search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து காயம்"

    • அதிவேகமாக வந்த கால் டாக்சி முதியவர் மீது வேகமாக மோதியது.
    • காரின் பதிவு எண்ணை கொண்டு தலைமறைவான கால் டாக்சி டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை வடபழனி, துரைசாமி சாலை - சன்னதி தெரு சந்திப்பில் இன்று காலை முதியவர் ஒருவர் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதை கண்டு அவ்வழியே சென்ற பொதுமக்கள் வடபழனி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். முதியவர் நேற்று இரவு 10மணி அளவில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியே அதிவேகமாக வந்த கால் டாக்சி முதியவர் மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட முதியவர் படுகாயமடைந்தார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய கால் டாக்சி டிரைவர் தனது காரிலேயே முதியவரை ஏற்றி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். இந்த காட்சிகள் கேமராவில் பதிவாகி இருந்தது. ஆனால் விபத்தில் சிக்கிய முதியவருக்கு சிகிச்சை அளிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு கால் டாக்சி டிரைவர் தப்பி சென்று உள்ளார். இதனால் முதியவர் பரிதாபமாக இறந்து போனது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து காரின் பதிவு எண்ணை கொண்டு தலைமறைவான கால் டாக்சி டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் உயிரிழந்த முதியவர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    • விபத்து நடந்த வானகரம் சாலைக்கு பூசணிக்காய் மற்றும் எலுமிச்சம் பழம் மூலம் திருஷ்டி சுற்றி சாலையில் போட்டு உடைத்தனர்.
    • திருஷ்டி சுற்றுவதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவரே செய்ததாக தெரிகிறது.

    சென்னை:

    மதுரவாயல், வானகரம் மற்றும் பூந்தமல்லி நெடுஞ் சாலைகளில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அதிக அளவில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த நிலையில் வானகரத்தில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரே நாளில் விபத்தில் சிக்கி 2 பேர் பலியானார்கள். எனவே இந்த பகுதியில் விபத்துக்களை தடுக்க போக்குவரத்து போலீசார் புதிய முயற்சியை மேற் கொண்டனர். அதன்படி போக்குவரத்து போலீசார் தங்களது வாகனத்தில் திருநங்கை ஒருவரை ஏற்றிக் கொண்டு வானகரத்தில் விபத்தில் சிக்கி 2 பேர் பலியான பகுதிக்கு வந்தனர். விபத்து நடந்த வானகரம் சாலைக்கு பூசணிக்காய் மற்றும் எலுமிச்சம் பழம் மூலம் திருஷ்டி சுற்றி சாலையில் போட்டு உடைத்தனர். திருஷ்டி சுற்றுவதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவரே செய்ததாக தெரிகிறது.

    ஆனால் அவர்கள் சாலையில் உடைத்த பூசணிக்காயை அப்படியே போட்டுவிட்டு சென்று விட்டனர். விபத்து நடக்கக்கூடாது என்பதற்காக சாலைக்கு திருஷ்டி சுற்றியவர்கள், சாலையில் கிடக்கும் பூசணிக்காயால் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க நேரிடுமே என்பதை பற்றி கூட கவலைப்படாமல் உடைத்து போட்ட பூசணிக்காயை அகற்றாமல் அங்கிருந்து சென்று விட்டனர்.

    • கார் ஒன்று தறி கெட்டு ஓடி முன்னால் சென்ற மற்றொரு கார் மீது மோதியது.
    • குடிபோதையில் துணை நடிகர் ஓட்டிய கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போரூர்:

    சென்னை மதுரவாயல், தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது29) என்ஜினீயர். இவர் சினிமா துறையிலும் முயற்சி செய்து வந்தார்.

    நேற்று இரவு அவர் 11.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று தறி கெட்டு ஓடி முன்னால் சென்ற மற்றொரு கார் மீது மோதியது. பின்னர் முன்னால் சென்ற சரண்ராஜின் மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக மோதியது.

    இதில் நிலை தடுமாறிய சரண்ராஜ் சாலையோரம் இருந்த மின்விளக்கு கம்பத்தின் மோதி தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் அடைந்த சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்ததும் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலியான சரண்ராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தது சாலிகிராமம் பகுதியை சேர்ந்த துணை நடிகரான பழனியப்பன் (41) என்பது தெரிந்தது. அவர் மதுபோதையில் காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து துணை நடிகர் பழனியப்பனை போலீசார் கைது செய்தனர்.

