில் வார்டு உறுப்பினர் சாந்தி நன்றியுரை கூறினார்.

    • வருகிற அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி மற்றும் அக்டோபர் 9-ந்தேதி மிலாடி நபி.
    • விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்படமாட்டாது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

    வருகிற அக்டோபர் 2-ந்தேதி காந்திஜெயந்தி தினம் மற்றும் அக்டோபர் 9-ந்தேதி மிலாடிநபி தினம் ஆகிய 2 நாட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சந்தைப்பேட்டை பகுதியில் இரவு 11 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
    • கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 123 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.

    சேலம்:

    சேலம் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் பாபு நேற்று இரவு செவ்வாய்பேட்டை அருகே உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் இரவு 11 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த டாஸ்மாக் கடை எண் 2226-ல் உள்ள பார் திறந்து இருப்பது கண்டு உடனடியாக உள்ளே சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டார்.

    அப்போது அங்கு கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 123 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். மேலும் கடையில் இருந்த 4 பேரை பிடித்து சேலம் செவ்வாய்பேட்டை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மது அருந்தும் ஆண்கள் குறைவாக குடித்தாலும் தினமும் குடிப்போர் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
    • வாரத்திற்கு ஒரு முறை மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    புதுடெல்லி:

    பிறந்தநாள் விழா, திருமண விழா மற்றும் பண்டிகை காலங்களில் மது அருந்துவது தற்போது பேஷனாகி வருகிறது.

    இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை அதிகரித்து வருகிறது. நடுத்தர மக்கள், ஆடம்பரமாக செலவு செய்ய ஆசைப்படும் மக்கள் மதுவுக்கும் அதிக பணத்தை செலவு செய்ய தயங்குவதில்லை.

    இதனால் வெளிநாட்டு மதுபான நிறுவனங்கள் இந்திய சந்தையை மையப்படுத்தி விற்பனையை பெருக்க திட்டமிட்டு உள்ளன.

    இந்தியாவில் தற்போது வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனை 8.8 சதவீதமாக உள்ளது. இது இந்த ஆண்டு இறுதிக்குள் இருமடங்காக உயர வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    குறிப்பாக ஓட்கா விற்பனையும் அதிகரித்து வருகிறது. இதுபோல ஒயின், பீர் போன்றவற்றின் விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்தியாவில் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து தேசிய குடும்ப நல சுகாதார அமைப்பின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இதற்கு முன்பு நடந்த ஆய்வில் கிடைத்த தகவல்களுக்கும் இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களுக்கும் பல வித்தியாசங்கள் இருப்பது தெரியவந்தது.

    மது அருந்தும் ஆண்கள் குறைவாக குடித்தாலும் தினமும் குடிப்போர் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆய்வின்போது மது அருந்தும் ஆண்களின் எண்ணிக்கை 22.37 சதவீதம் குறைந்துள்ளது.

    ஆனால் தினமும் மது அருந்துவோர் எண்ணிக்கை 24.19 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இது கவலை அளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இந்தியாவில் நாளுக்கு நாள் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஆய்வு முடிவுகள் அதற்கு எதிராகவே உள்ளது. அதன்படி கடந்த ஆய்வை விட இப்போது நடந்த ஆய்வில் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை 39 சதவீதம் குறைந்துள்ளது.

    இதுபோல வாரத்திற்கு ஒரு முறை மது அருந்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. இது 7.24 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

    இந்திய பெண்களில் தற்போது நாட்டு சரக்கு பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

    இதனை தெரிவித்த ஆய்வாளர்கள், இந்தியாவில் மது அருந்துவோர் குறைவாக குடித்தாலும் அவர்கள் அடிக்கடி மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமை ஆனவர்களாக இருப்பதாக கூறியுள்ளது.

    • வசந்தகுமார் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவரது தந்தை கண்டித்தார்.
    • போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    கோவை:

    கோவை இடிகரை அருகே உள்ள அம்மன் நகரை சேர்ந்தவர் பாலன். இவரது மகன் வசந்தகுமார் (வயது 22). இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

    சம்பவத்தன்று வெளியே சென்ற வசத்தகுமார் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவரது தந்தை கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்து வசந்தகுமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து தற்கொலை செய்து கொண்ட வசந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×