search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 238902"

    • தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி அவர் பூரண நலம் பெற வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடை பெற்றது.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக தட்டை பெற்றுக் கொண்டார்.

    அந்தியூர்:

    தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாளை யொட்டி அவர் பூரண நலம் பெற வேண்டி அந்தியூர் ஒன்றிய செயலாளர் ஈ.சுதாகர் தலைமையில் பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடை பெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அவர் பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக தட்டை பெற்றுக் கொண்டார்.

    முன்னதாக நகரப் பொரு ளாளர் விஜயகுமார் அனை வரையும் வரவேற்றார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கோவிலிகளில் வழிபாடுகள் செய்தவற்கு ஏதுவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
    • ஆடி 18 அன்று குலத்தெய்வ வழிபாடு செய்வது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.

     திருப்பூர் :

    ஆடிப்பெருக்கையொட்டி திருப்பூர் மாவட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். திருப்பூர், ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில், வாலிபளையம் மகாகாளியம்மன் கோவில், முருகன் கோவில்வில்களில் காலை முதலே மக்கள் வந்து தனிசனம் செய்தனர். கோவிலிகளில் வழிபாடுகள் செய்தவற்கு ஏதுவாக ஏற்பாடு்கள் செய்யப்பட்டு இருந்தன.

    தாராபுரம் பகுதிகளில் ஆண்டுக்கு ஒரு முறை ஆடி 18 அன்று குலத்தெய்வ வழிபாடு செய்வது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆடிபெருக்கான இன்று தாராபுரம் அமாரவதி ஆற்றங்கரை ஈஸ்வரன் கோவில் அருகே காலை 6 மணி முதல் புத்தாடை அணிந்து வந்த பெண்கள், குழந்தைகள் பலகாரங்கள், பழங்கள், பூக்கள் வைத்து வழிப்பாடு செய்து மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர். அதே போன்று பல்வேறு சமூக மக்கள் ஆற்றுக்கு வந்து குடம் மற்றும் கரகத்தில் ஆற்றின் புனித நீரை எடுத்து குடத்தில் பூக்கள் அலங்காரம் செய்து தங்களது குலந்தெய்வங்களை வழிபாடு செய்வதற்கு எடுத்து சென்றனர். அவினாசிலிங்கேசுவரர்கோவிலில் சுவாமிக்கு சிறப்பஅபிஷேக அலஙகார ஆராதனை நடந்தது. அதிகாலை 5 மணி முதல் அவினாசி, பழங்கரை, சேவூர், கருவலூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து பெண்கள் உள்ளிட்ட திரளான பக்கர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் அனைவருககும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் அவினாசி ஆகாசராயர் கோவில், பெருமாள் கோவில், பழங்கரை பொன்சோழீசுவரர் கோவில், சேவூர் வாலிசுவரர் கோவில், நடுவச்சேரி சிவா புரி அம்மன் கோவில், நல்லி கவுண்டம்பாளையம் கருப்பராயன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    உடுமலை திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் காலையிலேயே திரண்டு வந்தனர். சுவாமிக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்ன. பஞ்சலிங்க அருவியில் புனித நீராடி அரச்சனை செய்து வழிபாட்டில் ஈடுபட்டனர். இதே மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    • விசாலாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • விசாலாட்சி அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி சுவாமி, அம்பாள் மற்றும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விஸ்வநாதர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விசாலாட்சி அம்மன் அகிலாண்டேஸ்வரி கோலத்தில் அலங்காரம் செய்யப்பட்டு, வளையல், மாலை அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் விசாலாட்சி அம்மன் ராஜ வீதிகளில் ஆடிப்பூரத்து அம்மனாக எழுந்தருளி வீதி உலா வந்தார். விடையாற்றி உற்சவத்துக்கு பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கூடலூர் 2-ம் மைல் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஊட்டி:

    ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இதனால் ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் திருவிழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இன்று 2-வது ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கூடலூர் அருகே உள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேல் கூடலூர் சந்தை கடை மாரியம்மன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர். மங்கல பொருட்கள் முன்னதாக கூழ் ஊற்றப்பட்டது. மேலும் மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து இரவு 8 மணி வரை பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இது தவிர கூடலூர் 2-ம் மைல் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோன்று ஊட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவிலுக்கு காலை முதல் மாலை வரை ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கற்பூரம் ஏற்றி மனமுருக பிரார்த்தனை செய்தனர்.

    சிறப்பு பூஜை அரசு ஆஸ்பத்திரி வீதியில் உள்ள ஓம்சக்தி பத்ர காளியம்மன் கோவில், அக்ரஹாரம் பகுதியில் உள்ள துளிர் காத்த அம்மன் கோவில், காந்தல் மூவுலகரசியம்மன் கோவில், கூடுதல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பிரத்தியங்கரா தேவி கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோத்தகிரி கடைவீதியில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் மற்றும் ஊஞ்சல் வழிபாடு நடைபெற்றது

    • சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • அருள் பெற்ற பக்தர்களின் தலையில் கோவில் பூசாரி தேங்காய் உடைத்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர் முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து மாரியம்மன் கோவில் முன் வீரபத்திர சுவாமி பக்தர்கள் சேவையாட்டம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் தங்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தினர். தலையில் தேங்காய் உடைத்து சிதறும்போது பக்தர்களின் துன்பங்கள் யாவும் சிதறிப்போகும் என்பது நம்பிக்கை.

