என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 238132"
- நத்தம் சாலையில் பறக்கும் மேம்பாலம் இன்று மாலை திறக்கப்படுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
மதுரை
மதுரை-நத்தம் சாலையில் பறக்கும் மேம்பாலம் இன்று மாலை திறக்கப்படுகிறது. பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நத்தம் சாலையில் ஊமச்சிக்குளம் செல்ல கோகலே ரோடு வழியாக விஷால்மால் முன்புள்ள பாலத்தில் ஏறி செல்ல வேண்டும். அய்யர் பங்களா, திருப்பாலை, ஊமச்சிகுளம் செல்லும் வாகனங்கள், இந்த மேம்பாலம் வழியாக சென்று 2.5 கி.மீ தொலைவில் உள்ள இறங்குபாதை வழியாக பேங்க் காலனி சந்திப்பை அடையலாம்.
நத்தம் சாலையில் ஐ.ஓ.சி சந்திப்பு, பீ.பீ.குளம், தபால் தந்தி நகர், எஸ்.பி. பங்களா சந்திப்பு, ரிசர்வ் லைன், ஆத்திகுளம், நாராயணபுரம் செல்ல வேண்டிய வாகனங்கள், பாலத்தின் மீது ஏறாமல் இடதுபுறம் உள்ள சாலை வழியாக விஷால்மால், ஐ.ஓ.சி ரவுண்டானா வழியாக பாலத்தின்கீழ் செல்லலாம்.
அழகர்கோவில், புதூர், மாவட்ட கோர்ட்டு, கே.கே.நகர், மாட்டுத்தாவணி, வழியாக செல்லும் சிறிய வாகனங்கள் நவநீத கிருஷ்ணன் கோவில் சாலை, பழைய அக்ரகாரம் தெரு, அப்துல் கபார்கான் சாலை, லாலா லஜபதிராய் சாலைகளை பயன்படுத்தி, பி.டி.ஆர்.சிலை வழியாக பாண்டியன் ஓட்டல், அழகர்கோவில் செல்ல வேண்டும்.
மாட்டுத்தாவணி, கே.கே.நகர், டாக்டர் தங்கராஜ் சாலை வழியாக வரும் வாகனங்கள் கக்கன் சிலை சந்திப்பில் வலதுபுறம் செல்லக்கூடாது. மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு திரும்பி செல்லும் வசதியை பயன்படுத்தி ரேஸ்கோர்ஸ் வழியாக அழகர்கோவில் சாலையை அடையலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
- அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி முனை வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா ஆர்சு வளைவில் திருப்பி அண்ணா நகர், புதிய ஆவடி சாலை வழியாக திருப்பிவிடப்படும்.
சென்னை:
பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) பிற்பகல் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், பல்லாவரம் ராணுவ மைதானம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் 125-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமர் மோடி சென்னையில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 4 இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையொட்டி சென்னை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது
பிரதமரின் சென்னை வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் தொடர்பாக பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,
பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகளிலும், ஐஎன்எஸ் அடையார் முதல் சென்ட்ரல் ரெயில் நிலையம் வரையிலும், சென்ட்ரல் ரெயில் நிலையம் முதல் விவேகானந்தர் இல்லம் வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணிவரை போக்குவரத்து மெதுவாக செல்ல வாய்ப்புள்ளது.
பிரதமர் விவேகானந்தர் இல்லத்திற்கு வருகையின் போது காந்தி சிலை அருகே உள்ள கலங்கரை விளக்கத்தில் இருந்து வாகனங்கள் ஆர்.கே.சாலைக்கு திருப்பி விடப்படும். அங்கிருந்து நடேசன் சாலை சந்திப்பில் ஐஸ்ஹவுஸ், ரத்னா கபே, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை சந்திப்பு வழியாக தொழிலாளர் சிலை அல்லது அண்ணாசாலைக்கு வலதுபுறம் திரும்பலாம்.
