search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடுகள் விற்பனை"

    • புதுக்கோட்டை சந்தைக்கு புதுக்கோட்டை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வாங்கவும், விற்கவும், வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர்.
    • சந்தையில் செம்மறியாடு, வரையாடு, வெள்ளாடு என மூன்று வகையான சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஆடுக விற்பனையானது.

    புதுக்கோட்டை:

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் நடைபெற்று வரும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை களை கட்டியது. 2000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு இருந்த நிலையில் ஒரு ஆட்டிற்கு வழக்கத்தை விட ரூ.500 முதல் ஆயிரம் வரை விலை அதிகரித்து இருந்தது.

    விலை அதிகரித்த போதிலும் ஆடுகளை வியாபாரிகளும் பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி வருவதால் விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். புதுக்கோட்டை சந்தைக்கு புதுக்கோட்டை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வாங்கவும், விற்கவும், வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர்.

    இந்த சந்தையில் செம்மறியாடு, வரையாடு, வெள்ளாடு என மூன்று வகையான சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஆடுக விற்பனையானது. ஆடு ஒன்று ரூ.3000 முதல் ரூ.25000 வரை விற்கப்பட்டது. ரம்ஜானையொட்டி இன்று நடைபெற்ற சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • செம்மறி ஆடு, வெள்ளாடு, மறிக்கை, என சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டுள்ளது.
    • நாளை இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதிக விலையில் ஆடுகள் விற்பனை ஆகிறது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளியில் புகழ்பெற்ற வாரச்சந்தையில் வெள்ளிக்கிழமைதோறும் ஆடு, மாடு, கோழி, விற்பனை நடைபெற்றது.

    தற்போது நாளை இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக அழைத்து வந்துள்ளனர்.

    செம்மறி ஆடு, வெள்ளாடு, மறிக்கை என சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டுள்ளது. காலை 5 மணிக்கு துவங்கிய வார சந்தை தற்போது விற்பனை மும்முரமாக களைகட்டி நடைபெற்று வருகிறது.

    தற்போது நாளை இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதிக விலையில் ஆடுகள் விற்பனை ஆகிறது.

    கிடா ஆடு 12 முதல் 15 ஆயிரம் வரையிலும், பெண் ஆடு 7000 முதல் 8000 வரையிலும், ஆடுகளின் எடைக்கு ஏற்ப கூடுதல் விலைக்கு விற்பனை ஆகிறது.

    இன்று ஒருநாள் மட்டும் சுமார் ஆறு ஆயிரம் முதல் எட்டாயிரம் வரையில் ஆடுகள் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் மூலம் சராசரியாக ரூபாய் 5 கோடி விற்பனையாகும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.700 என்கிற வகையில் வழக்கமான நாட்களில் விற்பனை செய்யப்படும்.
    • பெரிய ஓட்டல்களில் ரம்ஜான் ஆர்டரை எடுப்பதற்காக தனி கவுண்டர்களும் திறக்கப்பட உள்ளன.

    சென்னை:

    ரம்ஜான் பண்டிகை வருகிற 22-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் சந்தைகளில் ஆடு விற்பனை களைகட்டி உள்ளது.

    ரம்ஜானையொட்டி சென்னையில் 40 ஆயிரத்தில் இருந்து 45 ஆயிரம் ஆடுகள் வரையில் இறைச்சிக்காக வெட்டப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு ஆட்டிறைச்சி வியாபாரிகள் தொழிலாளர்கள் நல சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராயபுரம் அலி கூறும்போது, புளியந்தோப்பு ஆட்டு தொட்டியில் 30 ஆயிரம் ஆடுகள் வரையிலும் சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆட்டு தொட்டிகளில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையாகும் என்றும் தெரிவித்து உள்ளார்.

    ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.700 என்கிற வகையில் வழக்கமான நாட்களில் விற்பனை செய்யப்படும் என்றும் இது ரம்ஜானையொட்டி 50 ரூபாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனால் சில்லரை விற்பனை கடைகளில் பொதுமக்களுக்கு விற்பனை விலை ரூ.850 முதல் ரூ.900 வரையில் உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே அசைவ ஓட்டல்களில் பிரியாணி ஆர்டரும் குவிந்து வருகிறது. பக்கெட் பிரியாணிக்கு பலர் ஆர்டர் கொடுத்து உள்ளனர். இதன் காரணமாக பெரிய ஓட்டல்களில் ரம்ஜான் ஆர்டரை எடுப்பதற்காக தனி கவுண்டர்களும் திறக்கப்பட உள்ளன. ரம்ஜான் பண்டிகை நாளான வருகிற 22-ந்தேதி சனிக்கிழமை 'கிருத்திகை' யாகும். இந்த நாளில் முருக பக்தர்களில் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்க்க நினைப்பார்கள்.