    இதற்காக தலையில் தேங்காய் உடைக்கப்படும் பக்தர்கள் ஆடி மாதம் 1-ம் தேதி முதல் விரதமிருந்து வருகின்றனர்.

    அருள் பெற்ற பக்தர்களின் தலையில் கோவில் பூசாரி தேங்காய் உடைத்தார். தேங்காய் உடைக்கப்படும் நிகழ்வை காண சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.

    • இன்று மாலை நடைபெறுகிறது
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரம்ம தீர்த்தக்கரையில் மேற்கு நோக்கி கால பைரவர் எழுந்தருளி உள்ளார்.

    இவருக்கு ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்று வருகின்றன. அதேபோல் அமாவாசை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரங்களில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.

    அதன்படி இன்று ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு மேல் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேகம் ஆராதனை நடைபெற உள்ளன.

    • ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

    பெரம்பலூர்:

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். ஆடி மாத பிறப்பையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டு மதியம் உச்சிக்கால பூஜை நடைபெற்றது. இதில் பெரம்பலூர் துறைமங்கலம் நியூ காலனியில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இதில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கினர்
    • உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினர் ஏற்பாடு

    அரக்கோணம்:

    அரக்கோணம் சுவால்பேட்டையில் அமைந்துள்ள ராமர் கோவிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நலன் பெற உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் சிறப்பு பூஜை நடத்தினர்.

    வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த துணைத் தலைவர் கதிரவன் தலைமையில் தலைவர் டீட்டா சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    முதல்-அமைச்சர் உடல்நலம் பெற்று பூரண குணமடைய வேண்டி சிறப்பு பூஜை செய்தனர்.

    பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் உதயநிதி ரசிகர் நற்பணி மன்றத்தினர் பிரசாதம் வழங்கினர்.

    இதில் துணைச் செயலாளர் வினோத், தெய்வா, ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஸ்ரீராம், அருண், மதன், விக்கி, சையத், ஏமந்த் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • ஆனி மாதம் வளர்பிறை பஞ்சமியில் வராகி அம்மன் அவதரித்ததை முன்னிட்டு ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
    • சப்த கன்னிகளுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆனி மாதம் வளர்பிறை பஞ்சமியில் வராகி அம்மன் அவதரித்ததை முன்னிட்டு ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

    இதனையொட்டி காலையில் கோவில்நடை திறக்கப்பட்டது. பின்னர் சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சப்த கன்னிகளுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டாரப் பக்தர்கள் கொரோனா நோய் தொற்று காரணமாக சமூக இடைவெளி விட்டு முககவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவகி, ரவிநாராயணன், பிரேமா முருகன், சீதா எட்டப்பன் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார்.
    • அவர் விரைவில் குணமடைய நிலக்கோட்டையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை 4 ரோடு அருகே உள்ள நடராஜர் பெருமாள் கோவிலில் தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி சிறப்பு யாகம், பூஜை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜவகர் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் பழனி, வெள்ளைச்சாமி, வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர்கள் கருத்தப்பாண்டி, மணி முருகன், மாவட்ட துணைச் செயலாளர்கள் மாசாணம், வித்யா முருகேந்திரன், நிலக்கோட்டை ஒன்றிய பொருளாளர் சிவா, முன்னாள் வத்தலகுண்டு ஒன்றிய செயலாளர் சேர்மன் ராஜா, ஒன்றிய அவைத்தலைவர் மணிகண்டன், நிலக்கோட்டை நகர செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காஞ்சரம்பேட்டை கன்னிமார் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
    • பல்வேறு வண்ண பூமாலைகள், பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் நடந்தன.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் காஞ்சரம்பேட்டையை அடுத்த பாறைபட்டியில் உள்ள பேசும் கன்னிமார் கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு உலக நன்மை வேண்டியும், கொரோனா தொற்று இல்லாமல் குறைந்து மக்கள் நலமுடன் வாழ கூட்டு பிரார்த்தனைகள் நடந்தது.

    இதையொட்டி 7 கன்னிமார் அம்மன்களுக்கும் சிறப்பு பூஜைகள், சம்மங்கி, ரோஜா, மல்லிகை, அரளி, முல்லை,செவ்வந்தி, உள்ளிட்ட பல்வேறு வண்ண பூமாலைகள், பட்டாடைகள், அணிவிக்கப்பட்டு, தீபாராதனைகளும் நடந்தது.

    இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அங்குள்ள பேசும் கன்னிமார் கோயில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    முன்னதாக சித்தி விநாயகர், மந்தை கருப்புசாமி கோவிலிலும் பூஜைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பாறைபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×