    கைதான பழனியப்பன், ரஜினி முருகன், சந்திரமுகி- 2 படத்தில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குடிபோதையில் துணை நடிகர் ஓட்டிய கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வாகனத்தை ஓட்டி வந்த கலையரசன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
    • கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    திருவாரூர்:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரை சேர்ந்த நோபோ மஜி (வயது 30), சௌடோ மஜி (27). இவர்கள் தஞ்சாவூரில் தங்கியிருந்து அதே பகுதியில் மாதா கோயிலில் உள்ள மொத்த விற்பனை கோழிக்கடையில் ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். நோபோ மஜிக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகளும் சௌடோமஜிக்கு திருமணமாகி 1 குழந்தையும் உள்ளனர்.

    இந்த நிலையில் தஞ்சாவூரில் இருந்து சரக்கு லாரியில் கோழிகளை ஏற்றிக்கொண்டு காரைக்காலுக்கு சென்று கொண்டிருந்தனர். லாரியை கலையரசன் என்பவர் ஓட்டினார். மேற்பார்வையாளராக மணிகண்டன் இருந்தார். இவர் லாரியின் உள்ளே அமர்ந்து இருந்தார். நோபோ மஜி, சௌடோ மஜி ஆகியோர் லாரியின் மேல் பகுதியில் அமர்ந்திருந்தனர்.

    இந்நிலையில் லாரி இன்று அதிகாலை திருவாரூர் அருகே மேப்பலம் என்கிற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி ஒட்டக்குடி வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் லாரியின் மேலே அமர்ந்து வந்த நோபோ மஜி மற்றும் சௌடோமஜி ஆகிய 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் வாகனத்தை ஓட்டி வந்த கலையரசன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கொரடாச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • வாலாஜாபாத் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.
    • வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வாலாஜாபாத்:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா அய்யன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் லோகநாயகி (வயது 52). இவர் வாலாஜாபாத்தில் உள்ள மூகாம்பிகை அம்மன் கோவிலில் துப்புரவு பணியாளராக பணி செய்து வந்தார். நாள்தோறும் அய்யன்பேட்டையில் இருந்து வாலாஜாபாத்திற்கு பஸ்சில் பணிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் லோகநாயகி வழக்கம் போல பணிக்கு சென்று விட்டு பஸ்சில் திரும்பி வந்து அய்யன்பேட்டையில் இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் லோகநாயகியின் மீது இடித்து விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் சாலையில் விழுந்த லோகநாயகி படுகாயம் அடைந்தார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் மஞ்சள் பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்தானது.

    அந்தியூர்:

    கரூரில் இருந்து ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூருக்கு மரப்பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. லாரியை ஆசனூரை சேர்ந்த ஜெகதீஷ்வரன் (35) என்பவர் ஓட்டி வந்தார்.

    லாரி ஆசனூர் மலைப்பாதையில் வந்து கொண்டு இருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது. இதில் லாரி டிரைவர் ஜெகதீஷ்வரன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து ஆம்புலன்சு மூலம் அவரை மீட்டு தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் இருந்து ஒரு லாரி பர்கூர் மலைப்பாதை வழியாக மைசூர் நோக்கி சென்றது. லாரி தட்டகரை வேலம்பட்டி பிரிவு என்ற பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் மஞ்சள் பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்தானது. எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைத்து விபத்துக்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    அம்பத்தூர்:

    வானகரம் அடுத்த நூம்பல் பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம்(வயது34). இவர் பாடியில் உள்ள தனியார் கம்பெனியில் மானேஜராக பணியாற்றி வந்தார். இன்று காலை 6.50 மணியளவில் ராமானுஜம் வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டார்.

    பாடி மேம்பாலம் அருகே வந்த போது பின்னால் அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தண்ணீர் லாரியின் சக்கரத்தில் சிக்கிய ராமானுஜம் சம்பவ இடத்திலலேயே பரிதாபமாக இறந்தார். அப்போது அவர் தலையில் ஹெல்மெட் அணிந்து இருந்தார். ஆனாலும் ஹெல்மெட் அவரது உயிரை காப்பாற்ற வில்லை. லாரியின் சக்கரத்தில் சிக்கிய வேகத்தில் ஹெல்மெட்டும் நசுங்கி உடைந்து போனது. ராமனுஜம் ஹெல்மெட் அணிந்த நிலையிலேயே இறந்து போனார். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து ராமானுஜத்தின் உடலை கைப்பற்றி பிரேதபரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • விபத்தில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • அரசு பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மதுராந்தகம்:

    தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 23). சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் அச்சரப்பாக்கம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அவ்வழியே சென்னையில் இருந்து சேலம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது.

