search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 239589"

    • சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
    • 3 நாட்கள் நடைபெற்ற ஆண்டு விழாவில் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் கூடலூர் மண்வயல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமாதேஸ்வர் கோவிலில் ஆண்டு திருவிழா வெகு கோலகலமாக நடைபெற்றது

    சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஆண்டு விழா மகா கணபதி யாகத்துடன் தொடங்கியது. வாத்திய முழக்கங்களுடன் கோழிகண்டியில் தொடங்கி மாதேஸ்வரர் கோவிலில் முடிவடைந்தது.

    3 நாட்கள் நடைபெற்ற ஆண்டு விழாவில் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா குழு தலைவர் கே.கே.கங்காதரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற ஆண்டு விழாவில் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்

    • விழாவிற்கு ஊராட்சி தலைவர் மஞ்சுநாத் தலைமை தாங்கினார்
    • பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

    ஓசூர்,

    ஓசூர் கல்வி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம் எச்.செட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு ஊராட்சி தலைவர் மஞ்சுநாத் தலைமை தாங்கினார். தலைமையாசிரியை சுஜாதா வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக, வட்டார கல்வி அலுவலர்கள் கிருஷ்ண தேஜஸ்,வேதா மற்றும் கோவிந்தப்பா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    விழாவையொட்டி மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

    விழாவில் கவுன்சிலர் சம்பங்கியம்மா மல்லேஷ், பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் பரமேஷ், துணைத்தலைவர் சிவராஜ், வார்டு உறுப்பினர்கள் நாகராஜ், லோகேஷ், கிருஷ்ணமூர்த்தி, மற்றும் மாணவர்களின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஆசிரியை ஹேமலதா நன்றி கூறினார்.

    • பள்ளி முதல்வர் பொன்மனோன்யா குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
    • சிறப்பு விருந்தினராக ட்ரஷர் ஐலண்ட் பள்ளி முதல்வர் சமீமா பர்வின் கலந்து கொண்டார்.

    சுரண்டை:

    சுரண்டை ராஜேந்திரா விஸ்டம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் 12-வது ஆண்டு விழா மற்றும் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழ்ச்செல்வி அம்மா, பள்ளியின் முதல்வர் பொன்மனோன்யா குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனர் சிவ பபிஸ்ராம், செயலர் சிவ டிப்ஜினிஸ்ராம் நிகழ்ச்சியை வழி நடத்தினர். தலைமையாசிரியர் முருகராஜ் விழாவை பொறுப்பேற்று நடத்தினார். மாணவி ஜெசிகா வரவேற்று பேசினார். வில்லுப்பாட்டு, வரவேற்பு நடனமாக சிவ தாண்டவம், மாறுவேடப்போட்டி, விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாடகம், பட்டிமன்றம் மற்றும் நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பு விருந்தினராக ட்ரஷர் ஐலண்ட் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வின் கலந்து கொண்டு கடந்த ஆண்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தினார். மாணவன் ஜெகதீஷ் நன்றி கூறினான். மாணவிகள் ஆதர்சனா மற்றும் அஸ்விதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். ஆசிரியைகள் பிரதீபா மற்றும் ஈஸ்வரி விழாவை ஒருங்கிணைத்தனர்.

    • அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • ஆசிரியை புஷ்பா நன்றி கூறினார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியின் 85-வது ஆண்டு விழா வட்டாரக் கல்வி அலுவலர் புல்லாணி தலைமையில் நடந்தது. யூனியன் சேர்மன் முகமது முக்தார், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திக், பேரூராட்சி சேர்மன் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மஹ்ஜபின் சல்மா, சமீமா பானு, கவுன்சிலர்கள் தாஸ், பெரியசாமி, ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லா, இந்து பரிபாலன சபை தலைவர் ராஜசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியை சுபஸ்ரீ வரவேற்றார்.

    தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் ஆண்டறிக்கை வாசித்தார். மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு பாடல், பட்டிமன்றம், கரகாட்டம், எண்ணும், எழுத்தும் உள்பட பல நிகழ்ச்சிகள் நடந்தன. பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ஜெயந்தன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியை புஷ்பா நன்றி கூறினார்.

    • ராமநாதபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
    • விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள திருப்பாலைக்குடி காந்திநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் 87-வது ஆண்டு விழா கிராமத்தலைவர் தமிழ்கண்ணன் தலைமையில் நடந்தது.

    மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், வட்டார வள மைய அலுவலர் சுரேந்திரன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராஜூ வரவேற்றார். யூனியன் தலைவர் ராதிகாபிரபு, பேரூராட்சி தலைவர் மவுசூர்யா கேசர்ஹான், ரோட்டரி கிளப் மாவட்டத்தலைவர் பார்த்திபன், செயலாளர் கூரிதாஸ், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முத்துசாமி ஆகியோர் பேசினர்.

    விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.ஒன்றிய கவுன்சிலர் காளியம்மாள், கிராமச்செயலாளர் அதிரை மன்னன், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தலைவர் சசி கனி,பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ராணி, ஆலோசனைக்குழு தலைவர் சின்னராஜா, முன்னாள் மாணவர் சங்கம் பால்கனி, உதயவேல் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் அன்பின் அமலன் நன்றி கூறினார்.

    • பள்ளியின் 25-ம் ஆண்டு விழா நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம், பெரியமோட்டூர் ஊராட்சி, பூனைக்குட்டிபள்ளம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிடம் போதுமான இடவசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனால் உயர்நிலைப்பள்ளி தரமாக உயர்த்தப்படாமல் உள்ளது.

    இந்நிலையில் பெங்களூர் பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவர் பள்ளியின் அருகே உள்ள ஒரு ஏக்கர் சொந்த நிலத்தை உயர்நிலைப்பள்ளி கட்டிடம் அமைக்க இலவசமாக கொடுப்பதற்கு முன் வந்தார்.

    இதனை அடுத்து பள்ளியின் 25-ம் ஆண்டு விழா மற்றும் பள்ளிக்கு நிலம் வழங்கியவருக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். அமுதா தலைமை தாங்கினார், பள்ளியின் தலைமை ஆசிரியர் அ. சுப்பிரமணி வரவேற்றார். பெரிய மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் என். கமலநாதன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எம் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ் சத்யா சதீஷ்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

    உயர்நிலைப்பள்ளிக்கு கட்டிடம் அமைக்க ஒரு ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு இலவசமாக கொடுத்த வடிவேலை அனைவரும் பாராட்டு தெரிவித்து சிறப்பு செய்தனர்.

    இறுதியில் பள்ளியின் ஆசிரியை ஜி. ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

    • விழாவுக்கு கஸ்தூரிபா கல்வி சங்க தலைவர் ராமசுப்பு தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி கதிரேசன் கோவில் தெருவில் அமைந்துள்ள கஸ்தூரிபா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 38-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. வ.உ.சி. அரசு மேல்நிலைபள்ளியின் முன்னாள் தமிழ் ஆசிரியரும், கஸ்தூரிபா கல்வி சங்க தலைவருமான ராமசுப்பு தலைமை தாங்கினார். சென்னை ஸ்டான்ஸா லிவ்விங் நிறுவனத்தின் மாநில தலைவர் ராம்பிரசாத், தொழிலதிபர்கள் அசோக்குமார் மற்றும் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தமிழ் ஆசிரியை ஜெயலெட்சுமி, கஸ்தூரிபா பள்ளியின் முன்னாள் ஆசிரியை ஆதிராம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணவேணி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளின் ஆடல், பாடல், சிலம்பம், யோகா உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    மேலும் நிகழ்ச்சியில் அருணாச்சலா ஆன்மீக அறக்கட்டளையின் சார்பாக பள்ளி நிர்வாகத்தினருக்கு சிறந்த கல்வி சேவைக்கான விருதினை அறக்கட்டளையின் தலைவர் அசோக்குமார் வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் சரஸ்வதி சுபா மற்றும் ஆசிரியைகள் திவ்யதர்ஷினி, வேயிலம்மாள், மாரி, மதனா மற்றும் சரண்யா ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை சத்தியா நன்றி கூறினார்.

    • முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா நடந்தது.
    • எந்திரவியல் துறைத்தலைவர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 43-வது ஆண்டு விழா கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் சேக்தாவூது ஆண்டறிக்கை வாசித்தார். விழாவையொட்டி மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    சாதனை படைத்த முதல், 2-ம் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு சென்னை கே.வி.எஸ். தொழிற்சாலை நிர்வாக இயக்குநரும், தொழில் அதிபரும், முன்னாள் மாணவருமான வெற்றிசெழியன் பரிசு வழங்கினார். கல்லுாரி முதுநிலை விரிவுரையாளர் மரியதாஸ் வரவேற்று பேசினார். எந்திரவியல் துறைத்தலைவர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.

    கல்லூரி துணை முதல்வர் சேக் தாவூது, அமைப்பியல் துறை தலைவர் (பொறுப்பு) செந்தில்ராஜன், எந்திரவியல் துறைத்தலைவர் டாக்டர் கணேஷ்குமார், மெரைன் துறை தலைவர் (பொறுப்பு) சுதேவ், மின்னியல் துறை தலைவர் (பொறுப்பு) நாகராஜன், கணினி துறை தலைவர் (பொறுப்பு) நாகராஜன் மற்றும் முதலாம் ஆண்டு துறை தலைவர் (பொறுப்பு) உமையாள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் செய்திருந்தனர். இதில் அனைத்து துறை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • நாடார் வித்தியா சாலை நடுநிலைப்பள்ளி-நாடார் மேல்நிலைப்பள்ளியில் 104-வது ஆண்டு விழா விளையாட்டு போட்டி நடந்தது.
    • முடிவில் ஆசிரியை சபிதா நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை தெற்குவாசல் நாடார் வித்தியாவிருத்தி சங்கம் உறவின் முறைக்குபாத்தியப்பட்ட நாடார் வித்தியாசாலை நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி 104-வது ஆண்டு விழா மற்றும் ஆண்டு விழா நடந்தது.

    53-வது வார்டு உறுப்பினர் அருண்குமார், உதவி பொறியாளர் ராம்சுப்பு ஆகியோர் தொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். பள்ளி செயலாளர் குணசேகரன், உறவின் முறை தலைவர் கணபதி ஆகியோர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

    பேரணி காமராஜர் விளையாட்டு திடலில் தொடங்கி மதுரை கல்லூரி விளையாட்டு மைதானம் வரை நடந்தது. அப்போது மாணவர்கள் அனைவருக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முழக்கங்களை எழுப்பினர். நாடார் வித்தியாசாலை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காந்திபாய் சுவாமியடியாள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    மதுரை மாநகர் காவல்துறை உதவி ஆணையர் (சட்டம், ஒழுங்கு) ஜெகநாதன் தேசிய கொடியை ஏற்றினார்.வட்டார கல்வி அலுவலர் மோசஸ் பெஞ்சமின் ஒலிம்பிக் கொடியை ஏற்றினார். பள்ளி கொடியை பள்ளி செயலாளர் குணசேகரன் ஏற்றினார். சந்திரசேகரன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார்.

    வண்ண பலூன்கள் மற்றும் புறாக்களை பறக்கவிட்டும், பாரம்பரிய ஒயிலாட்டத்துடன் விளையாட்டு போட்டிகள் தொடங்கின. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பின்னர் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி செயலாளர் குணசேகரன் வரவேற்று பேசினார்.

    உறவின் முறை தலைவர் கணபதி, பொருளாளர் ராஜன், செயலாளர் மயில்ராஜன், துணைத்தலைவர் ரமேஷ்பாபு, துணை செயலாளர் அருஞ்சுனை ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிக்குழு தலைவர் பார்த்திபன் தலைமையுரை ஆற்றினார். வட்டார கல்வி அலுவலர் மோசஸ் பெஞ்சமின் வாழ்த்தி பேசினார்.

