search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச"

    • தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • குடும்ப அட்டை தரர்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகள் தாலுகா அலுவலகங்களுக்கு வரப்பட்டு பின்னர் வழங்கப்படும்.

    நாகர்கோவில்: தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கரும்பு, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படுகிறது. குடும்ப அட்டை தரர்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகள் தாலுகா அலுவலகங்களுக்கு வரப்பட்டு பின்னர் வழங்கப்படும்.

    இதுபோல் கரும்பு, சர்க்கரை,அரிசி உள்ளிட்ட பொருட்கள் நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பிக்கப்பட்டு பின்னர் ரேஷன் கடை மூலம் விநியோக செய்யப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள வேட்டி, சேலைகள் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தது. அதனை அலுவலகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு அறிவித்த உடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளது.

    • நாளை வரை நடக்கிறது
    • முகாமினை ரத்னா நினைவு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் மகிழன் தொடங்கி வைத்தார்.

    மார்த்தாண்டம், நவ.24-

    சாமியார்மடம் ரத்னா டெஸ்ட்டியூப் பேபி மையத்தில் குழந்தை இல்லா தம்பதியருக்கு இலவச மருத்துவ முகாம் ரத்னா நினைவு மருத்துவமனை வளாகத்தில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. தொடாந்து நாளை (25-ந்தேதி) வரை நடக்கிறது. முகாமினை ரத்னா நினைவு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் மகிழன் தொடங்கி வைத்தார்.

    முகாமானது தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். முகாமில் மருத்துவ ஆலோசனை, விந்தணு பரிசோதனை, ஸ்கேன் ஆகியவை இலவச மாக செய்யப்படும். மேலும் ரத்த பரிசோதனைகள், ஐ.யு.ஐ., ஐ.சி.எஸ்., ஐ.வி.எப். போன்ற மேல்சிகிச்சைகள் சலுகை கட்டணத்தில் செய்யப்படும்.

    முகாமில் கலந்துகொள்ள விரும்பும் குழந்தை இல்லா தம்பதிகள் ஏற்கனவே மேற்கொண்ட பரிசோத னைகளின் முடிவுகள் மற்றும் சிகிச்சை விவ ரங்களை கொண்டு வரு மாறு கேட்டுக் கொள்ளப்படு கிறது. இந்த இலவச முகாமில் கலந்துகொண்ட பெண்களுக்கு ரத்னா டெஸ்ட்டியூப் பேபி மைய இயக்குனர் டாக்டர் சாந்தி மகிழன் மற்றும் மற்றும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    மேலும் ரத்னா நினைவு மருத்துவமனையில் அடிப்ப டை பரிசோதனைகள், கருக்குழாய் அடைப்பை கண்டறிதல், லேப்பிரோஸ் கோப்பி, ஹிஸ்டி ரோஸ்கோப்பி மூலம் கருக்குழாய் அடைப்பை சரி செய்தல், கருமுட்டையை வளர செய்து கண்காணித் தல், விந்தணு பரிசோதனை, உறைநிலையில் விந்தணுக் களை பதப்படுத்து தல், கரு பதப்படுத்துதல், விந்து மீட்பு உட்பட பல்வேறு வகையான சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது.

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் தலைமையில் திருமணத்திற்கான அனைத்து செலவுகளும் கோவிலில் சார்பில் செய்யப்பட்டு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இலவச திருமண நடத்தப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு குறிப்பிட்ட கோவில்களில் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி செஞ்சியை அருகே சிங்கவரத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் வறுமை கோட்டுக்கு கீழுள்ள கோனை கிராமத்தை சேர்ந்த செல்வகணபதி-தேவகி ஆகியோர் திருமணம் நடைபெற்றது.

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் தலைமையில் திருமணத்திற்கான அனைத்து செலவுகளும் கோவிலில் சார்பில் செய்யப்பட்டு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. பின்னர் மணமக்களுக்கு ரூ.50ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை உதவி ஆணையர் ஜீவானந்தம் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் இளங்கீர்த்தி செய்திருந்தார்.