    இதனால் தங்களது இந்து நண்பர்கள் பலருக்கு முஸ்லிம்கள் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பிரியாணி தயார் செய்து கொடுக்கவும் முடிவு செய்து உள்ளனர்.

    • நாட்டு கோழி ஒரு கிலோ ரூ.400 முதல் 450 வரை விற்பனையானது.
    • சந்தையில் ஆடுகள் கோழிகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

    காரிமங்கலம்,

    காரிமங்கலத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வார சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தையில் ஆடு, கோழி, மாடு உள்ளிட்ட கால்நடைகள் காய்கறிகளுடன் அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் வழக்கத்தைவிட அதிக அளவில் கால்நடைகள் அத்தியாவசிய பொருட்கள் விற்பனையாகும்.

    இந்த வாரசந்தைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் வந்து கால்நடைகள் மற்றும் காய்கறி உள்ளிட்டவற்றை வாங்கி செல்வார்கள். நாளை யுகாதி பண்டிகை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் கொண்டா டி வருகின்றனர்.

    யுகாதி பண்டிகையை முன்னிட்டு கிராம புரத்தில் உள்ள மக்கள் கறி விருந்துக்கு ஆடு கோடிகளை பழியிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கறிவிருந்து வைப்பது வழக்கம். இந்த நிலையில் காரிமங்கலத்தில் இன்று வாரச்சந்தை கூடியது. நாளை யுகாதி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் ஆடுகள் கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு எடைக்கு ஏற்றவாறு 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.6,000 முதல் ரூ.9,000 வரை விற்பனையானது. எடைக்கேற்ப அதிகபட்சமாக ஒரு ஆடு ரூ. 20 ஆயிரம் வரை விற்பனை செய்யட்டு சுமார் 2ஆயிரம் ஆடுகள் விற்பனையானது.

    இதே போல் நாட்டு கோழி ஒரு கிலோ ரூ.400 முதல் 450 வரை விற்பனையானது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் விற்பனையானது. இந்த ஆடுகள் கோழிகளை வியாபாரிகள் பொதுமக்கள் என போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் சந்தையில் ஆடுகள் கோழிகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. ஆடுகள் கோழிகள் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காரிமங்கலம் வாரச் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் ரூ.1 கோடிக்கு விற்பனை நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.
    • இன்று சந்தையில் ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியானது கர்நாடகா, ஆந்திராவை ஒட்டியுள்ள தமிழக பகுதியாக அமைந்து உள்ளதால் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.

    மேலும் வரும் மார்ச் 22-ம்தேதி தெலுங்கு வருடபிறப்பு தொடங்க உள்ளதால் இன்று சந்தையில் ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. 

    • சாதாரண வாரங்களில் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை வியாபாரம் நடைபெறும்.
    • நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் நேற்றிரவு முதல் ஆடுகள் விற்பனை களைகட்டியது.

    எட்டயபுரம்:

    தென்தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச் சந்தைகளில் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் ஆட்டுச்சந்தை.

    விவசாயிகளிடம் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும் வெள்ளாடு, சீனி வெள்ளாடு செம்மறியாடு உள்ளிட்ட ஆடுகளை வாங்கி செல்ல வியாபாரிகள் ஆர்வம் காட்டுவது வழக்கம்.

    வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தைக்கு மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தென்காசி, நாகர்கோவில், தேனி, கோவை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

    சாதாரண வாரங்களில் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை வியாபாரம் நடைபெறும். பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் என பண்டிகை காலங்களில் பல கோடி ரூபாய் மதிப்பில் ஆடுகள் வியாபாரம் நடைபெறுவது வழக்கம்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் நேற்றிரவு முதல் ஆடுகள் விற்பனை களைகட்டியது.

    இந்த ஆண்டு அதிகளவு ஆடுகள் வரத்தும் இருந்தன, விற்பனையும் இருந்தது. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில் எடைக்கு ஏற்ப ரூ.7 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் ரூபாய் வரை விலை போனதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    விடிய விடிய களை கட்டியிருந்த சந்தையில் ஒரேநாளில் சுமார் ரூ.4 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்று இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • புகழ்பெற்ற வாரச்சந்தையில் வெள்ளிக்கிழமை தோறும் ஆடு, மாடு, கோழி, விற்பனை நடைபெற்று வருகிறது.
    • ஆயிரக்கணக்கான வியாபாரிகள், பொதுமக்கள், ஆடுகளை வாங்க குவிந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளியில் புகழ்பெற்ற வாரச்சந்தையில் வெள்ளிக்கிழமை தோறும் ஆடு, மாடு, கோழி, விற்பனை நடைபெற்று வருகிறது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், மற்றும் கர்நாடகா, ஆந்திரா, ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக அழைத்து வந்துள்ளனர். செம்மறி ஆடு, வெள்ளாடு, மறிக்கை, என சுமார் 10 ஆடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டுள்ளது.

