search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரவுபதி முர்மு"

    • விமான நிலையத்தில் திரவுபதி முர்முவை பிஜி பிரதமர் சிதிவேனி ரபுகா வரவேற்று சம்பிரதாய வரவேற்பு அளித்தார்.
    • பிஜிக்கு சென்றுள்ள முதல் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை நேற்று முன்தினம் தொடங்கினார். அதன்படி, நேற்று தெற்கு பசிபிக் தீவு நாடான பிஜி நாட்டுக்கு திரவுபதி முர்மு சென்றடைந்தார். விமான நிலையத்தில் திரவுபதி முர்முவை பிஜி பிரதமர் சிதிவேனி ரபுகா வரவேற்று சம்பிரதாய வரவேற்பு அளித்தார்.

    இந்த பயணத்தின் முக்கியத்துவமான பிஜி நாட்டு அதிபர் கட்டோனிவேர் மற்றும் பிரதமர் சிதிவேன் ரபுகாவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்பட்டது.


    இதனிடையே, பிஜியின் அதிபர் கட்டோனிவேர் மற்றும் துணை அதிபர் ஆகியோர் திரவுபதி முர்வுமுக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'சிவிலியன்' விருதை வழங்கினர்.

    பிஜிக்கு சென்றுள்ள முதல் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தான் என்பது குறிப்பிடத்தக்கது. பிஜி பயணத்தைத் தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் திமோர்-லெஸ்டே ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளார்.

    • 5-ந்தேதி தீவு நாடான பிஜிக்கு திரவுபதி முர்மு பயணம்.
    • டிமோர்-லெஸ்டேக்கு ஜனாதிபதி செல்வது இதுவே முதல் முறை.

    புதுடெல்லி:

    மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    2 நாள் பயணமாக வருகிற 5-ந்தேதி தீவு நாடான பிஜிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    அங்கு அந்நாட்டு அதிபர் கேடோனிவிர், பிரதமர் சிட்டி வேனி ரபுகா ஆகி யோரை ஜனாதிபதி முர்மு சந்திப்பார். அத்துடன் அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் அவர் உரையாற்ற உள்ளார்.

    இதைத்தொடர்ந்து 2 நாள் பயணமாக வருகிற 7-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு நியூசிலாந்து செல்ல உள்ளார்.

    இந்த பயணத்தில் அந்நாட்டு கவர்னர் ஜெனரல் டேம் சிண்டி கிரோ, பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் ஆகி யோரை ஜனாதிபதி திரவு பதி முர்மு சந்திக்க உள்ளார். அங்கு நடைபெறும் கல்வி மாநாட்டிலும் அவர் உரையாற்ற உள்ளார்.

    அதன் பின்னர் 2 நாள் பயணமாக வருகிற 10-ந்தேதி தென்கிழக்கு ஆசிய நாடான டி மோர்-லெஸ்டேக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணிக்க உள்ளார். அங்கு அவர் அந்நாட்டு அதிபர் ஜோஸ்ர மோஸ் ஹோர்டா, பிரதமர் கே ரலா சனானா குஸ்மாவ் ஆகியோரை சந்திக்க உள்ளார்.

    3 நாடுகளிலும் இந்திய வம்சாவளியினருடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துரையாட உள்ளார்.

    ஜனாதிபதி ஒருவர் பிஜி மற்றும் டிமோர்-லெஸ்டேக்கு செல்வது இதுவே முதல் முறை. ஜனாதிபதியின் இந்த பயணம் 3 நாடுகளுடனான உறவை மேலும் வலுப்படுத்தி ஊக்கமளிக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
    • கார்கில் விஜய் திவாஸ், நமது ஆயுதப் படைகளின் அசாத்தியமான துணிச்சலுக்கும், அசாதாரண வீரத்துக்கும் நன்றியுள்ள தேசம் மரியாதை செலுத்தும் ஒரு சந்தர்ப்பமாகும்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்தனர்.

    இந்த போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 25-ம் ஆண்டு ஆகும். இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

    கார்கில் போர் வெற்றியின் 25-ம் ஆண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுக்க களைகட்டியுள்ளன. அரசியல் தலைவர்கள், ராணுவம், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பினரும் போரில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

    இது தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில்,

    கார்கில் விஜய் திவாஸ், நமது ஆயுதப் படைகளின் அசாத்தியமான துணிச்சலுக்கும், அசாதாரண வீரத்துக்கும் நன்றியுள்ள தேசம் மரியாதை செலுத்தும் ஒரு சந்தர்ப்பமாகும். 1999-ம் ஆண்டு கார்கில் சிகரத்தில் பாரத அன்னையைப் பாதுகாக்கும்போது மிக உயர்ந்த தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் நான் தலைவணங்குவதுடன் அவர்களின் புனித நினைவுகளுக்கு தலைவணங்குகிறேன். அவர்களது தியாகம் மற்றும் வீரம் அனைத்து நாட்டு மக்களுக்கும் ஊக்கத்தை கொடுக்கும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • பள்ளி மாணவர்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆசிரியையாக மாறி கலந்துரையாடினார்.
    • நாம் அதிக மரங்களை நட வேண்டும்.

