search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறையில் அடைப்பு"

    • கைதான உதவி பேராசிரியர் சையது இப்ராகிம் நேற்று சேலம் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
    • கைதான சையது இப்ராகிம், அரசு பணியாளர் என்பதால் அவரை சஸ்பெண்டு செய்வதற்கான நடவடிக்கைகள் கல்லூரி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியர் தங்களது 27 வயது மகளுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம்-ஹூப்ளி ரெயிலில் எஸ்.3 முன்பதிவு பெட்டியில் பயணம் மேற்கொண்ட னர்.

    நேற்று அதிகாலை 5.30 மணிக்கு ரெயில், ராசிபுரம் வந்தபோது அதே பெட்டியில் பயணம் செய்த சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த முகமது உசேன் மகன் சையது இப்ராகிம் (வயது 57), என்பவர் அந்த இளம்பெண்ணை சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த அப்பெண் கூச்சலிடவே, பெற்றோர் உள்பட அனைவரும் சேர்ந்து சையது இப்ராகிமை பிடித்து சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் அந்த இளம்பெண், ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சையது இப்ராகிமை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர், சேலம் அரசு கலை கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார் என்பது தெரிய வந்தது.

    கைதான உதவி பேராசிரியர் சையது இப்ராகிம் நேற்று சேலம் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து நீதிபதி, அவரை 15 நாள் காவலில் சேலம் மத்திய ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீசார், சையது இப்ராகிமை அழைத்துச்சென்று நேற்று இரவு சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    கைதான சையது இப்ராகிம், அரசு பணியாளர் என்பதால் அவரை சஸ்பெண்டு செய்வதற்கான நடவடிக்கைகள் கல்லூரி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர் இன்னும் ஓரிரு நாளில் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என தெரிகிறது.

    ஓடும் ரெயிலில் பெண்ணிடம் அரசு கல்லூரி உதவி பேராசிரியர் சில்மிஷம் செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நடராஜ் பணத்துடன் வந்ததும் அவரை தாக்கி விட்டு பணத்துடன் காரில் ஏறி தப்பித்து தலைமறைவாகி விட்டனர்.
    • இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை குன்னத்தூர் சாலையில் தனியார் வங்கியில் நகை கடன் பிரிவில் பணியாற்றுபவர் அரச்சலூர் பகுதியை சேர்ந்த நடராஜ் (29).

    இவர் கிராமத்தில் உள்ள பகுதிகளுக்கு சென்று நகைகடன் தொடர்பாக நோட்டீஸ் வழங்கி அதன் மூலமாக தொடர்பு கொள்ளும் பொதுமக்களின் ஏலத்திற்கு போகும் நகைகளை பணம் வழங்கி மீட்டு இவர் பணியாற்றும் வங்கியில் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் பெரு ந்துறையை அடுத்துள்ள வீரணம் பாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி செங்காவேரிக்கு வங்கியில் நகை அடமான கடன் பெற்று வழங்கியதன் மூலமாக செங்காவேரிக்கு நடராஜ் நன்கு பழக்கமானார்.

    நாள் பட்ட தொடர் நட்பின் மூலமாக நடராஜ் நாள் ஒன்றுக்கு எவ்வளவு பணம் கையில் வைத்து உள்ளார் என்பதை நன்கு அறிந்து வைத்த செங்காவேரி நடராஜ்க்கு முன்பாகவே வேறு வேலைக்கு திருப்பூர் சென்று வரும் போது திருப்பூரை சேர்ந்த ரத்தீஸ் குமார் என்பவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

    இதன் மூலமாக நடராஜிடம் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போட்ட செங்கா வேரி நண்பர் ரத்தீஸ்குமார் மூலமாக நடராஜை தொடர்பு கொண்டு 30 பவுன் தங்க நகை அடமானம் வைத்து ள்ளதாகவும், தற்போது நகையை வங்கி அதிகாரிகள் ஏலம் விட போவதாக கூறி உள்ளதா கவும், தங்களது வங்கியில் எனது 30 பவுன் தங்க நகையை அடமானம் வைக்க உள்ளதாகவும் கூறினார்.

