என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கலை நிகழ்ச்சிகள்"
- இன்று இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது
- இணை பங்கு தந்தை அருட்பணியாளர்கள், பங்கு பேரவையினர், பங்கு மக்கள் இதில் கலந்துகொண்டனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் கடந்த 16-ந்தேதி குடும்ப விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 9-ம் நாள் திருவிழாவான நேற்று இரவு தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
இன்று 10-ம் நாள் திருவிழா நடைபெற்றது. காலை ஆயர் நசரேன் சூசை மறை உரையாற்றினார். அருட்தந்தை டோனி ஜெரோம் மற்றும் இணை பங்கு தந்தை அருட்பணியாளர்கள், பங்கு பேரவையினர், பங்கு மக்கள் இதில் கலந்துகொண்டனர்.
இன்று மாலை 5.30 மணிக்கு நன்றி திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு கிறிஸ்து அரசர் கலைக்குழுவினர் நடத்தும் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 10 நாட்களாக நடைபெற்று வரும் கிறிஸ்து அரசர் ஆலயத்தின் விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
- விவசாயிகள் கலை நிகழ்ச்சி கொடுமுடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையில் நடைபெற்றது.
- உழவன் செயலி உள்ளிட்டவைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.
ஈரோடு:
வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.
இத்திட்டம் செயல்படும் நஞ்சைகொளாநல்லி கிராமத்தில் விவசாயிகள் கலை நிகழ்ச்சி கொடுமுடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் யசோதா தலைமையில் நடைபெற்றது.
வேளாண்மைதுறையின் மூலம் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் அதன் நோக்கம் பற்றியும் தரிசு நிலத்தொகுப்பு குழு அமைத்தல் உள்ளிட்டவைகள் குறித்து கலை நிகழ்ச்சியின் மூலம் விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைக்க ப்பட்டது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டதின் மூலம் வழங்கப் படும் இடு பொருட்கள், இடு பொருட்களை விவசாயிகள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே பதிவு செய்ய உழவன் செயலி உள்ளிட்டவைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.
கலை நிகழ்ச்சியில் ஊராட்சி பேபி செந்தில் குமார், வேளாண்மை அலு வலர் ரேகா, உதவி வேளா ண்மை அலுவலர் மாதவன், உதவி தோட்ட க்கலை அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
- ஆசிரியை ராமஜோதி ஆவுடையம்மாள் நன்றி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லபுத்தூர் அருகேயுள்ள கொங்கலா புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா தலைமை ஆசிரியை மேரி தலைமை யில் நடைபெற்றது.
டி.மானகசேரி ஊராட்சி மன்றத்தலைவி சுபிதா மாயக்கண்ணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணித பட்டதாரி ஆசிரியர் கார்த்தி கேயன் வரவேற்றார். ஆசிரியை ஆனந்தவல்லி ஆண்டறிக்கை வாசித்தார்.
மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. மேலும் மாநில தலைமை கராத்தே பயிற்சி யாளர் சென்சாய் செபஸ்தி யான் தலைமையி்ல் மாணவிகள் கராத்தே சாகச நிகழ்ச்சி நடத்திக்காட்டினர்.
கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவி களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது.
விழாவில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ், தன்னார்வலர்கள் வளர்மதி, வேல்துரைச்சி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்ட னர். ஆசிரியை ராமஜோதி ஆவுடையம்மாள் நன்றி கூறினார்.
- தொண்டி அருகே பள்ளி ஆண்டு விழா நடந்தது.
- பெற்றோர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள சித்தூர் வாடி ஆர்.சி. தொடக்கப் பள்ளி ஆண்டு விழா வின்சென்ட் அன்பரசு தலைமையில் நடந்தது.
தலைமை ஆசிரியர் சுசைராஜ் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். தாளாளர் கிளமெண்ட் ராசா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுரேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர், அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியை பைலோன் மேரி நன்றி கூறினார்.பெற்றோர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.
- தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவில் நீதிபதி பேச்சு
- மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது
வேலூர்:
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட உணவு பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். விழாவுக்கு மாவட்ட வழங்கள் அலுவலர் சுமதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட நுகர்வோர் நீதிபதி மீனாட்சி சுந்தரம் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
நுகர்வோர்களுக்கு அதிக உரிமை உள்ளது. நீங்கள் வாங்கும் பொருள்களில் ஏதேனும் குறைகள் இருந்தால் நுகர்வோர் கோர்ட்டை அணுகலாம். ஆன்லைன் மூலமாகவே தங்களது புகார்களை பதிவு செய்யலாம்.
பொதுவாக வீட்டில் பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் விபத்து ஏற்படும் போதும் அதற்கு காப்பீடு செய்து இருப்பார்கள் இழப்பீடு கிடைக்காவிட்டால் நுகர்வோர் கோர்ட்டை அணுகலாம்.