    அந்த நேரத்தில் சங்கர், அரசு பஸ்சென்ற பாதையில் எதிர் திசையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் திடீரென அரசு பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மேலும் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் நசுங்கியதில் தீப்பிடித்தது. இதில் பஸ்சின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டு பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து கீழே இறங்கினர். அவ்வழியே சென்றவர்கள் பஸ்சின் முன்பகுதியில் ஏற்பட்ட தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

    அச்சரப்பாக்கம் போலீசார் பலியான சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அரசு பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விபத்தில் படுகாயமடைந்த பால முருகனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலூர்:

    மதுரை பழங்காநத்தம் நேரு நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது28). இவரும் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த மீனாட்சி(27) என்பவரும் 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    பாலமுருகன் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி மீனாட்சி தனது வீட்டின் அருகே உள்ள ஜெராக்ஸ் கடையில் வேலை செய்தார். மேலூர் அருகே உள்ள கீழவளவில் மீனாட்சியின் நண்பர் வீட்டு கிரகப் பிரவேசம் இன்று நடைபெறுகிறது.

    அதில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு பாலமுருகனும், அவரது மனைவியும் மோட்டார் சைக்கிளில் மதுரையில் இருந்து கீழவளவு நோக்கி சென்றனர். மேலூர் அருகே தெற்கு தெரு என்ற இடத்தில் நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் மீது மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். அப்போது அவர்கள் மீது மோதிய வாகனத்தின் சக்கரம் மீனாட்சியின் தலைமீது ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். பாலமுருகன் படுகாயமடைந்தார்.

    அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மேலூர் சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீனாட்சியின் உடலை கைப்பற்றி பிேரத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் படுகாயமடைந்த பால முருகனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • சாலையில் கவிழ்ந்த பஸ்சை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
    • தச்சநல்லூர் கரையிருப்பு வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.

    நெல்லை:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கன்னியாகுமரிக்கு நேற்றிரவு அரசு விரைவு போக்குவரத்துக்கழக சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. அந்த பஸ் நெல்லை தச்சநல்லூர் பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அந்த பஸ்சின் பின்புறம் மற்றொரு அரசு சொகுசு பஸ் நெய்வேலியில் இருந்து குமரிக்கு வந்து கொண்டிருந்தது. தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது நெய்வேலியில் இருந்து வந்த பஸ் முன்னால் சென்ற விரைவு பஸ்சை முந்திச்செல்ல முயன்றுள்ளது.

    அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த ஊட்டி பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் ஊட்டி பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்தது. பின்னர் சாலையோரம் இருந்த தனியார் பள்ளி காம்பவுண்டு சுவர் மீது மோதி நின்றது. இதில் பின்னால் வந்த நெய்வேலி பஸ்சின் முன்பக்கமும் சேதம் அடைந்தது.

    இந்த சம்பவத்தில் 5-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து தச்சநல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.போலீசார் மற்றும் அப்பகுதியில் இருந்து வந்த மக்கள் விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்ளை மீட்டனர். அந்த பஸ்சில் பயணித்த 33 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் கவிழ்ந்த பஸ்சை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனையொட்டி தச்சநல்லூர் கரையிருப்பு வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.

    • சென்னை துறைமுகத்தில் லாரியை நிறுத்திவிட்டு அருகில் நின்று கொண்டு இருந்தார்.
    • செந்தில்குமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    ராயபுரம்:

    திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50). கண்டெய்னர் லாரி டிரைவர். இவர் நேற்று இரவு சென்னை துறைமுகத்தில் லாரியை நிறுத்திவிட்டு அருகில் நின்று கொண்டு இருந்தார். அதே பகுதியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்தார். அப்போது செந்தில்குமார் மீது வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோதியது. இதில் செந்தில்குமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    இது குறித்து துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக அங்குள்ள பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்து உள்ளார்.
    • விபத்து ஏற்படுத்திய அதே பஸ்சில் பச்சையம்மாளை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.

    ராயபுரம்:

    சென்னை, பொன்னியம்மன்மேடு பூங்காவனத் தோட்டத்தைச் சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 60) இவர் நேற்று காலை ரத்த கொதிப்பு மாத்திரை வாங்குவதற்காக பொன்னியம்மன்மேடு பகுதியில் இருந்து பஸ் மூலம் மின்ட் பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் மின்ட் பகுதியில் இருந்து ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக அங்குள்ள பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்து உள்ளார்.

    அப்போது அங்கு வந்த மாநகர பஸ் (எண்:57) திடீரென பச்சையம்மாள் மீது மோதியது. ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் விபத்து ஏற்படுத்திய அதே பஸ்சில் பச்சையம்மாளை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    ×