போர் நினைவிடத்தில் இருந்து வெளிச்செல்லும் வாகனங்கள் தொழிலாளர் சிலையிலிருந்து வாலாஜா சாலையில் அண்ணாசாலை நோக்கி அல்லது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும். தேவைப்பட்டால் வாகனங்கள் போர் நினைவிடத்தில் இருந்து வாலாஜா பாயின்ட் வழியாக அண்ணாசாலை நோக்கி கொடி ஊழியர்கள் சாலையில் திருப்பி விடப்படலாம். இந்த மாற்று பாதையானது மாலை 4 மணி முதல் 6 மணி வரை செயல்படுத்தப்படும்.
மேலும் வணிக வாகனங்களுக்கு மதியம் 2 மணி முதல இரவு 8 மணி வரை இடையிடையே திசைமாற்றம் கீழ்கண்டவாறு செயல்படுத்தப்படும்.
* அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி முனை வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
* பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா ஆர்சு வளைவில் திருப்பி அண்ணா நகர், புதிய ஆவடி சாலை வழியாக திருப்பிவிடப்படும்.
* வெளியேறும் திசையில் செல்லும் வாகனங்கள் NRT புதிய பாலத்தில் இருந்து திருப்பிவிடப்பட்டு ஸ்டான்லி சுற்று, மின்ட் சந்திப்பு, மூலகொத்தளம் சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் டாப், வியாசர்பாடி வழியாக திருப்பி விடப்படும்.
* ஹண்டர்ஸ் சாலையில் இருந்து வரும் வணிக வாகனங்கள் ஹண்டர் ரோடு, ஈவிகே சம்பத் சாலை வழியாக ஈவிஆர் சாலையை அடையும் வகையில் திருப்பி விடப்பட்டு நாயர் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும். லேங்கஸ் கார்டன் சாலையில் இருந்து காந்தி இர்வின் மேம்பாலத்திற்கு வரும் கனரக வாகனங்கள் ஈவிஆர் சாலையை அடைய உடுப்பி பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும்.
* கிரீன்வேஸ் சாலையில் இருந்து வரப்படும் கனரக வாகனங்கள் மந்தவெளி நோக்கி திருப்பிவிடப்படும்.
அதிக பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொழிலாளர் சிலை முதல் விவேகானந்தர் இல்லம் வரையிலான மெரினா சாலையில் கூடுதல் ஆய்வு மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி போட்டி நடைபெறும் 7 நாட்கள் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
- வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி போட்டி நடைபெறும் 7 நாட்கள் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
நாளை (3-ந்தேதி), வருகிற 12-ந்தேதி, 21-ந்தேதி, மே 10-ந்தேதி, மே 14-ந்தேதி ஆகிய நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையும், வருகிற 30-ந்தேதி மற்றும் மே 6-ந்தேதிகளில் மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
விக்டோரியா ஹாஸ்டல் ரோடு (கெனால்ரோடு) சாலைக்கு பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
பெல்ஸ்சாலை தற்காலிக ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு, பாரதி சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ்சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
பாரதி சாலை ரத்னா கபே சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் பாரதி சாலை - பெல்ஸ்சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு பெல்ஸ் சாலை வழியாக வாலாஜாசாலை சென்று தங்கள் இலக்கை சென்று அடையலாம். பாரதி சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து நேராக கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை.
அண்ணா சாலையில் இருந்து அண்ணா சிலை வழியாக வாலாஜாசாலை வரும் எம்.பி.டி.டபிள்யூ. ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று தங்கள் வாகன நிறுத்தத்தை அடையலாம்.
வாலாஜாசாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அண்ணா சாலையில் இருந்து அண்ணா சிலை வழியாக வாலாஜா சாலை வரும் பி மற்றும் ஆர் ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை வழியாக சென்று அந்தந்த வாகன நிறுத்தும் இடங்களுக்கு செல்லலாம்.
காமராஜர் சாலையில் போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் வாகனங்கள் எம்.பி.டி.டபிள்யூ. ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று அந்தந்த வாகன நிறுத்தும் இடங்களுக்கு செல்லலாம்.
போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் வாகனங்கள் பி மற்றும் ஆர் ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சாலை, பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக சென்று அந்தந்த வாகன நிறுத்தும் இடங்களுக்கு செல்லலாம். உழைப்பாளர் சிலையில் இருந்து வாகனங்கள் வாலாஜா சாலை செல்ல அனுமதி இல்லை.
அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் அண்ணா சாலையில் இருந்து அண்ணா சிலை வழியாக வாலாஜாசாலை வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை வழியாக பி.டபிள்யூ.டி. எதிராக உள்ள கடற்கரை உட்புறச் சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.
போர் நினைவு சின்னம் வழியாக வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக பி.டபிள்யூ.டி. எதிராக உள்ள கடற்கரை உட்புறச் சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.
காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக பி.டபிள்யூ.டி. எதிராக உள்ள கடற்கரை உட்புறச் சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.
- கோயம்பேட்டில் இருந்து ஈ.வே.ரா சாலை வழியாக வரும் வாகனங்கள் தாசபிரகாஷ் சந்திப்பில் இருந்து நாயர் மேம்பாலம் சந்திப்பை நோக்கி நேராக செல்ல அனுமதியில்லை.
- ஈ.வே.ரா சாலையில் நாயர் மேம்பாலம் சந்திப்பிலிருந்து தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கி வரும் வாகனங்கள் எந்தவித மாற்றமின்றி நேராக செல்லலாம்.
சென்னை:
ஈ.வே.ரா சாலையில் சுதா ஓட்டல் முன்பு (நாயர் மேம்பாலம் சந்திப்பிற்கும் தாசபிரகாஷ் பாயின்ட் சந்திப்பிற்கும் இடையில்) நெடுஞ்சாலை துறையினர் சாலையை ஆக்கிரமித்து, நாளை (சனிக்கிழமை) இரவு 10 மணி முதல் 3-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணி வரை பள்ளம் தோண்டி சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால்வாய் கட்டுமான அலுவல் மேற்கொள்ள உள்ளதால், போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து ஈ.வே.ரா சாலை வழியாக வரும் வாகனங்கள் தாசபிரகாஷ் சந்திப்பில் இருந்து நாயர் மேம்பாலம் சந்திப்பை நோக்கி நேராக செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் ஈ.வே.ரா சாலையில் தாசபிரகாஷ் பாயின்ட் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, ராஜா அண்ணாமலை சாலை வழியாக சென்று அழகப்பா சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அழகப்பா சாலை மறுபடியும் வலதுபுறம் திரும்பி நாயர் மேம்பாலம் சந்திப்பு மற்றும் ஈ.வே.ரா சாலை வழியாக செல்லலாம். ஈ.வே.ரா சாலையில் நாயர் மேம்பாலம் சந்திப்பிலிருந்து தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கி வரும் வாகனங்கள் எந்தவித மாற்றமின்றி நேராக செல்லலாம்.
- உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- மொத்தம் 306 தூண்களில் 280 தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன.
கோவை,
கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிட்ரா சந்திப்பு, ஹோப்காலேஜ், அண்ணாசிலை, நவஇந்தியா, ஆகிய நான்கு இடங்களில் ஏறு மற்றும் இறங்கு தளங்கள் அமைக்கப்படுகின்றன. மொத்தம் 306 தூண்களில் 280 தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன.
தற்போது எஸ்ேஸா பங்க் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள சாலையின் மைய ப்பகுதியில் தூண்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக போக்குவரத்து மாற்றம ெசய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகர காவல்துறையினர் வெளியிட்ட செய்திக்கு றிப்பில், "அவிநாசி சாலை எஸ்ஸோ பங்க் பகுதியில் மேம்பால தூண் கட்டப்பட்டு வருகிறது. எனவே, பாரதிகாலனி பகுதியில் இருந்து அவிநாசி சாலையை அடையும் வாகனங்கள், அவிநாசி சாலையில் இடதுபுறமாக திரும்பி பில்லர் எண் 183-184 ஆகியவற்றுக்கு இடையே 'யு' டர்ன் செய்து செல்லலாம். பீளமேடு வழித்தடத்திலிருந்து வந்து பாரதிகாலனி சாலைக்கு செல்லும் வாகன ஓட்டு நர்கள் சுகுணா திருமண மண்டபத்துக்கு எதிரில் உள்ள பில்லர் எண் 197-198-க்கு இடையே 'யு' டர்ன் செய்து செல்லாம்" எனக் கூறப்பட்டுள்ளது.
