search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகரசபை கூட்டம்"

    • நகரசபை கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    • பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்

    ஆம்பூர்:

    ஆம்பூர் நகராட்சியில் உள்ள நகர மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்த அவசர கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் ஏஜாஸ் அஹ்மத் தலைமை தாங்கினார்.

    நகராட்சி துணைத் தலைவர் ஆறுமுகம், நகராட்சி ஆணையாளர் ஷகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் வரும் ஓராண்டிற்கு தனியார் மூலம் ரூ.6.64 கோடி மதிப்பில் குப்பை சேகரிக்கும் பணியை மேற்கொள்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-

    வசந்த ராஜ் திமுக கவுன்சில் ஆம்பூர் ஏ-கஸ்பா சாலை பாதாள திட்டப் பணிகளால் மிகவும் சேதமடைந்து வாகனங்கள் சென்றுவர முடியாத சூழ்நிலை உள்ளது.

    எனவே உடனடியாக புதிய சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பொறியாளர். பணி மேற்கொள்ளப்படும் என்று பதில் அளித்தார்.ரமேஷ் திமுக ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள கடைகளில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து இடையூறாக அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

    எனவே அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆம்பூர் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது இதனால் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சித் தலைவர் சம்பந்தப்பட்ட துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதேபோல பல்வேறு கட்சியை சேர்ந்த நகர் மன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டு பிரச்சினை குறித்து கோரிக்கையை முன்வைத்து பேசினார்கள்.நகராட்சி தலைவர் அனைத்தும் பரிசிலனை செய்வதாக உறுதி கூறினார்.

    இந்த கூட்டத்திற்கு 36 வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    • பேரூராட்சி சபை, நகர சபை, மாநகர சபை கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
    • மின் மயானத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை பொதுமக்கள் தெரிவித்தனர்.

    பல்லடம் :

    தமிழகத்தில் தற்போது கிராம சபை கூட்டம் நடைபெறுவது போன்று பேரூராட்சி சபை, நகர சபை, மாநகர சபை கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி பல்லடம் நகராட்சியில் வார்டு எண் - 6 க்கான நகரசபை கூட்டம் ராயர்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி,தலைமை வகித்தார்.நகராட்சி வருவாய் ஆய்வாளர் பிரகாஷ்,சுகாதார ஆய்வாளர் சங்கர்,பணி மேற்பார்வையாளர் ராசு,கணக்காளர் சசிகுமார், மற்றும் வார்டு பொதுமக்கள், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில்,கரையான்புதூர் சக்தி நகரில், கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும், தெரு விளக்குகள் அமைக்க வேண்டும், கிருஷ்ணா நகர் பகுதியில் போர்வெல், அமைத்து சப்பை தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும், கரையான் புதூரில் புதிய ரேஷன் கடை அமைத்து தர வேண்டும், ராயர்பாளையம் மயானத்திற்கு போர் வசதி செய்து தர வேண்டும், பாசன வாய்க்காலில் கோழிக் கழிவுகள் போடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலை அருகே அமைய உள்ள மின் மயானத்தை இடமாற்றம் செய்ய வேண்டும். உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதே போல வார்டு எண் 7-க்கான நகரசபை கூட்டம் ராயர்பாளையம் மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நகர் மன்ற உறுப்பினர் கனகுமணி துரைக்கண்ணன் தலைமை வகித்தார்.நகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அபிராமி நகரில் தெரு விளக்கு வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தர வேண்டும் ராயர்பாளையம் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் பராமரிக்க வேண்டும், தெருவிளக்குகள் பழுதடைந்ததை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், பச்சாபாளையத்தில் நீர்நிலை அருகே மின் மயானத்தை அமைக்காமல், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • செட்டிபாளையம் சாலையில் தனியார் மண்டபத்திலும் பகுதி நகரசபை கூட்டங்கள் நடைபெற்றது.
    • பொதுகழிப்பறையை சுகாதாரமான முறையில் அமைத்து தர வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சியில் வார்டு எண் - 2 சேடபாளையம் நியாய விலை கடை அருகிலும், வார்டு எண் - 3 டி. இ.எல். சி பள்ளி வளாகத்திலும், வார்டு எண் - 5 ல் குலாலர் அங்காளம்மன் கோயில் மண்டபத்திலும், வார்டு -13 ல் செட்டிபாளையம் சாலையில் தனியார் மண்டபத்திலும் பகுதி நகரசபை கூட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டங்களுக்கு நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் விநாயகம், முன்னிலை வகித்தார். நகராட்சி பொறியாளர் ஜான்பிரபு, வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர் சங்கர், அலுவலக மேலாளர் சண்முகராஜா, தலைமை எழுத்தர் சசிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டங்களில், அந்தந்த வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அடிப்படைப் பிரச்சினைகளான குடிநீர் விநியோகம், தெருவிளக்கு, தார் சாலை, உள்ளிட்டவற்றை தீர்க்கக்கோரி கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்கள் தரப்பில் கொடுத்த கோரிக்கை மனுக்கள் விபரம் வருமாறு:-