    நம் இந்திய திருநாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்று மூன்றாம் ஆண்டில் திரவுபதி முர்மு அடியெடுத்து வைத்துள்ளார்.

    பெண்களுக்கு முதன்மை ஊக்க சக்தியாகவும், உதாரணமாகவும் திகழும் அவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

     

    டெல்லியில் ஜனாதிபதி தோட்டத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவின் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆசிரியையாக மாறி கலந்துரையாடினார்.

    மாணவர்களுடனான உரையாடலின்போது ஜனாதிபதி, மாணவர்களின் லட்சியங்கள் மற்றும் அவர்கள் விரும்பும் பாடங்களை பற்றி கேட்டறிந்தார். மாணவர்கள் விஞ்ஞானிகள், மருத்துவர்களாக விரும்புகிறார்கள் என்பதை அறிந்த பின்னர் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    புவி வெப்பமடைதல் குறித்து மாணவர்களுடன் உரையாடிய ஜனாதிபதி, நீர் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கும் முயற்சியில் அதிக மரங்களை நடுமாறு மாணவர்களை ஊக்குவித்தார்.

    நாம் அதிக மரங்களை நட வேண்டும். மழைநீர் சேகரிப்பு மூலம் தண்ணீர் வீணாவதை குறைக்கவும் அதை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காற்று மாசுபாடு குறித்தும், அதை குறைப்பதற்கான வழிகள் குறித்தும் அவர் உரையாடினார்.

    • சவாலான சூழ்நிலைகளை சந்திக்கும் பெண்களுக்கு அவர் ஒரு முதன்மை ஊக்க சக்தியாகவும், உதாரணமாகவும் திகழ்கிறார்.
    • திரவுபதி முர்மு அவர்களின் மக்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நம் இந்திய திருநாட்டின் குடியரசுத்தலைவராக பொறுப்பேற்று மூன்றாம் ஆண்டில் தனது பணிகளை தொடங்கியிருக்கும் மரியாதைக்குரிய திரவுபதி முர்மு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பெருமைமிகு நம் பாரத தேசத்தில் 15-வது குடியரசுத்தலைவராக பெண் குடியரசுத்தலைவர் தேர்வானதும் உலக அரங்கில் பெண்ணுரிமையை வலிமையாக நிலைநாட்டிய குடியரசு நாடாக இந்தியா மிளிர்ந்துகொண்டிருக்கிறது.

    சவாலான சூழ்நிலைகளை சந்திக்கும் பெண்களுக்கு அவர் ஒரு முதன்மை ஊக்க சக்தியாகவும், உதாரணமாகவும் திகழ்கிறார். நம் முதல் குடிமகளாக திகழும் மரியாதைக்குரிய திரவுபதி முர்மு அவர்களின் மக்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மோடி அரசு எழுதிக் கொடுத்த ஜனாதிபதி உரையை பார்த்தால், பிரதமர் மோடி பாசாங்கு செய்வது தெரிகிறது.
    • மக்கள் மாற்றத்தை விரும்பினாலும், அவர் எதுவும் நடக்காதது போல் நடிக்கிறார்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி உரை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    மோடி அரசு எழுதிக் கொடுத்த ஜனாதிபதி உரையை பார்த்தால், பிரதமர் மோடி பாசாங்கு செய்வது தெரிகிறது. பாராளுமன்ற தேர்தல் முடிவு அவருக்கு எதிரானது. '400 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்' என்று அவர் கூறியும், மக்கள் பா.ஜனதாவுக்கு 272 தொகுதிகளை கூட அளிக்கவில்லை.

    மக்கள் மாற்றத்தை விரும்பினாலும், அவர் எதுவும் நடக்காதது போல் நடிக்கிறார். கைதட்டல் வாங்குவதற்காக ஜனாதிபதியை பொய்களை படிக்க வைத்துள்ளார்.

    விலைவாசி உயர்வு, மணிப்பூர் வன்முறை, ரெயில் விபத்துகள், காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்கள், பா ஜனதா ஆளும் மாநிலங்களில் தலித், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் ஆகிய 5 முக்கிய பிரச்சனைகள், ஜனாதிபதி உரையில் ஒரு இடத்தில் கூட இடம்பெறவில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாம் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடு என்றால், ஏன் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர்?.
    • அக்னிவீர் போன்ற திட்டம் ஏன்?. அரசி விலையை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?.

    நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரை நிகழ்த்தினார். அப்போது பொருளாதாரம், எமர்ஜென்சி உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.

    இந்த நிலையில் மத்திய அரசு தயார் செய்த ஸ்கிரிப்ட், பொய்கள் நிறைந்தது என எதிர்க்கட்சிகள் பதில் அளித்துள்ளனர்.

    சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்

    நான் கூறுவது இந்தியா ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியது குறித்தது. இது விவசாயிகளை வளப்படுத்தியதா? நாம் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடு என்றால், ஏன் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர்?. அக்னிவீர் போன்ற திட்டம் ஏன்?. அரசி விலையை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?.

    முதலீடு இருந்தால் நாம் அதிக வளர்ச்சியை பார்க்க முடியும். தனிப்பட்ட நபர்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்க முடியாது. இது நமது எண்ணிக்கையை மேம்படுத்தலாம் ஆனால் விவசாயிகள், ஏழைகள் மற்றும் மிகவும் சுரண்டப்பட்டவர்களுக்கு இதில் என்ன இருக்கிறது. எமர்ஜென்சியின் போது ஜெயிலில் இருந்தவர்களுக்கு பாஜக என்ன செய்தது?. சமாஜ்வாடி அவர்களுக்கு மரியாதை கொடுத்தது, பென்சன் வழங்கியது.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா

    அரசால் கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்ட்-ஐ ஜனாதிபதி படித்துள்ளார். தனிப்பெரும்பான்மை இல்லை என்பதை பாஜக இன்னும் உணரவில்லை. பாஜக 303-ல் இருந்து 240-க்கு வந்ததை உணராததுதான் அரசின் பிரச்சனை. 303 மெஜாரிட்டி அடிப்படையில் இந்த உரை தயார்படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான், அரசாங்கம் உண்மையில் மெஜாரிட்டி இல்லாமல் இருக்கும்போது தெளிவான பெரும்பான்மை அரசாங்கம் இருப்பதாக அவர் கூறினார் (இநதிய மக்கள் நிலையான அரசை தனி மெஜாரிட்டியுடன் 3-வது முறையாக தேர்ந்தெடுத்துள்ளதாக உலகம் பார்க்கிறது என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதை சுட்டிக்காட்டி இவ்வாறு தெரிவித்துள்ளார்).

    காங்கிரஸ் தலைவர் தரிக் அன்வர்

    பழைய உரைகளில் கொஞ்சம் மாற்றம் செய்துள்ளனர். பாராளுமன்றத்தில் இன்று நிகழ்த்தப்பட்ட ஜனாதிபதி உரையில் புதிதாக ஏதும் இல்லை. எமர்ஜென்சிக்குப் பிறகு ஏராளமான தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் பாஜக தோற்கடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் புதிதாக சொல்ல ஒன்றுமில்லை.

    • ஆயுஷ்மான் பாரத் - பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டமாகும்.
    • இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு கிடைக்கும்.

    பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம்தேதி தொடங்கியது. இதில் மக்களவையில் மட்டும் புதிய எம் பிக்கள் பதவியேற்பு, சபாநாயகர் தேர்தல் என முதல் 3 நாட்களும் அலுவல்கள் நடந்தன.

    இதைத்தொடர்ந்து புதிய அரசின் முதல் மாநிலங்களவை இன்று கூடியது. பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார்.

    அப்போது, "70 வயதை கடந்த அனைத்து இந்திய மக்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டு திட்டத்தில் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்றும் ஆயுஷ்மான் பாரத் - பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் 55 கோடி மக்கள் பலனடைந்து வருவதாக" திரவுபதி முர்மு தெரிவித்தார்.

    ஆயுஷ்மான் பாரத் - பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு கிடைக்கும். இதன்மூலம் 12 கோடி குடும்பங்கள் பலனடைந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    • பாராளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல.
    • செங்கோலை மக்கள் வந்து பார்க்கும் அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும்.

    புதிய பாராளுமன்றத்தில் செங்கோலை வைக்க ஆரம்பத்தில் இருந்தே எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த நிலையில், மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்த நிலையில், இன்று கூடிய முதல் மாநிலங்களவையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது பாராளுமன்றத்தில் செங்கோல் அகற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பினர்.

    பாராளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல. முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழும் செங்கோல். செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆர்.கே.சௌத்ரிக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

    புதிய பாராளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டபோது, அரசு ஒரு பெரிய நாடகத்தை நடத்தியது. செங்கோலை அகற்ற வேண்டும் என்ற சமாஜ்வாதியின் ஆலோசனை நல்லது. சமாஜ்வாதி எம்.பி. கூறியது நல்ல ஆலோசனையே என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறி உள்ளார்.