- செம்பியம் 70 அடி சிவஇளங்கோ சாலையில் 5 ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- ரெட்டேரி மார்க்கத்தில் இருந்து பேப்பர் மில்ஸ் ரோடு வழியாக 70 அடி சிவ இளங்கோ சாலைக்கு செல்லும் வாகனங்கள் எஸ்.ஆர்.பி. காலனி கந்தசாமி சாலையை பயன்படுத்தி செல்லலாம்.
சென்னை:
செம்பியம் 70 அடி சிவஇளங்கோ சாலையில் "மகிழ்ச்சியான தெருக்கள்" என்ற நிகழ்ச்சி 26.3.2023, 2.4.2023, 9.4.2023, 16.4.2023 மற்றும் 23.4.2023 ஆகிய 5 ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெற உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. பெரம்பூர் ரெயில்வே மார்க்கத்தில் இருந்து பேப்பர் மில்ஸ் ரோடு வழியாக 70 அடி சிவ இளங்கோ சாலைக்கு செல்லும் வாகனங்கள் அகரம் சந்திப்பு வழியாக சுந்தர்ராஜ் பெருமாள் கோவில் தெரு வழியாக சென்று வலது புறம் திருப்பி ஜவஹர்நகர் முதல் பிரதான சாலை கார்த்திகேயன் சாலை வழியாக செல்லலாம்.
ரெட்டேரி மார்க்கத்தில் இருந்து பேப்பர் மில்ஸ் ரோடு வழியாக 70 அடி சிவ இளங்கோ சாலைக்கு செல்லும் வாகனங்கள் எஸ்.ஆர்.பி. காலனி கந்தசாமி சாலையை பயன்படுத்தி, இடது புறம் திருப்பி கார்த்திகேயன் சாலை வழியாக செல்லலாம்.
பெரவள்ளூர் காவல் நிலைய மார்க்கத்தில் இருந்து 70 அடி சிவ இளங்கோ சாலையில் வரும் வாகனங்கள் கார்த்திகேயன் சாலை 70 அடி சிவ இளங்கோ சாலை சந்திப்பில் இருந்து வலது புறமாக திரும்பி ஜவஹர்நகர் முதல் பிரதான சாலை-சுந்தர் ராஜ் பெருமாள் கோவில் தெரு-அகரம் சந்திப்பு வழியாக செல்லலாம்.
- வள்ளுவர் கோட்டம், வாணிமகால், பனகல் பார்க் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.என்.செட்டி சாலையில் செல்ல அனுமதி இல்லை.
- எங்காவது வாகனத்தை நிறுத்திவிட்டு தான் வரமுடியும்.
கும்பாபிஷேகத்தையொட்டி தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் இன்று அதிகாலையில் இருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வள்ளுவர் கோட்டம், வாணிமகால், பனகல் பார்க் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.என்.செட்டி சாலையில் செல்ல அனுமதி இல்லை. அதே போல ஜெமினிபாலம், அண்ணாசாலையில் இருந்து ஜி.என்.செட்டி சாலைக்கு வரும் வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மேம்பாலத்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது.
பத்மாவதி தாயாரை காண கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனத்தில் நேரடியாக கோவிலுக்கு வர இயலாது. எங்காவது வாகனத்தை நிறுத்திவிட்டு தான் வரமுடியும். ஜி.என்.செட்டி மேம்பாலம் கீழ்பகுதி மற்றும் கோவிலில் நெரிசல் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- மதுரை பனகல் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்துள்ளது.
மதுரை
மதுரை மாநகரில் நாள்தோறும் பெருகிவரும் வாகன நெரிசலை குறைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆவின் சந்திப்பு சாலை, வெளிமாவட்டத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சு வாகனங்கள் வந்து செல்லும் சாலையாக உள்ளது. அதேபோல பள்ளி-கல்லூரி வாகனங்கள் செல்லும் சாலையாகவும் உள்ளது.
