search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஸ்பெண்டு"

    • திடீரென கதவு திறக்கவும் மறுபுறத்தில் 5-வது பிளாட்பார்மில் பவுலேஷ் தவறி விழுந்தார்.
    • விபத்து நடந்த வந்தே பாரத் ரெயிலின் சி3 பெட்டியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தார்.

    சேலம்:

    சென்னை-கோவை இடையே சேலம் வழியாக வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 26-ந் தேதி வந்தே பாரத் ரெயிலில் சென்னை கீழக்கட்டளை திருவள்ளுவர் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஆய்வாளர் பவுலேஷ் (வயது 70). அவரது மனைவி ரோஸ் மார்க் கரெக்ட் ஆகியோர் சி3 பெட்டியில் ஈரோட்டிற்கு பயணித்தனர்.

    மாலை 6 மணிக்கு சேலத்திற்கு வந்த வந்தே பாரத் ரெயில் 4-வது பிளாட்பார்மில் வந்து நின்றது. அப்போது தனது இருக்கையில் இருந்து எழுந்த பவுலேஷ் ரெயிலின் அவசர கதவு அருகே வந்து நின்றிருந்தார். அப்போது திடீரென கதவு திறக்கவும் மறுபுறத்தில் 5-வது பிளாட்பார்மில் பவுலேஷ் தவறி விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு ரெயில்வே போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    இந்த விபத்தில் அவசர கதவின் பட்டனை யாரும் அழுத்தி திறக்காத நிலையில் அது எப்படி தானாக திறந்து பவுலேஷ் கீழே விழுந்தார் என ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா நேரடியாக சேலம் ரெயில்வே நிலையத்துக்கும் சென்று விசாரித்தார். பின்னர் கோவை புறப்பட்டு சென்ற அவர் விபத்து நடந்த வந்தே பாரத் ரெயிலின் சி3 பெட்டியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தார்.

    அதில் சேலம் ரெயில்வே நிலைய பகுதியில் இருந்து 2 ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள பாதைகளில் இறங்கி வந்து வந்தே பாரத் ரெயிலின் அவசரக் கதவு பட்டனை அழுத்தி திறந்து ரெயிலில் ஏறி மறுமுனையில் 4-வது பிளாட்பார்மில் இறங்கி சென்றது தெரியவந்தது.

    இந்த இருவரும் சென்ற சிறிது நேரத்தில் அவசர கதவு பகுதிக்கு பவுலேஷ் சென்று கதவின் மீது கை வைக்கவும் அது திறந்து கீழே விழுந்து உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவசர கதவை திறந்து வைத்த ரெயில்வே ஊழியர்கள் குறித்து கோட்ட மேலாளர் விசாரணை நடத்தினார்.

    அப்போது அவர்கள் சேலம் ரெயில்வே நிலைய பாயிண்ட் மேன்களாக பணியாற்றி வரும் தாமரைச்செல்வன், மீனா ஆகியோர் என தெரியவந்தது. அவர்கள் இருவரையும் சஸ்பெண்டு செய்து கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா உத்தரவிட்டார். தொடர்ந்து துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

    • பேராசிரியர் மற்றும் மாணவர்கள் பேசிய ஆடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
    • விசாரணை அறிக்கையை உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் கல்லூரி கல்வியியல் துறை இயக்குனருக்கு அனுப்பி வைத்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் 2023-24-ம் ஆண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் மாதம் முடிந்தது.

    இதில் முதல்கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் தங்கள் விண்ணப்பித்த பாடப்பிரிவு கிடைக்காதபோது, முதலில் கிடைத்த பாடப்பிரிவில் சேர்ந்துள்ளனர்.

    இதன் பின்னர் அடுத்தடுத்த கலந்தாய்வுகளின்போது அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் காலியிடம் இருந்ததால் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டு அந்த பாடப்பிரிவிற்கு மாறி உள்ளனர்.

