search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 235118"

    • சீன வீரர்களின் அத்துமீறலை முறியடித்த இந்திய ராணுவ வீரர்களின் வீரம் பாராட்டுக்குரியது.
    • பிரதமர் மோடியின் தலைமையில் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.

    தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியாக இருந்தாலும் சரி, தவாங் பகுதியாக இருந்தாலும் சரி, சீன ராணுவத்திற்கு எதிராக நமது ராணுவ வீரர்கள் வெளிப்படுத்திய வீரத்தை எவ்வளவு பாராட்டினாலும் போதாது என்று தெரிவித்தார்.

    சீனாவுடனான எல்லை விவகாரத்தில் மத்திய அரசு குறித்த ராகுல் காந்தியின் கருத்தை விமர்சித்த அவர், யாருடைய நோக்கத்தையும் எப்போதும் அவர் சந்தேகிப்பதன் காரணம் எனக்குப் புரியவில்லை என்று கூறினார். நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஆளும் கட்சி தலைவரின் நோக்கத்தை கேள்வி கேட்டதில்லை என்றும்,  கொள்கையின் அடிப்படையில் மட்டுமே விவாதித்தோம் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

    உண்மையின் அடிப்படையில்தான் அரசியல் இருக்க வேண்டும், பொய்யின் அடிப்படையில் நீண்ட காலமாக அரசியல் செய்ய முடியாது, சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லும் செயல்முறையே சரியான அரசியல் ஆகும் என்றும் ராகுல்காந்தியின் விமர்சனத்திற்கு அவர் பதில் அளித்தார்.

    உலக நன்மை மற்றும் செழுமைக்காகவே இந்தியா வல்லரசாக மாற விரும்புகிறது, இதனால் உலக நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புகிறோம் என்று ஒருபோதும் யாரும் கருதக் கூடாது என்றும் மத்திய மந்திரி குறிப்பிட்டார். எந்த ஒரு நாட்டின் ஒரு அங்குல நிலத்தைக் கூட கைப்பற்றும் எண்ணம் இந்தியாவிற்கு கிடையாது, பிரதமர் மோடி தலைமையில் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது என்றும் மத்திய மந்திரி ராஜ்நாத் தெரிவித்தார்.

    • கடந்த ஓராண்டில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
    • அடுத்த 6 மாதங்களில் 50 கோடி சுகாதார கார்டுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

    பாராளுமன்ற மக்களவையில் இன்று உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளதாவது:

    ஏழை ஏழை மக்கள்தான் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இணைந்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம். 2018 ஆண்டு தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ், 50 கோடி மக்களுக்கு சுகாதார பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மேலும் நோயாளிகளுக்கு மருத்துவ செலவு குறைந்துள்ளது. ஆயுஷ்மான் திட்ட பயனாளிகளுக்காக தினசரி ஏழு முதல் எட்டு லட்சம் சுகாதார அட்டைகள் அச்சிடப்படுகின்றன.

    அடுத்த 6 மாதங்களில் 50 கோடி அட்டைகள் பயனாளிகளுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படும். கடந்த ஓராண்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 1,500-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 22,000 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் இது குறித்து மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நடவடிக்கையை பாகிஸ்தான் கைவிட வேண்டும்.
    • நல்ல அண்டை நாடாக இருக்க பாகிஸ்தான் முயற்சி செய்ய வேண்டும்.

    நியூயார்க்:

    உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு அணுகு முறை மற்றும் சவால்கள் நோக்கி செல்லும் வழி என்ற தலைப்பில் அமெரிக்காவில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், இந்தியாவை விட எந்த நாடும் பயங்கரவாதத்தை சிறப்பாக பயன்படுத்தவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஹினா ரப்பானி  அண்மையில் தெரிவித்திருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:

    அவர்கள் (பாகிஸ்தான்) சொல்கிறார்கள், உண்மை என்னவென்றால், இன்று உலகம் பயங்கரவாதத்தின் மையமாக அவர்களைப் பார்க்கிறது. இந்த பிராந்தியத்தில் மற்றும் பிராந்தியத்திற்கு அப்பால், பயங்கரவாதம் எங்கிருந்து வருகிறது என்பதை உலகம் இன்னும் மறந்து விடவில்லை. எனவே, அவர்கள் கற்பனையில் ஈடுபடுவதற்கு முன்பு தங்களை பற்றி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

    பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் தனது நடவடிக்கையை சரி செய்து, நல்ல அண்டை நாடாக இருக்க பாகிஸ்தான் முயற்சிக்க வேண்டும். இன்னும் எவ்வளவு காலம் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கடைப் பிடிக்க விரும்புகிறது என்பதை அந்நாட்டு அமைச்சர்கள்தான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். உலகின் மற்ற நாடுகள் இன்று பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்ற பாதையை நோக்கி செல்கின்றன. பாகிஸ்தானும் வளர்ச்சிக்கு முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

    • சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர்.
    • சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வேலை வாய்ப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை.