ஆவின் சந்திப்பு முதல் திருவள்ளுவர் சிலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் திரளானோர் 2 மற்றும் 4 சக்கர வாக னங்களில் வந்து செல்கின்றனர். இதனால் வள்ளுவர் சிலை சந்திப்பிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
திருவள்ளுவர் சிலை முதல் ஆவின் ரோடு வரை செல்லும் சாலை குறுகலாக உள்ளது. அங்கு போக்கு வரத்து நெருக்கடி ஏற்படு கிறது. மேலும் இந்த சாலை அமைப்பானது போக்கு வரத்து சிக்னல் அமைக்க முடியாத வகையில் உள்ளது. இதன் காரணமாக போலீ சாரால் இந்த சந்திப்பில் போக்குவரத்தை எளிதாக கையாள முடியவில்லை.
அந்த பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப் பட்டிருந்தது. அது இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. அதன் அடிப்ப டையில் ஆவின் சந்திப்பில் இருந்து திருவள்ளுவர் சிலை வரை உள்ள சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.
இந்த சாலையில் திருவள்ளுவர் சிலை சந்திப்பில் இருந்து ஆவின் சந்திப்பிற்கு வாகனங்கள் செல்லலாம். ஆவின் சந்திப்பில் இருந்து திரு வள்ளுவர் சிலை சந்திப்பு வரை உள்ள சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.
இந்த சாலையில் திருவள்ளுவர் சிலை சந்திப்பில் இருந்து ஆவின் சந்திப்பிற்கு வாகனங்கள் செல்லலாம். ஆவின் சந்திப்பில் இருந்து வள்ளுவர் சிலை வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கே.கே. நகர் மேலமடையில் இருந்து ஆவின் வழியாக திருவள்ளுவர் சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் குருவிக்காரன் சாலை 2-வது தெரு, சினிப்பிரியா தியேட்டர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி குருவிக்காரன் 2-வது சாலை, காந்தி வீதி ராஜேசுவரி ஓட்டல் மற்றும் திருவள்ளுவர் சிலை சந்திப்பு வழியாக பனகல் சாலைக்கு வேண்டும்.
குருவிக்காரன்சாலை 2-வது சாலை ஒரு வழிப்பா தையாக மாற்றப்பட்டது. காந்தி வீதியில் இருந்து குருவிக்காரன் சாலைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கே.கே. நகர் மேல மடையில் இருந்து ஆவின் சந்திப்பு வழியாக செல்லும் பஸ்கள் குருவிக்காரன் சாலை 2-வது தெரு, சினிப்பிரியா தியேட்டர் வழியாக ராஜேசுவரி ஓட்டல் சென்று, சுப்புராமன் தெருவின் இடதுபுறம் திரும்பி அண்ணா பஸ் நிலையம் வழியாக சுப்புராமன் தெருவின் வடக்குத்தெரு வழியாக பனகல் சாலைக்கு செல்ல வேண்டும். இந்த சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.
பனகல் சாலை, சுப்புராமன் தெரு வழியாக அண்ணா சாலையில் இருந்து வடக்குத்தெரு, அண்ணா பஸ் நிலையம் செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வள்ளுவர்சிலை சந்திப்பில் உள்ள கோரிப்பாளையம் நோக்கி செல்லும் பஸ்களின் நிறுத்தம் அகற்றப்படுகிறது.
மதுரை பனகல் சாலையில் போக்கு வரத்து மாற்றம் செய்யப் பட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்துள்ளது.
- வடகோவை மேம்பாலம், காந்திபுரம் வழியாக செல்லலாம்.
- பயணத்தை மாற்றி திட்டமிட்டு கொள்ளவும்.
