என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 235761"
- தென்னை சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது.
- இதற்கு எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.
மடத்துக்குளம் :
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், தென்னந்தோப்புகளில் வட்ட பாத்தி மற்றும் வரப்புகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மடத்துக்குளம் தாலுகாவில் தென்னை சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. தென்னந்தோப்புகளில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், சுற்றிலும் வட்டப்பாத்திகள் எடுக்கவும், வரப்புகள் அமைப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.இதற்கு எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை. மூன்று ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.கிராம ஊராட்சியைச்சேர்ந்த விவசாயிகள், அதே ஊரில், ஆதார் முகவரி உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்;
ஒன்றிய அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில், ஊராட்சிகளுக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள், சிறு, குறு விவசாயி சான்று, ஆதார், அடங்கல், ரேஷன் கார்டு நகல், பாஸ்போஸ்ட் சைஸ் போட்டோ-2, ஆகியவற்றுடன், மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுகலாம்.மேலும் விபரங்களுக்கு, துங்காவி, மெட்ராத்தி, தாந்தோணி, காரத்தொழுவு, ஜோத்தம்பட்டி, கடத்தூர், மைவாடி ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரன் 96598 38787 என்ற எண்ணிலும், வேடபட்டி, சோழமாதேவி, கொழுமம்,பாப்பான்குளம் ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள் நித்யராஜ் 63821 29721 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
- மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று வருகிற 2-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் 2021-22-ன் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலமாக திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைக்கும் திட்டத்தில் பொதுப் பிரிவில் 1 ஹெக்டேர் (40 சதவீத மானியம்) மற்றும் பெண்களுக்கு 1 ஹெக்டேர் (60சதவீத மானியம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்கும் திட்டத்தில் பெண்களுக்கு 4 ஹெக்டேர் (60 சதவீத மானியம்), ஆதிதிராவிடர்-பழங்குடியினருக்கு 1 ஹெக்டேர் (60சதவீத மானியம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நன்னீர் மீன்வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம் வழங்குதல் திட்டத்தில் பெண்களுக்கு 4 ஹெக்டேர் (60 சதவீத மானியம்), ஆதிதிராவிடர்-பழங்குடியினருக்கு 1 ஹெக்டேர் (60சதவீத மானியம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறிய அளவிலான பயோபிளாக் குளங்க ளில் மீன்வளர்ப்பு செய்த லுக்கான மானியம் வழங்குதல் திட்டத்தில் பொதுப் பிரிவில் 1 அலகு (40சதவீத மானியம்), பெண்களுக்கு 2 அலகுகள் (60சதவீத மானியம்), ஆதிதிராவிடர்-பழங்குடியினருக்கு 2 அலகுகள் (60சதவீத மானியம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் சிவகங்கை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று வருகிற 2-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், 5/3, யூனியன் வங்கி மாடி, பெருமாள் கோவில் தெரு, சிவகங்கை - 630561 என்ற முகவரிக்கும், 04575-240848 என்ற தொலைபேசி எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
- ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு வரும் 25ந்தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் மீதமுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவா் சோ்க்கைக்கு ஆகஸ்ட் 25ந் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதில் 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம். 14 வயது முதல் 40 வயது வரையில் உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை.
அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதுடன் அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. ஆகவே மாணவா்கள் இணையதளம் மூலமாக ஆகஸ்ட் 25ந்தேதிக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை 0421-2230500 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
- மாணவிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.
திருப்பூர் :
அரசு பள்ளிகளில் 6முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.உயர்கல்வியில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் கீழ் பயன்பெறும் மாணவிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.
அதன்படி மாணவிகள் தங்கள் விவரங்களை பதிவு செய்தனர். இதில் 25 சதவீத மாணவிகளின் வங்கிக்கணக்குகள் மாணவிகள் பெயரில் அல்லாது பெற்றோர் பெயரிலும், ஜாய்ன்ட் அக்கவுண்டாகவும் இருப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்து திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் கூறியதாவது:-
கல்லுாரி தரப்பில் மாணவிகள் பெயர், பாடப்பிரிவு, கல்லூரி செயல்படும் மாவட்டம், சேர்ந்த ஆண்டு ஆகிய விவரங்கள் சரிபார்க்கப்பட்டன. பள்ளி தரப்பில் தமிழ்வழியில் பயின்றதற்கான தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. தற்போது வங்கி சார்பில் வங்கிக்கணக்குகள், ஆதார் எண்ணுடன் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.இதில், மாணவிகள் பலர் தங்கள் பெற்றோரின் பெயரில் உள்ள கணக்குகளை இணைத்துள்ளனர். எங்கள் கல்லூரியில் 298 பேரின் விவரங்கள் பதிவேற்றப்பட்டதில், 53 பேரின் விண்ணப்பங்களில் சிக்கல் இருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் கனரா வங்கி சார்பில் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அதே வங்கியில் மாணவிகள் பெயரில் கணக்கு துவங்கி, அப்டேட் செய்யும் பணி நடக்கிறது. ஒரு வாரத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- 2023ம் ஆண்டு குடியரசுதின விழாவில் பத்ம விருதுகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- விருதுக்கான விண்ணப்பம் www.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது.
