search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண் வளர்ச்சி திட்டம்"

    • நீடித்த வேளாண்மைக் கான தேசிய திட்டம் (என்.எம்.எஸ்.ஏ) என்ற மிகப்பெரிய திட்டத்தின் உள்ளே அடங்கி இருக்கும் விரிவான ஒரு பகுதியே பாரம்பரிய விவ சாய மேம்பாட்டுத் திட்டம் (பி.கே.வி.ஒய்) என்பதாகும்.
    • இந்தத் திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்கு னர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீடித்த வேளாண்மைக் கான தேசிய திட்டம் (என்.எம்.எஸ்.ஏ) என்ற மிகப்பெரிய திட்டத்தின் உள்ளே அடங்கி இருக்கும் விரிவான ஒரு பகுதியே பாரம்பரிய விவ சாய மேம்பாட்டுத் திட்டம் (பி.கே.வி.ஒய்) என்பதாகும்.

    இந்தத் திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படுகிறது. இயற்கை வேளாண்மையில் ஈடுபடக்கூடிய கிராமங்க ளைத் தத்தெடுத்து அவற்றை ஒரு தொகுப்பாக அணுகியும், விவசாயி - அரசு இ-சேவை அல்லாத 3-வது ஒரு அமைப்பிடமிருந்து சான்றி னைப் பெற்றும் இயற்கை வேளாண்மை வளர்ச்சிக்கு ஊக்கம் தரப்படுகிறது.

    இந்தத்திட்டத்தில், வேளாண் விளைபொருள்கள் பூச்சிக்கொல்லி மருந்துப்படிவுகள் இல்லாத வையாக, நுகர்வோரின் உடல்நலத்தை மேம்படுத்தக்கூ டியதாக இருக்கும்.

    விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து, இயற்கை வளங்களைத் திரட்டி இடுபொருள்களை உருவாக்க விவசாயிகளை ஊக்குவிக்கும். இத்திட்டம் நமது பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டில் செயல்படுத்தப்படவுள்ளது.

    இத்திட்டம் தொடர்பான தகவல்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவ லர்கள் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது உழவன் செயலியில் பதிவு செய்து பயனடையலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • தென்னங்கன்றுகள் மற்றும் இடுபொருட்கள் வினியோகம் குறித்து விளக்கினர்.
    • அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

    உடுமலை :

    அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் குடிமங்கலம் வட்டாரத்தில் ஆமந்தகடவு, கொங்கல்நகரம், சோமவாரபட்டி, பண்ணைக்கிணறு, கொசவம்பாளையம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இக்கிராமங்களில் ஊராட்சி தலைவர்கள், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சி, கால்நடை, வருவாய், ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.

    குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா, திட்டத்தின் நோக்கம், வேளாண் துறை சார்பில் தரிசு நில மேம்பாடு, உபகரணங்கள் மானிய விலையில் வழங்குதல், தென்னங்கன்றுகள் மற்றும் இடுபொருட்கள் வினியோகம் குறித்து விளக்கினர்.

    கிராமங்களுக்கு தேவையான தடுப்பணை, குட்டைகள், சமுதாய உறிஞ்சு குழிகள், ரோட்டோர மரக்கன்று நடுதல், வண்டிப்பாதை, மண் சாலை அமைத்தல், உலர் களம், தானிய கிடங்கு கட்டுதல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

    சிறு, குறு விவசாயிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பண்ணை குட்டை, வட்டப்பாத்தி அமைத்தல், வரப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது.திட்ட கிராமங்களுக்கு உதவி வேளாண் அலுவலர்கள், ஆமந்தகடவு - கோதண்டபாணி, கொங்கல்நகரம் -- செந்தில்குமார், சோமவாரபட்டி - ஜெயலட்சுமி, பண்ணைக்கிணறு - அசாருதீன், கொசவம்பாளையம் - கார்த்திக் ஆகியோர் நியமிக்கப்பட்டு கிராம அளவிலான கூட்டங்கள் நடத்தப்பட்டது.

    • தோட்டக்கலை பயிர்களில் அதிக மகசூல் பெற நடவடிக்கை
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நடப்பு நிதியாண்டில் தேசிய தோட்டக்கலை இயக் கம் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 3 லட்சம் நிதி இலக்கு பெறப்பட்டுள் ளது. நடவுப் பொருள் உற்பத்தி இனத்தின் கீழ் புதிதாக திசு வளர்ப்பு கூடம் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் மானியம் வீதம் ஒரு எண்ணத்திற்கு ரூ.20 லட்சம் நிதி இலக்கும், அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் திறந்த வெளி மகரந்த சேர்க்கை மூலம் காய்கறிகள் மற்றும் நறுமணப் பயிர்களின் விதை உற்பத்தி செய்ய ஹெக்டேருக்கு ரூ.35 ஆயிரம் மானியம் வீதம் அரை ஹெக்டேருக்கு ரூ.17500 நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது.

    பரப்பு விரிவாக்க இனத்தின்கீழ், உயர் ரக காய்கறி குழித்தட்டு நாற்று மூலம் சாகுபடி செய்திட ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வீதம் 70 ஹெக்டேருக்கு ரூ.14 லட்சம் நிதி இலக்கும், பல்லாண்டு வாசனைத் திரவிய பயிர்களான நல்ல மிளகு, கிராம்பு மற்றும் ஜாதிக்காய் நடவு செய் திட ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வீதம் 275 ஹெக்டேருக்கு ரூ.55 வட்சம் நிதி இலக்கும் பெறப்பட்டுள்ளது.