கோவை,
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு, கோவையில் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, கோவை அவினாசி ரோடு பழைய மேம்பாலம்,குட்ஷெட் ரோடு, புருக்பீல்டு ரோடு, சிந்தாமணி சந்திப்பு, கவுலிபிரவுன்ரோடு, லாலி ரோடு, மருதமலை ரோடு ஆகியவற்றில் இன்று மதியம் 1 மணி முதல் இரவு 10 மணி வரையும், நாளை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, அவினாசியிலிருந்து நீலாம்பூர், சின்னியம்பாளையம் வழியாக கனரக, சரக்கு வாகனங்கள் நகருக்குள் வர தடை விதிக்கப்படுகிறது. மாறாக, எல். அன்ட். டி. பைபாஸ் ரோடு, சிந்தாமணிப்புதூர், ஒண்டிப்புதூர், ராமநாதபுரம் வழியாக நகருக்குள் வரலாம். கோவை நகரிலிருந்து அவினாசிக்கு செல்லும் கனரக, சரக்கு வாகனங்கள் அண்ணா சிலை, ரேஸ்கோர்ஸ், சுங்கம், சிங்காநல்லூர் எல். அன்ட். டி. பைபாஸ் ரோடு செல்லலாம்.
காளப்பட்டி ரோடு வழியாக வரும் கனரக, சரக்கு வாகனங்கள் சிட்ரா சந்திப்பை அடைய தடை விதிக்கப்படுகிறது. காளப்பட்டி நால்ரோடு, மயிலம்பட்டி, தொட்டிபாளையம் வழியாக செல்லலாம். சத்தி சாலை, சரவணம்பட்டி பகுதிகளிலிருந்து அவினாசி ரோடு, திருச்சி ரோட்டுக்கு செல்லும் கனரக, சரக்கு வாகனங்கள் கணபதி, காந்திபுரம் மேம்பாலம், அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், சுங்கம், சிங்காநல்லூர் வழியாக செல்லலாம்.
மருதமலை ரோடு, தடாகம் ரோடு வழியாக வரும் வாகனங்கள் கவுலிபிரவின் ரோடு, சிந்தாமணி வழியாக செல்ல தடை செய்யப்பட்டு உள்ளது.அதற்கு மாறாக பாரதிபார்க் ரோடு, வடகோவை மேம்பாலம், காந்திபுரம்அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், சுங்கம், சிங்காநல்லூர் வழியாக செல்லலாம்.
மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் வடகோவை மேம்பாலம், காந்திபுரம் வழியாக செல்லலாம்.
பொதுமக்கள் அவினாசி ரோடு, வழியாக பழைய மேம்பாலம், குட்ஷெட் ரோடு, புருக்பீல்டு ரோடு, சிந்தாமணி சந்திப்பு, கவுலிபிரவுன் ரோடு, லாலி ரோடு, மருதமலை ரோடு ஆகிய பகுதிகளில் செல்ல வேண்டியது இருந்தால் தங்களது பயணத்தை மாற்றி திட்டமிட்டு கொள்ளவும்.
அவினாசி ரோடு, சின்னியம்பாளையம் வழியாக, கோவை நகருக்குள் நகருக்குள் வரும் கார், இதர வாகனங்கள், தொட்டி பாளையம் பிரிவு, மயிலம்பட்டி, காளப்பட்டி நால்ரோடு, சரவணம் பட்டி வழியாக செல்லலாம். விமான நிலையம், ெரயில் நிலையம், ஆஸ்பத்திரிகளுக்கு செல்லும் வாகனங்கள் மட்டுமே தொட்டிபாளையம் பிரிவிலிருந்து நகருக்குள் அனுமதிக்கப்படும்.
அவிநாசி ரோடு, பழைய மேம்பாலத்தை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் மேற்குறிப்பிட்ட மேம்பாலத்தின் கீழே செல்லலாம். மருதமலைரோடு, தடாகம் ரோடு வழியாக வாகனங்கள் ஜி.சி.டி., பாரதிபார்க் ரோடு, வடகோவை மேம்பாலம், காந்திபுரம் வழியாக செல்லலாம். மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் வடகோவை மேம்பாலம், காந்திபுரம் வழியாக செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மயான கொள்ளை திருவிழாவை முனனிட்டு நடவடிக்கை
- பழைய பாலாற்று பாலம் வழியாக மட்டுமே வேலூர்-காட்பாடி இடையிலான போக்குவரத்து நடைபெறும்
வேலூர்:
வேலூரில் மயானக்கொள்ளை திருவிழாவையொட்டி நாளை பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை புதிய பாலாறு பாலம் வழியாக போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. பழைய பாலாறு பாலம் வழியாக வாகனங்கள் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் மயானக் கொள்ளை திருவிழா நாளை (19-ம் தேதி) கொண்டா டப்படவுள்ளது. இதில், வேலூர் பாலாற்றங்கரை மயானப் பகுதியில் நடைபெறும் விழாவில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரள்வார்கள்.
பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்ப டவுள்ளனர். விழாவை யொட்டி, வேலூர், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், விருதம்பட்டு மற்றும் நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அங்காள பரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து ஊர்வலமாக பாலாற்றங்கரைக்கு எடுத்து செல்வார்கள். ஊர்வ லத்தில் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பல்வேறு சாமி வேடமிட்டு வருவார்கள்.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள பாலாற்றங்கரை பகுதியில் உள்ள மயானப்பகுதியை சீர் செய்யும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றன. அங்கு பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், பாதுகாப்பு பணிகள் தொடர்பாக வேலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பழனி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
மயானக்கொள்ளை விழா நடைபெறும் நாளில் (19-ம் தேதி) பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை புதிய பாலாற்று பாலம் வழியாக போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
பழைய பாலாற்று பாலம் வழியாக மட்டுமே வேலூர்-காட்பாடி இடையிலான போக்குவரத்து நடைபெறும். மேலும், ஊர்வலம் தடையில்லாமல் நடைபெறுவதற்காக மின் நிறுத்தம் செய்யப்படும். 2 போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் தற்காலிகமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சாமி ஊர்வலத்தில் டி.ஜே ஒலிபரப்புக்கு அனுமதியில்லை. அதேபோல், எந்த இடத்தி லும் மயானக்கொள்ளை தொடர்பான டிஜிட்டல் பேனர்கள் வைக்க அனுமதியில்லை.
பொதுமக்கள் வசதிக்காக பாலாற்றில் 100 போகஸ் விளக்குகள் பொருத்தப்பட்டு 2 கண்காணிப்பு கோபுரங்க ளில் இருந்தபடி கண்கா ணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
பொதுமக்களுக்காக 2 இடங்களில் தண்ணீர் தொட்டி வைக்கப்படும். புதிய பஸ் நிலையத்துக்கு கிரீன் சர்க்கிள், செல்லியம்மன் கோவில் நுழைவு பாதை வழியாக வந்து செல்ல வேண்டும். காட்பாடி வழியாக வந்து செல்லும் கனரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
- டிரோன்கள் பறக்க தடை
- முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வேலூர்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை யையொட்டி வேலூர், காட்பாடி பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரி வித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன் கிழமை) சென்னையில் இருந்து ரெயிலில் காட்பாடிக்கு வருகை தருகிறார்.
அவர் இன்று மற்றும் நாளை (வியாழக்கிழமை) காட்பாடி, வேலூர் பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
போக்குவரத்து மாற்றம்
இதையொட்டி வேலூர், காட்பாடி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சித்தூரில் இருந்து வரும் கனரக வாகனங்கள் சேர்க்காடு மற்றும் இ.பி. கூட் ரோடு வழியாக வேலூருக்கு செல்ல வேண்டும்.
குடியாத்தம் பகுதியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் வடுகன்தாங்கல், விரிஞ்சிபுரம் வழியாக வேலூர் பைபாஸ் செல்ல வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வரும் கனரகவாகனங்கள் சாத்துமதுரை, தங்ககோவில் வழியாக பெங்களுரூ பைபாஸ் சாலைக்கு செல்ல வேண்டும்.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி வேலூர் மாநகராட்சி பகுதிக்குள் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லாத வான் ஊர்திகள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லாத வான் ஊர்திகளை பறக்கவி டும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் காவல்து றையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- கோவை போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கோவை
கோவை மேட்டுப்பா ளையம் ரோட்டில் உள்ள சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் அதிகாலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை நாளை, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து சிந்தாமணி, ஹோம் சைன்ஸ் வழியாக, மேட்டுப்பாளையம் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் அவினாசிலிங்கம் மனை யியல் கல்லூரியில் இடது புறம் திரும்பி பாரதி பார்க் ரோடு ஜி.சி.டி., தடாகம் ரோடு, இடையர்பாளையம், கவுண்டம்பாளையம் வழியாக மேட்டுப்பாளையம் ரோட்டை அடையலாம்.
