search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிட் வீச்சு"

    • பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
    • டெல்லியில் இனிமேல் ஆசிட் விற்பனை நடைபெறாது என வியாபாரிகள் உறுதி,

    டெல்லியின் தெற்கு துவாரகா பகுதியில் பள்ளிக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்ற 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி மீது பைக்கில் வந்த இருவர் ஆசிட்டை வீசி விட்டு தப்பிச் சென்றனர். வலி பொறுக்க முடியாமல் கதறியபடி அந்த மாணவி சாலையில் கீழே விழுந்தார். இந்த கொடூர தாக்குதலில் அவரது முகம் மற்றும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆசிட் வீசிய சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அதன் அடிப்படையில் முக்கிய குற்றவாளி உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் நைட்ரிக் அமிலத்தை வாங்கி அந்த குற்றவாளிகள் மாணவி மீது வீசியிருக்கலாம் என்றும், தடயவியல் பரிசோதனையின் பின்னரே அது உறுதிப்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். 


    இந்நிலையில் மாணவி மீதான ஆசிட் வீச்சிற்கு டெல்லி வியாபாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லியில் இனிமேல் ஆசிட் விற்பனை நடைபெறாது என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.ஆசிட் விற்பனையைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றும், ஆசிட் வாங்க வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    பள்ளி மாணவி மீதான ஆசிட் வீச்சிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வெறும் வார்த்தைகளால் எந்த நீதியையும் நம்மால் வழங்க முடியாது, இந்த மிருகங்களுக்கு அளவிட முடியாத வலியைப் பற்றிய பயத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். துவாரகாவில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய இளைஞர்களை பொதுவெளியில் பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காதலிக்க மறுத்த அக்காள் மகள் மீது ஆசிட் வீசி கழுத்தறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • வெங்கடாச்சலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள நாகராஜை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பொட்டி ஸ்ரீராமுலு மாவட்டம், வேதையா பாளையத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை மாணவி பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தார்.

    மாணவியின் பெற்றோர் வெளியே சென்று இருந்ததால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது மாணவியின் வீட்டிற்கு அவரது தாய்மாமன் நாகராஜ் (வயது 22) வந்தார். மாணவியிடம் தன்னை காதலிக்க வேண்டும் என வற்புறுத்தினார்.

    அதற்கு மாணவி ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றார். மாணவி எதிர்ப்பு தெரிவித்ததால் தன்னிடம் இருந்த ஆசிட்டை எடுத்து மாணவியின் முகத்தில் வீசினார். மேலும் கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்தார்.

    மாணவி வலியால் அலறி துடித்தார். அக்கம் பக்கத்தினர் மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். இதனைக் கண்ட நாகராஜ் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவலறிந்த அமைச்சர் கோவர்த்தன ரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு விஜயாராவ் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

    வெங்கடாச்சலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள நாகராஜை தேடி வருகின்றனர்.

    காதலிக்க மறுத்த அக்காள் மகள் மீது ஆசிட் வீசி கழுத்தறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஜார்க்கண்ட் மாநிலம் ஹரிப்பூர் என்ற இடத்தில் இனிப்பு கடை உள்ளது.
    • இனிப்பு கடைக்குள் ஆசிட்டை வீசினார்.

    ஹரிபூர்:

    ஜார்க்கண்ட் மாநிலம் ஹரிப்பூர் என்ற இடத்தில் இனிப்பு கடை உள்ளது. இந்த கடைக்கு ஒருவர் இனிப்பு வாங்குவதற்காக வந்தார். அப்போது அவர் கடனுக்கு உணவு பொருட்கள் கேட்டார். ஆனால் உரிமையாளரோ முடியாது என மறுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் வீட்டுக்கு சென்று ஆசிட் பாட்டில் எடுத்து வந்தார்.

    பின்னர் அவர் இனிப்பு கடைக்குள் ஆசிட்டை வீசினார். இதில் கடையில் இருந்த 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிசிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×