    காலை 5 மணிக்கு துவங்கிய வார சந்தை தற்போது விற்பனை மும்முரமாக களைகட்டி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை, வேலூர், மதுரை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு, பொள்ளாச்சி, விழுப்புரம், கடலூர், ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகா, பெங்களூர், ஆந்திரா, போன்ற பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள், பொதுமக்கள், ஆடுகளை வாங்க குவிந்துள்ளனர்.

    பண்டிகை காலங்கள் இல்லாத இதர நாட்களில் வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட ஒரு கிடா ஆடு அதிகபட்சமாக 10 முதல் 12000 வரையிலும், பெண் ஆடுகள் அதிகபட்சமாக 5 ஆயிரம் முதல் 7000 வரையிலும், விற்பனை ஆகும், தற்போது பண்டிகை முன்னிட்டு அதிக விலையில் ஆடுகள் விற்பனை ஆகிறது. கிடா ஆடு 12 முதல் 15 ஆயிரம் வரையிலும், பெண் ஆடு 7000 முதல் 8000 வரையிலும், ஆடுகளின் எடைக்கு ஏற்ப கூடுதல் விலைக்கு விற்பனை ஆகிறது. இதனால் ஆடு வளர்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆடுகள் வாங்கிச் செல்லும் வியாபாரிகள் அதிக விலை விற்பதால் ஆட்டு இறைச்சியின் விலை அதிகரிக்கும் என்றும் வழக்கமாக ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில் தற்போது பண்டிகை காலங்களில் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.

    சராசரியாக தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்களும், வியாபாரிகளும், போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்குவதால் விற்பனை அதிகரித்துள்ளது. வாரச்சந்தை நடைபெறும் இடம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள், வியாபாரிகள், பொதுமக்கள், விவசாயிகள் குவிந்துள்ளனர்.இன்று ஒருநாள் மட்டும் சுமார் ஆறு ஆயிரம் முதல் எட்டாயிரம் வரையில் ஆடுகள் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் மூலம் சராசரியாக ரூபாய் 8 கோடி விற்பனையாகும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கிராமங்களில் இருந்து ஆடுகள் மாடுகள் பெரும்பாலும் விற்பனைக்கு குவியும்.
    • வியாபாரம் 1 கோடி வரை நடந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிடி வட சந்தையூர் கால்நடை சந்தை மிகவும் பிரபலமானது, இந்த சந்தைக்கு வாரம்தோறும் அருகில் உள்ள சேலம் மாவட்ட மலை கிராமங்களில் இருந்து ஆடுகள் மாடுகள் பெரும்பாலும் விற்பனைக்கு குவியும்.

    தற்போது இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட இருப்பதால் இந்த வார வியாழக்கிழமை சந்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

    கரிநாள் பண்டிகைக்கு தேவையான கறி ஆடுகளை இந்த சந்தையில் வாங்குவதற்காக தருமபுரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் குவிந்ததால் வார சந்தை களை கட்டியது.

    இந்த சந்தைக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலை கிராமத்தை சேர்ந்த அக்கறையூர், பூமரத்தூர், கோவிலூர், எஸ். பாளையம், மோரூர்.கோவிந்தாபுரம், ஜாலி கொட்டாய். மலை கிராமங்களில் இருந்தும், தருமபுரி மாவட்டத்தில் அச்சம்பட்டி, கோம்பை, தண்டா, வே.முத்தம்பட்டி, கொண்ட கர ஹள்ளி போன்ற பகுதிகளில் இருந்து மலை ஆடுகள் விற்பனைக்கு குவிந்தது.

    அதை வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனர். மலை ஆடுகள் இயற்கை தலை, இலை, கொடி ,செடி சாப்பிட்டு தரமாக உள்ளதால் அவற்றை கறிக்கு வாங்க பொதுமக்கள் வியாபாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஒரு ஆடு குறைந்தது ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை ஆனது. இந்த சந்தையில் சுமார் ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு வந்துள்ள தாகவும், வியாபாரம் 1 கோடி வரை நடந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    • வருகின்ற 15-ந் தேதி தை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
    • இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் திருச்சி, சேலம், மதுரை, தேனி, கம்பம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் பல பகுதியிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து இருந்தனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று வாரச்சந்தை நடப்பது வழக்கம்.

