என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திரவுபதி முர்மு"
- உலக சந்தையில் இந்திய உணவு பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
- வடகிழக்கு மாநிலங்களில் அனைத்து இடங்களிலும் தொலை தொடர்பு வசதி மற்றும் இணைப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலுக்குப்பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில்,
* கொரோனா பெருந்தொற்று, உலகளாவிய சிக்கல்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.
* உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது.
* உற்பத்தி, சேவைகள், விவசாயம் ஆகிய மூன்றுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
* உற்பத்தி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது.
* பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ரூ.3,20,000 கோடி மதிப்பிலான உதவித்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
* எந்த அளவுக்கு நாம் தற்சார்பு அடைகிறோமோ அந்த அளவுக்கு விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்.
* உலக சந்தையில் இந்திய உணவு பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
* இயற்கை விவசாயம், பாரம்பரிய உணவு தானியங்களை ஊக்கப்படுத்த ஸ்ரீ அன்ன திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
* வந்தே மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.
* உலகின் பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்தியா தீர்வுகளை வழங்கி வருகிறது.
* நாட்டில் உள்ள 21 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை உள்ளது.
* வடகிழக்கு மாநிலங்களில் அனைத்து இடங்களிலும் தொலை தொடர்பு வசதி மற்றும் இணைப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.
* அசாம் மாநிலத்தில் மிகப்பெரிய செமி கண்டக்டர் உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது. உற்பத்தியின் மையங்களாக வடகிழக்கு மாநிலங்கள் மாற உள்ளது.
* மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டசபை, பாராளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
* 3-வது ஆட்சிக்காலத்தில் மேலும் 3 கோடி இலவச வீடுகள் கட்டிக்கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
- பாரதத்தில் மீண்டும் பெரும்பான்மை கொண்ட அரசு 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.
- உலக பொருளாதாரத்தில் 5-வது மிகப்பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா அடைந்துள்ளது.
புதுடெல்லி:
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம்தேதி தொடங்கியது. இதில் மக்களவையில் மட்டும் புதிய எம் பிக்கள் பதவியேற்பு, சபாநாயகர் தேர்தல் என முதல் 3 நாட்களும் அலுவல்கள் நடந்தன.
இதைத்தொடர்ந்து புதிய அரசின் முதல் மாநிலங்களவை இன்று கூடியது. பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார்.
இதற்காக பாராளுமன்றத்திற்கு வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி வரவேற்றார். செங்கோலுடன் பாராளுமன்ற அவைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைத்து செல்லப்பட்டார். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மக்களவை தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோரும் ஜனாதிபதியை வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில்,
* மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லாவுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தலை மிகச்சிறப்பாக நடத்தி முடித்ததற்காக தேர்தல் ஆணையத்திற்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய நாட்டின் மக்கள் அனைவரும் உற்சாகத்தோடு தங்கள் கடமையை ஆற்றி இருக்கிறார்கள்.
* 18-வது மக்களவையின் புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த முறையும் பெண்கள் அதிக அளவில் வாக்களித்து வரலாறு படைத்துள்ளனர்.
* பாரதத்தில் மீண்டும் பெரும்பான்மை கொண்ட அரசு 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.
* 60 ஆண்டுகளுக்கு பின், ஆட்சியில் இருக்கும் அரசு 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.
* அரசின் மீது மூன்றாவது முறையாக மக்கள் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர்.
* இந்த நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
* மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்ற சிந்தனையின் அடிப்படையில் முன்னேற்ற பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்.
* Reform, perform, transform என்ற சிந்தனையுடன் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.
* உலக பொருளாதாரத்தில் 5-வது மிகப்பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா அடைந்துள்ளது என்று கூறினார்.
- பாராளுமன்ற தேர்தலுக்குப்பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்துவது வழக்கம்.
- புதிதாக பதவியேற்றுள்ள மத்திய அரசின் முன்னுரிமை திட்டங்களை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம்தேதி தொடங்கியது. இதில் மக்களவையில் மட்டும் புதிய எம் பிக்கள் பதவியேற்பு, சபாநாயகர் தேர்தல் என முதல் 3 நாட்களும் அலுவல்கள் நடந்தன.
இதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) முதல் மாநிலங்களவையும் கூடுகிறது.
பாராளுமன்ற தேர்தலுக்குப்பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்துவது வழக்கம்.
அந்தவகையில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் இன்று நடக்கிறது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்துகிறார்.
இதில் புதிதாக பதவியேற்றுள்ள மத்திய அரசின் முன்னுரிமை திட்டங்களை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை ஆளுங்கட்சி தாக்கல் செய்கிறது. இந்த தீர்மானத்துக்கு பிரதமர் மோடி வருகிற 2 மற்றும் 3ம்தேதிகளில் பதிலளிப்பார் என தெரிகிறது.
- ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
- விபத்து பகுதியில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங்கில் நடைபெற்ற ரெயில் விபத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமுற்றனர். ரெயில் விபத்து பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக குடியரசு தலைவர் தனது எக்ஸ் தள பதிவில், "மேற்கு வங்காள மாநிலத்தின் டார்ஜிலிங்கில் அரங்கேறிய ரெயில் விபத்து சம்பவம் வேதனை அடைய செய்கிறது. எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருடனேயே உள்ளது. காயமுற்றவர்கள் விரைந்து குணமடையவும், மீட்பு பணிகள் விரைந்து நடைபெறவும் விழைகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், "மேற்கு வங்க ரெயில் விபத்து சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமுற்றவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன்."
"அதிகாரிகளுடன் பேசி, கள நிலவரம் குறித்து கேட்டறிந்தேன். மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. விபத்து பகுதிக்கு ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் வந்து கொண்டிருக்கிறார்."
"ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சமும், காயமுற்றவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- சுற்றுலா வேன் அல்க்நந்தா ஆற்றுப்பகுதியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
- இந்த விபத்தில் 12 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
புதுடெல்லி:
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் என்ற இடத்தில் சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த சுற்றுலா வேனில் பத்ரிநாத் கோவிலுக்கு 17 பேர் சென்றனர்.
அலக்நந்தா ஆற்றுப்பகுதியில் சுற்றுலா வேன் சென்றபோது பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 12 பக்தர்கள் உயிரிழந்தனர். மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், காயமடைந்த பக்தர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரகாண்டில் வேன் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும். காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
- ஜனாதிபதி தேர்தலின்போது திரவுபதி முர்முவை வேட்பாளராக நிறுத்தியபோது, காங்கிரஸ் ஏன் எதிர்ப்பு தெரிவித்தது என்று ஆச்சர்யம் அடைந்தேன்.
- அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், தற்போது பழங்குடியினர் என்ற திரவுபதி முர்மு-வை ஏன் தோற்கடிக்க முயற்சித்தார்கள் என்பது தெரிகிறது.
சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் "சில சண்டைகளை விட்டுவிட்டு மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மகிழ்ச்சியான சூழலில் 75 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போன்று தோற்றமளிக்கிறார்கள். இந்தியாவைப் போன்ற பலதரப்பட்டோர் வாழும் தேசத்தை மகிழ்ச்சியாக வைத்து இருக்க முடியும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது கடும் கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-
இளவரசர் (ராகுல் காந்தி), நீங்கள் சாம் பிட்ரோடா கருத்துக்கு பதில் அளிக்க வேண்டும். நமது நாட்டு மக்களவை நிறம் அடிப்படையில் அவமதிப்பதை நாட்டு ஏற்றுக் கொள்ளாது. மோடி இதை உண்மையிலேயே பொறுத்துக் கொள்ளமாட்டார்.
ஜனாதிபதி தேர்தலின்போது திரவுபதி முர்முவை வேட்பாளராக நிறுத்தியபோது, காங்கிரஸ் ஏன் எதிர்ப்பு தெரிவித்தது என்று ஆச்சர்யம் அடைந்தேன். அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், தற்போது பழங்குடியினர் என்ற திரவுபதி முர்மு-வை ஏன் தோற்கடிக்க முயற்சித்தார்கள் என்பது தெரிகிறது.
இளவரசரின் (ராகுல் காந்தி) மாமா அமெரிக்காவில் உள்ளார். அவர்தான் இளவரசருக்கு வழிகாட்டி. கருப்பாக உள்ளவர்கள் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் எனக் கூறுகிறார். தற்போது, அவர்கள் திரவுபதி முர்முவை ஆப்பிரிக்கர் என நினைத்தார்கள் என்பது தற்போது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவருடைய தோல் கருமையாக இருப்பதால் அவர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று நினைத்தார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஆம்மாநில ஆளுநர் ஸ்ரீமதி ஆனந்திபென் படேல் வரவேற்றார்.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு முதன்முதலாக வருகை தந்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்வார் என கூறப்பட்டது.
அதன்படி, ராஷ்டிரபதி பவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "குடியரசுத் தலைவர் ஸ்ரீ ஹனுமான் கர்ஹி கோயில், பிரபு ஸ்ரீ ராம் கோயில் மற்றும் குபேர் டீலாவில் சாமி தரிசனம் செய்வார்" என குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதற்காக, உத்தரப் பிரதேசத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ஆம்மாநில ஆளுநர் ஸ்ரீமதி ஆனந்திபென் படேல், மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார்.
