search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிசளிப்பு விழா"

    • சிவகங்கையில் கோலப்போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
    • போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய 80-க்கும் மேற்பட்டோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தில் "கொண்டாடுவோம் ஒன்றி ணைவோம்'' என்ற தலைப்பில் கோலப் போட்டிக்கான பரிசளிப்பு விழா நடந்தது. இதில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள், அமெரிக்கா,சிங்கப்பூர் நாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இவர்களை போட்டி ஒருங்கிணைப்புக் குழுவினர் ரோஜாக்கூட்டம், மல்லிகைத் தோட்டம், தாமரைத் தடாகம், செம்பருத்திப் பூக்கள், சூரியகாந்தி குடும்பம் என 5 குழுக்களாக வகைப்படுத்தினர். போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய 80-க்கும் மேற்பட்டோருக்கு பரிசு வழங்கப்பட்டது. முதல் பரிசாக கொங்கரத்தி கிராமத்தை சேர்ந்த செல்வி நாராயணன் சிறந்த கோலநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கக்காசு பெற்றார். மற்ற வெற்றியாளர்களுக்கு வெள்ளிக்காசுகளும், எவர்சில்வர் பாத்திரங்களும் வழங்கப்பட்டன.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களில் 3 பேரை அதிர்ஷ்டக் குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை வல்லத்தரசு காளிதாசன், பாஸ்கரன், ஆறுமுகம், கிருஷ்ணன் சக்தி, வெள்ளைக்கண்ணு, ஜெயக்கண்ணன், போஸ், சத்திய நாராயணன் ஆகியோர் செய்திருந்தனர். பரிசளிப்பு விழா பணிகளில் ராமநாதன் கவுதமன், ஆண்டாளியார், ஜெயக்குமார், பாஸ்கரன், அன்புச்செழியன், முருகானந்தம், சிவராஜன், கண்ணதாசன் ஈடுபட்டனர்.

    • வட்டார அளவிலான கலை திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சண்முக நாதன் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    திருப்புல்லாணி வட்டார அளவிலான அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 6-வது முதல் 8-வது வகுப்பு மாணவர்கள், 9-வது முதல் 10-வது வகுப்பு மாணவர்கள், 11-வது முதல் 12-வது வகுப்பு மாணவர்களுக்கு என தனி பிரிவாக ஓவியம், பேச்சுப்போட்டி, மொழித்தி றன், இசைக்கருவி, நடனம், பாட்டு, நாடகம், பட்டி மன்றம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக்கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட உதவி திட்ட அலுவலர் கர்ணன் மற்றும் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேதுபதி வரவேற்றார். இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் முருகவேல் தொகுத்து வழங்கினார்.

    வட்டாரக் கல்வி அலுவலர்கள் உஷாராணி, ஜெயா ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். திருப்புல்லா ணி ஒன்றியத்தில் 20 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள், தலைமயாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ஒன்றிய அளவில் நடை பெற்ற கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ ர்களுக்கு முதல் மற்றும் 2-ம் பரிசாக கேடயம் மற்றும் சான்றிதழ் ஊராட்சி ஒன்றியத்தலைவர் புல்லாணி, ஊராட்சி மன்றத்தலைவர் கஜேந்திர மாலா ஆகியோர் வழங்கினர். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சண்முக நாதன் நன்றி கூறினார்.

    வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பாண்டி யராசு, செந்தில்கு மார், ரமேஷ், செல்வகுமார், சித்ராதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் ஏற்பாடுகளை செய்தார்.

    • கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
    • பரிசளிப்பு விழாவிற்கு சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய லீக் போட்டிகளின் பரிசளிப்பு விழா அழகப்பா பல்கலைக்கழக செமினார் அரங்கில் நடந்தது. 31 அணிகள் 3 டிவிசன்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் லீக் முறையில் போட்டிகள் நடந்தன.இதில் ஏ-பிரிவில் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் புராடக்ட் கோவிலூர் அணி முதலிடத்தையும், லத்தீப் மெமோரியல் அணி 2-ம் இடத்தையும் வென்றது. பி-பிரிவில் தேவகோட்டை ஜூனியர்ஸ் அணி முதலிடத்தையும், சச்சின் பிரதர்ஸ் அணி 2-ம் இடத்தையும் வென்றது. சி-பிரிவில் சென்சையர் அணி மற்றும் அழகப்பா அரசு கலைக் கல்லூரி அணிகள் முறையே முதல் இரண்டு இடங்களை வென்றன.

    பரிசளிப்பு விழாவிற்கு சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். புரவலர் வெங்கடாசலம் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் ஜி.ரவி, மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சிவக்குமரன், அழகப்பா உடற்கல்வி கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர். சதமடித்த 18, 5 விக்கெட் வீழ்த்திய 31 வீரர்களுக்கும், ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.தமிழக வீல்சேர் அணியில் விளையாடிய சிவகங்கை மாவட்ட வீரர்கள் சுரேஷ்குமார், ராமசந்திரன், மகளிர் வீராங்கனை பிரியதர்ஷினி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். செயலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

    • இறகுபந்து போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
    • போட்டிகளை முன்னாள் மாவட்ட ஆளுநர் முருகேசன் தொடங்கி வைத்தார்.

    மேலூர்

    மேலூர் சுப்ரீம் லயன்ஸ் கிளப் சார்பில் தாலுகா அளவிலான இறகு பந்து போட்டி நடந்தது. 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போட்டிகளை முன்னாள் மாவட்ட ஆளுநர் முருகேசன் தொடங்கி வைத்தார்.

    முதல் பரிசை அருண், பிரேம் நசீர் அணியும், 2-ம் பரிசை அசோக், அயூப்கான் அணியும், 3-ம் பரிசை ரபிக், பாண்டி அணியும், 4-ம் பரிசை துரை, முத்து நாச்சியப்பன் அணியும் வென்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. இதில் லயன்ஸ் கிளப் தலைவர் சரவணன், செயலாளர் மணி, பொருளாளர் நீதிபதி, கூடுதல் பொருளாளர் செல்வம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், இணை ஒருங்கிணைப்பாளர் சேவுகமூர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • குலாலர் சங்கம் ஆகியவை சார்பில், கல்வியில் சிறந்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா குமாரபாளையம் லஷ்மி மகாலில் மாவட்ட தலைவர் சிங்காரவேல் தலைமையில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு பிறகு முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், குலாலர் சமுதாயத்தினர் பொங்கல் பானை, கார்த்திகை தீப விளக்குகள் உள்ளிட்டவை தயாரிக்கின்றனர்.

    குமாரபாளையம்:

    தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம், நாமக்கல் மாவட்ட குலாலர் சங்கம் ஆகியவை சார்பில், கல்வியில் சிறந்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா குமாரபாளையம் லஷ்மி மகாலில் மாவட்ட தலைவர் சிங்காரவேல் தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் நாராயணன் பங்கேற்று வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ., திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய் கண்ணன், திமுக நகர செயலாளர் செல்வம், அதிமுக நகர செயலாளர் பாலசுப்ரமணி , முன்னாள் நகர செயலாளர் குமணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்தி பேசி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

    நிகழ்ச்சிக்கு பிறகு முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், குலாலர் சமுதாயத்தினர் பொங்கல் பானை, கார்த்திகை தீப விளக்குகள் உள்ளிட்டவை தயாரிக்கின்றனர். அவர்களின் வாழ்க்கை திருவிழா காலங்களுடன் பிணைந்து உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயிகள் நலன் காக்க கரும்பு கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் வழங்க வேண்டும் என்றார். 

    • முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அகமது பசீர் சேட் ஆலிம் கிராஅத் ஓதினார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகமது இக்பால் தலைமையில், சென்னை கிளை ஜமாத் தலைவர் நஜீம் அகம்மது முன்னிலையில் நடந்தது.

    பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அகமது பசீர் சேட் ஆலிம் கிராஅத் ஓதினார்.

    பள்ளியின் தாளாளரும், பேரூராட்சி சேர்மனுமான ஷாஜஹான் வரவேற்றார். ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    இதில் தலைமை ஆசிரியர் முகமது சுல்தான் அலாவுதீன், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காதர் ஷா, லியாகத் அலி, காதர்முகைதீன், வரிசைமுகம்மது, மாவட்ட கல்வி அலுவலர் ரவி முன்னாள் ஜமாத் தலைவர் இக்பால், பாசில்அமீன், கல்வி குழு தலைவர்காதர் முகைதீன், முகமது மீரா, சீனிமுகம் மது உள்பட பலர் பங்கேற்றனர்.

    • வாடிப்பட்டி அருகே உள்ள ஆரம்பப்பள்ளியில் தனித்திறன் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
    • பேச்சு, பாட்டு, கவிதை, மாறுவேட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பொடுகுபட்டியில் அரசு உதவி பெறும் காந்திஜி ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு சுதந்திரதினத்தை முன்னிட்டு பேச்சு, பாட்டு, கவிதை, மாறுவேட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    இந்த விழாவிற்கு பள்ளி செயலாளர் நாகேஸ்வரன் தலைமை தாங்கினார். பள்ளி கல்விக்குழு தலைவர் தனபாலன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் வெங்கடலட்சுமி வரவேற்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தியாகி அப்பைய ரெட்டியார் பரிசுகள் வழங்கினார். முடிவில் ஆசிரியர் எஸ்தர் டார்த்தி, ஆனந்தி ஆகியோர் நன்றி கூறினர்.

    இதேபோல் வாடிப்பட்டி புனித சார்லஸ் ஆரம்பப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆஞ்சிலோ அதிபர் பாக்கியநாதன் தலைமை தாங்கினார். புஸ்கோ பள்ளி நிர்வாகி கலின், தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவர்களுக்கு போலீஸ் சப்-ன்ஸ்பெக்டர் அண்ணாதுரை பரிசுகள் வழங்கினார். சுதந்திர தின சிறப்புகள் பற்றி சதானந்தம் விளக்கி பேசினார்.

    முடிவில் தலைமை ஆசிரியர் ஜஸ்டின் நன்றி கூறினார்.

    • தருமபுரி நகரத்தில் மட்டும் 450 சி.சி.டி.வி கேமரா பொருத்தபட்டுள்ளது.
    • இதுவரை 78 குற்றவாளிகளை பிடித்து, 100 சவரன் நகைகள் பறிமுதல் செய்து ஒப்படைக்கபட்டுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி அடுத்த சோகத்துர் ஊராட்சிக்குட்பட்ட பூசாரிபட்டி கிராமத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 5 வயது முதல் 17 வயது வரை அரசு தொடக்க பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தனியார் பயிற்சி மையம் சார்பில் சில மாதங்களாக சதுரங்க பயிற்சி அளிக்கபட்டு வந்தது.

    அதனை தொடர்ந்து நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கடந்த இரு தினங்களாக சதுரங்க போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்று வந்தது.

    அதனையடுத்து இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நேற்று பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத், ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற முதல் 4 பேருக்கும், பெண்கள் பிரிவில் முதல் 4 பேருக்கும் பாராட்டு சான்றிதழ்களும், கோப்பையும் வழங்கி பாராட்டினார்.

    இதனையடுத்து மாணவர்களிடம் பேசிய அவர் போலீஸ் துணை சூப்பிரண்டாக நான் பொறுப்பேற்ற பிறகு தருமபுரி நகரத்தில் மட்டும் 450 சி.சி.டி.வி கேமரா பொருத்தபட்டுள்ளது.