    இதனை உண்மை என்று நம்பிய நடராஜ் ரத்தீஸ்குமாரி டம் எங்கு வர வேண்டும், எவ்வளவு பவுன் நகை, எப்போது எந்த வங்கியில், எவ்வளவு பணத்திற்கு அடமானம் வைக்கபட்டது என்ற விபரங்களை கேட்டு கொண்டு ரத்தீஸ்குமார் சொன்ன தகவலின் படி தான் பணியாற்றும் வங்கியில் இருந்து ரூ.1.10 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு ரத்தீஸ்குமாரை தொடர்பு கொண்டு நடராஜ் எங்கு வர வேண்டும் என்று கேட்டு உள்ளார்.

    பெருந்துறை அடுத்துள்ள பொன்முடி பகுதியில் இருப்பதாக ரத்தீஸ்குமார் கூறியதை நம்பி நடராஜ் பணத்துடன் அங்கு சென்றுள்ளார். திருப்பூரை சேர்ந்த நண்பர் ஒருவரின் காரை எடுத்து வந்த ரத்தீஸ் குமார் தனது நண்பர்களான சரன் நித்தி, மணிகண்டன், சரத் ஆகியோருடன் காரில் காத்திருந்தனர். நடராஜ் பணத்துடன் வந்ததும் அவரை தாக்கி விட்டு பணத்துடன் காரில் ஏறி தப்பித்து தலைமறைவாகி விட்டனர்.

    இந்த சம்பவம் தொட ர்பாக பொதுமக்கள் உதவியு டன் நடராஜ் பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை போலீசார் கார் சென்ற பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த கார் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓரு நபரின் கார் என்றும், நண்பர்களுக்கு நம்பிக்கை அடிப்படையில் வாடகைக்கு டிரைவர் இல்லாது வழங்கியது தெரியவந்தது.

    இந்த கார் உரிமையாளர் மூலமாக காரை வாடகைக்கு எடுத்து சென்றவர்களை பிடித்து பெருந்துறை ேபாலீசார் தீவிர விசாரணை மேற்கொ ண்டதில் இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டது செங்காவேரி என்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட செங்காவேரி, ரத்தீஸ்குமார், சரன் நித்தி, மணிகண்டன் ஆகிய 4 பேரை பெருந்துறை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்காவேரியை கோவை சிறையிலும், மற்ற 3 பேரை மாவட்ட சிறையிலும் அடைத்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இதனை யடுத்து கார் மற்றும் ரூ.1.10 லட்சம் பணத்தையும் போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவம் பெருந்து றை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்த போது இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது.
    • கைதான அவர்களை பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது48) புளி வியாபாரியான இவர் நேற்று மாலை மாரண்டஅள்ளி முன்சீப் தெருவில் உள்ள நண்பர் நந்தகுமார் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வந்தனர்.

    அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்த போது இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது.

    விசாரனையில் மாரண்டஅள்ளி அருகே ஏழு குண்டூர் பகுதியை சேர்ந்த சாந்தகுமார் (33) மற்றும் அகரம் பகுதியை சேர்ந்த விஜய் (30) என்பதும் இருவரும் சேர்ந்து திருடியது தெரிய வந்தது.

    அவர்கள் இருவரையும் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். கைதான அவர்களை பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • மோட்டார் சைக்கிள் கடையில் வேலை பார்க்கும் சிறுவன் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார்
    • திண்டிவனம் மேம்பாலம் அருகே வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    விழுப்புரம்:

    புதுச்சேரி-திண்டிவனம் 4 வழிச்சாலை கிளியனூர் அருகே எடையார்குளம் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு நேற்று மாலை ஒரு வாலிபர் வந்தார். அந்த வாலிபர் தான் வந்த மோட்டார் சைக்கிள் பாதி வளியில் பழுதாகி நின்றது. அதனை சரி செய்ய மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை ஊழியரை அழைத்தார். இல்லையெனில் மோட்டார் சைக்கிளை சரிசெய்யும் பொருளை அந்த வாலிபர் கேட்டார். அப்போது மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடையில் ேவலைபார்க்கும் சிறுவன் கடை உரிமையாளர் இல்ைல அதனால் தரமுடியாது என்று கூறி கடையின் உள்ளே சென்றார். இந்நிலையில் அந்த வாலிபர் கடையின் வெளியில் சாவியுடன் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றார்.

