search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய கொடி"

    • கிராம பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு வருகிறது.
    • பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டுள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய திருநாட்டின் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் வீடுகள்தோறும் தேசிய கொடியினை ஏற்றுவதற்காக மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள வீடுகளுக்கும் மொத்தம் 1.98 லட்சம் அளவிலான கொடிகள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது இடங்களிலும் தேசியக்கொடிகளை ஏற்றுவதற்காக சுமார் 32,000 கொடிகள் வழங்கப்பட்டுள்ளது.

    ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 39,681 தேசிய கொடிகளும்,பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 35,301 தேசிய கொடிகளும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 37,256 தேசிய கொடிகளும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 48,436 தேசிய கொடிகளும், லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் 3,400 தேசிய கொடிகளும்,

    குரும்பலூர் பேரூராட்சியில் 3,694 தேசிய கொடிகளும், அரும்பாவூர் பேரூராட்சியில் 4,100 தேசிய கொடிகளும், பூலாம்பாடி பேரூராட்சியில் 3,216 தேசிய கொடிகளும்,பெரம்பலூர் நகராட்சியில் 14,706 தேசிய கொடிகளும் என மொத்தம் 1,89,790 தேசிய கொடிகள் வீடுகளில் மட்டும் ஏற்றுவதற்காக வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், அரசு துறை சார்ந்த அலுவலகங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏற்றுவதற்காக என மொத்தம் 2.30 லட்சம் தேசிய கொடிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று காலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரும், மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் மற்றும் அரசு அலுவலர்களும் தங்களது இல்லங்களில் மற்றும் தங்களது அலுவலகத்திலும் தேசிய கொடி ஏற்றி உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    கிராம பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தேசியக்கொடிகளை ஏற்றுகின்றனர். வணிக நிறுவனங்களில் நிறுவனத்தின் நிர்வாகிகளும், சிறு,குறு தொழிற்சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே தேசிய கொடியினை ஏற்றி வருகின்றனர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை வழங்கப்பட்ட கொடிகளில் 80 சதவீத கொடிகள் பொதுமக்கள் தங்களது இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் ஏற்றியுள்ளனர். அதுமட்டுமல்லாது அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளிலும் சுதந்திரத்திருநாள் கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றது.

    நேற்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இந்தியத் திருநாட்டின் சுதந்திர நாளை கோலாகலமாக கொண்டாட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

    • திருப்பரங்குன்றத்தில் வீடு, வீடாக தேசியக்கொடி வழங்கப்பட்டது.
    • வீடு, வீடாக சென்று பொது மக்களுக்கு தேசியக் கொடிகளை வழங்கினர்.

    திருப்பரங்குன்றம்

    இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை ஒட்டி மத்திய, மாநில அரசுகள் அதனை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்துள்ளது.

    பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வீடு தோறும் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

    அதில் ஒரு பகுதியாக மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டலம் சார்பில் மண்டல தலைவர் சுவிதா விமல், கவுன்சிலர் சிவசக்தி ரமேஷ், உதவி ஆணையர் சையது முஸ்தபா கமல் உள்ளிட்டோர் திருப்பரங்குன்றம் நகர் பகுதி முழுவதும் வீடு, வீடாக சென்று பொது மக்களுக்கு தேசியக் கொடிகளை வழங்கினர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரி சார்பில் 2 கிராமங்களில் வீடு, வீடாக தேசிய கொடிகள் வழங்கப்பட்டது.
    • ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவி பேராசிரியர் பாபு பிராங்கி ளின் செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி இளங்கலை வணிக வியல் துறையின் விரிவாக்க பணி சார்பில் "இல்லம் தோறும் தேசிய கொடி" என்ற நிகழ்ச்சி அ.மீனாட்சிபுரம் மற்றும் ஆணைக்குட்டம் கிராமங்களில் நடந்தது.

    75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை கொண்டாடும் வகையிலும், தேசிய கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவை நினைவு கூறும் வகையிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கண்ட 2 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளி லும் தேசிய கொடி பறக்க விடப்பட்டது.

    730-க்கும் அதிகமான வீடுகள் உள்ள இந்த கிராமங்களில் இல்லம் தோறும் தேசிய கொடி என்ற நிகழ்ச்சி கிராம மக்களிடையே பெரும் வர வேற்பை ஏற்படுத்தியது.

    கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, தேசிய கொடிகளை மாண வர்களுக்கு வழங்கி இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இளங்கலை வணிகவியல் துறையை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட மாணவர்களும், துறை பேராசிரியர்களும் தன்னார்வமாக இந்த நிகழ்ச்சியை செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவி பேராசிரியர் பாபு பிராங்கி ளின் செய்திருந்தார்.

    • இடையன்குளம் கிராமத்தில் வீடுதோறும் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
    • ஆசிரியப் பயிற்றுநர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் பள்ளிக் கல்வி துறையின் இல்லம் தேடி கல்வி திட்டம் சார்பில் 75-வது சுதந்திர தின நிறைவைக் குறிக்கும் வகையில் வீடுதோறும் தேசிய கொடி வைக்க வேண்டும் என்ற பிரசாரம் தீவிரமாக நடந்தது.

    இடையன்குளம் கிராமத்தில் சுமார் 650 குடியிருப்பு உள்ளது. இங்கு 5 இ்ல்லம் தேடி கல்வி மையங்கள் செயல்படுகின்றன. இதில் சுமார் 140 மாணவ மாணவியர் படித்து வருகிறார்கள்.

    தன்னார்வலர்கள் சித்ரா, மதனா, மனோன்மரியா, லதாபிரியா, சந்திராஆகியோர் தலைமையில் மாணவ-மாணவிகள் தேசிய கொடி ஏந்தி கிராமத்தின் தெருக்களின் வழியே வீடுதோறும் தேசிய கொடியை வலியுறுத்தி ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர் தங்கள் வீடுகளில் தேசிய கொடிகளை மாணவர்கள் வைத்து மரியாதை செய்தனர். மேலும் அனைத்து வீடுகள் மற்றும் கடைகளிலும் தேசிய கொடி வைக்கப்பட்டது.

    பாட்டக்குளம் கிராமத்தில் உள்ள திருமலாபுரம் இல்லம் தேடி கல்வி மையத்தில் தன்னார்வலர் மீனாட்சி தலைமையில் மாணவ- மாணவிகள் தேசிய கொடியேந்தி வீடுதோறும் தேசிய கொடியை வலியுறுத்தி ஊர்வலமாக வந்தனர்.

    நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதி மணிராஜன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் , ஆசிரியப் பயிற்றுநர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.

    • 13, 14, 15, ஆகிய நாட்கள்தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
    • தேசிய கொடி ஏற்றி பொதுமக்கள் சுதந்திர தினமகிழ்ச்சியை இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

    அவினாசி :

    75ம் ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்தியா முழுவதும் அனைத்து வீடுகள் வியாபார நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் 13, 14, 15, ஆகிய நாட்கள்தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி அவினாசி பேரூராட்சி அலுவலகம் ,தாலுகா அலுவலகம், பழங்கரை கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட அலுவலகங்கள், ஓட்டல்கள், மற்றும் ஏராளமான வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி பொதுமக்கள் சுதந்திர தினமகிழ்ச்சியை இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். 

    • காவி, வெள்ளை, பச்சை மற்றும் கருநீலம் என ஆடைகளை அணிந்து இருந்தனர்.
    • மூவர்ணக் கொடி வடிவத்தில் நின்று கின்னஸ் சாதனை படைத்தனர்.
    • இல்லந்தோறும் தேசிய கொடியை ஏற்றி வைக்க பிரதமர் கேட்டுக் கொண்டார்.
    • தமிழகமெங்கும் அதிமுகவினர் தேசிய கொடி ஏற்ற எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்.

    அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியத் திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடக்கூடிய வகையில், இல்லந்தோறும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    அதனையொட்டி, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, தமிழகமெங்கும் கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் 13.8.2022 முதல் 15.8.2022 வரை, அவரவர் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    அதன்படி, தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் இன்று (13.8.2022) இந்தியத் திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    • தேசிய கொடியை ஏற்றுவதை உறுதி செய்யும் வகையில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா ஆலோசனையின் பேரில்வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
    • நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு வேடமிட்ட சிறுவன் காவல்துறையினருடன் இணைந்து பொதுமக்களுக்கு தேசியக்கொடி வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஜோதி அறக்கட்டளை மற்றும் தஞ்சை மாவட்ட காவல்துறை இணைந்து 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவினை முன்னிட்டு பிரதமர் மோடியின் வேண்டுகோளான அனைவரும் தங்களது வீடுகளில், அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்றுவதை உறுதி செய்யும் வகையில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா ஆலோசனையின் பேரில்வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

    இதில் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, நகர போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தேசிய கொடிகளை வழங்கி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர் .

    நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு வேடமிட்ட சிறுவன் காவல்துறையினருடன் இணைந்து பொதுமக்களுக்கு தேசியக்கொடி வழங்கியதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள் .

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார், அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
    • கன்னியாகுமரி மகாதானபுரத்தில் உள்ள கொடிக் கம்பத்திலும் தேசியக்கொடி பட்டொளி வீசி பறந்தது.

    நாகர்கோவில்:

    நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி இல்லந்தோறும் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை தேசிய கொடியேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

    அதன்படி இன்று குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அரசு அலுவலகங்கள் வணிக நிறுவனங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தனது வீட்டில் இன்று தேசிய கொடி ஏற்றினார்.

    நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் மீனாதேவ், மாநில மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன், மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாவட்டத் துணைத் தலைவர் தேவ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் ராமவர்ம புரத்தில் உள்ள எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார்.இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் நாகர்கோவில் நகரில் உள்ள 52 வார்டுகளிலும் பல்வேறு இடங்களில் தேசியக்கொடி இன்று ஏற்றப்பட்டது.

    மேலும் நிர்வாகிகளும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி இருந்தனர். அரசு அலுவலகங்களிலும் இன்று தேசியக்கொடி ஏற்றப்பட்டு இருந்தது. மீனாட்சிபுரம், வடசேரி, கோட்டார், செட்டிக்குளம் பகுதிகளில் உள்ள கடைகள், உணவகங்கள் முன்பும், கொடியேற்றப்பட்டிருந்தது. ஆட்டோக்கள், கார்களிலும் தேசிய கொடி கட்டப்பட்டி ருந்தது.

    அகஸ்தீஸ்வரம் ஒன்றி யத்துக்குட்பட்ட பகுதிகளில் பாரதிய ஜனதா நிர்வாகிகள், முக்கிய சந்திப்புகளில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்கள். பொது மக்கள் பலரும் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி இருந்தனர். ராஜாக்க மங்கலம், தக்கலை, கிள்ளியூர், மேல்புறம், குருந்தன்கோடு, தோவாளை ஒன்றியத்துக்கு உட்பட்ட முக்கியமான இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இருந்தது. மாவட்டம் முழுவதும் இன்று லட்சக்கணக்கான வீடுகளில் தேசியக்கொடி பறக்க விடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி மகாதானபுரத்தில் உள்ள கொடிக் கம்பத்திலும் தேசியக்கொடி பட்டொளி வீசி பறந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா மிக உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.
    • தபால் நிலையங்கள் மூலமும் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா மிக உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதை சிறப்பிக்கும் வகையில் இல்லங்கள் தோறும் இன்று (13-ந்தேதி ) முதல் 15-ந்தேதி வரை தேசிய கொடி ஏற்றுங்கள் என கடந்த 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

    சமூக வலைதளங்கள் மூலமும் இதற்காக அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து தபால் நிலையங்கள் மூலமும் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டது.

    பொதுமக்கள் ஆர்வத்துடன் இந்த கொடிகளை வாங்கினார்கள். இதனால் தேசிய கொடி விற்பனை மும்முரமாக நடந்தது.

    இன்றும் ஏராளமான பொதுமக்கள் கொடிகளை வாங்கி சென்று தங்கள் வீடுகளில் ஏற்றினார்கள் .

    பொதுமக்கள் ஆர்வம் காரணமாக இதுவரை மொத்தம் இந்தியா முழுவதும் 20 கோடி தேசிய கொடிகள் விற்பனை ஆகி உள்ளதாக கலாச்சார துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
    • 18 ஆயிரம் கொடிகள் தயாரிக்கப்பட்டு நகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று தேசியக்கொடி வழங்கினர்.