    இதுவரை 78 குற்றவாளிகளை பிடித்துள்ளதாவும், 100 சவரன் நகைகள் பறிமுதல் செய்து ஒப்படைக்கபட்டுள்ளது என்று கூறினார். மேலும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மீது முழு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்.பெற்றோர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகாமல் நேர்மையான முறையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நமது பிள்ளைகளை நல்வழியில் கொண்டு வரமுடியும் எனவும் கூறினார்.

    அப்பள்ளி மாணவ மாணவிகளை விளையாட்டில் ஆர்வத்தை கொண்டு வரும் வகையில், அப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கபட்டது.

    • சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட கருங்கவுண்டன்வலசில் மின்னொளியில் உதயம் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக மாபெரும் கபடி போட்டி நடந்தது.
    • போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட கருங்கவுண்டன்வலசில் மின்னொளியில் உதயம் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக மாபெரும் கபடி போட்டி நடந்தது.

    இதில் மாவட்டத்தின் தலை சிறந்த ௫௦-க்கு மேற்பட்ட கபடி அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகள் நாக்–அவுட் முறையில் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ. 5,000 மற்றும் வெற்றி கோப்பையினை ஈரோடு லட்சுணமண் பிரதர்ஸ் அணி வென்றது.

    2-வது இடத்தினை அரச்சலூர் நாகராஜ் ஏ அணியிரும், மூன்றாம் பரிசினை கோட்டாம்பாளையம், கோல்டன் பாய்ஸ் அணியும், நான்காம் பரிசினை வெள்ளோடு, மனமகிழ் மன்ற அணியின ரும் வென்றனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் பரிசு தொகையினை சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் சி.பிரபு வழங்கினார்.

    இதில், தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.  

    • சிறந்த மதிப்பெண்கள் பெற்ற குளச்சல் நகர பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
    • போதை பொருள் பழக்கத்திற்கு ஆளானால் எதிர்க்காலம் இருண்டு விடும் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்

    கன்னியாகுமரி :

    குளச்சல் பள்ளி முன்னாள் மாணவர்கள் அமைப்பான 'ரயின் டிராப்ஸ்' சார்பில் கடந்த 2021- 2022-ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற குளச்சல் நகர பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா குளச்சல் எஸ்.பி.எம்.மண்டபத்தில் நடந்தது.

    பர்ஹா மாஸினா இறை வசனம் படித்தார்.முகம்மது இஸ்மாயில் தலைமை வகித்தார்.முகம்மது மஹ்பூப் வரவேற்று பேசினார். நியாஸ்கான் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் விழாவில் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி பேசியதாவது:-

    மாணவர்கள் பாடங்களை படிக்கும் போது நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் படிக்க வேண்டும்.முடியாது என்கிற அய்யப்பாட்டுடன் படிக்க கூடாது.ஒரு வண்டிக்கு இரண்டு சக்கரங்கள் இருப்பது போல் மாணவர்களுக்கு படிப்பும், விளையாட்டும் முக்கியம். 2 திறமைகளையும் வளர்த்து கொள்ள வேண்டும்.சில மாணவர்களிடம் வேறு திறன் இருக்கும்.அதை அவர்கள் வளர்த்துக்கொண்டு வாழ்வில் முன்னேறலாம்.தோல்வியுறும் மாணவர்கள் மனம் தளரக்கூடாது.

    அடுத்து வரும் வாய்ப்புக் களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு எல்லாம் மேலாக மாணவர்கள் நல்ல பண்பு களை, ஒழுக்கத்தை வளர்த்து கொள்ள வேண்டும். பெரியோர்கள், ஆசிரியர் களை மதிக்க வேண் டும்.