    வார்டு எண்3ல் நாரணாபுரம் பகுதிக்கு புதிய ரேசன் கடை அமைத்தல் மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்தல், பொதுமக்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்தல், பொதுகழிப்பறையை சுகாதாரமான முறையில் அமைத்து தர வேண்டும். வார்டு எண்.2ல் அங்கன்வாடி மையம் அருகில் குப்பைகளை கொட்ட அனுமதிக்கூடாது. சேடபாளையம்,தண்ணீர்பந்தல் முதல் அருள்புரம் வரை செல்லும் நெடுஞ்சாலை துறைக்கான தார் சாலையை அகலப்படுத்திட வேண்டும். சேடபாளையம் பள்ளி அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும். சேடபாளையம் பகுதியில் தெருநாய் தொல்லை இல்லாமல் செய்ய வேண்டும்.வார்டு எண்.5ல் டி.எம்.டி நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்தல் மற்றும் பெயர் பலகை அமைத்தல், மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும். தெரு நாய் தொல்லையை அகற்ற வேண்டும்.

    அரசு கல்லூரி எதிரே பஸ் நிறுத்துமிடத்தில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும். அம்மாபாளையம் பிரிவில் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும். மங்கலம் சாலையிலிருந்து ராயர்பாளையம் பகுதி வரை பி.ஏ.பி. வாய்க்கால் மண்பாதையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும். வார்டு எண் 13ல் செட்டிபாளையம் சாலை பாலாஜி நகர் பகுதியில் ரேசன் கடை புதியதாக அமைக்க வேண்டும். அருள்ஜோதி நகர்,ராஜ கணபதி நகர் பகுதியில் தெருநாய் தொல்லைக்கு நிவர்த்தி செய்ய வேண்டும். கோவை -செட்டிபாளையம் சாலை சந்திப்பில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட குடிநீர் வசதி, மழை நீர் வடிகால் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    • குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
    • மக்கள் அவதிப்பட்டு வருவதாக புகார்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி கூட்டம் நகர தலைவர் லட்சுமி தலைமையில் நடைபெற்றது.இதில் துணைத் தலைவர் கலாவதி அரக்கோணம் நகராட்சி ஆணையாளர் லதா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கட்சி பாகுபாடு இன்றி தங்கள் வார்டுகளில் குடிநீர் வசதி, குப்பைகளை அகற்றப்பட வேண்டும்.மின்விளக்குகள் எரியவில்லை. எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை என்று நகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் சரமாரி குற்றம் சாட்டினர்.

    25 வார்டு உறுப்பினர் துரை சீனிவாசன் தன்னுடைய வார்டில் ரேஷன் கடை கேட்டு பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து நகர மன்ற துணைத் தலைவர் கலாவதி உட்பட அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்டித்தனர்.

    33வது வார்டு கவுன்சிலர்

    பர்கத் பாட்டிலில் நகராட்சி விநியோகம் செய்கின்ற குடிநீரில் கழிவுநீர் கலந்ததாகவும் இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருவதாகவும் புகார் கூறினார்.

    • நகரசபை கூட்டம் ஏமாற்றத்தை அளிக்கிறது.
    • அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் நகர மன்ற கூட்டம் நேற்று நகர மன்ற தலைவர் லட்சுமி தலைமை தாங்கினார் கமிஷனர் லதா மற்றும் துணைத் தலைவர் கலாவதி முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் இரண்டாவது வார்டு அதிமுக உறுப்பினர் பாபு 36 வார்டுகள் இன் உறுப்பினர்கள் வாட் ஏன் வரிசைப்படி அமர்வதற்கான இருக்கைகள் நகர மன்ற கூட்டத்தில் இல்லாததால் யார் எங்கே அமர்வது என்று குழப்ப நிலை ஏற்படுகிறது.

    மேலும் அவரவர் தங்கள் வார்டுகளில் நிலவி வரும் குறைகளை சொல்வதற்கு வாய்ப்புகள் தவறுகின்றது இதை பலமுறை சொல்லியும் செய்யாமல் எழுத்தடிப்பதாக கூறி அதிமுகவினர் நகர நகர மன்ற கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் இருக்கைகள் சரிவர இல்லாததால் மேஜையின் மேல் அமர்ந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இதனால் நேற்று திமுக மற்றும் அதிமுக உறுப்பினர் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

    இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்நிலையில் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்துவதற்காக கமிஷனர் லதா மற்றும் நகர மன்ற தலைவர் லட்சுமி முயற்சி மேற்கொண்டனர்.

