search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச சைக்கிள்"

    • தேவராஜி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, வக்கணம் பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

    இவ்விழாவிற்கு ஜோலார்பேட்டை நகர கழக செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஆஜம், முனியப்பன், சாந்தி, ஐசக் ஆகியோர் வரவேற்றனர். பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்கள் சி.எஸ்.பெரியார் தாசன், ஆர். மகேந்திரன் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    இதனை அடுத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று ஆசிரியர் தினத்தை யொட்டி பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் எம்.எல். ஏ. தேவராஜி பரிசுகள் வழங்கினார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம், ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியாவிக்டர், நகராட்சி ஆணையர் பழனி, நகர மன்ற துணைத்தலைவர் பெ.இந்திரா பெரியார்தா சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அமலுவிஜயன் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 274 மாணவிகள், திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் 607 மாணவர்கள், நேஷனல் மேல்நிலைப்பள்ளியில் 595 மாணவர்கள் என மொத்தம் 1476 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ். அமர்நாத் தலைமை தாங்கினார், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜி.புருஷோத்தமன், பாலசுப்பிரமணியன், நகர் மன்ற உறுப்பினர்கள் நவீன்சங்கர், ஜாவீத்அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மகளிர் மேல்நி லைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயசீலிகிறிஸ்டி வரவேற்றார்.

    குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் சிறப்புரையாற்றினார். அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் 3 பள்ளிகளைச் சேர்ந்த இருபால் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் உதவி தலைமை ஆசிரியர் சரளாதேவி நன்றி கூறினார்.

    • நல்லதம்பி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்துார்:

    திருப்பத்துார் மாவட்டம், கந்திலி யூனியனுக்கு உட்பட்ட கசிநாயக்கன்பட்டி, மட்றப்பள்ளி, விஷமங்கலம், குரும்பேரி, பேராம்பட்டு மற்றும் குனிச்சி பஞ்.ல் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் பயிலும் 835 மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த பள்ளிகளில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர்கள் ஜனார்த்தனன், பழனிசாமி, வி ஸ்ரீ ராமன், தலைமை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்துார் எம்எல்ஏ நல்லதம்பி கலந்துகொண்டு 835 மாணவர்களுக்கு இலவச சைககிள் வழங்கினார்.

    அத்துடன் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பேராம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பெஞ்ச், டெஸ்க் உள்ளிட்ட பள்ளி உபகரணங்களை எம்எல்ஏ வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அன்பழகன், கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி, துணைத் தலைவர் மோகன் குமார், கந்திலி திமுக ஒன்றிய செயலாளர்கள் கே.ஏ.குணசேகரன், வி.முருகேசன் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் குலோத்துங்கன், ராஜா, தசரதன், சீனிவாசன் ஊராட்சி மன்ற தலைவர் அழகிரி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் ஓம் சிவபிரகாஷ், ஜெகநாதன் பொருளாளர் ராஜேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏலகிரி மலையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் வழங்கப்பட்டது
    • ஊராட்சி மன்ற தலைவர் அதிகாரிகள் பங்கேற்பு

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலையில் அத்தனாவூர் பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் இப்பள்ளியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று ஏலகிரி மலையில் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 2021 -2022 ஆண்டிற்கான விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தினை ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன் தலைமை தாங்கி பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கி விழாவை தொடங்கி வைத்தார்.

    இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் அருள் மேரி, தலைமை ஆசிரியர் விக்டோரியா, மேலும் இவ்விழாவில் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முனிரத்தினம் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • போதை பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பிச்சைக்காரன் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய குழு உறுப்பினர் சசிகலா கார்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் ஹேமச்சந்திரன், காங்கிரஸ் சோளிங்கர் ஒன்றிய தலைவர் கார்த்தி பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் புல்லட் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பிச்சாண்டி அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சிக்கு சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அரசின் விலையில்லா 110 சைக்கிள்களை மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார். மாணவ மாணவிகள் நன்றாக படித்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தர வேண்டும்.