    மத்திய அரசின் மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா,ஸ்டாண்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல திட்டங்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருப்பதாக மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக அவர் அளித்த பதிலில், கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வேலை வாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார்.

    சுயசார்பு இந்தியா வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் 60 லட்சத்து 13 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள், வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்காக நடைமுறைப்படுத்தப் படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    பிரதமரின் முத்ரா வங்கிக்கடன் திட்டத்தின் மூலம், இதுவரை 21 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் கடன் உதவி வழங்கப் பட்டுள்ளதாகவும், சாலையோர வியாபாரிகளின் நலனுக்காக பிரதமரின் ஸ்வாநிதித் திட்டம் செயல்படுத்தப் படுவதாகவும் அவர் கூறியுள்ளார். டிசம்பர் மாதம் வரை இந்தத் திட்டத்தின் மூலம் 37 லட்சத்து 95 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாகவும் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார்.

    • அமெரிக்காவில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை திறப்பு.
    • காந்தி சிலையை ஐ.நா.சபைக்கு இந்தியா பரிசாக அளித்திருந்தது.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை திறந்து வைக்கப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரசும் கூட்டாக சிலையை திறந்து வைத்தனர்.

    இந்த சிலையை ஐ.நா.சபைக்கு இந்தியா பரிசாக அளித்திருந்தது. ஐ.நா. தலைமையகத்தில் காந்தி சிலை நிறுவப்படுவது இதுவே முதல்முறை. நடப்பு மாதத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. இந்த நேரத்தில் காந்தி சிலை திறக்கப்பட்டுள்ளது. 


    நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், உலகம் முழுவதும் வன்முறை, மோதல் மற்றும் மனிதாபிமானமற்ற நிலை காணப்படுவதாக கூறினார். உலகம் முழுவதும் அமைதியை உறுதி செய்ய மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும் லட்சியங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    காந்தி அகிம்சை, உண்மை மற்றும் அமைதியின் சின்னம் என்றும், இது (மகாத்மா சிலை) எதிர்கால சந்ததியினருக்கு உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதற்கான நமது கடமையை நமக்கு நினைவூட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    பின்னர் பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டரஸ், பன்முகத்தன்மை இந்தியாவின் மிகப்பெரிய சொத்துகளில் ஒன்று என்பதை உணர்ந்த காந்தி, மதங்கள், கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையே இணக்கமான உறவுகளுக்காக பாடுபட்டார் என்றார்.

    மகாத்மா காந்தி ஒரு வரலாற்று நாயகர் மட்டுமல்ல, நவீன யுகத்தின் ரட்சகர்களில் ஒருவர், அவரது தொலைநோக்கு சிந்தனைகள் மற்றும் சமூக மாற்றத்திற்கான அக்கறை இன்றும் எதிரொலிக்கிறது என்றும் குட்டரஸ் குறிப்பிட்டார்.

    • வக்பு வாரியங்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படுகிறது.
    • 2021-22-ம் ஆண்டில் மட்டும் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற மாநிலங்கள் அவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி ஸ்மிருதி சுபின் இரானி, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: 


    வக்பு வாரியங்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக சிறுபான்மையினர் நலன் அமைச்சகம் வாயிலாக ஷகாரி வக்பு விகாஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்களில் உள்ள வக்பு நிலங்களில், வர்த்தக வளாகங்கள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், குளிர்பதனக் கிடங்குகள் உள்ளிட்டவற்றை அமைக்க வக்பு நிறுவனங்கள், வக்பு வாரியங்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படுகிறது.