    • (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.
    • சென்னையில் உள்ள ஸ்மைல் ஸ்கில் இந்தியா பயிற்சி நிலையத்தின் மூலமாக திறன்பேசி தொழில் நுட்பவியலாளர் பெண்களுக்கும் உற்பத்தி ஊழியர் பயிற்சி ஆண் மற்றும் பெண்களுக்கும் தாட்கோ சார்பாக அளிக்கப்படவுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது சென்னையில் உள்ள ஸ்மைல் ஸ்கில் இந்தியா பயிற்சி நிலையத்தின் மூலமாக திறன்பேசி தொழில் நுட்பவியலாளர் பெண்களுக்கும் உற்பத்தி ஊழியர் பயிற்சி ஆண் மற்றும் பெண்களுக்கும் தாட்கோ சார்பாக அளிக்கப்படவுள்ளது.

    இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். 10-ம் வகுப்பு படித்த 18 முதல் 35 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 12 நாட்கள் ஆகும். இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான தங்கும் விடுதி மற்றும் பயிற்சிகட்டணம் தாட்கோ வழங்கும். விருப்ப முள்ளவர்கள் இதில் விண்ணப்பம் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை சார்பாக சுகாதார விழிப்புணர்வு முகாம் தளவா பாளையத்தில் நடைபெற்றது.
    • முகாமிற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினரும், அரசு கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன் தலைமை தாங்கினார்.

    பரமத்திவேலூர்:

    கரூர் மாவட்டம் மன்மங்கலம் அருகே பண்டுதகாரன் புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை சார்பாக சுகாதார விழிப்புணர்வு முகாம் தளவா பாளையத்தில் நடைபெற்றது.

    முகாமிற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினரும், அரசு கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன் தலைமை தாங்கினார். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோதை நடேசன், செயலாளர் என்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் ஷாலினி பிரியா மற்றும் டாக்டர் கோகுல கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தளவாபாளையம் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். இந்த முகாமில் வேதியியல் துறை தலைவர் சாந்தி வரவேற்றார். பேராசிரியர்கள் செவ்வந்தி, கவிபிரியா, முதுகலை முதலாம் ஆண்டு மற்றும் இளங்கலை 3-ம் ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • செந்துறையில் சமுதாய வளைகாப்பு விழா
    • கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலை வகித்தார்.

    செந்துறை, 

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் 5 வகையான கலவை சாதங்களை வழங்கி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து அமைச்சர் பேசும் போது,

    கருணாநிதி பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

    அந்த வகையில் தற்போ தைய முதலமைச்சர் பெண் கள் கல்லூரியில் படிக்கும் பொழுது மாதம் 1000 வழங்கப்படும் என்ற சிற ப்பானத் திட்டத்தை செய ல்படுத்தி உள்ளார். பெண்க ளின் முன்னேற்றமே குடும்ப த்தின் முன்னேற்றம். குடும்ப த்தின் முன்னேற்றம் சமுதா யம் மற்றும் நாட்டின் முன் னேற்றம் என்பதை கருத்தில் கொண்டு இதுபோன்றத் திட்டங்கள் செயல்படுத்த ப்படுவதுடன், தமிழகத்தில் அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்ப ட்டு வருகிறது.

    இதன் பயனாக அனைத்துத்தரப்பு பெண்களும் மிகுந்த பயன்பெறுவதுடன் தினசரி 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயணம் மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களது பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவியாக உள்ளது.

    இந்தியாவிலேயே முதல் முறையாக இத்திட்டத்தினை செயல்படுத்தியது நம்மு டைய முதலமைச்சர்தான் அதனைப் பின்பற்றியே தற்போது பிற மாநிலங்கள் இதுபோன்ற சிறப்புத்தி ட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

    மேலும், இச்சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி சத்தான உணவுகளை சாப்பிட்டு நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுப்பதுடன் கல்வியே அழியாத செல்வம் என்பதை உணர்ந்து தங்களது குழந்தைகளை நல்ல முறையில் கல்வி கற்க வைத்து, சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • 155330 எனும் தொலைபேசி எண் சேவை மையம் தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மகளிர் மேம் பாட்டு நிறுவனத்தின் கீழ் மகளிர் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் , தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தீன்தயாள் உபாத்யாய கிரா மின் கவுசல்ய யோஜனா (கிராமப்பபுற திறன் பயிற்சி) போன்ற அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எழும் வினாக்கள், தகவல்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக 155330 எனும் தொலைபேசி எண் சேவை மையம் தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த அழைப்பு மையம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும். தமிழகத் தின் எந்த பகுதியில் இருந்தும் தொலைபேசி அல்லது கைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு திட்ட விவரங்களை எவ்வித கட்டணமும் இன்றி பெற முடியும்.

    குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சுய உதவிக்குழுக்கள் அமைத்தல், வங்கி கடன் உதவி பெறுதல், சுழல் நிதி பெறுதல், பயிற்சி கள், கணக்கு பராமரிப்பு, வாழ்வாதாரம் தொடர்பான திட்ட விவரங்கள், சுய உதவிக்குழுக்கள் மூலம் குழுவாக தொழில் தொடங்கு தல், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் ஆகியன குறித்தும் விளக்கங்கள் பெறலாம்.

    மேலும், 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளை ஞர்கள் சுயதொழில் மேற்கொள்ள ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறு வனங்கள் மூலம் வழங்கப் படும் பயிற்சிகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம். அதேபோல் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு பெற விரும்பும் கிராமப்புற இளைஞர்கள், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறுகிய கால பயிற்சிகள், பயிற்சி மையங் கள், தகுதிகள், பயிற்சியின் போது வழங்கப்படும் வசதிகள் ஆகியன குறித்தும் தகவல்கள் பெறலாம்.

    எனவே பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் 155330 அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டு உரிய தகவல்களை பெற்று பயன டையலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.
    • தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்த மாணவர்கள், தற்போது நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மை தேர்வு எழுதியுள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.

    தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்த மாணவர்கள், தற்போது நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மை தேர்வு எழுதியுள்ளனர். குரூப் 4 தேர்வில் 17 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வாகியுள்ளனர்.

    மேலும், 2022-ல், சீருடைப்பணியாளர்கள் எஸ்.ஐ., தேர்வில் 5 பேர், போலீஸ் தேர்வில் 17 பேர் என, மொத்தம் 22 பேர் தேர்ச்சி பெற்று, தற்போது பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள, டி.என்.பி.எஸ்.சி, குரூப் 1, 2, 4 தேர்விற்கு, இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா தலைமை வகித்து வகுப்பை தொடங்கி வைத்தார்.

    இப்பயிற்சி வகுப்பில், மாவட்டம் முழுவதும் இருந்து, 100-க்கும் மேற்பட்டோர் விண்ணப் பித்திருந்தனர். முதல் நாளான நேற்று 73 பேர் கலந்து கொண்டனர்.

    இது குறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா கூறியதாவது:

    டி.என்.பி.எஸ்.சி, குரூப் 1, 2, 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தற்போது தொடங்கி உள்ளது. 6 மாதத்துக்கு தொடர்ந்து இப்பயிற்சி வகுப்பு நடைபெறும்.

    இந்த இலவச நேரடி பயிற்சி வகுப்பு, தினமும் காலை 10.30 முதல், மதியம் 1.30 மணி வரை நடக்கும். ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுனர்களைக் கொண்டு இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    வாரம் தோறும், செவ்வாய், வெள்ளிக் கிழமை மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். தினமும், பயிற்சி தாள் வழங்கப்படும். இவற்றை சிறந்த முறையில் பயன்படுத்தி பயிற்சி செய்தால், போட்டித் தேர்வில் வெற்றி பெறலாம் என கூறினார். 

    • கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் ஆவின் சார்பில், மாபெரும் கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம், வருகிற 27-ந் தேதி காலை 8 மணி முதல் நடைபெறு உள்ளது.
    • முகாமில், கால்நடை களுக்கு இன்சூரன்ஸ் செய்வது, கால்நடை வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களுக்கான பதில் அளித்தல், கால்நடை மருத்துவர் செயலி பயன்படுத்தும் முறை, நாய் கண்காட்சி உள்ளிட்டவை நடைபெறும்.

    நாமக்கல்:

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சேந்தமங்கலம் ஒன்றியம், மலைவேப்பங் குட்டை, உத்திரகிடிகாவல் கிராமத்தில், நாமக்கல் கால்நடை பராமரிப்புத்துறை யுடன், கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் ஆவின் சார்பில், மாபெரும் கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம், வருகிற 27-ந் தேதி காலை 8 மணி முதல் நடைபெறு உள்ளது.