    மாணவர்கள் நன்றாக படித்து டாக்டர், கலெக்டர், போலீஸ் அதிகாரியாகவோ பொறுப்பேற்று சமுதாயத்திற்கு சிறப்பாக பணியாற்ற வேண்டும், போதை பொருட்களால் ஏற்படும் தீய விளைவுகளை மாணவர்களுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சமையல் அறை கட்டிடம், பள்ளி வளாகத்திற்கு தரை தளம் அமைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

    அப்போது பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாஞ்சாலை, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் தவமணி, தினகரன் மற்றும் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் உதவி தலைமை ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.

    • சைக்கிள்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டு பொருத்தும் பணி நிறைவடைந்து விட்டது.
    • சைக்கிள்கள் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் வீணாகிக்கொண்டிருக்கின்றன.

    திருப்பூர் :

    ஆண்டுதோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கப்படுகிறது. வழக்கம் போல் காலாண்டு தேர்வுக்கு பின் இலவச சைக்கிள் வழங்காமல் பள்ளிகள் செயல்பட துவங்கியதும், உடனடியாக இப்பணியை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.ஒவ்வொரு வட்டாரத்திலும் குறிப்பிட்ட பள்ளிகளை மையமாக கொண்டு சைக்கிள்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டு பொருத்தும் பணி நிறைவடைந்து விட்டது.

    இருப்பினும் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் மாதக்கணக்கில் வினியோகிக்கப்படாமல் சைக்கிள்கள் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் வீணாகிக்கொண்டிருக்கின்றன. கடந்த 3ஆண்டுகளாகவே கல்வியாண்டு ஜூன் மாதம் துவங்கினாலும், அக்டோபர் மாதத்தில் இருந்து தான் சைக்கிள் வழங்கப்படுகிறது.கிராமப்புறங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு சென்றடைய இன்னும் கூடுதல் நாட்கள் கடந்து விடுகின்றன. சில பள்ளிகளில் அரையாண்டு தேர்வுக்கு பிறகே வினியோகிக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் அதிகபட்சமாக ஒன்றரை ஆண்டு மட்டுமே இலவச சைக்கிளை பயன்படுத்த முடிகிறது. பெருமாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 800 சைக்கிள்கள் தயார் நிலையில் உள்ளன. தாமதிக்காமல் வினியோகிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறுகையில், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு வட்டார அளவிலும் சைக்கிள் உபகரணங்கள் பிரித்தனுப்பப்பட்டுள்ளன. இதனை பொருத்தும்பணி பகுதிவாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலெக்டர் உடனான ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து தெரிவித்துள்ளோம். தயார் நிலையில் உள்ள சைக்கிள்களை ஒரு வாரத்திற்குள் வினியோகிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    • ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்
    • ஏராளமானோர் பங்கேற்பு

    நெமிலி:

    தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பாணாவரம் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது.

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியை ருமனா தலைமையில் படிக்கும் 164 மாணவிகளுக்கும், அதேபோல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சிவசங்கா் தலைமையில் 137 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினாா்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் அா்ஜீனன், ஒன்றிய குழு உறுப்பினா் முனியம்மாள் கனேஷன் ஊராட்சிமன்ற துணை தலைவர் சரண்யாவிஜயன் பெற்றோா் ஆசிரியா் சங்க தலைவர் துரைமஸ்தான், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேலாண்மைகுழு தலைவர் கல்பனா விஜயகுமாா் ஆண்கள் மேல்நி லைப்பள்ளி மேலண்மை குழு தலைவர் சந்திராமுனிசாமி, துணை தலைவர் ரேகா மற்றும் வாா்டு உறுப்பினா்கள் பொதுமக்கள் என பலர் கலந்து ெகாண்டனர்.

    • மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள அரசினர் ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சப்-கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெ.மூர்த்தி, பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத்தலைவர் குமரவேல், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் தமிழ்ச்செல்வம், சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக பால்வளத்துறை சா.மு. நாசர், கும்மிடிபூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே. கோவிந்தராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு 497 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினர்.

    பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஆப்தாபேகம், சமீமாரஹீம், கல்பனாபார்த்திபன், அபிராமி, ஜீவா, கோகுலகிருஷ்ணன், திருபுரசுந்தரி, சுமலதாநரேஷ், இந்துமதி, கோல்ட் மணி, வெங்கடேசன், ஒன்றிய திமுக செயலாளர்கள் சந்திரசேகர், பொன்னுசாமி, மாவட்ட பிரதிநிதி சீனிவாசன் செட்டி, ஒன்றிய பிரதிநிதி மோகன்பாபு, தலைமை ஆசிரியர்கள் லோகநாத், சுலோச்சனா மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    • சிவகங்கையில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை நகரசபை தலைவர் வழங்கினார்.
    • சிவகங்கை செயின்ட்ஜோசப் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் ஏற்பாட்டில் நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை செயின்ட்ஜோசப் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் யோவல்மேரி ஏற்பாட்டில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    இந்த நிகழ்வில் பள்ளி குழுத்தலைவர் தேவதாஸ், நகர் மன்ற துணைத் தலைவர் கார்கண்ணன், கவுன்சிலர்கள் ராமதாஸ், அயூப்கான், சரவணன், விஜயக்குமார், கார்த்திகேயன், தொழில்நுட்ப பிரிவு சதிஷ் குமார், பூமிராஜ், தமிழ்செல்வன் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • திருவெண்ணைநல்லூர் அரசு பள்ளியில் 506 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் அமைச்சர் பொன்முடி அவர்களால் வழங்கப்பட்டது.
    • திருவெண்ணைநல்லூர் பேரூராட்சி மன்றத் தலைவர் அஞ்சுகம்கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், திருவெண்ணைநல்லூர் பேரூராட்சி மன்றத் தலைவர் அஞ்சுகம்கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா வரவேற்றார். நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு திருவெண்ணைநல்லூர், முகையூர் ஒன்றியங்களைச் சார்ந்த 15 அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 27 லட்சம் மதிப்பில் 2 ஆயிரத்து 506 இலவச சைக்கிள் வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், திருவெண்ணைநல்லூர் ஒன்றிய குழு தலைவர் ஓம்சிவசக்திவேல், முகையூர் ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி, பேரூராட்சி துணை தலைவர் ஜோதி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் கோமதி நிர்மல்ராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக் அலிபேக், தி.மு.க. நகர செயலாளர் பூக்கடை கணேசன், நகர தலைவர் செந்தில்முருகன், முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெங்கடேசன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் வெங்கடாஜலபதி, தேவிசெந்தில், ஷீபாராணி ஏழுமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
    • 11-ஆம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு 323 கோடியே 3 லட்சத்து 61 ஆயிரத்து 42 ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை நுங்கம்பாக்கம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2021-2022ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு 323 கோடியே 3 லட்சத்து 61 ஆயிரத்து 42 ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, என். கயல்விழி செல்வராஜ், மேயர் ஆர்.பிரியா, எம்.எல்.ஏ. நா. எழிலன், துணை மேயர் மு. மகேஷ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த ஆட்சியில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து சைக்கிள்கள் வாங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் மற்றொரு நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டுள்ளன.
    • நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய இரு கல்வி மாவட்டங்களிலும் சோ்த்து மொத்தம் 12,969 சைக்கிள்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

    நாமக்கல்:

    தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ்- 1 மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் அரசு சாா்பில் இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக மாணவா்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில், 2021-22 ம் ஆண்டுக்கு சைக்கிள்கள் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆட்சியில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து சைக்கிள்கள் வாங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் மற்றொரு நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டுள்ளன.

    உதிரிபாகங்களை இணைத்து சைக்கிள்கள் தயாா் செய்யும் பணியில் வட மாநிலத் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய இரு கல்வி மாவட்டங்களிலும் சோ்த்து மொத்தம் 12,969 சைக்கிள்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

    கடந்த ஆட்சியில் பச்சை வண்ணத்தில் இருந்த சைக்கிள்கள் தற்போது நீல வண்ணத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழக முதல்-அமைச்சர், சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தவுடன், நாமக்கல் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் வாரியாக மாணவா்களுக்கு வழங்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    ×