    இவ்வாறு ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு மாறுவதற்காக தாவரவியல் துறை பேராசிரியர் ரவி, மாணவர்களிடம் கூகுள்பே மூலமும், ரொக்கமாகவும் பணம் வாங்கியதாக கடந்த 14-ந்தேதி குற்றச்சாட்டு எழுந்தது.

    இதைத் தொடர்ந்து கூகுள் பே மூலம் பணம் அனுப்பிய செல்போன் ஸ்க்ரீன் ஷாட்டுகள் மூலம் முதலமைச்சரின் தனிப்பிரிவு, கல்லூரி கல்வி இயக்குனரகம், தமிழக டி.ஜி.பி ஆகியோருக்கு ஆன்லைன் மூலம் மாணவ-மாணவிகள் புகார் பதிவு செய்து உள்ளனர்.

    மேலும் பேராசிரியர் மற்றும் மாணவர்கள் பேசிய ஆடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    இதையடுத்து கோவை மண்டல கல்லூரி கல்வியியல் இணை இயக்குனர் கலைச்செல்வி கடந்த வாரம் ஊட்டி அரசு கலைக் கல்லூரிக்கு நேரில் வந்து 30 மாணவ-மாணவிகள், 4 பேராசிரியர்கள், மற்றும் கல்லூரி முதல்வரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

    இதன்பின்னர் விசாரணை அறிக்கையை உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் கல்லூரி கல்வியியல் துறை இயக்குனருக்கு அனுப்பி வைத்தார்.

    இதற்கிடையே ஊட்டி அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதியில் இடம் கிடைக்க கல்லூரி முதல்வர் பணம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனியிடம் ஒரு மாணவர் பிரவுன் கவரை வழங்குகிறார். அந்த கவரில் ரூ.10 ஆயிரம் பணம் இருந்ததாக சொல்லப்படுகிறது. மாணவரை பார்த்து சீக்கிரம் கொடுத்து விடுங்கள். அப்போது தான் இடம் கிடைக்கும் என கல்லூரி முதல்வர் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர் அருள் அந்தோணி மற்றும் தாவரவியல் துறை பேராசிரியர் ரவி ஆகிய 2 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

    இதற்கான நடவடிக்கையை உயர்கல்வித்துறை எடுத்துள்ளது.

    • மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்வு தொடங்கும் முன் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் உள்பட அரசியில் கட்சியினர் போட்டி போட்டு மேடை மீது ஏறினர்.
    • பா.ம.க. ஒன்றிய செயலாளர் அறிவழகன் லேசான காயத்துடன் தப்பினார்.

    சேலம்:

    சேலம் சித்தர்கோவில் அருகே உள்ள முருங்கப்பட்டியில் மக்கள் சந்திப்பு முகாம் நேற்று முன்தினம் நடந்தது.

    இந்த முகாமில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற நல உதவிகள் வழங்க 2 அடி உயரத்தில் மேடை அமைக்கப்பட்டது. கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்த விழாவில் எம்.பி. பார்த்திபன், வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராஜமுத்து, டி.ஆர்.ஓ. மேனகா மற்றும் அதிகாரிகள் மேடையில் இருந்தனர்.

    மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்வு தொடங்கும் முன் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் உள்பட அரசியில் கட்சியினர் போட்டி போட்டு மேடை மீது ஏறினர். இதில் பாரம் தாங்காமல் மேடை சரிந்தது. நிலைகுலைந்த கலெக்டர் கார்மேகம் மேடையில் அப்படியே அமர்ந்து விட்டார்.

    பா.ம.க. ஒன்றிய செயலாளர் அறிவழகன் லேசான காயத்துடன் தப்பினார். மேடை 2 அடி உயரம் என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆனாலும் அந்த மேடையிலையே விழா நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் மேடை சரிவு எதிரொலியாக முருங்கப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கண்ணனை சஸ்பெண்டு செய்து சேலம் ஆர்.டி.ஓ. அம்பாயிரநாதன் உத்தரவிட்டார்.