    இது ஜனநாயக நாடு, செங்கோலை அகற்ற வேண்டும். செங்கோலை மக்கள் வந்து பார்க்கும் அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி. மிசா பார்தி கூறி உள்ளார்.

    பாராளுமன்ற மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து ஏழைகளுக்கு அதிகாரம் செல்வதின் அடையாளம் தான் செங்கோல் என்று பாராளுமன்றத்தில் திரவுபதி முர்மு கூறினார்.

    • இந்திய மக்கள் எப்போதுமே ஜனநாயகம், தேர்தல் மீது தங்கள் முழு நம்பிக்கையையும் வெளிப்படுத்தி உள்ளனர்.
    • சந்திரயான் திட்டம் குறித்து தேசம் பெருமை கொள்ள வேண்டும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்குப்பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில்,

    குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற்றவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்.

    இந்திய மக்கள் எப்போதுமே ஜனநாயகம், தேர்தல் மீது தங்கள் முழு நம்பிக்கையையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

    சந்திரயான் திட்டம் குறித்து தேசம் பெருமை கொள்ள வேண்டும்.

    50 ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 25-ந்தேதி எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டதன் மூலம் அரசியல் சாசனத்தின் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்பட்டது.

    ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம், அங்கு இந்திய அரசியல் சாசனம் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது.

    கொரோனா, பூகம்பம், போர் சூழல்கள் போன்ற எந்த ஒரு சோகமாக இருந்தாலும், மனித குலத்தை காப்பாற்றுவதில் இந்தியா முன்னணியில் உள்ளது.

    வளர்ந்த இந்தியாவை கட்டி எழுப்புவது ஒவ்வொரு குடிமகனின் லட்சியமும் உறுதியும் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    எமர்ஜென்சி காலம் குறித்து ஜனாதிபதி பேசியபோது, எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.

    • போட்டி தேர்வுகளில் வினாத்தாள் கசிவதை தடுக்க, கடும் தண்டனை விதிக்கும் வகையில், புதிய சட்டத்தை அரசு இயற்றி உள்ளது.
    • வினாத்தாள் கசிவுகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்குப்பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில்,

    * உத்தரப்பிரதேசம், தமிழகத்தில் பாதுகாப்பு வழித்தடத்தை செயல்படுத்தி வருகிறோம்.

    * பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி முன்பை காட்டிலும் 18 மடங்கு அதிகரித்துள்ளது.

    * போட்டி தேர்வுகளில் வினாத்தாள் கசிவதை தடுக்க, கடும் தண்டனை விதிக்கும் வகையில், புதிய சட்டத்தை அரசு இயற்றி உள்ளது.

    * வினாத்தாள் கசிவு பிரச்சனைகளை களைய கட்சி, அரசியலைத்தாண்டி நாம் ஒன்றிணைய வேண்டும்.

    * வினாத்தாள் கசிவுகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

    * வினாத்தாள் கசிவுகளில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை அரசு நிச்சயம் தண்டிக்கும்.

    காசி தமிழ் சங்கம் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் உள்ளிட்ட கலாச்சாரத்தை பெருமைப்படுத்தும் நிகழ்ச்சிகளை அரசு தொடங்கி உள்ளது என்று கூறினார்.

    ஜனாதிபதியின் உரையின்போது மணிப்பூர் விவகாரம் குறித்து பேசுமாறு எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். தொடர்ந்து நீட்... நீட்... என முழக்கமிட்டனர்.

    • பிரதமரின் கிராமப்புற சாலை வசதி திட்டம் கிராமப்புற உள்கட்டமைப்புகளுக்கு ஊக்கம் அளித்துள்ளது.
    • 0 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்குப்பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில்,

    * நாட்டில் உள்ள 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    * பெண்களின் வருவாயை அதிகரிப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களின் திறனை அதிகரிக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பெண்களின் வருவாயை அதிகரிக்கவும், அவர்களின் மரியாதையை அதிகரிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    * பிரதமரின் கிராமப்புற சாலை வசதி திட்டம் கிராமப்புற உள்கட்டமைப்புகளுக்கு ஊக்கம் அளித்துள்ளது.

    * மின்சாரத்தை விற்பனை செய்து வருவாய் பெருக்க, சூரிய ஒளி மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    * பின்தங்கிய பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, பிரதமரின் ஜன் மன் திட்டத்தின் மூலம் ரூ.24,000 கோடி செலவழிக்கப்பட்டு வருகிறது.

    * 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்படுகிறது என்று கூறினார்.


    ×