search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சிலை"

    • சென்னையில் இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய உள்ளனர்.
    • சென்னையில் மட்டும் ஆயிரக்கணக்கான சிலைகளை வைத்து பூஜை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய உள்ளனர்.

    சென்னையில் மட்டும் ஆயிரக்கணக்கான சிலைகளை வைத்து பூஜை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட உள்ளன.

    இதையடுத்து விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக கொண்டாடுவது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் இந்து முன்னணி சார்பில் மேகநாதன், தங்கராஜ், பாரத் இந்து முன்னணி சார்பில் பிரபு, டில்லிபாபு, அருண், விஸ்வ இந்து பரிசத் சார்பில் ரவிராஜ், இந்து மக்கள் கட்சி சார்பில் குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் போலீஸ் சார்பில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை விழா கமிட்டியினர் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி, 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தங்களது பகுதியைச் சேர்ந்த இந்து இயக்க பிரமுகர்களை அழைத்து ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 10 இடங்களில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    31-ந்தேதி பூஜைக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகளை 4-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊர்வலத்தின்போது கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகளையும் போலீசார் வகுத்துள்ளனர்.

    இதனை முழுமையாக அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை மாநகர போலீசார் விரிவான அறிக்கையை விரைவில் வெளியிட உள்ளனர்.

    • விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும்போது, நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    களிமண்ணால் செய்யப்பட்டதும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

    சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மோக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.

    நீர் நிலைகள் மாசடைவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே சிலைகள் தயாரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.

    சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள (சர்வதீர்த்த குளம் மற்றும் பொன்னேரி கரை) போன்ற இடங்களில் மட்டுமே தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

    விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மணவாளக்குறிச்சி சிலைகள் சின்னவிளை கடலில் கரைக்கப்படுகிறது.
    • நாகர்கோவில் மாநகர் சிலைகள் சங்குத்துறை கடலில் கரைக்கப்படுகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட இந்து முன்னணி பொதுச்செய லாளர் ஆர்.கே.கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவானது வருகிற 31-ந்தேதி அன்று மாவட்டம் முழுவதும் 5004 விநாயகர் சிலைகள் கோவில்கள். பொது இடங்கள், வீடுகளில் பூஜைக்கு வைக்கப்படும். பின்னர், பூஜையில் வைக்கப்பட்ட சிலைகள் கடல், ஆறு, அருவி உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.

    அதன்படி மணவாளக்கு றிச்சி பேரூராட்சிக்குட்பட்ட சிலைகள் வருகிற 3-ந்தேதி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து காலை 8.30 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மாலை 5.30 மணிக்கு சின்னவிளை கடலில் கரைக் கப்படுகிறது.

    நாகர்கோவில் மாநகர், ராஜாக்கமங்கலம் ஒன்றி யத்தில் வைக்கப்படும் சிலைகள் வருகிற 4-ந்தேதி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து மதியம் 2.30 மணிக்கு ஊர்வலமாக எடுத் துச் செல்லப்பட்டு சங்குத் துறை கடலில் கரைப்படுகிறது.

    அகஸ்தீஸ்வரம் ஒன்றியத் தில் வைக்கப்படும் சிலை கள் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் முன்பு இருந்து பிற்பகல் 3 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடலில் கரைக்கப்படும்.

    தோவாளை ஒன்றியத்தில் தோவாளை முருகன் கோவில் அடிவாரத்தில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு சிலைகள் ஊர்வல மாக எடுத்துச் செல்லப்பட்டு ஞாலம் பள்ளி கொண்டான் அணையில் கரைக்கப்படுகிறது.

    குருந்தன்கோடு ஒன்றி யம், குளச்சல்நகர் பகுதி யில் வைக்கப்படும் சிலை கள் திங்கள்நகர் ராதா கிருஷ்ணன் கோவில் முன்பு இருந்தும், தக்கலை ஒன்றியம், பத்மநாபபுரம் நகர் பகுதிகளில் உள்ள சிலைகள் மதியம் 12 மணிக்குவைகுண்ட புரம் ராமர் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துசென்று மண்டைக்காடு கடலில் கரைக்கப்படுகிறது.