    அதன்படி 2020-2021 ஆண்டில் ரூ.3 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டில் ரூ.ஒரு கோடி நிதி அளிக்கப் பட்டுள்ளது. மேலும் பொருளாதாரத்தில் நலிவடைந்த, மிகவும் பின்தங்கியோர், சிறுபான்மையினர் உட்பட அனைத்துப்பிரிவினரின் நலன் மற்றும் வாழ்வாதார உயர்வுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் சராசரியாக 3.5 கோடி பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன.
    • பிரதமரின் ஏழைகளுக்கான உணவு தானிய திட்டம் அனைத்து மாநிலங்களிலும் அமல்.

    பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

    ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தால் புலம் பெயர்ந்தவர்கள் உள்பட அனைத்து பயனாளர்களும் தங்களுக்கான மாதாந்திர உணவு தானியங்களை, நாட்டில் உள்ள எந்த நியாய விலைக் கடைகளிலும் ரேஷன் அட்டையை பயன்படுத்தி வாங்க முடியும். மேலும் பயோ மெட்ரிக் அங்கீகாரத்துடனான ஆதார் எண்ணை பயன்படுத்தியும் உணவு தானியங்களை பெற முடியும்.

    இது குறித்து பண்பலை வானொலி நிலையங்கள், ரயில் நிலையங்களில் ஒலி-ஒளி காட்சிகள், பதாகைகள் உள்ளிட்டவை மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 13 மொழிகளில் இடம் பெற்றுள்ள மேரா ரேஷன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 20 லட்சம் பேர் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

    ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் கீழ் தற்போது மாதந்தோறும் சராசரியாக 3.5 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. பிரதமரின் ஏழைகளுக்கான உணவு தானிய திட்டம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 5076284.98 மெட்ரிக் டன் அளவிற்கு உணவு தானியங்கள் ஒதுக்கப் பட்டுள்ளது.அதில் 4087528.24 மெட்ரிக் டன் அளவிலான உணவு தானியங்களை தமிழக அரசு விநியோகித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சுற்றுலா செல்ல உகந்த நாடு இந்தியா என்பதை உலகுக்கு உணர்த்தி உள்ளோம்.
    • அந்நிய செலாவணி இருப்பிலும் சுற்றுலாத் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    புதுச்சேரியில் பாரம்பரிய சுற்றுலா, கடற்கரை சுற்றுலா, ஆன்மீகச் சுற்றுலா மேம்பாட்டுக்கான நான்கு திட்டங்களை மத்திய மந்திரி கிஷன் ரெட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கூறியுள்ளதாவது:

    ஆண்டின் 365 நாட்களும் சுற்றுலா செல்ல உகந்த நாடு இந்தியா என்பதை உலகுக்கு உணர்த்தி வருகிறோம். சுற்றுலாத்துறை பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுகிறது. ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் அந்நிய செலாவணி இருப்பிலும் சுற்றுலாத் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    பத்து லட்சம் ரூபாய் முதலீட்டில் சுற்றுலாத் தொழில் தொடங்கினால் 80 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு சுற்றுலா வளர்ச்சிக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. ஆன்மீகத் தலமாக புதுச்சேரி உள்ளது. ஆன்மீகச் சுற்றுலா சிறப்பாக உள்ள இங்கு, சுகாதார சுற்றுலாவையும் கல்வி சார்ந்த முதலீடுகளையும் மேம்படுத்த வாய்ப்பு உள்ளது. புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சிக்காக 148 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


    நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், சுற்றுலா பயங்கரவாதப் போக்கை தடுக்கும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறினார். புதுவையின் புதுமைக்கு சுற்றுலா அடித்தளமாக இருக்கிறது, மத்திய அரசின் முயற்சியால் புதுச்சேரி விரைவில் சிறந்த சுற்றுலா நகரமாக விளங்கும் என்று குறிப்பிட்டார். புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி மற்றும் அமைச்சர்கள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

    • நாடு முழுவதும் 1576 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை.
    • சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

    இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மாறுவது மற்றும் உற்பத்தி செய்வது என்ற எஃப்.ஏ.எம்.இ. திட்டம் மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாராளுமன்ற மாநிலங்களவையில் இது தொடர்பாக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அந்த துறையின் இணை மந்திரி கிருஷன்பால் குஜார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

    எஃப்ஏஎம்இ-திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 68 நகரங்களில் 2,877 மின் வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்க அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

    இதன்படி, நாடு முழுவதும் உள்ள 16 நெடுஞ்சாலைகள் மற்றும் 9 விரைவுச்சாலைகளில் 1576 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இதில் தமிழகத்தில் 281 சார்ஜிங் நிலையங்களும், புதுச்சேரியில் 10 சார்ஜிங் நிலையங்களும் அமைக்கப்படும். அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவுக்கு 317 சார்ஜிங் நிலையங்களுக்கும், ஆந்திரப் பிரதேசத்தில் 266 சார்ஜிங் நிலையங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சாய ஆலைகளில் ஆய்வு.
    • 25 ஆலைகளில் முறையான கழிவு நீர் வெளியேற்ற வசதி இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டது.

    பாராளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய சுற்றுச் சூழல் துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சௌபே கூறியதாவது:

    தமிழகத்தில் நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் சாய ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பிரதிநிதிகள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். 


    இந்தக் குழுவினர் இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 44 சாய ஆலைகளில் கூட்டு ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின்போது 25 ஆலைகளில் முறையான கழிவு நீர் வெளியேற்ற வசதி இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

    சில ஆலைகளில் எதிர்மறை சவ்வூடுபரவல் முறை செயல்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது. சில ஆலைகளில் சூரிய சக்தி ஆவியாதல் அமைப்பு முறை செயல்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது. விதிமுறைகளின் படி செயல்படாத சாய ஆலைகள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகுந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புதுச்சேரிக்கு டிசம்பர் வரை ரூ.17.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • 2024 ஆம் ஆண்டிற்குள் அனைத்து ஊரக பகுதியிலும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும்.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் பேசிய ஜல்சக்தித் துறை இணை மந்திரி பிரகலாத் சிங் படேல், ஜல் ஜீவன் இயக்கத் திட்டத்தின் கீழ் நடப்பு டிசம்பர் மாதம் வரை மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரத்தை தெரிவித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    2024 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் ஊரக பகுதிகளில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்குவதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து ஜல் ஜீவன் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது மொத்தமுள்ள 19.36 கோடி ஊரக பகுதி வீடுகளில் 3.23 கோடி வீடுகள் குடிநீர்க் குழாய் இணைப்புகள் பெற்றிருந்தன. கடந்த 3 ஆண்டுகளில் 7.44 கோடி ஊரக பகுதி வீடுகளுக்குக் குடிநீர்க் குழாய் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 8.69 கோடி வீடுகளுக்கு 2024 ஆம் ஆண்டிற்குள் குடிநீர்க் குழாய் இணைப்புகள் தர திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி 2022-23 ஆண்டிற்காக தமிழ்நாட்டிற்கு ரூ.4,015 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தொகையில் செலவிட்டதுபோக ரூ.262.66 கோடி ரூபாய் மீதமுள்ளது. மேலும் புதுச்சேரிக்கு ரூ.17.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடப்பணிகள் நடை பெறுகின்றன.
    • ரூ.46.24 கோடியில் தூத்துக்குடி விமான நிலைய மேம்பாட்டுப் பணி நடைபெறுகிறது.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த விமானப் போக்குவரத்துத்துறை இணை மந்திரி வி கே சிங் கூறியுள்ளதாவது:

    விமானப் போக்குவரத்து வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ள விமான நிலையங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.98,000 கோடி முதலீட்டு செலவில் தற்போதைய விமான நிலையங்களை மேம்படுத்தவும், புதிய விமான நிலையங்களை அமைக்கவும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    கடந்த 7 வருடங்களில் குஜராத்தில் தொலேரா, ஹிராசர், ஆந்திரப் பிரதேசத்தில் தாகதர்த்தி, போகபுரம், ஒரவக்கல், அருணாச்சலப்பிரதேசம் இட்டாநகரில் உள்ள டோன்யி போலோ ஆகிய பகுதிகளில் பசுமை விமான நிலையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவற்றில் ஒரவக்கல் மற்றும் டோன்யி போலோ விமான நிலையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.

    தமிழகத்தில் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் புதிய உள்நாட்டு முனையக் கட்டிடக் கட்டுமானம் மற்றும் அது சார்ந்த பணிகளுக்காக 146 கோடி ரூபாய் செலவிடப்பட்டு, பணிகள் நிறைவடைந்துள்ளன. சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் 1125.91 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.

    திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடப்பணிகள் 710.35 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி விமான நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகள் 46.24 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×