    இதுகுறித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க சேலம் மாவட்ட நிர்வாகிகள் கூறுகையில், கலெக்டர் உத்தரவு படி கண்ணனை சஸ்பெண்டு செய்தது ஏற்புடையது அல்ல, வருகிற 30-ந் தேதிக்குள் சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்யாவிட்டால் கலெக்டரை சந்தித்து முறையிடுவோம், அதன்பிறகும் இசைவு தெரிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    • பிறந்து 75 நாட்கள் ஆன தனது மகள் ஸ்ரீனிகாவுக்கு தடுப்பூசி போடுவதற்கு கொண்டு வந்தார்.
    • காலி சிரிஞ்சை குழந்தை உடலில் ஏற்றிய சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பெரிநாடு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இளநிலை பொது சுகாதார செவிலியர்களாக ஷீபா, லுர்த் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.

    சம்பவத்தன்று இவர்கள் இருவரும் வழக்கம்போல் பணியில் இருந்தனர். அப்போது அந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு விஷ்ணு பிரசாத் என்பவரின் மனைவி ஸ்ரீலட்சுமி, பிறந்து 75 நாட்கள் ஆன தனது மகள் ஸ்ரீனிகாவுக்கு தடுப்பூசி போடுவதற்கு கொண்டு வந்தார்.

    தாய்-மகள் இருவரையும் தடுப்பூசி போடும் அறைக்கு செவிலியர்கள் அழைத்துச்சென்றனர். பின்பு செவிலியர் ஷீபா குழந்தைக்கு ஊசி போட்டிருக்கிறார். அப்போது குழந்தைக்கு போடப்பட்ட ஊசி சிரிஞ்சில் மருந்து இல்லாததை குழந்தையின் தாய் பார்த்து, அதுபற்றி ஷீபாவிடம் கேட்டிருக்கிறார்.

    ஆனால் அதற்குள் குழந்தைக்கு நர்சு ஊசி போட்டுவிட்டார். இதனால் குழந்தையின் உடலில் காற்று செலுத்தப்பட்டது. இதையடுத்து நர்சு ஷீபா, மருந்து நிரப்ப மறந்துவிட்டேன் என்று கூறிவிட்டு அந்த அறையில் இருந்துவெளியே சென்றுவிட்டார். காலி சிரிஞ்சை உடலில் செலுத்தியதால் ஸ்ரீலட்சுமியின் குழந்தை அழுதபடி இருந்தது.

    இந்த விவகாரம் ஆஸ்பத்திரி முழுவதும் பரவியது. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்கு செவிலியர் மீண்டும் வருவார் என்று ஸ்ரீலட்சுமியிடம் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் அவரோ குழந்தைக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்துவிட்டார். மேலும் தனது குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றார். சிரிஞ்சில் மருந்து இல்லாமல், காலி சிரிஞ்சை குழந்தை உடலில் ஏற்றிய சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அதன்பேரில் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் பணியில் இருந்த நர்சுகளான ஷீபா, லுர்த் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு நடந்ததும், அப்போது நர்சு ஷீபா கவனக்குறைவாக குழந்தைக்கு சிரிஞ்சில் மருந்து எடுக்காமல் உடலில் செலுத்தியதும் உறுதி செய்யப்பட்டது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. அதன்பேரில் நர்சுகள் ஷீபா, லுர்த் ஆகிய இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். ஆரம்ப சுகாதார நிலைய நர்சுகள் பணியின் போது சண்டையிட்டது மட்டுமின்றி, கவனக்குறைவாக பணிபுரிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குழந்தையின் உடலுக்குள் மிகக்குறைந்த அளவே காற்று நுழைந்திருப்பதாகவும், அதனால் குழந்தைக்கு உடல்நல பிரச்சினை எதுவும் ஏற்படாது எனவும் குழந்தையின் பெற்றோரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

    • போதை பொருள் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தப்பவிட்டதாக புகார் எழுந்தது.
    • கலால் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியது உறுதியானது.