    பல்லடம் :

    75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று முதல் 15-ந்தேதி வரை வீடுகள், நிறுவனங்கள் , கடைகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டன.

    திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் உள்பட மாவட்டம் முழுவதும் வீடுகள், அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கடைகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டன. மேலும் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் வீடுகள் தோறும் தேசிய ெகாடிகள் விநியோகிக்கப்பட்டன. அதனை பொதுமக்கள் தங்களது வீடுகள் முன்பு ஏற்றினர்.

    பல்லடம் நகராட்சியில் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு தேசிய கொடியை ஏற்ற வைக்கும் நோக்கில் 18 ஆயிரம் கொடிகள் தயாரிக்கப்பட்டு நகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று தேசியக்கொடி வழங்கினர். அந்த கொடிகள் இன்று வீடுகள் மற்றும் கடைகளில் ஏற்றப்பட்டது.  

    • தேசியக்கொடியின் மேல் வேறு அலங்காரம் செய்யவதோ, பூக்களை தூவுவதோ கூடாது.
    • தேசியக்கொடி பிறக்கொடிகளுடன் பறக்கும்பொழுது அக்கொடிகளின் உயரத்தை விட தாழ்வாக பறக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    சுதந்திர தின அமுதப்பெருவிழாவை கொண்டாடும் வகையில் அனைவரும் இன்று முதல் 3 நாட்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற அரசு உத்தரவிட்டு உள்ளது. தேசிய கொடி ஏற்றும்போது கவனிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அரசு தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தேசியக்கொடியினை நல்ல நிலையில் உள்ள கம்பத்தில் அல்லது நேராக உறுதியாக உள்ள கம்பில் (உறுதியான குச்சி) மட்டுமே பறக்க விட வேண்டும். எக்காரணம் கொண்டும் வலைந்த கம்பங்கள் இரும்பு கம்பிகள், குச்சிகளில் பறக்க விடக்கூடாது. மேலும் சாய்வாகவும் பறக்க விடக்கூடாது. கொடியின் மேல் மலர்கள் உட்பட எந்தப் பொருளையும் வைக்கக்கூடாது. அதனை தலையணை உறையாக பயன்படுத்தக்கூடாது. வாகனங்களின் பக்கவாட்டிலோ, முன்புறத்திலோ பயன்படுத்தக்கூடாது. முகக்கவசமாக அணியக்கூடாது. சேதமடைந்த அல்லது அழுக்கடைந்த தேசியக்கொடியினை நாம் பயன்படுத்தக்கூடாது.

    அதேபோல் தேசியக்கொடியின் மேல் வேறு அலங்காரம் செய்யவதோ, பூக்களை தூவுவதோ கூடாது. தரையினை தொடும் வகையில் தாழ்வாக பறக்க விடக்கூடாது. தலைப்பாகையாகவோ, இடுப்பில் ஆடையாகவோ பயன்படுத்தக்கூடாது. வீடு அல்லது கட்டிடத்தின் மேல் உரிய கம்பில் மட்டுமே பறக்க விட வேண்டும். அவமானம் செய்வது போல் பிற இடங்கள் மற்றும் பிற பகுதிகளில் கட்டக்கூடாது.

    தேசியக்கொடி பிற கொடிகளுடன் பறக்கும்பொழுது அக்கொடிகளின் உயரத்தை விட தாழ்வாக பறக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    தேசியக்கொடியினை எக்காரணம் கொண்டும் தலைகீழாக கட்டக்கூடாது. குப்பைத்தொட்டியில் எறியக்கூடாது. நமது சட்டையின் இடதுபுறம் மட்டும்தான் குத்திக்கொள்ள வேண்டும். வலதுபுறம் குத்தக்கூடாது. மேசையின் மீது விரிப்பாக விரிக்கக்கூடாது. ஜன்னல்களில் திரைசீலையாக பயன்படுத்தக்கூடாது. கொடியின் மீது நமது கால்படக்கூடாது. கொடியினை கயிறாக பயன்படுத்தக்கூடாது.

    தேசியக்கொடியினை பயன்படுத்திய பிறகு அழகான முறையில் மடித்து பத்திரமாக வைக்க வேண்டும். கசக்கியோ, சுருட்டியோ வைக்கக்கூடாது.

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×