    திருவட்டார் ஒன்றி யத்தில் செருப்பாலூர் முத்தாரம்மன் கோவிலில் இருந்து காலை 10 மணிக்கு சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று திற்பரப்பு அருவியிலும், கிள்ளியூர் ஒன்றியத்தில் வைக்கப்படும் சிலைகள் கருங்கல் கூனாலு மூடுதர்ம சாஸ்தா கோவிலில் இருந்து காலை 10 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல் லப்பட்டு மிடாலம் கடலில் கரைக்கப்படுகிறது

    மேல்புறம் ஒன்றியத்தில் அளப்பன்கோடு ஈஸ்வரன் கால பூதத்தான் கோவிலில் இருந்து காலை 10 மணிக்கு ஊர்வலமாக சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும், முன்சிறை ஒன்றியம், கொல்லங்கோடு நகர் பகுதி சிலைகள் மதியம் 2 மணிக்கு அஞ் சுகண்ணுகலுங்கு மாடன் தம்புரான் இசக்கி அம்மன் கோவிலில் இருந்து ஊர்வல மாகஎடுத்துச் செல்லப்பட்டு தேங்காப்பட்டணம் கடலி லும், குழித்துறை நகர் பகுதி யில் வைக்கப்படும் சிலைகள் காலை 10 மணிக்கு பம்மம் பகுதியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் கரைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • பல்வேறு வண்ணத்தில் விற்பனைக்கு வந்துள்ளது
    • இளைஞர்களும் பொதுமக்களும் சிலை அருகே செல்பி எடுத்து உற்சாகம்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தேசிய கொடி ஏந்தி மோட்டார் சைக்கிளில் விநாயகர் செல்லும் காட்சி போல் விநாயகர் சிலைகள் உள்ளிட்ட பல்வேறு வண்ணத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

    ஒரு அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் பல வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. விநாயகர் சிலைகள் மிகவும் அழகிய வடிவிலும் பலவகைப்பட்ட ரகங்களிலும் குறைந்த அளவில் விற்பனைக்கு தயாராக வந்து இறங்கியுள்ளது. 75-ம் ஆண்டு சுதந்திரம் தினத்தை முன்னிட்டு தேசிய கொடியுடன் மோட்டார் சைக்கிளில் விநாயகர் செல்லும் சிலை விற்பனைக்கு வந்துள்ளது.

    இதனை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் மேலும் இளைஞர்களும் பொதுமக்களும் தேசிய கொடியுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் விநாயகர் சிலை அருகே செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

    • கடும்  கட்டுப்பாடுகள்  அறிவிப்பு
    • ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.

    நாகர்கோவில்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும். விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இதையடுத்து விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு இந்து அமைப்பு கள் தயாராகி வருகிறது. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கும் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைப்ப தற்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள் ளது.

    இதுகுறித்து கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    தமிழக முதல்-அமைச்ச ரின் சீரிய நல்லாட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்ப தில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர்ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண் டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழி காட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனவே பொது மக்க ளுக்கு கீழ்கண்டவாறு வேண்டுகோள் விடப்படு கிறது .

    * களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மா கோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான சுற்றுச் சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப் பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

    * சிலைகளின் ஆபரணங் கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பள பளப்பாக மாற்று வதற்கு மரங்களின் இயற்கை பிசின் கள் பயன்படுத்தப்படலாம்.

    * ஒரு முறை பயன்ப டுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள் மற்றும் பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

    * சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணை வண்ணப்பூச்சு களை கண்டிப்பாக பயன் படுத்தக்கூடாது . சிலை களின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலு குகந்த நீர் சார்ந்த, மக்கக்கூ டிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண் டும்.

    * சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட் கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப் பட்ட அலங்கார ஆடை கள் மட்டுமே பயன்ப டுத்தப்படவேண்டும்.

    * விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ் நாடு மாசுக் கட்டுப் பாடு வாரியத்தின் விதிமுறை களின்படி கரைக்க அனும திக்கப்படும்.

    * விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள கன்னியாகுமரி கடற்கரை, சொத்தவிளை கடற்கரை, சின்னவிளை கடற்கரை, சங்குதுறை கடற்கரை, பள்ளிகோணம் கடற்கரை வெட்டுமடை கடற்கரை, மிடாலம் கடற்கரை, தேங்காப் பட்டணம் கடற்கரை, திற்பரப்பு அருவி மற்றும் தாமிர பரணி ஆறு (குழித்துறை) ஆகிய இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறை களின்படி கரைக்க அனும திக்கப்படும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம். விநாயக சதுர்த்தி விழா வினை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டா டும்படி கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

    இவ்வாறு செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

    • மதுரையில் விற்பனைக்கு வந்த வண்ணமய விநாயகர் சிலைகள் ரூ.50 முதல் 50ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
    • இதனால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுரை

    இந்துக்களின் முக்கிய பண்டி கையான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாட ப்படுகிறது. இந்த விழாவில் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வீடுகள் மற்றும் பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்தி, பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு அமலில் இருந்ததால் விநாயகர் சதுர்த்தி விழா பொது இடங்களில் நடைபெற வில்லை. அவரவர் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை விமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் அனுமதிக்கப்பட்டு ள்ளதால் விநாயகர் சிலைகளை வாங்க பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்காக மதுரையில் மாட்டுத்தாவணி, திருப்பரங்குன்றம், விளாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. மாட்டுத்தாவணி பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வண்ணமயமான விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.

    இந்த சிலைகள் குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 50,ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதற்காக 15 அடி உயரம் வரை விநாயகர் சிலைகளும் தயார் செய்யப்படுகிறது. மேலும் பொது இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைப்பதற்கு ஆர்டர் செய்தால் சிலைகளை தயார் செய்து கொடுப்பதாகவும் கைவினைஞர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆர்டர்களும் தற்போது அதிகமாக வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.மேலும் வீடுகளில் வைத்து பூஜை செய்வதற்காக சிறிய வடிவிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு சிங்கம், மான், மயில் ஆகியவற்றின் மீது விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற சிலைகள் பொது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சிலைகளை ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள்.இந்த ஆண்டு சதுர்த்தி விழாவை ஒட்டி 3 நாட்கள் வழிபாடு செய்து பின்னர் நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க தேவையான ஏற்பாடுகளையும், மதுரை மாவட்டத்தில் அதற்குரிய இடங்களையும் போலீசார் தீவிரமாக தேர்வு செய்து வருகிறார்கள்.

    மேலும் இந்து அமைப்பு கள் நடத்தும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை பல்வேறு நிபந்தனைகளை அடிப்படையில் அனுமதிக்க வும் முடிவு செய்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்து முன்னணி அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வார்கள்.
    • கடந்த 2 ஆண்டாக பல்வேறு கட்டுப்பாடுகள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடையாக இருந்தன.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

    கொரோனா பரவல் காரணமாக கட ந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த திருவிழா உள்ளிட்ட கொண்டாட்டங்கள் தற்போது எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

    இந்து முன்னணி அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வார்கள்.

    கடந்த 2 ஆண்டாக பல்வேறு கட்டுப்பாடுகள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடையாக இருந்தன. இந்த நிலையில் கட்டுப்பாடுகள் முழுமையாக நீங்கி இருப்பதால் எப்போதும் போல விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அவர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த ஆண்டு இந்து முன்னணி சார்பில் 1 லட்சத்து 25 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அனைத்து மாவட்டங்களிலும் இந்து முன்னணி நிர்வாகிகள் தொடங்கி உள்ளனர். போலீசாரிடம் முன் அனுமதி பெற்று சிலைகளை அமைப்பதற்கான பணிகளில் மாவட்ட நிர்வாகிகள் ஈடுபட்டு உள்ளனர்.

    சிலைகளை நிறுவிய பிறகு அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் போலீசார் சுற்றறிக்கைகளை தயாரித்துள்ளனர். இதில் சிலைகள் இருக்கும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இடம் பெற்றுள்ளன.

    சென்னையில் 5500 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய இந்து முன்னணி அமைப்பினர் முடிவு செய்திருக்கிறார்கள்.