    திருவனந்தபுரம்:

    கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு போதை பொருட்களை சிலர் கடத்தி வந்தனர். அவர்களை வயநாடு முத்தங்கா சோதனை சாவடியில் பணியில் இருந்த கலால் ஊழியர்கள் பிரபாகரன், அஜிஸ், பாலகிருஷ்ணன், சுதீஷ் ஆகியோர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கொண்டு போதை பொருள் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தப்பவிட்டதாக புகார் எழுந்தது.

    அதன்பேரில் கலால் துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரி விசாரணை நடத்தினார். அதில், கலால் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியது உறுதியானது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் சஸ்பெண்டு செய்து கலால் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

    • பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ஜெகநாதனிடம் கிராம நிர்வாக அலுவலர் தீபா ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
    • துறை ரீதியான நடவடிக்கை எடுத்த திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி தீபாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி தீபா (43) கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கொந்தளம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஜெகநாதன் (45) என்பவர் பட்டாவில் உள்ள பூர்வீக சொத்தில் இருந்து பெயர் நீக்கம் செய்ய ஊராட்சி நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ஜெகநாதனிடம் கிராம நிர்வாக அலுவலர் தீபா ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

    இதுகுறித்து ஜெகநாதன் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் தீபாவை நேற்று முன்தினம் கைது செய்து சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்த திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி தீபாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    • போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • காளிமுத்து என்பவர் குட்கா வியாபாரிகளிடம் தொடர்பு வைத்துள்ளதாக புகார் எழுந்தது.

    திருச்சி:

    திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக காமினி பொறுப்பேற்றது முதல் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சமூக விரோத செயல்களை தடுக்கவும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் காளிமுத்து என்பவர் குட்கா வியாபாரிகளிடம் தொடர்பு வைத்துள்ளதாக புகார் எழுந்தது.

    அதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி போலீஸ்காரர் காளி முத்துவை அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • லிபிய யூதர்களின் பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.
    • நீதி மந்திரி தலைமையிலான ஆணையத்தின் நிர்வாக விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

    லிபியா நாட்டின் வெளியுறவுத் துறையின் பெண் மந்திரியாக இருப்பவர் நஜ்லா அல்-மங்குஷ். இவர் சமீபத்தில் இத்தாலியின் ரோம் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, இஸ்ரேலின் வெளியுறவுத் துறை மந்திரி கோஹனை சந்தித்து பேசினார். இது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பாகும். இதில் லிபிய யூதர்களின் பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.

    இதற்கு லிபியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் பெண் மந்திரி நஜ்லாவை சஸ்பெண்டு செய்து பிரதமர் அப்துல் ஹமித உத்தரவிட்டுள்ளார். நீதி மந்திரி தலைமையிலான ஆணையத்தின் நிர்வாக விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான லிபிய வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, ரோமில் நடந்தது ஒரு அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பாகும். பாலஸ்தீன விவகாரம் தொடர்பாக லிபியாவின் நிலைப்பாட்டை மந்திரி மீண்டும் வலியுறுத்தினார். இந்த சந்திப்பை ஒரு பேச்சுவார்த்தைக்காக முன்வைக்க இஸ்ரேல் முயற்சிக்கிறது என்று கூறியுள்ளது.

    • கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியிலும் இந்த தேர்வானது நடந்தது.
    • சப்-இன்ஸ்பெக்டர் தேர்வினை 3 முறை எழுதியும் ஒரு சில மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து விட்டேன்.

    கோவை:

    தமிழகம் முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வு நடந்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியிலும் இந்த தேர்வானது நடந்தது. அங்குள்ள மையத்தில் ஏராளமானோர் இந்த தேர்வினை எழுதினர்.