கோவையில் இருந்து சிந்தாமணி, ஹோம் சைன்ஸ் வழியாக கோவிலுக்கு வரும் வாகனங்கள் பாரதிபார்க் ரோட்டில் இருந்து வலதுபுறம் திரும்பி ராஜா அண்ணாமலை ரோடு வழியாக, ராமலிங்கம் செட்டியார் பள்ளி வளாகத்தில், வாகனங்களை நிறுத்திவிட்டு கோவிலுக்கு செல்லலாம்.
மேட்டுப்பாளையம், துடி யலூர், கவுண்டம்பாளையம் பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், சங்கனூர் சோதனைச் சாவடியில் இடது புறம் திரும்பி, கண்ணப்ப நகர் புறக்காவல் நிலையம், தயிர் இட்டேரி, சிவானந்தா காலனி வழியாக நகருக்குள் வரலாம்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவிலுக்கு வரும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களும் மேட்டுப்பாளையம் புதிய பஸ் நிலையம், அதற்கு அருகில் உள்ள பூண்டு குடோன் வாகனம் நிறுத்தும் இடங்களிலும், இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் ஹிப்கோ மோட்டார் கம்பெனி வளாகத்திலும் நிறுத்திவிட்டு, கோவிலுக்கு செல்லலாம். மேட்டுப்பாளையம் புதிய பஸ் நிலையத்தை தாண்டி எந்த வாகனங்களும் செல்ல இயலாது.
காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மற்றும் இதர பஸ்கள் மற்றும் வாகனங்கள், ஜி.பி., சிக்னல். சத்தி ரோடு, நம்பர் 3 பஸ் நிலையம் கணபதி, சங்கனூர் வழியாக மேட்டுப்பாளையம் ரோட்டை அடையலாம்.காந்திபுரத்தில் இருந்து கோவிலுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும், கிராஸ்கட் ரோடு,சிந்தாமணி சந்திப்பு, ஹோம் சைன்ஸ் வழியாக சென்று ராஜா அண்ணாமலை ரோட்டில் வலது புறம் திரும்பி அழகேசன் ரோட்டில் உள்ள, ராமலிங்கம் செட்டியார் பள்ளி வளாகத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு கோவிலுக்கு செல்லலாம்.தடாகம், கணுவாய், இடையர்பாளையம் பகுதியில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கோவில்மேடு சோதனைச் சாவடி, அவிலாகான்வென்ட் பள்ளி, ஜி.சி.டி., லாலிரோடு வழியாக நகருக்குள் வரலாம்.
தடாகம், கணுவாய், இடையர்பாளையம் பகுதியில் இருந்து கோவிலுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் அவிலாகான் வென்ட் பள்ளியில் இருந்து இடது புறம் திரும்பி என்.எஸ்.ஆர்., ரோடில் எஸ்.பி. ஐ.,ல் வலது புறம் திரும்பி ராமலிங்கம் செட்டியார் பள்ளி வளாகத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு கோவிலுக்கு செல்லலாம். போக்குவரத்து மாற்றத்தி ற்கு ஏற்ப பள்ளி மற்றும் கல்லுாரி வாகனங்கள் தங்களது பயணத்தை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். சாலையோர பார்க்கிங் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்து வதற்காக ஒதுக்கீடு செய்ய ப்பட்டுள்ள இடங்களி ல் மட்டும், வாகனங்களை நிறுத்த அனுமதி க்கப்பட்டுள்ளது.பொதுமக்கள், போக்குவ ரத்து மாற்றத்திற்கு ஏற்ப வாகன ஓட்டிகளும், பக்தர்களும் ஒத்துழைப்பு கொடுத்து, பயணத்தை விரைவாக மேற்கொள்ள, கோவை போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்