    போதை பொருள் பழக்கத்திற்கு ஆளானால் எதிர்க்காலம் இருண்டு விடும் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.படிக் கும் பருவத்தில் படிப்பு, விளையாட்டுடன் மறைக் கல்வியும் படித்தால் நல்ல பண்புள்ள மாணவர்கள் உருவாகுவார்கள். வெற்றி இலக்குடன் படித்தால் மாணவர்கள் உயர்ந்த நிலையை அடையலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நகரளவில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் முதலிடம் பிடித்த பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மற்றும் 12 ம் வகுப்பில் மாவட்டளவில் முதல் மதிப்பெண் பெற்ற நாகர்கோவில் பொன் ஜெஸ்லி மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர். நஹ்லாவுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. சாஸ்தான்கரை ஜோசப் மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி தாளாளர் டாக்டர் ஜெயகர் ஜோசப், ஓரியண்ட் மெட்ரிக், உயர்நிலைப்பள்ளி தாளாளர் பீர்முகம்மது, இலப்பவிளை அரசு உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியை ரெஜி, தூய மரியன்னை மேல் நிலைப்பள்ளி தலைமை யாசிரியை புஷ்ப ரனிதா, வி.கே.பி.மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இளங்கோ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • விழா நாகர்கோவில் ரோட்டரி கம்யூனிட்டி ஹாலில் வைத்து நடைபெற்றது.
    • விழாவில் ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட வணிகவியல் (டைப்ரைட்டிங்) பள்ளிகள் சங்கத்தின் 108-வது பரிசளிப்பு விழா நாகர்கோவில் ரோட்டரி கம்யூனிட்டி ஹாலில் வைத்து நடைபெற்றது.

    விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கத் தலைவர் சுகுமாரன் தலைமை தாங்கி வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் தர்மராஜ் அறிக்கை சமர்ப்பித்தார் மற்றும் சங்க இணைச் செயலாளர் வேலாயுதம்பிள்ளை சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்தார்.

    சிறப்பு விருந்தினராக கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் செந்தில்குமார் கலந்து கொண்டு சங்க தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து போட்டி தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார். முன்னதாக சிறப்பு விருந்தினரை சங்க செயற்குழு உறுப்பினர் கண்ணன் அறிமுகப்படுத்தினார்.

    கன்னியாகுமரி மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் பொருளாளர் ராஜரெத்தினம், சங்க போட்டி தேர்வுக்குழு தலைவர் விஜயா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக சங்க துணைத் தலைவர் பட்டேல் என்.ஆர்.சுந்தரம் பிள்ளை நன்றி கூறினார்.

    விழாவில் குமரி மாவட்ட அனைத்து பகுதிகளிலிருந்தும் தட்டச்சு பள்ளி உரிமையாளர்கள், ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் அரசுத்துறை தேர்வு பயிற்சி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
    • மாவட்ட மைய நூலகத்தின் முதல் நிலை நூலகர் நல்நூலகர் பாப்பாத்தி விழாவிற்கு தலைமை வகித்தார்

    கடலூர்:

    தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் குருப்-4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சியை கடலூர் மாவட்ட மைய நூலகமும், நூலக வாசகர் வட்டமும் இணைந்து தொடர்ந்து நடத்தி வருகிறது, இப்பயிற்சியில் அதிக மதிப்பெண்களை பெற்று வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா மைய நூலகத்தில் நடைபெற்றது. மாவட்ட மைய நூலகத்தின் முதல் நிலை நூலகர்.நல்நூலகர் பாப்பாத்தி விழாவிற்கு தலைமை வகித்தார். பயிற்சியாளர்கள் மணிகண்டன், சசிகுமார், பிரபாகரன், வெங்கடசேன், கார்த்திகேயன் ஆகியோர் போட்டியாளர்களை தேர்வு சேய்தனர். ஓவியா முதல் இடத்தையும், சரண்யா 2-ம் இடத்தையும், சுபாஷினி 3-ம் இடத்தையும் பெற்றனர். மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர் அரிமா. பாஸ்கரன் பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.கிராமப்பகுதிகளில் இருந்து ஏழை மாணவ மாணவியர்கள் பெருவாரியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வாசகர் வட்ட செயற்குழ உறுப்பினர் அருள்ஜோதி நன்றி கூறினார். 

    ×