    அப்போது ஒரு தேர்வறையில் இருந்த வாலிபர் ஒரு கருப்பு கலரில் வித்தியாசமான முறையில் முக கவசம் அணிந்திருந்தார். முக கவசம் என்பதால் கண்காணிப்பாளர்களும் விட்டு விட்டனர்.

    சிறிது நேரத்தில் அறைக்குள் இருந்து வித்தியாசமான குரல் கேட்டது. இது அங்கு பணியில் இருந்த கண்காணிப்பாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    இதையடுத்து கண்காணிப்பாளர்கள், ஒவ்வொரு தேர்வர்களின் அருகிலும் சென்று சோதனை செய்தனர். அப்போது முக கவசம் அணிந்திருந்த வாலிபர் அருகில் தான் அந்த சத்தம் வந்தது தெரியவந்தது.

    உடனே கண்காணிப்பாளர்கள் அந்த வாலிபரை அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வாலிபர், காதில் சிம்கார்டுன் கூடிய வாய்ஸ் மீட்டரை (ஹெட்போன்) வைத்திருந்தார்.

    அதன்மூலம் வெளியில் இருந்து இவருக்கு ஒருவர் பதில் சொல்ல, அதனை கேட்டு, இவர் தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வாய்ஸ் மீட்டரை பயன்படுத்தி தேர்வு எழுதியது, ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி பச்சூரை சேர்ந்த நவீன் (வயது26) என்பது தெரியவந்தது.

    இவர் கோவை கோவைப்புதூரில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி காவலராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நான் கடந்த 2016-ம் ஆண்டு முதல் தேர்வு எழுதி வருகிறேன்.

    சப்-இன்ஸ்பெக்டர் தேர்வினை 3 முறை எழுதியும் ஒரு சில மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து விட்டேன். இந்த முறை எப்படியாவது தேர்வில் வெற்றி பெற வேண்டும் என நினைத்தேன்.

    அதற்காக வாய்ஸ்மீட்டரை பயன்படுத்தி எழுதலாம் என முடிவு செய்தேன். அதன்படி தேர்வு அன்று, எனது தங்கை தேர்வறைக்கு வெளியில் இருந்து பதில்களை சொல்ல சொல்ல, அதனை வாய்ஸ் மீட்டர் வழியாக கேட்டு நான் தேர்வு எழுதினேன் என தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் பயிற்சி காவலர் நவீன் மற்றும் அவருக்கு உதவிய தங்கை சித்ரலேகா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட பயிற்சி காவலர் நவீனை சஸ்பெண்டு செய்து கோவைப்புதூர் போலீஸ் பயிற்சி மைய போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

    • மோசடிகள் செய்து ரூ.36 லட்சம் அளவுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது
    • தனியார் தொழிற்சாலைக்கு ரூ.17 லட்சத்து 53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மின் பகிர்மான வட்டம் திருப்பூர் டவுன் தெற்கு மின்சார வாரிய பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட தனியார் தொழிற்சாலையில் மின்சார மீட்டரை எரித்து மின்சார கட்டணத்தை குறைத்து மோசடிகள் செய்து ரூ.36 லட்சம் அளவுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது

    தொடர்பாக தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச., மாநில இணை பொதுச்செயலாளர் ஈ.பி.அ.சரவணன் மாவட்ட கலெக்டரிடம் நேரிடையாக புகார் அளித்தார்.