    பல தொடர்ந்து வாக்குவாத நடைபெற்று வந்ததால் இதனை தொடர்ந்து கூட்டம் முடிவு பெற்றதாக கூறி கூட்டத்தை முடித்துக் கொண்டனர்.

    இதனால் நகர மன்ற கூட்டத்திற்கு தங்கள் பகுதியில் நடைபெறும் குறைகளை கூற வந்த வாடு உறுப்பினர்கள் அரக்கோணம் நகர மன்றத்தில் நடைபெற்ற அனைத்துக் கூட்டங்களிலும் ஏதோ ஒரு பிரச்சனை கூறி கூட்டத்தை முடித்து விடுகின்றனர்.

    இதனால் தங்கள் வாடுகளில் இருக்கும் குறைபாடுகளை கேட்டு அது தீர்வு காண முடியாமல் தொடர்ந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றோம் என்று வார்டு உறுப்பினர்கள் புலம்புகின்றனர்.

    • ஊட்டி நகரசபை கூட்டம் நடைபெற்றது
    • வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஊட்டி நகரசபை கூட்டம் தலைவா் வாணீஸ்வரி தலைமையில் ஆணையாளர் காந்திராஜன், , துணை தலைவர் ரவிக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.கூட்டத்தில் உறுப்பினா்களின் விவாதங்கள் வருமாறு:

    ஜாா்ஜ் (திமுக): ஊட்டியில் கேளிக்கை பூங்காக்கள் முறையான அனுமதியுடன் இயங்குகிறா என ஆய்வு செய்ய வேண்டும்.

    முஸ்தபா (திமுக): சேரிங்கிராஸ் பகுதியிலுள்ள ஒரு தனியாா் ஓட்டலின் மேற்புறம் உள்ள கட்டிடம் நீதிமன்ற உத்தரவுப்படி இடிக்கப்பட்டது. தற்போது அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அபுதாகீா் (திமுக): மத்திய பஸ் நிலையத்திலிருந்து படகு இல்லம் செல்லும் சாலையில் மழை பெய்தால் குளம் போல் தண்ணீா் தேங்குகிறது. நகராட்சி பணியாளா்களின் குடியிருப்புகள் பழுதடைந்து காணப்படுகின்றன.

    ஆணையா்: பணியாளா்களின் குடியிருப்புகளை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தம்பி இஸ்மாயில்(திமுக): நகராட்சியில் காந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குப்கபை ழிவுகள் முறையாக அள்ளப்படுவதில்லை.

    கீதா (திமுக): நகராட்சியில் குப்பைகள் அகற்றுவது, கழிப்பிடங்கள் தூய்மைப்படுத்துவது போன்ற அடிப்படை பணிகளை நகராட்சிப் பணியாளா்கள் சரிவர மேற்கொள்வதில்லை.ஆணையா்: கவுன்சிலா்கள் தெரிவிக்கும் பணிகளை சரியாக செய்யாவிட்டால் நகராட்சிப் பணியாளா்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவாா்கள்.

    அனிதா (திமுக): வண்ணாரப்பேட்டை கால்வாயை தூா்வார வேண்டும்.செல்வராஜ் (திமுக): தற்போது பள்ளிக்கூடங்கள் திறந்து விட்டதால் திறந்தவெளி சாக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். நொண்டிமேடு பகுதியில் தனியாா் நிலங்களில் உள்ள புதா்களை அகற்ற வேண்டும். குமாா்(அதிமுக):

    வாா்டு பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சிப் பணிகள் உள்ள நிலையில், நகராட்சி கட்டிடத்தை சீரமைக்கும் பணிகளை கைவிட வேண்டும்.ராஜேஷ்வரி பாபு (காங்): மரவியல் பூங்கா பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டும். நகராட்சி கடைகள் ஏலம் குறித்து கவுன்சிலா்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    அன்பு (திமுக): வாா்டு வரையறையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.

    ரஜினிகாந்த் (காங்): கன மழை பெய்யும்போது சேரிங்கிராஸ் மற்றும் கீரின்பீல்டு பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழை நீா் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

    இவ்வாறு விவாதங்கள் நடைபெற்ற நிலையில்

    துணைத் தலைவா் ஜே.ரவிக்குமாா் பேசுகையில், ஊட்டி படகு இல்லத்தை தோண்டி ஆழப்படுத்த வேண்டும். கோடப்பமந்து கால்வாய் கடந்த ஆட்சிக் காலத்தில் முறையாக பராமரிக் கப்படாத தால்தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் எந்த விதமான வளா்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என்றாா்.

    இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலா்கள் அக்கீம்பாபு, லயோலோ குமார், அன்பு செல்வன் ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து பிற கவுன்சிலா்கள் தங்கள் வாா்டுகள் உள்ள பிரச்சினைகள் குறித்து தெரிவித்தனா். இதன் பின்னா் நகராட்சி கூட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×