    அன்னாசி சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.26,250 மானியம் வீதம் 40 ஹெக்டே ருக்கு ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் நிதி இலக்கும், கோகோ பயிர் சாகுபடி செய்திட ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரம் மானியம் வீதம் 70 ஹெக் டேருக்கு ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் நிதி இலக்கும், இஞ்சி பயிர் சாகுபடி செய்திட ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரம் மானியம் வீதம் 20 ஹெக்டேருக்கு ரூ.2 லட்சத்து நாற்பதாயிரம் நிதி இலக்கும் பெறப்பட்டுள்ளது.

    நீர் ஆதார அமைப்பு உருவாக்குதல் இனத்தின் கீழ் தனிநபர் நீர் அறுவடை அமைப்பு ஒன்றிற்கு ரூ.75 ஆயிரம் மானியம் வீதம் மூன்று அமைப்பிற்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் நிதி இலக்கும், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் பூச்சி மேலாண்மை இனத் தின் கீழ் ஹெக்டேருக்கு ரூ.6,200 மானியம் வீதம் 500 ஹெக்டேருக்கு ரூ.6 லட் சம் நிதி இலக்கும் பெறப் பட்டுள்ளது. விவசாயி களுக்கான உள் மாநில அளவிலான தோட்டக்கலை சார்ந்த பயிற்சிக்கு விவசாயி ஒருவருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் 50 விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம், மாநில அளவிலான பயிற்சிக்கு தலா ஒரு விவசாயிக்கு ரூ.10.500 வீதம் 10 விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் மற்றும் மாவட்ட அள விலான கருத்தரங்கிற்கு ரூ.2 லட்சம் நிதி இலக்காக பெறப்பட்டுள்ளது. தேசிய தோட்டக் கலை இயக்க திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி இலக்கில் 80 சதவிகிதம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் இந்த வருடம் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துக்க ளில் செயல்படுத்தப்படும்.

    இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும். விவசாயி கள் www.tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார தோட்ட கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம்.

    இவ்வாறு கூறி உள்ளார்.

    • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
    • புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, அனைத்து வட்டார அளவிலான அலுவலர்கள் மற்றும் வேளாண் , தோட்டகலை துறை சார்ந்த பொறுப்பு அலுவர்களுக்கு மாவட்ட அளவிளான ஆய்வுகூட்டம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

    இதற்கு கூடுதல் இயக்குநர்(பொ) (மத்திய அரசு திட்டம்) தோட்டகலைதுறை மண்டல அலுவலர் சிவசுப்ரமணிய சாம்ராஜ் தலைமையில் தாங்கினார்.

    மேலும், இத்திட்டத்தின் கீழ் சூலூர் வட்டாரத்தில் பட்டணம், மயிலாம்பட்டி, பீடம்பள்ளி ஆகிய கிராமங்களில் தேர்வு செய்யப்பட்ட தரிசு நில தொகுப்புகளை அவர் கள ஆய்வு செய்தார்.

    இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து கிராமங்களிலும் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கிட அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட்டு தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றவேண்டும் என்பதே ஆகும்.

    அதன்படி, தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சியில் வேளாண், தோட்டகலை துறை சார்ந்த பொறுப்பு அலுவலர் களால் அடிப்படை புள்ளி விபரங்கள் சேகரிக் கப்பட்டு வேளாண் துறை, தோட்ட கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் இதர சகோதர துறைகள் மற்றும் உழவர் நலன் சார்ந்த இதர துறைகளான ஊரக வளர்ச்சி துறை, கால் நடை பராமரிப் புதுறை, கூட்டுற வுத்துறை, மீன்வளத்துறை, பட்டு வளர்ச்சி துறை ஆகிய துறைகள் மூலம் செயல்படுத்தப்படவுள்ள பணிகள் மற்றும் அதன் மதிப்பீடு குறித்த விபரம் அடங்கிய விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

    விரியான திட்ட அறிக்கை பணி தொடர்பாக மண்டல அலுவலரால் அனைத்து அலுவர்களுக்கும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அனைத்து துறைகளின் ஒருங்கினைப்புடன் இத்திட்டத்தினை செயல்படுத்திட அறிவுரை வழங்கப்பட்டது.

    • வடபூதிநத்தம் கிராமத்தில் கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.
    • விவசாயிகளுக்கு மானிய உதவிகள், இடு பொருட்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    மடத்துக்குளம் :

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் வேளாண்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.உடுமலை அருகே, வடபூதிநத்தம் கிராமத்தில் கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.

    வேளாண் துறை உதவி இயக்குனர் தேவி தலைமை வகித்தார். தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடைத்துறை, மின் வாரியம் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.இதில்உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தும் சிறப்புத்திட்டங்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய உதவிகள், இடு பொருட்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படும் கிராமத்திலுள்ள விவசாயிகளுக்கு தேவைப்படும் மானியத்திட்டங்கள் குறித்து பதிவு செய்தனர். கிராமத்திலுள்ள விவசாயிகள் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் வேளாண் வளர்ச்சி திட்டங்களில் ஏதாவது ஒரு திட்டத்தின் கீழாவது பயன்பெறும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.உழவன் செயலி வழியாக விவசாயிகள் பதிவு செய்வது குறித்தும் சிறு, குறு விவசாய சான்று பெறுவது, உழவர் கடன் அட்டை, பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு, கிசான் சம்மான் திட்டத்தின் கீழ், 2 ஆயிரம் ரூபாய் தவணை கிடைக்காத விவசாயிகளுக்கு தீர்வு, நடமாடும் மண் பரிசோதனை வழியாக ஆய்வு செய்து உரப்பரிந்துரை செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    ×