இதுதொடர்பாக, ஜனாதிபதி அலுவலகம், திரவுபதி முர்மு, கவர்னர் இருக்கும் படத்துடன் எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உ.பியில் புதிதாகக் கட்டப்பட்ட ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு முதன்முதலாக வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- எல்.கே.அத்வானிக்கு இன்று அவரது இல்லத்திற்கே ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார்
- பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் மனநிலை பெண்களுக்கு எதிரானது மற்றும் தலித் மக்களுக்கு விரோதமானது
முன்னாள் பிரதமர்களான பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண்சிங், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்-மந்திரி கர்ப்பூரி தாக்கூர் ஆகிய 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி எல்.கே.அத்வானியை தவிர மற்ற 4 பேருக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவர்களது குடும்பத்தினரிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கினார். வயது முப்பு காரணமாக எல்.கே.அத்வானிக்கு இன்று அவரது இல்லத்திற்கே ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார்.
இந்நிலையில், பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரை மீண்டும் பிரதமர் மோடி வேண்டுமென்றே அவமதித்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், "குடியரசுத் தலைவர் நிற்கிறார், பிரதமர் மோடி அமர்ந்திருக்கிறார். பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரை மீண்டும் பிரதமர் மோடி வேண்டுமென்றே அவமதித்துள்ளார்.
இது முதல் முறையல்ல - புதிய நாடாளுமன்றம் தொடங்கப்பட்டபோது, குடியரசு தலைவரை அழைக்கவில்லை, ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் கூட அவரை அழைக்கவில்லை.
பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் மனநிலை பெண்களுக்கு எதிரானது மற்றும் தலித் மக்களுக்கு விரோதமானது என்பதை இந்த சம்பவங்கள் காட்டுகின்றன" என்று காங்கிரஸ் பதிவிட்டுள்ளது.
- தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.
- தெலுங்கானா-புதுச்சேரி கவர்னர் பொறுப்புகளை ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதா கிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார்.
புதுடெல்லி:
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.
அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இதையடுத்து தெலுங்கானா-புதுச்சேரி கவர்னர் பொறுப்புகளை ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதா கிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களுக்கும் புதிய கவர்னர் நியமனம் செய்யும் வரை அவர் இந்த பொறுப்புகளை வகிப்பார்.
தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் பதவி விலகியதை தொடர்ந்து அதே பதவியை கவனிக்கும் பொறுப்பு மற்றொரு தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை திடீரென சந்தித்தார்.
- பெண்கள் பிரச்சினை மற்றும் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்பவர் குஷ்பு. பாரதிய ஜனதா கட்சியில் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். பெண்கள் பிரச்சினை மற்றும் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் குஷ்பு நேற்று முன்தினம் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை திடீரென சந்தித்தார். சந்திப்பின்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பெண்கள் பிரச்சினைகள் பற்றியும் ஜனாதிபதி முர்முவுடன் குஷ்பு விவாதித்துள்ளார். ஜனாதிபதி முர்முவை சந்தித்த புகைப்படங்களை குஷ்பு தனது வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
- இசைக் கருவிகளை இசைக்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தார்.
- தேச பற்று பாடல்கள் இசைத்தப்படி பிரமாண்டமாக அணிவகுப்பு நடந்தது.
குடியரசு தின விழா முடிந்த மூன்றாவது நாள் அதில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறைக்கு திரும்புவது வழக்கம். இந்த நிகழ்வு டெல்லியில் உள்ள விஜய் சவுக்கில் இன்று நடைபெற்றது.
முப்படைகளை சேர்ந்த வீரர்கள் இசைக் கருவிகளை இசைக்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வரவேற்றனர். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராணுவம், கடற்படை, விமானப்படை, மாநில போலீசார், மத்திய போலீசார், ஆயுதப்படை வீரர்கள், டிரம்ஸ் இசைக்குழுவினர் உள்ளிட்டோர் அணிவகுப்பு நடத்தினர்.
தேச பற்று பாடல்கள் இசைத்தப்படி பிரமாண்டமாக அணிவகுப்பு நடந்தது. இதனை காண, ஏராளமான மக்கள் விஜய் சவுக் பகுதிக்கு வருகை தந்தனர். வசுதேவ குடும்பகம் வடிப்பில் இந்த அணி வகுப்பானது நடைபெற்றது.
- தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடி ஏற்றினார்.
- குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொண்டார்.
நாட்டின் 75ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியேற்றிய நிலையில் தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடி ஏற்றினார். குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொண்டார். அவரை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தன்னுடன் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வந்தார். சாரட் வண்டியின் முன்னும் பின்பும் குதிரையில் வீரர்கள் அணிவகுத்து வந்தனர்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்முவையும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தளபதிகள் ஆகியோர் வரவேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிற தலைப்பாகை அணிந்து, பார்வையாளர் அரங்கில் இமானுவேல் மேக்ரானை வரவேற்றார். அதனைத்தொடர்ந்து, முப்படைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்பை குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார். பிரான்ஸ் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு அனைவரையும் கவர்ந்தது.
அதனைத்தொடர்ந்து, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த பிரான்ஸ் அதிபர், "இந்நிகழ்வு பிரான்ஸ்-க்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். நன்றி இந்தியா" எனக் குறிப்பிட்டிருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்