திருப்பூர் :
கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு 2023ம் ஆண்டு குடியரசுதின விழாவில் பத்ம விருதுகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விருது தொழில், இனம், பாலினம் ஆகியவற்றிற்கு வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது. விருதுக்கான விண்ணப்பம் www.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது. தகுதியானவர் செப்டம்பர் 15ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- மாதம் ரூ. 1500 உதவித்தொகை பெற தமிழ் திறனறிவு தேர்வுக்கு பிளஸ்-1 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேற்கண்ட தகவலை மாநில அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.
மதுரை
தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில், நடப்பு கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நடத்தப்பட உள்ளது. இது மாவட்ட தலைநகரங்களிலும் அக்டோபர் 1-ம்தேதி நடத்தப்படும்.
அப்போது 10-ம் வகுப்பு தமிழ் பாடத் திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். இதில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500/- வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். எனவே அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளிகளில் பயிலும் (CBSE / ICSE /உட்பட) பிளஸ்-1 மாணவர்கள், தேர்விற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in இணையதளம் மூலம் வருகிற 22-ம் தேதி முதல் அடுத்த மாதம் 9-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் அடுத்த மாதம் 9-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
மேற்கண்ட தகவலை மாநில அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.
- சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டிற்காக 30 முக்கிய முயற்சிகளை அறிவிப்பு.
- சுற்றுலாத்தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்கவுள்ளது.
திருப்பூர் :
தமிழ்நாடு அரசு சுற்றுலா துறையின் சார்பில் விருதுகள்வழங்கப்படவுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சுற்றுலாத்துறை அமைச்சர் 2021-22 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றக் கூட்டத் தொடரில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 30 முக்கிய முயற்சிகளை அறிவித்திருந்தார். தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பல்வேறு சுற்றுலாத்தொழில் முனைவோருக்கு மாநில சுற்றுலா விருதுகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது அத்தகைய முக்கிய அறிவிப்பாகும்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலாத்தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்கவுள்ளது. இந்தவிருதுகள் சுற்றுலாத்தொழில் முனைவோரையும், மாநிலத்தில் சுற்றுலா தொடர்புடைய செயல்பாடுகளைச் செயற்படுத்தும் சுற்றுலாத்தொழில் புரிவோரையும் ஊக்குவிக்கும். இந்த விருதுகள் பல்வேறு சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக பங்களிக்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்படும். 15 வெவ்வேறு பிரிவுகளில் உள்ள விருதுகளின் முதல் பதிப்பு 27.9.2022 அன்று வழங்கப்படும். மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத் தொழில் முனைவோரும் உரிய தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று (27.09.2022) சென்னையில் வழங்கப்படும். அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்:26.8.2022 ஆகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- 68 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் அரசு வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறலாம்.
திருப்பூர் :
வேளாண் பட்டதாரிகள் சுயதொழில் தொடங்க வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் நடபாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 68 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட 68 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை தொழில் முனைவோர் ஆக்கும் நோக்கத்தில் ஒரு பயனாளிக்கு 25 சதவீதம் மானியமாக அதிகபட்ச நிதி உதவியாக ரூ.1 லட்சம் பின்னேற்பு மூலதனம் மானியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் அரசு வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்க கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுயதொழில்கள் அமைக்க வேண்டும். பயன் அடைவதற்கு 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அரசு தனியார் நிறுவனங்களில் பணிகளில் இருக்கக்கூடாது. ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பயன் பெற முடியும். வங்கி மூலம் கடன் பெற்ற தொழில் புரிவோரின் நிறுவனத்தின் உரிமையானது தனியுரிமையாக இருக்க வேண்டும்.
தொழில் தொடங்க விரும்பும் வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ணப்பத்துடன் விரிவான திட்ட அறிக்கையை கல்வி சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், வங்கியில் இருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து வருகிற 25-ந் தேதிக்குள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களையும் அல்லது வேளாண் துணை இயக்குனரை 94875 61146 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- பட்டதாரி இளைஞர்களுக்கு 25 சதவீ தம் அல்லது அதிகபட்ச நிதி உதவியாக ரூ.1லட்சம் மானியம்
- திட்டத்தின் கீழ் மானிய உதவி பெற விரும்பும் வேளாண்மை பட்டதாரிகளின் வயது 21-ல் இருந்து 40-க் குள் இருக்க வேண்டும்
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் உள்ள 22 கிராம ஊராட்சிகளில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல், இளநிலை பட்டப்பிரி வில் சான்று பெற்ற இளம் தொழில் முனைவோருக்கு, அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி இளைஞர்களுக்கு 25 சதவீ தம் அல்லது அதிகபட்ச நிதி உதவியாக ரூ.1லட்சம் மானியமாக வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் மானிய உதவி பெற விரும்பும் வேளாண்மை பட்டதாரிகளின் வயது 21-ல் இருந்து 40-க் குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கக்கூடாது. ஒரு குடும்பத்திற்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெற தகுதி உடையவர் ஆவார்.