    அதன்படி இன்று நடைபெற்ற இந்த சந்தைக்கு ஆசனூர், குன்னத்தூர், எறையூர், கிளியூர், பாதூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    வருகின்ற 15-ந் தேதி தை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வார சந்தையில் இன்று ஆடுகள் விற்பனை களை கட்டியது. இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் திருச்சி, சேலம், மதுரை, தேனி, கம்பம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் பல பகுதியிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து இருந்தனர்.

    ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூ. 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது சந்தை தொடங்கி 2 மணி நேரத்திலேயே ரூ. 2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சந்தையில் வாரந்தோறும் சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் போடப்படுகிறது.
    • ரூ. 20 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

    அரூர்,

    கம்பைநல்லூர் வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது.

    மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இந்த சந்தையில் வாரந்தோறும் சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் போடப்படுகிறது.

    இங்கு நடைபெறும் ஆடு, கோழி உள்ளிட்ட வாங்க விவசாயிகளும், ஆடு வளர்ப்பவளும், விற்பனைக்கு கொண்டு வந்தனர் ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.

    நேற்று நடந்த சந்தையில் 290க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும் கொண்டு வந்தனர்.

    10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு விலை ரூ. 5,300 முதல் ரூ.7,300 வரையும் விற்பனையானது,

    தொத்தம் ரூ. 20 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • வியாபாரிகள் வேதனை
    • மொத்தம் ரூ.4.60 லட்சத்திற்கு மட்டுமே விற்பனை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் சந்தைக்கு தங்களின் ஆடுகளை விற்கவோ, வாங்கவோ இங்கு கூடுகின்றனர்.

    அதுமட்டுமின்றி, வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வாங்கவும், விற்கவும் வருவார்கள்.

    இதனாலேயே ஒடுகத்தூர் ஆட்டு சந்தையில் விற்பனை களைகட்டும். இங்கு வாரம் தோறும் சுமார் ரூ.10 முதல் 15 லட்சம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்படும்.

    இந்நிலையில், வழக்கம்போல் இன்று ஆட்டு சந்தை கூடியது. ஆனால், காலை முதலே லேசான சாரல் மழை பெய்ததால் குறைவான ஆடுகளே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

    இதனால், குறைந்த அளவிற்கே ஆடுகள் விற்பனையானது. இதனால், வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ஆடுகள் மொத்தமாக ரூ.4.60 லட்சத்திற்கு மட்டுமே விற்பனையானது என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    • வெள்ளிக்கிழமை தோறும் ஆடு மாடு கோழி விற்பனை நடைபெற்று வருகிறது
    • 6 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை யாகும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி புகழ்பெற்ற வாரச்சந்தையில் வெள்ளிக்கிழமை தோறும் ஆடு மாடு கோழி விற்பனை நடைபெற்று வருகிறது தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி தர்மபுரி வேலூர் மற்றும் கர்நாடகா ஆந்திரா ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக அழைத்து வந்துள்ளனர். செம்மறியாடு, வெள்ளாடு, மறிக்கை, என சுமார் 8000 ஆடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டுள்ளது. காலை 5 மணிக்கு துவங்கிய வார சந்தை தற்போது விற்பனை மும்முறமாக நடைபெற்று வருகிறது தமிழகத்தில் சென்னை வேலூர் மதுரை கோவை சேலம் திருச்சி ஈரோடு பொள்ளாச்சி விழுப்புரம் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகா பெங்களூர் ஆந்திரா போன்ற பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆடுகளை வாங்க குவிந்துள்ளனர்.

    பண்டிகை இல்லாத இதர நாட்களில் வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட ஒரு கிடா ஆடு அதிகபட்சமாக 10 முதல் 12000 வரையிலும் பெண் ஆடுகள் அதிகபட்சமாக 5 ஆயிரம் முதல் 7000 வரையிலும் விற்பனை செய்யப்படும் தற்போது பண்டிகை முன்னிட்டு அதிக விலையில் ஆடுகள் விற்பனை ஆகிறது கிடா ஆடு 12 முதல் 15 ஆயிரம் வரையிலும் பெண் ஆடு 7000 முதல் 8000 வரையிலும் விற்பனை ஆகிறது. இதனால் ஆடு வளர்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆடுகள் வாங்கிச் செல்லும் வியாபாரிகள் கூடுதல் விலை விற்பதால் ஆட்டு இறைச்சியின் விலை அதிகரிக்கும் என்றும் வழக்கமாக ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில் தற்போது பண்டிகை காலங்களில் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தனர். சராசரியாக தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களும் வியாபாரிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்குவதால் விற்பனை அதிகரித்துள்ளது. வாரச்சந்தை நடைபெறும் இடம் முழுவதும் ஆயிரக் கணக்கான மக்கள் வியாபாரிகள் பொதுமக்கள் விவசாயிகள் குவிந்து உள்ளனர். இன்று மட்டும் சுமார் 6 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை யாகும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×