    இம்முகாமில், கால்நடை களுக்குத் தேவையான அனைத்து விதமான சிகிச் சைப் பணிகள், வெறிநாய் தடுப்பூசி, ராணிக்கட் தடுப்பூசி, சிறிய அறுவை சிகிச்சைகள், செயற்கை முறை கருவூட்டல், அல்டரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை, ஆய்வு செய்ய மாதிரிகள் சேகரித்தல், தாது உப்பு கலவை வழங்குதல், விவசாயிகள் பார்வையிட்டு பயன்பெறும் வகையில், அசோலா, புல்நறுக்கும் கருவி, புல்கரணைகள், தூய்மையான பால் உற்பத்தி, அறிவியல் முறையில் கால் நடை வளர்ப்பு தொடர்பான விவரங்கள் கொண்ட கண் காட்சி நடைபெறும். விவசா யிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அனைவரும் இக்கண்காட்சியை பார்வை யிட்டு பயன்பெறலாம்.

    முகாமில், கால்நடை களுக்கு இன்சூரன்ஸ் செய் வது, கால்நடை வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களுக் கான பதில் அளித்தல், கால்நடை மருத்துவர் செயலி பயன்படுத்தும் முறை, நாய் கண்காட்சி உள்ளிட்டவை நடைபெறும். முடிவில், சிறந்த கன்று பராமரிப்புக்கு பரிசு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுவது குறித்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுவது குறித்த துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் மாவட்டந்தோறும் துறை வாரியாக பல்வேறு நலத் திட்ட முகாம்களை நடத்திட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வருகிற 24-ந்தேதி சனிக்கிழமை முதற்கட்டமாக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டத்திற் குட்பட்ட 4 இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

    முகாமில் ரத்த அழுத்த பரிசோதனைகள், சிறுநீர் பரிசோதனைகள், எக்கோ மற்றும் இ.சி.ஜி., பெண் களுக்கான மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளுடன் முழு ரத்த பரிசோதனையும் இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது. பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன் னோக்கு மருத்துவ ஆலோ சனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்பட உள்ளது. மேலும் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர் வேத சிகிச்சை ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது.

    மாவட்டத்தில் நாகர்கோ வில் மாநகராட்சி பகுதியில் ஏழகரம் அரசு தொடக்கப்பள்ளி, அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட கொட் டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட பொன்மனை அரசு உயர்நி லைப்பள்ளி, விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளி, பரக்குன்னு ஆகிய நான்கு இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடை பெற உள்ளது. பொதுமக்கள் மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் ஆசாரிபள் ளம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பிரின்ஸ் பையஸ், மருத்துவ பணிகளின் இணை இயக்குநர் டாக்டர் பிரகலாதன், நாகர்கோவில் மாநகர்நல அலுவலர் டாக்டர் ராம் குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
    • இந்த தேர்விற்கு www.tnusrb.tn.gov. என்ற இணை யதளம் மூலம் வருகிற 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.

    தற்போது தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் 129 பணிக்காலியிடங்கள் கொண்ட தீயணைப்பு நிலைய அதிகாரிகள், 621 பணிக்காலி யிடங்கள் கொண்ட காவல் உதவி ஆய்வாளர் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்விற்கு www.tnusrb.tn.gov. என்ற இணை யதளம் மூலம் வருகிற 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான இலவச பயிற்சி வகுப்பிற்கு புதிதாக அறிவிக்கப்பட் டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி, நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

    2023-ம் ஆண்டிற்கான உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் onlineclassnkl@gmail.com என்ற இ.மெயில் மூலமாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர் மற்றும் சுயவிவரத்தினை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

    • தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான 621 பணி காலியிடங்களுக் கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • இந்த தேர்வுகளுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் 1.6.2023 முதல் 30.6.2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

    சேலம்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான 621 பணி காலியிடங்களுக் கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் நிலைய அதிகாரி 129 பணி காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் 1.6.2023 முதல் 30.6.2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

    தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. மேலும் பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படு வதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.

    சேலம் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு நிலைய அலுவலர், இரண் டாம் நிலை காவலர் பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலா என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    ×