    இந்தப் புகாரின் அடிப்படையில் கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது .இதில் மோசடி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்துமின்சார வாரியம் சார்பில் சம்பந்தப்பட்ட தனியார் தொழிற்சாலைக்கு ரூ.17 லட்சத்து 53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.இந்த மோசடியில் ஈடுபட்ட போர்மேன் பாபு முதல் கட்டமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

    • தமிழகத்தில் சில டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதாக புகார் எழுந்தது.
    • நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வாங்கினால் சஸ்பெண்டு உள்பட நடவடிக்கைகள் பாயும் என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    சேலம்:

    தமிழகத்தில் சில டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதாக புகார் எழுந்தது. இதனால் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் மது வாங்குவோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதையடுத்து மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வாங்கினால் சஸ்பெண்டு உள்பட நடவடிக்கைகள் பாயும் என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் மகுடஞ்சாவடி அருகே உள்ள கனககிரி டாஸ்மாக் கடை விற்பனையாளர் கந்தசாமி (45) என்பவர் மது பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள் அந்த கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது அவர் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கியது உறுதி செய்யப்பட்டதால் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    • மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மசோதாக்களை தாக்கல் செய்யவுள்ளார்.
    • 75 ஆண்டுகால பாராளுமன்ற வரலாற்றில் சஸ்பெண்டு நடவடிக்கை மோசமானது என்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி தொடங்கி யது. தொடர்ந்து நேற்றுடன் 16 நாள் நிறைவு பெற்று இன்று (வெள்ளிக்கிழமை) 17-வது நாளுடன் நிறைவு பெற உள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் சரிவர நடைபெறாமல் முடங்கியது.

    17 அமர்வுகளாக நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு 21 மசோதாக்களை நிறைவேற்றியது. டெல்லி நிர்வாக சீர்திருத்த சட்ட மசோதா, டிஜிட்டல் தனிநபர் தரவு மசோதா, தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்க குழு அமைக்கும் மசோதா, காலாவதியான சட்டங்களை ரத்து செய்யும் மசோதா உள்ளிட்டவை இதில் அடங்கும்.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் மீது 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கான மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளன. மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மசோதாக்களை தாக்கல் செய்யவுள்ளார். ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவுகளின் அடிப்படையில் இன்று 2 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளன.

    இந்த நிலையில் இன்று காலை பாராளுமன்றம் கூடியது. அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்டு செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.

    தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

    பின்னர் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பேசுகையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது எதிர்க் கட்சிகளின் வழக்கமாகிவிட்டது என்றார். இதை தொடர்ந்து பாராளுமன்றம் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    முன்னதாக மனீஷ்திவாரி எம்.பி. பேசுகையில், அரசிய லமைப்பு சட்டத்தின் 105(1) பிரிவின்படி ஒவ்வொரு எம்.பி.க்கும் பாராளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம் உள்ளது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ் பெண்டு செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு விரோத மானது என்றார்.

    சிவசேனா எம்.பி. பிரி யங்கா சதுர்வேதி பேசுகையில், எதிர்க்கட்சியினர் பேசுவதால் பிரதமர் மோடியும் ஒட்டு மொத்த அமைச்சரவையும் எரிச்சலடைகிறார்கள். எங்கள் கூட்டணியின் கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை என்றார்.

    காங்கிரஸ் தலைமைக் கொறடா சுரேஷ் பேசும் போது, எம்.பி.யாக இருந்த வரை சஸ்பெண்டு செய்ததன் மூலமாக பாராளுமன்ற ஜன நாயக அமைப்பை கொன்றுவிட்டார்கள் என்றார். மாணிக்கம்தாகூர் எம்.பி. பேசும்போது, 75 ஆண்டுகால பாராளுமன்ற வரலாற்றில் சஸ்பெண்டு நடவடிக்கை மோசமானது என்றார்.

    பின்னர் 12 மணிக்கு பின்னர் பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டார்கள். இதை தொடர்ந்து மதியம் 12.30 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. மழைக்காலக் கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். மதியம் 12.30 மணிக்கு பின்னர் பாராளுமன்றம் மீண்டும் கூடியது.

    இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், மூத்த வக்கீலின் விளக்கம் மனுதாரருக்கு பதிலாக கிடைத்துவிட்டதால், அதை பதிவு செய்து வழக்கை முடித்து வைக்கிறோம் என்று தீர்ப்பளித்தார்.

    ×