மருந்து மாத்திரை காலாவதியாகி இருந்தாலும், மருத்துவ சிகிச்சையில் குறைபாடு இருந்தாலும் கோர்ட்டை அணுகலாம். அரசு துறைகளில் எந்த சேவை குறைபாடு இருந்தாலும் நுகர்வோர்கள் உங்களது உரிமைகளை பெறுவதற்கு கோர்ட்டை அனுகினால் தீர்வு கிடைக்கும்.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்குகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் உணவு பொருள் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை, கூட்டுறவுத்துறை மருந்து கட்டுப்பாட்டு துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது இங்கு பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் செயல் விளக்கத்துடன் தெரிவிக்கப்பட்டது.
விழாவில் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.
முன்னதாக மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தொடங்கி வைத்தார்.
- திருப்பத்தூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழா நடந்தது
- பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையம் மூலம் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து குறித்து துண்டு பிரசுரம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காந்தி சிலை முன்பு நடைபெற்றது.
திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி பேசியதாவது:-
ஆண்டுதோறும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது விபத்துக்களால் கை கால் இழந்தவர்கள் உயிரிழந்தவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள் வாகனத்தை கவனத்துடன் சாலை விதிகளை மதித்து ஓட்ட வேண்டும், டிரைவர் உரிமம் இல்லாத எந்த நபரும் வாகனம் ஓட்ட கூடாது.
18 வயது பூர்த்தி அடையாத எந்த நபரும், மோட்டார் வாகனம் ஓட்ட கூடாது.விதி மீறுவோருக்கு உரிமையாளரே பொறுப்பாளர் ஆவார்.
18 வயது பூர்த்தி அடையாத எவரையும் வாகனம் ஓட்ட அனுமதித்தால் அவர் 3 மாதம் சிறை தண்டணை அல்லது ரூ.1000 அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
உரிமம் பெற்று வாகனம் ஓட்ட வேண்டும். வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசுவதை தவிர்க்கவும். வாகனத்தை அதிக வேகம் மற்றும் அபாயகரமாக இயக்க வேண்டாம்.
குடி போதையில் வாகனத்தை இயக்க வேண்டாம். சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும். அதிக பாரம், உயரம் ஆட்களை ஏற்ற வேண்டாம். வாகனத்தின் சுமைகளின் மேல் ஆட்களை ஏற்ற கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கலை நிகழ்ச்சியின் மூலம் மேளம் மற்றும் மயில், மாடு, ஆகிய வேடத்தில் வாகன விழிப்புணர்வு குறித்து பாட்டுக்களை பாடி ஊர்வலம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் இன்ஸ்பெக்டர் துரைசாமி சப்-இன்ஸ்பெக்டர்கள் அகிலன், செல்வராஜ் பலராமன் உடனிருந்தனர்.
விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருந்தபோது 18 வயது முழுமை அடையாத சிறுவன் மற்றொரு சிறுவனை வாகனத்தில் உட்கார வைத்துக் கொண்டு வாகனத்தை ஓட்டி வந்தார். வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
- விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளியில் 74-வது குடியரசு தினவிழா மற்றும் சாரணர் இயக்கம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு தாமரை குழுமத்தின் தலைவர் வெங்கடேசன், துணை தலைவர் நிர்மலா வெங்கடேசன் தலைமை தாங்கினர்.
சிறப்பு விருந்தினராக கும்பகோணம் கல்வி மாவட்ட சாரண இயக்க செயலாளர் சுவாமிநாதன் தமிழ் ஆசிரியர் நகர மேல்நிலைப்பள்ளி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், கும்பகோணம் பள்ளி முதல்வர் விஜயா ஸ்ரீதர், ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பள்ளி மாணவிகள் அணியின் சுற்றுச்சூழல் துணை செயலாளர் மோகனப்பிரியா அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் பள்ளி முதல்வர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
சிறப்பு விருந்தினர் சாரணர் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவர்கள் புதிய உறுப்பினர்களாக பொறுப்பேற்று உறுதிமொழி எடுத்தனர்.
விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பள்ளி மாணவர்கள் அணியின் சுற்றுச்சூழல் செயலாளர் செல்வன் லோகித் நன்றி கூறினார்.
- குழந்தைகளின் நடனம் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
- கேடயங்கள் கொடுத்து கவுரவிக்கப்பட்டனர்.