    சென்னை மாநகர காவல் துறையின் அனுமதியுடன் சிலைகளை வைத்து வழிபாடு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து முன்னணி அமைப்பின் சென்னை மாநகர நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் தொடர்பாக சிந்தாரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    இதன் பின்னர் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், துணைத்தலைவர் கார்த்திகேயன், செயலாளர் மனோகரன் ஆகியோர் கூறும்போது, இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக 1 லட்சத்துக்கும் அதிகமான இடங்களில் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    அப்போது மாநில செய்தி தொடர்பாளர் இளங்கோவன் உடன் இருந்தார்.

    விநாயகர் சிலை வழிபாட்டின்போது பிரிவினைவாதத்தை முறியடிப்போம், தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்கிற கோஷத்தை இந்து முன்னணி அமைப்பினர் முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர்.

    இவர்களை போன்று பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் விநாயகர் சிலை வழிபாட்டுக்கு தயாராகி வருகிறார்கள். இதையடுத்து சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக விரைவில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற உள்ளன.

    • இந்து அமைப்புகளுடன் அதிகாரிகள் ஆலோசனை
    • வழிபாட்டு ஸ்தலங்கள் வழியாக சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது அமைதியாக செல்ல வேண்டும்.

    நாகர்கோவில்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும்.

    குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண் டாடப்படும். வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படு வதையடுத்து இந்து அமைப் புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு தயாராகி வருகிறார்கள். இந்து முன்னணி, பாரதிய ஜனதா இந்து மகா சபா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் சிலைகள் பிரதிஷ்டை செய் யப்படுகிறது.

    பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் 2, 3, 4-ந் தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படு கிறது. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு போலீசார் பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளனர். விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் சிலை களை கரைப்பது தொடர் பாக இந்த அமைப்புகளு டன் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    விநாயகர் சிலைகளை ஏற்கனவே பிரதிஷ்டை செய்த இடங்களில் மட்டுமே பிரதிஷ்டை செய்யவேண்டும். புதிய இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்யக்கூடாது. 10 அடி உயரத்திற்கு மேல் சிலைகள் பிரதிஷ்டை செய்யக்கூடாது. சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்களில் ஒரு குழு அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

    போலீசாரின் அனுமதி பெற்ற பின்னரே சிலை களை பிரதிஷ்டை செய்ய வேண்டும். புதிய இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி கிடையாது.மக்கும் பொருட்களால் ஆன சிலைகளை மட்டுமே பூஜைக்கு வைக்கவேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ளது.

    இதுபோல் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டுள்ளன.

    வழிபாட்டு ஸ்தலங்கள் வழியாக சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது அமைதியாக செல்ல வேண்டும். சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது அதற்கென்று ஒதுக்கப்பட்ட பாதையின் வழியாக மட்டுமே செல்ல வேண்டும். கூம்பு வடிவ ஒளிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது.மக்காத பொருட்களால் செய்த விநாயகர் சிலைகளை கடலில் நீர் நிலைகளிலும் வீசக்கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் இடங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் அந்தந்த பேரூராட்சி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வாங்கி செல்கிறார்கள்.

    • சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.
    • கிழங்கு மாவு தயாரிக்கும் தொழிற்சாலைகள் பல மூடப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    தமிழகத்தில் வருகிற 31ந் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, இந்து அமைப்புகள் சாா்பில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக பல்வேறு இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. இந்த நிலையில், கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எளிமையாக கொண்டாடப்பட்ட நிலையில், நிகழாண்டு வெகுவிமரிசையாக கொண்டாட இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. அதே வேளையில், போதிய அளவில் சிலைகள் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து பல்லடம் கணபதிபாளையம் ஊராட்சி மாதேஸ்வரன் நகரைச் சோ்ந்த சிலை விற்பனையாளரும், இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவருமான கே.பாலாஜி கூறியதாவது:- கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிலை விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் தயாராகும் சிலைகளைப் பெற்று இங்கு வா்ணங்கள் பூசி விற்பனை செய்கிறோம். சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், கிழங்கு மாவு, பேப்பா் தூள், வாட்டா் கலா் பயன்படுத்தி சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், அண்மைக் காலமாக கிழங்கு மாவு தயாரிக்கும் தொழிற்சாலைகள் பல மூடப்பட்டுள்ளன. வழக்கமாக நவம்பா் மாதம் சிலை தயாரிப்பு பணி துவங்கி ஆகஸ்ட் மாதத்தில் பணி நிறைவடையும். மாவு தட்டுப்பாடு ஏற்பட்டதால் இம்முறை ஜனவரி மாதத்துக்குப் பின்பே சிலை தயாரிப்புப்பணி துவங்கியது. நீதிமன்ற உத்தரவுப்படி 5 அடிக்கு உள்பட்ட சிலைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    கொரோனா பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக விநாயகா் சதுா்த்தி விழா எதிா்பாா்த்த அளவு கொண்டாடப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னா் தற்போது சிறப்பாக கொண்டாட இந்து அமைப்புகள் தயாராகி வருகின்றன. சிலை தயாரிப்பு குறைந்துள்ளதால் எதிா்பாா்க்கும் அளவு சிலைகள் கிடைப்பது சந்தேகமே. வழக்கமாக 400க்கும் அதிகமான சிலைகள் விற்பனைக்கு வரும். இந்த முறை விநாயகா் சதுா்த்திக்கு குறைவான நாட்களே இருப்பதால் 150 சிலைகள் மட்டுமே வந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பொதுமுடக்கத்தால் சிலைகள் விற்பனையின்றி கிடங்குகளில் தேக்கமடைந்திருந்தன. தற்போது அந்த சிலைகள் அனைத்தும் விற்பனையாகி விட்டன.

    இதில் 3 அடி சிலை ரூ.2,500க்கும், 5 அடி சிலை ரூ.5,0000க்கும், 8 அடி சிலை ரூ.10,000க்கும் விற்பனை செய்து வருகிறோம். விலைவாசி மற்றும் சிலை உற்பத்தி செலவு அதிகரித்த போதிலும் கொரோனா தாக்கத்தில் இருந்து இப்போதுதான் மீண்டு வந்திருப்பதால் சிலைகளின் விலையை உயா்த்தாமல் பொதுநலன் கருதி குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறோம்.

    புதிய சிலைகள் ஆா்டா் கொடுக்கவும், பெரிய சிலைகள் கேட்டும் பலா் வருகின்றனா். நாட்கள் இல்லாததால் புதிய ஆா்டா் எடுக்கவில்லை. பெரிய சிலைகள் இல்லாததால் சின்ன சிலைகளுக்கு முன்தொகை கொடுத்துச் செல்கின்றனா். விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் சிலை தயாரிப்பை மட்டும் நம்பி 20 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன.கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சிலை தயாரிப்புத் தொழில் பாதிப்படைந்தது. சிலை தயாரிப்பாளா்கள் வங்கியில் வாங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாததால் இந்த ஆண்டு சிலை தயாரிப்புக்கு வங்கிகள் கடன் உதவி வழங்கவில்லை. இதனாலும் சிலை தயாரிப்புப் பணி தாமதமாகியுள்ளது. சிலை தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த பலா் விவசாயம் உள்ளிட்ட பிற தொழில்களுக்கு கூலி வேலைக்கு சென்றுவிட்டனா்.

    விநாயகா் சிலை தயாரிப்புக்குத் தேவையான குச்சி கிழங்கு மாவு தட்டுப்பாடின்றி கிடைக்கவும், சிலை தயாரிப்பை நம்பி உள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளா் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

    • தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
    • திருப்பூா் மாநகரில் செப்டம்பா் 3ந் தேதி விநாயகா் விசா்ஜனம் நடைபெறும்.

    திருப்பூர் :

    இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தியை ஒட்டி தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறியதாவது: தமிழகத்தில் விநாயா் சதுா்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சாா்பில் நிகழாண்டு 1.25 லட்சம் சிலைகள் பொதுமக்களின் வழிபாட்டுக்காக பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. இதில் திருப்பூா் மாநகரில் 1,200 மற்றும் மாவட்டத்தில் 3,800 என மொத்தம் 5 ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.

