search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்சங்கர்"

    • அண்டை நாட்டில் ஸ்திரதன்மை இல்லாமல் இருப்பது ஆழ்ந்த கவலையளிக்கும் விஷயம்.
    • இலங்கையுடன் மீனவர் பிரச்சினை உள்பட நீண்டகால பிரச்சினைகள் உள்ளன.

    கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, இந்தியா சார்பில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஏராளமான கடன் உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தைக் சேர்ந்த திமுக மற்றும் அதிமுக கட்சிகள் விடுத்த கோரிக்கையை அடுத்து டெல்லியில் இன்று இலங்கை நிலைமை குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

    ப சிதம்பரம், பரூக் அப்துல்லா, டி.ஆர்.பாலு, எம் தம்பிதுரை, வைகோ, உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் எம்.பி.க்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்பட 8 மத்திய மந்திரிகள் இதில் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டம் நிறைவு பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:

    இன்றைய கூட்டத்தில் இலங்கைக்கு உதவும் நடவடிக்கைகள் குறித்து அரசியல் மற்றும் வெளியுறவு கொள்கை கண்ணோட்டத்தில் நாங்கள் விளக்கம் அளித்தோம். இலங்கையின் தற்போதைய அரசியல் கொந்தளிப்பு, பொருளாதார நெருக்கடி, கடன் நிலைமை குறித்து விளக்கப்பட்டது.

    நமது அண்டை நாட்டில் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டதால், அது எங்களுக்கு ஆழ்ந்த கவலை அளிக்கும் விஷயம்.  மீனவர் பிரச்சினை உள்பட இலங்கையுடன் நீண்ட கால பிரச்சினைகள் உள்ளன. இந்த ஆண்டு இலங்கைக்கு இந்தியா வழங்கிய நிதி உதவி போல் வேறு எந்த நாடும் இந்த அளவு ஆதரவை வழங்கவில்லை.

    இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலர், இலங்கை பொருளாதார நெருக்கடியை இந்தியா ஒரு பாடம் போல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினர்.  இதையடுத்து மாநில வாரியாக, வருவாய் ஒப்பீடு, வளர்ச்சி விகிதம், கடன்கள், சொத்துக்களை அடமானம் வைத்தல் போன்றவை குறித்த மத்திய நிதி அமைச்சகம் ஒரு விளக்கத்தை வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இலங்கைக்கு, இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
    • வாழ்க்கையில் மிகவும் கடினமான கட்டத்தை கடக்க அவர்களுக்கு உதவ விரும்புகிறோம் என தெரிவித்தார்.

    திருவனந்தபுரம்:

    கடும் பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் உள்ள பொதுமக்கள் அத்தியாசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்தனர். இதையடுத்து பதறிப்போன கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார்.

    இந்நிலையில், கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, திருவனந்தபுரத்தில் மந்திரி ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையின் தற்போதைய நிலைமை பதற்றமானது மற்றும் சிக்கலானது. இந்தியாவின் அண்டை நாட்டினர் என்பதனால் இலங்கை மக்களுக்கு நமது ஆதரவை அளிக்க வேண்டும். அவர்களின் வாழ்க்கையில் மிகவும் கடினமான கட்டத்தை கடக்க அவர்களுக்கு உதவ நாம் விரும்புகிறோம் என தெரிவித்தார். 

    • இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும்.
    • நுபுர் சர்மா விவகாரத்தில் வளைகுடா நாடுகளுடன் எந்த முரண்பாடும், அதிருப்தியும் இல்லை.

    பெரும்பாவூர் :

    திருவனந்தபுரத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    இலங்கையில் அதிபரை பதவி விலகக்கோரி மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இது தீவிரம் அடைந்து உள்ளது. இதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும். விரைவில் அங்கு நிலையான அரசு அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.

    கேரள தங்க கடத்தல் வழக்கு விசாரணையின் முடிவில், உண்மை நிச்சயம் வெளிவரும். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரசு அமீரக தூதரத்துடன் நடந்த இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் அனைத்தும், மத்திய வெளியுறவுத்துறைக்கு கிடைத்துள்ளது. இதில் நடக்கக்கூடாது சில சம்பவங்களும் நடந்து உள்ளது. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால், அதுபற்றி கூடுதலாக பேச விரும்பவில்லை.

    நுபுர் சர்மா விவகாரத்தில் வளைகுடா நாடுகளுடன் எந்த முரண்பாடும், அதிருப்தியும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரஷிய தாக்குதல் 4 மாதத்தை தாண்டிய நிலையில் சர்வதேச நாடுகள் உக்ரைனுக்கு உதவி வருகின்றன.
    • உக்ரைன் விவகாரத்தில் இந்தியா சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறது என வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    டெல்லி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது.

    உக்ரைன் விவகாரத்தில் நாம் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம். இது மிகவும் சிக்கலான விவகாரம். இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் தீங்கை அதிகரிக்கும் வகையிலான பகைமையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது தான்.

    பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதிக்கு திரும்பி பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதை ஊக்குவிக்க வேண்டும். இதுதான் உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு. இந்தியா அதன் சொந்த நலனில் முக்கியத்துவம் கொண்டுள்ளது.

    உக்ரைன் போரில் இருந்து எரிபொருள், உணவு, உர தட்டுப்பாடு உள்ளிட்ட மிகப்பெரிய பிரச்சினைகள் உருவெடுத்துள்ளது என தெரிவித்தார்.

    ×