    நாடார் வித்தியா சாலை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் நல்லாசிரியர் காந்திபாய் சுவாடியடியாள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் நாகநாதன் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில் ஆசிரியை சபிதா நன்றி கூறினார்.

    • முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி பரிசுகளை வழங்கினார்.
    • இந்த விழாவிற்கு வேளாங்கண்ணி பள்ளிகளின் தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 28-ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளியின் முதல்வர் மெரினா பலராமன் ஆண்டறிக்கை வாசித்தார்.

    விழாவின் போது 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் முன்னாள் அமைச்சர் வீரமணி தங்க நாணயங்களை வழங்கினார்.

    முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி பரிசுகளை வழங்கினார். மேலும், வேளாங்கண்ணி அகாடெமியில் பயின்று முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், அவர்களுக்கு பயிற்சி பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் தம்பிதுரை எம்.பி., தங்க நாணயங்களை பரிசாக வழங்கி வாழ்த்தினார்.

    இந்த விழாவிற்கு வேளாங்கண்ணி பள்ளிகளின் தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கினார்.

    இதில் முன்னாள் மத்திய, மாநில அமைச்சரான தம்பிதுரை எம்.பி., பங்கேற்று, விழாவினை தொடங்கி வைத்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, பாலகிருஷ்ணாரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். மேலும் ஆவின் முன்னாள் தலைவர் தென்னரசு, ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், சிட்டி ஜெகதீசன், வக்கீல் அசோகன், சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன், வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ பள்ளிகளின் இயக்குநர் விஜயலட்சுமி, வேளாங்கண்ணி குழுமப் பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், இன்ஜினியர் சரவணன், வேலாயுதம், தொழிலதிபர் ரகுராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில், பள்ளியின் தலைமை ஆசிரியை ஜலஜாக்ஸி நன்றி கூறினார். 

    • நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
    • விழாவில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சமத்துவ மக்கள் கழகத்தின் 8-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இன்று திருவொற்றியூர் தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பொருளாளர் கண்ணன், மாணவரணி செயலாளர் கார்த்திக் நாராயணன், துணை செயலாளர் விநாயகமூர்த்தி, கொள்கை பரப்பு செயலாளர் முனீஸ்வரன், தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், இளைஞரணி துணை செயலாளர் பாலசேகர், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் மதுரை வீரன், மேற்கு மாவட்ட செயலாளர் சுபாஷ், வடக்கு மாவட்ட செயலாளர் விஜயன், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வில்லியம்ஸ், ஈரோடு மாவட்ட செயலாளர் சங்கர் குமார், பாண்டிச்சேரி தனபால், வடசென்னை சீனிவாசன், பகுதி செயலாளர்கள் முத்துக்குமார், ராஜேஷ், மணலி பாலசுப்பிரமணியம், சௌரா சுரேஷ், மகளிர் அணி நிர்வாகிகள் மீனா, குணசுந்தரி, ஆனந்தி, விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடி வித்யாகிரி பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • இதில் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வித்யாகிரி பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் க நடைபெற்றது. விழாவில் வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சுவாமிநாதன் வரவேற்றார். பள்ளி முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன் ஆண்டறிக்கை வாசித்தார். வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணன் மற்றும் பொருளாளர் ஹாஜி முகம்மது மீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி மற்றும் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை மற்றும் என்.சி.சி. கமாண்டிங் ஆபீசர் ரஜ்னீஷ் பிரதாப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி னர். பின்னர் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் ஆசிரிய- ஆசிரியைகள் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் முதல்நாள் நடைபெற்ற கே.ஜி. மழலையர் பள்ளி மாணவர்க ளுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் காட்வின் சந்தீப், டாக்டர் குமரேசன், டாக்டர் கிரிதர்முத்து மற்றும் பொறி யாளர் கலைமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கே.ஜி. மழலையர் பள்ளி மாண வர்களுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

    பின்னர் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன. ஆசிரியை ஜோசபின் நன்றி கூறினார். இதில் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    ×