    திருப்பூா் மாநகரில் வரும் செப்டம்பா் 3ந் தேதி நடைபெறும் விநாயகா் விசா்ஜன பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.மாநிலத் தலைவா் அண்ணாமலை பிரிவினைவாதத்தை முறியடிப்போம், தேசிய சிந்தனையை வளா்ப்போம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளாா்.

    காங்கயம் பகுதியில் காங்கயம் நகர், நத்தக்காடையூர், படியூர், காங்கயம்பாளையம், காடையூர் உள்ளிட்ட 60 இடங்களில் வருகிற 31-ந் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் (செப்டம்பர்) 1-ந்தேதி அனைத்து சிலைகளும் உடையார் காலனிக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஊர்வலம் தொடங்குகிறது. முக்கிய வீதிகள் வழியாக செல்லும் ஊர்வலம் காசி விஸ்வநாதர் கோவிலில் நிறைவடைகிறது. பின்னர் அனைத்து சிலைகளும் நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூர் வடக்கு ஒன்றிய இந்து முன்னணி சார்பில், வடக்கு பகுதி விசர்ஜன ஊர்வலம் துவக்கும் விழா குறித்த ஆலோசனை கூட்டம் மாநில பொது செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் பெரியார் காலனியில் நடந்தது. மாநில செயலாளர்கள் செந்தில்குமார், சேவுகன், கோட்ட செயலாளர் மோகனசுந்தரம் உட்பட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இதில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் விநாயகர் சதுர்த்தி விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வரும் 25ந் தேதி, ஒவ்வொரு விநாயகர் கமிட்டிக்கும், 5 பேர் வீதம், புதிய பஸ் நிலையம், கோட்டை ஈஸ்வரன் கோவிலில் மாலை போட்டு, காப்பு கட்டி விரதம் துவக்கம், செப்டம்பர் 3-ந் தேதி விசர்ஜன ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள், பிரம்மாண்டமான ரதங்கள் பங்கேற்பதால், பாதுகாப்பு குழு அமைப்பது ஆகியன குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • அழகிய கலைநயத்துடன் தத்ரூபமாக உருவாக்குகின்றனர்.

    பெரம்பலூர்:

    ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகரின் பிறந்த தினமாக கருதப்படும் அன்றைய நாளில் களிமண் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு கடல், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு வருகிற 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படவில்லை. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இதனால் தற்போது பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கு 1 அடி முதல் 9 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளை அழகிய கலைநயத்துடன் தத்ரூபமாக உருவாக்குகின்றனர். பரமசிவன்-பார்வதி, முருகன், ஆஞ்சநேயர், கிருஷ்ணர் ஆகியோருடன் விநாயகர் இருப்பது, பல்வேறு வாகனங்களில் கம்பீரமாக வீற்றிருப்பது, சிங்கத்தின் மீது அமர்ந்து இருப்பது என்று விதவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் அனைத்தும் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்துகின்றன.

    • 10-க்கும் மேற்பட்டவர்கள் இரவு பகலாக சிலைகளை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது.

    பல்லடம் :

    விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக இந்து முன்னணி சார்பில் கோவை, திருப்பூர், ஊட்டி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதிஷ்டை செய்வதற்காக பல்லடம் அருகே அலகுமலை பகுதியில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த பணியில் 10-க்கும் மேற்பட்டவர்கள் இரவு பகலாக சிலைகளை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிற்பக் கலைஞர்கள் அங்கேயே தங்கி பணிகளை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் மற்றும் மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் ஆகியோர் கூறியதாவது:-

    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. பொது மக்களும் ஆர்வமுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது. 3 அடி முதல் 11 அடி வரை சிலைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் கருட வாகனத்தில் அமர்ந்த விநாயகர், ரத விநாயகர், சித்தி புத்தி விநாயகர், பிள்ளையார்பட்டி விநாயகர், சிவன் பார்வதி விநாயகர் என பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பொருட்களைக் கொண்டு இயற்கையான வண்ணங்கள் தீட்டப்பட்டு சிலைகள் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு சிலைகள் அனுப்பப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×