வருகிற 15 -ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எனவே தகுதியுடைய தொழில் தொடங்கவிருக்கும் வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ணப்பம் மற்றும் விரிவான திட்ட அறிக்கை யுடன் கல்வி சான்றிதழ், ரேசன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
- www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் :
தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரைபடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிப்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு www.scholarships.gov.inஎன்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரையிலும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த திட்டம் குறித்து கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 0421 2999130 என்ற எண்ணில் தொடர்பு கொள்லாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- பட்டாசுக்கடை உரிமம் பெற இன்று முதல் அக்டோபா் 8 ந் தேதி வரையில் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
- உரிமக் கட்டணம் ரூ.1200-ஐ கருவூலகத்தில் செலுத்தியதற்கான சலான் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
திருப்பூர் :
தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, திருப்பூா் மாநகரில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற இன்று விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாநகர காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி தற்காலிகமாக பட்டாசுக்கடை உரிமம் பெற இன்று முதல் அக்டோபா் 8 ந் தேதி வரையில் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் கீழ்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
இதில் விண்ணப்பிக்க விண்ணப்பப் படிவம் ஏ 5ல் ரூ.2 மதிப்புள்ள நீதிமன்ற வில்லை ஒட்டப்பட்டிருக்க வேண்டும். உரிமக் கட்டணம் ரூ.1200-ஐ கருவூலகத்தில் செலுத்தியதற்கான சலான் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் (சலான் மாநகர காவல் அலுவலகத்தில் கிடைக்கும்), பட்டாசுகளை இருப்புவைத்து விற்பனை செய்யப்படவுள்ள இடத்தின் வரைபடம் 6 நகல்களுடன், வரைபடத்தில் சம்பந்தப்பட்ட இடத்தின் முகவரி முழுமையாக குறிப்பிட்டிருப்பதுடன், மனுதாரா் தனது கையொப்பம் இட்டிருக்க வேண்டும். பட்டாசு விற்பனை செய்யும் இடம் சொந்தக் கட்டடமாக இருந்தால் 2022 -23 ஆம் ஆண்டுக்கான சொத்துவரி ரசீது இணைக்கப்பட வேண்டும். வாடகை கட்டடமாக இருந்தால் சொத்து வரி ரசீது மற்றும் சாட்சிகள் முன்னிலையில் கட்டட உரிமையாளருடன் ரூ. 20க்கான முத்திரைதாளில் வாடகை ஒப்பந்த ஆவணத்தையும் இணைக்க வேண்டும்.
மேலும் கடை அமையவுள்ள இடங்களைப் பாா்வையிட்டு விசாரணைக்கு பின் காவல் துறை, தீயணைப்புத் துறை ஆய்வில் திருப்தியடைந்தால் மட்டும் பட்டாசு உரிமம் வழங்கப்படும். அதேவேளையில் குறித்த காலக்கெடுவுக்குள் முழுமையாக பெறப்படாத விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் தள்ளுபடி செய்யப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
- களப்பணியாளா் பணியிடத்துக்கு முதுகலை சமூக பணிகள் முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் :
சமூக நலத் துறையின்கீழ் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூா் மாவட்ட சமூக நலத்துறையின்கீழ் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் கீழ்க்காணும் பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபா்கள் வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இதில் களப்பணியாளா் பணியிடத்துக்கு முதுகலை சமூக பணிகள் முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.அரசு அல்லது அரசு சாரா திட்டங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடா்பான களப்பணிகளில் குறைந்தது ஒரு ஆண்டு பணியாற்றியிருக்க வேண்டும். மூன்று வேளையில் சுழற்சி முறையில் பணியாற்றுவதுடன், சொந்தமாக இருசக்கர வாகனம் மற்றும் ஓட்டுநா் உரிமம் வைத்திருக்கும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தப் பணிக்கு ஊதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.
காவலா் பணிக்கு காவலா் அல்லது இரவுக்காவலராகப் பணிபுரிந்த அனுபவம் இருப்பதுடன், சொந்தமாக இருசக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்.இந்தப் பணிக்கு மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். ஆகவே மேற்கண்ட தகுதியுடைய திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த நபா்கள் தங்களுடைய விண்ணப்பங்களை திருப்பூா் மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்தில் வருகிற 25 ந் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.பதிவுத் தபாலில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நல அலுவலா், அறை எண் 35,36, தரைத்தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூா்-641604. ேமலும் விவரங்களுக்கு 0421-2971168, 91500-57947 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்