    உடனே மோட்டார் சைக்கிள் கடையில் வேலை பார்க்கும் சிறுவன் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார் இதனால் அருகில் இருந்தவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் சினிமா பாணியில் அந்த வாலிபரை பின்தொடர்ந்து சென்று திண்டிவனம் மேம்பாலம் அருகே அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் புதுச்சேரி மாநிலம் சக்தி நகர் சாரம் பகுதியை சேர்ந்த கோவிந்த ராஜ் (வயது 33) என்பது தெரிய வந்தது. மேலும் போலிசார் கோவிந்தராஜை வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் அருள்ராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
    • கைது செய்யப்பட்ட அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 43). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் கோபி அருகே செரையாம்பாளையம் பவானி ஆற்றங்கரை பகுதியில் உள்ளது. இந்த நிலத்தில் ரூ.7 லட்சம் மதிப்பில் மீன் பண்ணை அமைத்துள்ளார்.

    இவருக்கு மீன் பண்ணை அமைப்பதற்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மானியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக கடந்த 2 மாதத்துக்கு முன்பு கார்த்திக்குக்கு ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் மானிய தொகை அவரது வங்கி கணக்குக்கு மீன் வளத்துறை சார்பில் செலுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் மீன் வளத்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வரும் பவானிசாகரை சேர்ந்த அருள்ராஜ் (47) என்பவர் கார்த்திக்கை தொடர்பு கொண்டு உங்களுக்கு 2-ம் கட்ட மானியமாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வந்துள்ளது. அந்த மானியத்தொகை 2 நாட்களுக்குள் உங்களுக்கு வழங்கப்படும்.

    எனவே மானியத் தொகை வழங்க எனக்கு ரூ.31 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என கார்த்திக்கிடம் அருள்ராஜ் கேட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்த்திக் இது குறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கார்த்திக்கிடம் வழங்கினர். இதையடுத்து மீன்வளத்துறை ஆய்வாளர் அருள்ராஜை கார்த்திக் தொடர்பு கொண்டார்.

    அப்போது அவர் லஞ்ச பணத்துடன் ஓடத்துறை குளம் பகுதிக்கு கார்த்திகை வருமாறு கூறினார்.

    இதை தொடர்ந்து கார்த்திக்கும் பணத்துடன் ஓடத்துறை பகுதிக்கு சென்றார். அந்த பகுதியில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேஸ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்ெபக்டர் முருகன் மற்றும் போலீசார் மறைந்து இருந்தனர்.

    அப்போது கார்த்திக் தான் கொண்டு வந்த பணத்தை அருள்ராஜிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அருள்ராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட அருள்ராஜை கோபியில் உள்ள மீன் வளத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அருள்ராஜை போலீசார் சிறையில் அடைத்தனர்.

    • போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
    • இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு வரை தேடிவருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 13 சிறுமிக்கு 4 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக சிறுமியின் உறவினர் மற்றும் வாசுதேவன் ஆகிய 2 பேரை கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். இதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் இது தொடர்பாக நேற்று சிவக்குமார் (24) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு வரை தேடிவருகிறார்கள்.

    • 15 வயதான 8-ம் வகுப்பு படித்த மாணவி காணவில்லை.
    • தினேஷை கடத்தூர் போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே 15 வயது சிறுமியை கடத்திய வழக்கில் தலைமைறைவாக இருந்த வாலிபர்போக்சோ சட்டத்தின் கீழ் கைது. கடத்தூர் அருகே உள்ள மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான எட்டாம் வகுப்பு படித்த மாணவி கடந்த வாரம், காணவில்லை என அவரின் பெற்றோர்கள் கடத்தூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த மாணவியை அரூர் அருகே உள்ளசெல்லம்பட்டி தோப்பு குட்டை பகுதியைச் சேர்ந்த தினேஷ் வயது (20 )என்ற வாலிபர் கடத்திச் சென்று திருமணம் செய்ததாக வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த தினேஷை கடத்தூர் போலீசாரால் கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

