என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விவசாயிகள் ஆவேசம்"
- கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.
- விவசாயிகள் அரசை நம்பி கரும்பை சாகுபடி செய்து வந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) கென்னடி ஜெபக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு உழவன் பேரியக்கம் மாநில செயலாளர் குறிஞ்சிப்பாடி குமரகுரு பேசுகையில் 2016 ஆம் ஆண்டு முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்படுகிறது. இரண்டு அடி முதல் வழங்கப்பட்ட கரும்பு கடந்த ஆண்டு முழு கரும்பாக வழங்கப்பட்டது. இதனால் விவசாயிகள் அரசை நம்பி கரும்பை சாகுபடி செய்து வந்தனர். இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்று எதிர்பார்த்து பண்ருட்டி கடலூர் சிதம்பரம் நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கரும்பை அரசு கொள்முதல் செய்யவில்லை. இதனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்க வேண்டும்.
இல்லையெனில் விவசாயிகள் விஷம் குடித்து சாவதை தவிர வேறு வழியில்லை. அரசு கொள்முதல் செய்தால் மட்டுமே முழுமையாக விற்பனை செய்ய முடியும். ஆகையால் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்றார். நல்லூர் சுப்பிரமணி:-எங்கள் பகுதியில் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்த பலருக்கு காப்பீடு தொகை வழங்கப்படவில்லை . இதனால் பெரும்பாலான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மங்களூர் மகாராஜா:- திட்டக்குடி வெலிங்டன் ஏரியை கட்டிய வெலிங்டன் பிரபுவுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்.
முன்னதாக கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த விவசாயி ராஜசேகர் திடீரென்று இறந்ததால் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர்.
- கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.
- விவசாய நிலங்களை சேதப்படுத்தினால் வனவிலங்குகளை சுட்டு கொல்வோம் விவசாயிகள் ஆவேசம் அடைந்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மலைப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களுடைய குறைகளை கூறினார்கள்.
பெரும்பாலும் மலைப் பகுதியில் விவசாயத்திற்கு சவாலாக இருக்கின்ற வன விலங்குகள், யானைகள் மற்றும் காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.
விவசாயிகள் பயிரிடக்கூடிய மலைப்பயிர்களை யானை மற்றும் காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருவதால் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை வனத்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆவேசமடைந்தனர்.
தொடர்ந்து வனவிலங்குகள் விவசாயம் செய்யக்கூடிய பகுதிகளுக்கு வந்தால் சட்டத்தின்படி சுட்டுக் கொள்வோம் என்று ஆவேசமாக தெரிவித்தனர்.
மேலும் விவசாயிகள் கேட்கக்கூடிய எந்த கேள்விகளுக்கும் வனத்துறையிடமிருந்து முறையான பதிலும் வராததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்