search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை வாலிபர்"

    • நீர் தேக்கத்தில் நண்பர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக தனுஷ் தவறி விழுந்தார்.
    • நீர் தேக்கம் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் தடை செய்யப்பட்ட போதை காளான் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

    கொடைக்கானல்:

    சென்னை வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ் (வயது 25). கேரளாவைச் சேர்ந்த இவர் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சென்னை வடபழனி சாலிகிராமம் காவேரி தெருவைச் சேர்ந்த பாண்டியன் மகன் சந்துரு (18). நண்பர்களான இவர்கள் மேலும் சிலருடன் கடந்த 1-ந் தேதி கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர்.

    பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்து விட்டு மேல்நிலை கிராமமான பூண்டி கிராமத்தில் தங்கி இருந்தனர். பின்னர் அங்கிருந்து கூக்கால் நீர் தேக்கம் பகுதிக்கு சென்றனர். தடை செய்யப்பட்ட இப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீர் தேக்கத்தில் நண்பர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக தனுஷ் தவறி விழுந்தார்.

    உடனே அவரை காப்பாற்ற முயன்ற நண்பர்கள் முடியாமல் போகவே கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கொடைக்கானல் போலீசார், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தனுசை தேடும் முயற்சியில் இறங்கினர். பின்னர் இரவு நேரமாகி விட்டதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

    இன்று 2-ம் நாளாக மீண்டும் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் தேக்கம் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் தடை செய்யப்பட்ட போதை காளான் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து சமூக ஊடகங்களிலும் பிரசாரம் செய்து சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகின்றனர்.

    இதற்காக தடையை மீறி வரும் சுற்றுலா பயணிகள் போதையில் அணைப்பகுதியை சுற்றிப்பார்க்க செல்லும்போது விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே போலீசார் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்கவும், போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விசாரணையின்போது ராஜா முகமதுவின் செல்போனையும் கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • ராஜா முகமதுவிடம் விசாரணை முடிந்ததும் அவரை திருவள்ளூர் குற்றவியல் நடுவர் கோர்ட்டு நீதிபதி மூகாம்பிகை முன்பு ஆஜர்படுத்தினார்கள்.

    திருவொற்றியூர்:

    சென்னை ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா முகமது (வயது26). இவர் கடந்த ஒரு வருடமாக திருவள்ளூரில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கி இருந்தார். திருவள்ளூர் அருகே காக்களூர் பகுதியில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலைபார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு ராஜா முகமது தனது மாமனார் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் திருவள்ளூர் டவுன் போலீசார் ஆகியோர் சென்றனர். அவர்கள் ராஜா முகமதுவை கைது செய்தனர்.

    பின்னர் அவரை மணவாளநகர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது ராஜா முகமது, ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

    கைதான ராஜா முகமது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். அதன் பிறகு அவர் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் செயல்களால் ஈர்க்கப்பட்டார். அவர்களுக்கு ஆதரவான கருத்துக்களையும் இணையதளங்களில் பதிவிட்டு வந்தார்.

    இந்த தகவல்களை பார்த்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் சவூதி அரேபியாவில் இருந்து அவரை தொடர்பு கொண்டனர். இதற்கிடையே ராஜா முகமது திருவள்ளூரில் மாமனார் வீட்டில் தங்கி கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    ஆனாலும் அவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிலேயே இருந்தார். சிக்னல் என்ற தடை செய்யப்பட்ட செயலி மூலம் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு கொண்டு பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. கறிக்கடையில் வேலைபார்க்கும்போது அவர் அடிக்கடி செல்போனிலேயே பேசிக்கொண்டு இருப்பார்.

    இதை அறிந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் அவரை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில்தான் அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் திருவள்ளூர் டவுன் போலீசார் ஆகியோர் கைது செய்தனர்.

    மணவாளநகர் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் அதிகாரிகள் 18 மணிநேரம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகளிடம் ராஜா முகமது பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

    சவூதி அரேபியாவில் இருந்து ராஜா முகமதுவுடன் தொடர்பு கொண்டு பேசிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் அவரை பயங்கரவாத அமைப்பில் சேர வருமாறு அழைத்தனர். அதற்காக சவூதி அரேபியா வருவதற்கான பாஸ்போர்ட், விசா எடுத்து அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

    விசாரணையின்போது ராஜா முகமதுவின் செல்போனையும் கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    ராஜா முகமதுவிடம் விசாரணை முடிந்ததும் அவரை திருவள்ளூர் குற்றவியல் நடுவர் கோர்ட்டு நீதிபதி மூகாம்பிகை முன்பு ஆஜர்படுத்தினார்கள். அவரது உத்தரவின்பேரில் ராஜா முகமது புழல் சிறையில் அடிக்கப்பட்டார்.

    • என்னை மிரட்டி என்னிடம் இருந்து பல்வேறு கால கட்டங்களில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை பெற்று உள்ளார். தற்போது அவர் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார்.
    • எனவே என்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து பணம் மற்றும் நகைகளை பெற்று ஏமாற்றி சங்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை:

    கோவை சவுரிபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார்.

    எனக்கும், எனது கணவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    எனது கணவர் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். நானும் எனது கணவருடன் சேர்ந்து தொழில் செய்து வந்தேன்.

    எங்களது கடைக்கு சென்னையை சேர்ந்தவரும் தற்போது கோவையில் தங்கி இருந்து கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் எனது கணவரின் நண்பர் சங்கர் (வயது 35) என்பவர் அடிக்கடி வந்து சென்றார்.

    அப்போது எனக்கும, சங்கருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. எனது கணவர் இல்லாத நேரத்தில் கடைக்கு வரும் அவர் என்னுடன் நட்பாக பழகினார்.

    ஒருநாள் என்னை ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து நாங்கள் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அதன் பின்னர் இந்த புகைப்படத்தை எனது கணவரிடம் காண்பித்து விடுவேன் என என்னை மிரட்டினார்.

    மேலும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காண்பித்து மீண்டும் ஓட்டலுக்கு வருமாறு என்னை வற்புறுத்தினார். ஓட்டலில் என்னை மிரட்டி வலுக்கட்டாயமாக கற்பழித்தார். மேலும் உல்லாசமாக இருப்பதை எனக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டார்.

    பின்னர் உனது கணவரை விவாகரத்து செய்து விடு, நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறினார். இதனை நம்பிய நான் எனது கணவரிடம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தேன். தற்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    மேலும் சங்கர் தொடர்ந்து என்னிடம் திருமணம் செய்வதாக உறுதியளித்து பலமுறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். நான் வர மறுத்தால் ஒன்றாக இருக்கும் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி வருகிறார்.

    என்னை மிரட்டி என்னிடம் இருந்து பல்வேறு கால கட்டங்களில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை பெற்று உள்ளார். தற்போது அவர் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். எனவே என்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து பணம் மற்றும் நகைகளை பெற்று ஏமாற்றி சங்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் இளம்பெண்ணை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம் செய்து நகை மற்றும் பணத்தை பெற்று ஏமாற்றிய சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×