    • குழந்தைவேல் (வயது 52). விவசாயி. இவரது தோட்டம் ஜேடர்பாளையம்-நல்லூர் செல்லும் சாலையில் உள்ளது.
    • தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பவர் டில்லர் தீ வைத்து எரிக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 52). விவசாயி. இவரது தோட்டம் ஜேடர்பாளையம்-நல்லூர் செல்லும் சாலையில் உள்ளது. இங்கு இவருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சுற்றி சூரிய மின்கம்பி வேலி போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கரைப்பா ளையம் பகுதியைச் சேர்ந்த நித்யா என்ற இளம்பெண் படு கொலை செய்யப்பட்டார். இவரது உறவினரான குழந்தைவேல் மீது சிலர் காழ்ப்புணர்ச்சியில் இருந்து வந்தனர்.

    இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பவர் டில்லர் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் விவசாயத் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் குழாய்களை மர்மநபர்கள் அடித்து நொறுக்கினர்.

    இதுமட்டுமின்றி தோட்டத்தின் நுழைவா யிலில் அடைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்டில், மின்சாரம் பாய்ச்சி கொலை முயற்சி யிலும் ஈடுபட்டிருந்தனர்.

    இதுகுறித்து குழந்தைவேல் நல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதில், வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர் சதாசிவம், தமிழரசன், மோகன்ராஜ், ரமேஷ், சந்திரசேகர் மற்றும் அங்கு வேலை செய்யும் ஆட்கள் மீது புகார் தெரிவித்திருந்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் தமிழரசன், மோகன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களை நாமக்கல் ஜே 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய மேலும் இரு வரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

    • ஜாகிர் அம்மாபாளையத்தில் மளிகை கடை யில் வேலை செய்து வந்தார்.
    • கடைக்கு வந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியுடன் பழகினார். திருமணமானதை மறைத்து மாணவியை காதலித்தார்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் அடுத்த தேக்கம்பட்டி வட்டக்காட்டை சேர்ந்தவர் வினித் (வயது 23). திருமண மாகி மனைவி மற்றும் ஒன்றரை வயதில் மகன் உள்ளார்.

    இவர் ஜாகிர் அம்மாபா ளையத்தில் மளிகை கடை யில் வேலை செய்து வந்தார். அப்போது கடைக்கு வந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியுடன் பழகினார். திருமணமானதை மறைத்து மாணவியை காதலித்தார்.

    இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி அவர் மாண வியை மறைவான இடத் திற்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே காத்திருந்த வினித்தின் தம்பி விக்னேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆகாஷ் (19), அருள்குமார் (23), சீனிவாசன் (23) ஆகியோர் சிறுமிக்கு அடுத்த டுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

    அதேபோல மறுநாளும் அந்த மாணவிக்கு 5 பேரும் பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தந்தையிடம் கூறி கதறி அழுதார். மாணவியின் தந்தை புகாரின்படி, சூரமங்க லம் மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவு களில் வழக்கு பதிவு செய்து, அண்ணன், தம்பி உட்பட 5 பேரை நேற்று கைது செய்த னர். 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட னர்.

    • 12ம் வகுப்பு படித்துவிட்டு மெடிக்கல் ஸ்டோரில் அலோபதி மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
    • அரசு தடை செய்த மருந்து மாத்திரைகளான சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்த்து வருவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் நல குறைபாடுகள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் சாந்தி அவர்களுக்கு புகார்கள் வந்தது.

    இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் பாலக்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம் தலைமையிலான குழுவினர், சர்க்கரை ஆலை பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது ஊத்தங்கரையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 48) என்பவர் 12-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு கடந்த 15 ஆண்டுகளாக மெடிக்கல் ஸ்டோரில் அலோபதி மருத்துவம் பார்த்து வந்ததும், அரசு தடை செய்த மருந்து மாத்திரைகளான வயகரா, சில்டினாபில், நிமுஸ்லைட் உள்ளிட்ட மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    உடனடியாக அவரை கைது செய்த பாலக்கோடு போலீசார் அவரிடமிருந்த குளுக்கோஸ்பாட்டில்கள், ஊசிகள், மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • மாரிமுத்து ஒரு குடோன் அருகே பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.
    • விசாரணையில் மாரிமுத்துவை கொலை செய்ததை மோகன் ஒப்புக்கொண்டார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சாணார்பதி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (37). தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்ற மாரிமுத்து மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவர் சத்தி-கோவை ேராட்டில் உள்ள ஒரு குடோன் அருகே பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.

    இதுபற்றி தெரிய வந்த தும் சத்தியமங்கலம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மாரிமுத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    பின்னர் மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    போலீசார் கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது கடைசியாக சத்தியமங்கலம் கொமாரபாளையத்தை சேர்ந்த மோகன் (38) என்பவரிடம் பேசியது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் மோகனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருவது தெரிய வந்தது.

    மேலும் கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவும் இவரும் நண்பர்கள் என்றும் தெரிய வந்தது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மாரிமுத்துவை கொலை செய்ததை மோகன் ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து போலீசார் மோகனை கைது செய்தனர்.

    மேலும் மாரிமுத்துவை கொலை செய்தது ஏன்? என்று வாக்குமூலமும் அளித்தார். வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    நானும் மாரிமுத்தும் நண்பர்கள். அவரது மனைவி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். இதனால் நாங்கள் நட்பு ரீதியாக பழகி வந்ேதாம்.

    ஆனால் மாரிமுத்து என் மீது சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தவறாக பேசி வந்தார்.

    சம்பவத்தன்று என்னை போனில் அழைத்தார். நான் சத்தி-கோவை ரோட்டில் உள்ள ஒரு குடோன் அருகே சென்றேன். அப்போது மாரிமுத்து என்னிடம் பணம் கேட்டார்.

    மேலும் அவரது மனைவியுடன் பழகுவதை சந்தேகப்பட்டு பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் எனது காரில் வைத்திருந்த இரும்பை வைத்து மாரிமுத்துவை தாக்கினேன்.

    இதில் பலத்த காயம் அடைந்த மாரிமுத்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து இறந்தார். இதையடுத்து நான் அங்கிருந்து தப்பி சென்றேன்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    இதையடுத்து போலீசார் மோகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபிசெட்டி பாளையம் சிறையில் அடைத்தனர்.

    • போக்குவரத்துக்கு இடையூறாக ஒரு வேன் நிறுத்தப்பட்டு இருந்தது.
    • சப்-இன்ஸ்பெக்டர் பொது இடத்தில் மது குடிக்க கூடாது என கூறினார்.

    சிவகிரி, 

    ஈரோடு மாவட்டம் சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி மற்றும் போலீசார் விளக்கேத்தி மற்றும் எல்லக்கடை பகுதிகளில் ரோந்து சென்றனர்.

    சிவகிரி- எல்லப்பாளை யம் ரோட்டில் போலீசார் சென்ற போது ஆண்டிக்காடு முருகன் கோவில் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக ஒரு வேன் நிறுத்தப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி அருகே சென்று பார்த்தார். அங்கு 2 பேர் மது குடித்து கொண்டு இருந்தனர்.

    அவர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் பொது இடத்தில் மது குடிக்க கூடாது என கூறினார். மேலும் அவர்களிடம் வேனின் ஆவணத்தையும் கேட்டார்.

    இதையடுத்து மது குடித்து கொண்டு இருந்த 2 பேர் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ் செல்வியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அவர்கள் 2 பேர் எங்கள் மீது வழக்கு பதிவு செய்தால் உன்னை கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்தனர்.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதில் அவர்கள் சிவகிரி அருகே உள்ள கொந்தளம் புதூரை சேர்ந்த சசிகுமார் (வயது 37), ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த பொன் ரஞ்சித் (22) என தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் ஓட்டி வந்த வேனையும் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

    ×