அரவேணு,
கோத்தகிரி மார்க்கெட் திடலில் குன்றின் குரல்கள் சார்பில் 9-ம் ஆண்டு தமிழர் திருநாள் பொங்கல் விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து வந்த குழந்தைகளின் நடனம் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை சில்ரன் சேரிடபில் டிரஸ்ட், விடியல் டிரஸ்ட் மற்றும் கோத்தகிரி ரேடியோ தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியில் பொதுமக்கள் குழந்தைகள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். மேலும் ஆத்தங்குடி இளையராஜாவின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கு கோத்தகிரி ஒன்றிய செயலாளர் கண்ணன், கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கோத்தகிரி பகுதிகளில் சிறப்பாக செயல்பட்ட சேவை மையங்களின் உரிமையாளர்களுக்கு கேடயங்கள் கொடுத்து கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
- போட்டி நிறைந்த உலகில் போட்டி போட மாணவர்கள் முன்வர வேண்டும்.
- தஞ்சை விவசாயம் சார்ந்த மண்வாசத்தை கொண்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை தாமரை பன்னாட்டு பள்ளியின் 14-ம் ஆண்டு உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான ஆண்டு விழா மண்வாசனை எனும் தலைப்பில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித்தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
துணை தலைவர் நிர்மலா வெங்கடேசன், முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளி முதல்வர் விஜயாஸ்ரீதர், இடைநிலை ஒருங்கிணைப்பாளர் சர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத் ஆண்டறிக்கை வாசித்தார்.
பள்ளியின் தலைவர் வெங்கடேசன் தலைமை உரையாற்றினார். அவர் தஞ்சாவூரில் மேலும் பல பள்ளிகள் தோன்றும்.
அதற்கு தாமரை பன்னாட்டு பள்ளி ஒரு தூண்டுதலாக இருக்கும் என்றார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
போட்டி நிறைந்த உலகில் போட்டி போட மாணவர்கள் முன்வர வேண்டும். போட்டி தேர்வுகளை முழுமன துடனும், விருப்பத்துடனும் எதிர்கொள்ளளும் சூழலுக்கு மாணவர்களை இப்பள்ளி அழைத்து செல்கிறது.
தஞ்சை விவசாயம் சார்ந்த மண்வாசத்தை கொண்டது. அதில் பல திறமைகள் கொண்ட மண்வாசமாக மாற்றிக்கொண்டி ருக்கிறார்கள் மாணவர்கள். பிறந்த மண்ணை மணக்கச் செய்ய வேண்டும்.
தமிழ்மீது உண்மையான நேசம் கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக, மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
- உய்யக்கொண்டான் திருமலை பகுதியில் அமைந்துள்ள பிரான்சிஸ்கன் தலைமை அலுவலகத்தின் கீழ் புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
- திருப்பலியை தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருச்சி :
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியில் அமைந்துள்ள பிரான்சிஸ்கன் தலைமை அலுவலகத்தின் கீழ் புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் அசிசியரின் நினைவு நாளை திருப்பெயர் கொண்ட நாம விழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்த திருப்பெயர் கொண்ட நாம விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் புனித பெரிய நாயக மாதா ஆலயத்தின் பங்குத்தந்தை அம்புரோஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதில் பாதிரியார் ஜோசப் அருள்ராஜ், கன்னியாஸ்திரிகள் பிரமிளா, புஷ்பா, ஸ்டெல்லா, சோம ரசம்பேட்டை பங்குத்தந்தை எட்வர்ட் ராஜ், பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் பன்னீர்செல்வம், உய்யக்கொண்டான் பங்கு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், பிரான்சிஸ் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.
இதில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியை தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவ மாணவிகளின் பேச்சு, நடனம், நாடக போட்டிகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இதில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள், பங்கு மக்கள் மற்றும் பிற சபை சார்ந்த துறவிகள் திரளாக கலந்து கொண்டனர்.முடிவில் எட்வின் நன்றி கூறினார்.
- புத்தக திருவிழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து கொண்டு வரப்பட்ட 110 பதிப்பகங்களின் புத்தகங்கள் குவிக்கப்பட்டிருந்தது.
- வருகிற 4-ம் தேதி வரை நடைபெறும் புத்தக கண்காட்சியில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நாகப்பட்டினம்:
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நாகை யில் நடைபெறும்புத்தக திருவிழாவில், பொன்னி யின் செல்வன், பாரதியார் கவிதைகள், நீதிநூல் கஞ்சியம், சிறுகதைகள் என இந்தியா முழுவதிலும் இருந்து கொண்டுவரப்பட்ட 110 பதிப்பகங்களின் புத்தகங்கள் குவிக்கப்பட்டி ருந்தது.
கடந்த 24ம் தேதி துவங்கிய புத்தக கண்காட்சி ஜூலை 4-ம் தேதி வரை 10, நாட்கள் நடைபெறும் புத்தகக் திருவிழாவின் நிகழ்ச்சியில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர். ஆண்டவர் கல்வி நிறுவனங்களின் முதல்வர் எஸ்.நடராஜனன் உடன் உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்