என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 237531"
- ஒரு கும்பல் போலீசாரை பணி செய்ய விடாமல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
- அலமேலு, சரண்ராஜ், கார்த்திக், இளையமாறன் ஆகிய 4 பேர் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி தம்பிபேட்டை பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினரிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இத் தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் தம்பிபேட்டை கிராமத்திற்கு விரைந்து சென்றனர். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்திய போது ஒரு கும்பல் போலீசாரை பணி செய்ய விடாமல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இது மட்டும் இன்றி அங்கு இருந்த பொதுமக்களையும் சரமாரியாக தாக்கினார்கள். இதனை தொடர்ந்து அங்கிருந்த போலீஸ் ஜீப் கண்ணாடியை கல்லால் தாக்கி அடித்து நொறுக்கி அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.
இந்த மோதலில் தம்பிபேட்டை சேர்ந்த அலமேலு, சரண்ராஜ், கார்த்திக், இளையமாறன் ஆகிய 4 பேர் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் தம்பி பேட்டைைய சேர்ந்த செந்தமிழ் செல்வன், வீர பிரபு உள்ளிட்ட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே மோதலை தடுக்க சென்ற போலீசாரின் ஜீப் கண்ணாடி உடைத்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- டி.என்.பாளையம் வண்ணார் கோவில் திருப்பம் வளைவில் மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட் நேருக்கு நேர் மோதி கொண்டது.
- இதில் வாகனங்களில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து மயங்கி கிடந்தனர்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் பகுதியை சேர்ந்த நாசர் (23), ஹரி கிருஷ்ணன் ஆகியோர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் டி.என். பாளை த்தில் இருந்து பங்களா புதூருக்கு சென்று கொண்டு இருந்தனர்.
அதேபோல் பங்க ளாப்புதூர் உப்புபள்ளம் பகுதியை சேர்ந்த சதிஷ்குமார் (22), சத்தியமங்க லம் கெஞ்சனூர் பகுதியை சேர்ந்த சரவணன் ஆகியோர் பங்களா ப்புதூரில் இருந்து டி.என்.பாளையத்துக்கு மொபட்டில் வந்து கொண்டு இருந்தனர்.
அவர்கள் சத்தியமங்க லம்- அத்தாணி ரோடு டி.என்.பாளையம் வண்ணார் கோவில் திருப்பம் வளைவில் வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி கொண்டது.
இதில் வாகனங்களில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து மயங்கி கிடந்தனர். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதை தொடர்ந்து, அவர்கள் மேல்சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த ஹரி கிருஷ்ணன் என்பவர் சிறிய காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்து பங்களாப் புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அய்யலூர் அருகே கார் வந்தபோது நாய் குறுக்கே வந்ததால் திடீரென பிரேக் போட்டார்.
- அப்போது கார் நிலைதடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
வடமதுரை:
விருத்தாசலத்தை சேர்ந்தவர் சுகுமார்(32) என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி ராஜலட்சுமி(29), மகள் இஷானா, உறவினர் சுமதி(48) ஆகியோருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர்.
கொடைக்கானலில் பல்வேறு இடங்களை பார்த்துவிட்டு இன்று காலை மீண்டும் தங்கள் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அய்யலூர் அருகே கார் வந்தபோது நாய் குறுக்கே வந்ததால் திடீரென சுகுமார் பிரேக் போட்டார். அப்போது கார் நிலைதடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரை மீட்டனர். மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த 4 பேரும் திண்டுக்கல் அரசுஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக்கொண்டனர்.
இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருப்பத்தூரில் 23 ஆண்டுகளுக்கு பின் மஞ்சுவரட்டு நடந்தது.
- இந்த மஞ்சுவிரட்டில் 4 பேர் காயமடைந்தனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தென்மா பட்டு ஆதினமிளகி அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு தென்மாபட்டு கிராம முக்கியஸ்தர்கள் சின்னையா கோவிலில் இருந்து கிராம பட்டெடுத்து வந்து தென்மாபட்டு கண்மாய் பகுதியில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டு கண்மாய்க்குள் அவிழ்த்து விடப்பட்டது.
சீறி பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக பிடித்தனர். இந்த மஞ்சுவிரட்டில் 4 பேர் காயமடைந்தனர். இங்கு 23 ஆண்டுகளுக்கு பிறகு மஞ்சுவிரட்டு நடைபெறுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
மஞ்சுவிரட்டு முடிந்தவுடன் கிராம பாரம்பரியமான விருந்து உபசரிப்பு நடைபெற்றது.
- வாகன விபத்தில் குழந்தைகள் உட்பட 4 பேர் காயம் ஏற்பட்டது.
- லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்
அரியலூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிப்பூம்பட்டினம் தாலுகா கல்லுகொடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 37) இவரது மனைவி அம்சவேணி (35), குழந்தைகள் யாழினி (8), செழியன் (7) ஆகியோர் காரில் கிருஷ்ணகிரியில் இருந்து கும்பகோணம் அருகே உள்ள சூரியநாராயணன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு மீண்டும் கிருஷ்ணகிரி செல்ல அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்- விருத்தாச்சலம் ரோட்டில் கூவத்தூர் அருகே மடத்தெரு பகுதியில்சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ரமேஷ் ஓட்டி வந்த காரும், எதிரே சாம்பல் லோடு ஏற்றி வந்த டாரஸ் லாரியும் எதிர்பாராத வித–மாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த ரமேஷ், அவரது மனைவி அம்சவேணி, குழந்தைகள் யாழினி, செழியன் உள்ளிட்ட அனைவரும் பலத்த காயமடைந்து காரில் சிக்கியிருந்தனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்கள் அனைவரையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இது குறித்து லாரி டிரைவர் சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுக்கா பகடப்பாடி கோபியை (39) போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்