என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணிக்கவாசகர்"
- மதுரை புட்டுத்திருவிழாவில் பங்கேற்க திருவாதவூரில் இருந்து மாணிக்கவாசகர் 4-ந் தேதி புறப்படுகிறார்.
- திருவிழா முடிந்த பின்பு மாணிக்கவாசகர் மீண்டும் திருவாதவூர் திரும்புகிறார்.
மேலூர்
மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இது ''திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்'' என்று திருவாசகத்தை உலகுக்கு அருளிய மாணிக்க வாசகர் அவதரித்த திருத்தலமாகும்.
இந்த கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சேர்ந்தது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் ஆவணி மூல திருவிழாவின் போது 16 கால் மண்டபத்தில் குதிரை கயிறு மாறுதல் லீலை, நரியை பரியாக்கும் நிகழ்ச்சி, புட்டு தோப்பில் புட்டுக்கு மண் சுமக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு நடைபெறும் இந்த திருவிழாவில், வருகிற 5-ந் தேதி (திங்கட்கிழமை) நரியை பரியாக்கும் நிகழ்ச்சியும், அடுத்த நாள் 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமையும்) மதுரை புட்டு தோப்பில் புட்டுக்கு மண் சுமக்கும் திருவிழாவும் நடைபெறுகிறது.
மீனாட்சி-சுந்தரேசுவரருடன் இணைந்து மாணிக்கவாசகர் வீதிஉலா வருவதற்காக திருவாதவூர் கோவிலில் இருந்து மாணிக்கவாசகர் மதுரைக்கு வருகிற 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)காலை 6.30 மணிக்கு புறப்படுகிறார். வழி நெடுக மண்டகப் படிகளில் அருள் பாலித்து அன்று மாலை மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைவார்.
திருவிழா முடிந்த பின்பு மாணிக்கவாசகர் மீண்டும் திருவாதவூர் திரும்புகிறார்.
- மாணிக்கவாசகர் மண்டபத்தில் ஆனி மாத மகம் நட்சத்திரத்தினை முன்னிட்டு மாணிக்கவாசகர் குருபூஜை நடைபெற்றது.
- விழாவில் கலந்து கொண்ட அனைவ ருக்கும் அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் செட்டியார் தெருவில் உள்ள மாணிக்கவாசகர் மண்டபத்தில் ஆனி மாத மகம் நட்சத்திரத்தினை முன்னிட்டு மாணிக்கவாசகர் குருபூஜை நடைபெற்றது.
விழாவின் நிகழ்வாக காலை 8 மணிக்கு மாணிக்க வாச பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனைத் தொடர்ந்து திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. மதியம் மகேஸ்வர பூஜை உடன் அன்னம் பாலிப்பு நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவ ருக்கும் அன்னதானமும் பி ரசாதமும் வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்