search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து பிரதமர்"

    • இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் போட்டியிடுகிறார்.
    • இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர்கள் இருவரையும் சீனா எச்சரித்துள்ளது.

    பீஜிங் :

    இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக், வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் பொருளாதார கொள்கைகள், வரிக்குறைப்பு போன்ற பல்வேறு விவகாரங்களில் வேறுபட்ட கருத்துகளை கொண்டிருந்தாலும், சீனாவை எதிர்ப்பதில் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளனர்.

    இங்கிலாந்துக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல் என இருவரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அதுமட்டும் இன்றி, பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் சீனாவுடான உறவில் கண்டிப்புடன் இருப்பேன் என்றும், இங்கிலாந்தின் தொழில்நுட்பங்களை சீனா திருடுவதை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் இருவரும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சீனாவை ஒரு அச்சுறுத்தலாக முன்னிறுத்தி பிரசாரம் செய்வதை நிறுத்தும்படி இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர்கள் இருவரையும் சீனா எச்சரித்துள்ளது.

    இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், "சில இங்கிலாந்து அரசியல்வாதிகளுக்கு நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சொந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாத நீங்கள் சீனாவை அச்சுறுத்தல் என்று அழைப்பது உள்பட சீனாவை பற்றி பொறுப்பற்ற கருத்துகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்" என்றார்.

    • இங்கிலாந்து பிரதமர் தேர்தல் ஆகஸ்டு 4-ந் தேதி முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை நடக்கிறது.
    • போட்டியிட்ட 8 பேரில் 2 பேரை இறுதி வேட்பாளர்களாக தேர்வு செய்தனர்.

    லண்டன் :

    இங்கிலாந்தின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் அண்மையில் பதவி விலகியதை அடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. பிரதமர் பதவிக்கான போட்டியில் 2-க்கும் அதிகமான வேட்பாளர்கள் களம் இறங்கியதால் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

    அந்த வகையில் முதல் கட்ட தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் பல்வேறு சுற்றுகளாக வாக்களித்து போட்டியிட்ட 8 பேரில் 2 பேரை இறுதி வேட்பாளர்களாக தேர்வு செய்தனர். அதன்படி இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் இறுதி வேட்பாளர்களாக தேர்வாகி உள்ளனர்.

    இவர்கள் இருவரில் ஒருவரை கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சுமார் 2 லட்சம் உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள். அதற்கான தேர்தல் ஆகஸ்டு 4-ந் தேதி முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை நடக்கிறது.

    கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள். இடையே நடந்த முதல் கட்ட தேர்தலில் அனைத்து சுற்றுகளிலும் ரிஷி சுனக் முதல் இடத்தை பிடித்ததால் அவர் பிரதமராக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போதைய நிலவரத்தின்படி கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடையே ரிஷி சுனக்கை காட்டிலும், லிஸ் டிரஸ்சுக்கே அதிக ஆதரவு உள்ளது.

    இதனிடையே பிரதமர் பதவிக்கான போட்டியில் லிஸ் டிரஸ், ரிஷி சுனக்கை விட 28 புள்ளிகள் முன்னிலையில் இருப்பதாக கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதனால் இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ரிஷி சுனக்கிற்கு அதிக ஆதரவு நிலவி வருகிறது.
    • ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இருவரும் டிவி விவாதத்தில் பங்கேற்க உள்ளனர்.

    லண்டன் :

    இங்கிலாந்து நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆளும் பழமைவாத கட்சி (கன்சர்வேடிவ்) நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாளி எம்.பி.க்களான ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் மந்திரிகள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 8 பேர் களத்தில் இருந்தனர்.

    இதனையடுத்து, பல சுற்றுகளாக நடந்த வாக்கெடுப்பில் குறைவான வாக்குகளை பெற்ற வேட்பாளர்கள் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து போட்டியில் இருந்து வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்தின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

    அந்த வகையில், 8 எம்.பி.கள் வேட்பாளர்களாக களமிறங்கிய நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 2 ஆக குறைந்துள்ளது. 3 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில் கடைசியாக நடந்த வாக்கெடுப்பில் குறைவான வாக்குகளை பெற்ற பென்னி மார்டன்ட் போட்டியில் இருந்து வெளியேறினார்.

    ஆரம்பம் முதலே அதிக வாக்குகளுடன் முன்னிலையில் உள்ள இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி லிஸ் டிரஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதன் மூலம் இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக் - லிஸ் டிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    ஐந்தாவது சுற்று தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் 137 பேர் ஆதரவு பெற்றார். லிஸ் டிரஸ் 113 பேரின் ஆதரவு பெற்றார். வர்த்தக மந்திரியாக இருக்கும் பென்னி மோர்டன்ட்டுக்கு 105 வாக்குகள் கிடைத்தன.

    இதன்மூலம் இறுதிக்கட்ட பிரதமர் வேட்பாளர்களாக ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் களத்தில் உள்ளனர். ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இருவரும் திங்கட்கிழமை நடக்கவுள்ள டிவி விவாதத்தில் பங்கேற்க உள்ளனர்.

    புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான இறுதி சுற்றில் பழமைவாத கட்சியில் (கன்சர்வேடிவ்) மொத்தமுள்ள 2 லட்சம் உறுப்பினர்களும் தபால் மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். இந்த வாக்குகள் எண்ணப்பட்டு அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

    செப்டம்பர் 5-ம் தேதி வெற்றியாளர் அறிவிக்கப்பட உள்ளார். வெற்றியாளர் இங்கிலாந்தின் புதிய பிரதமராக அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. ரிஷி சுனக்கிற்கு அதிக ஆதரவு நிலவி வரும் சூழ்நிலையில் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கட்சி தலைவர் பதவியில் இருந்தும் போரிஸ் ஜான்சன் விலகினார்.
    • முதல் சுற்று தேர்தலில் 30 எம்.பி.க்களின் ஆதரவை பெற தவறும் எந்தவொரு வேட்பாளரும் வெளியேற்றப்படுவார்.

    லண்டன் :

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் ஊழல் புகார் எழுந்தது. முன்னாள் துணை தலைமை கொறடா கிறிஸ்டோபர் பின்சர் தொடர்புடைய சமீபத்திய ஊழலால் அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இங்கிலாந்து சுகாதார மந்திரி சாஜித் ஜாவித், இந்திய வம்சாவளி எம்.பி.யான ரிஷி சுனாக் உள்ளிட்ட அரசின் உயர் பதவியில் இருந்த 30 பேர் பதவி விலகினர்.

    மொத்தம் 58 மந்திரிகள் அரசில் இருந்து வெளியேறினர். இதனால், பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். தனது நெருங்கிய சகாவான கஜானா தலைவர் நதீம் ஜகாவி, நாட்டின் நலனை முன்னிட்டு பதவி விலகும்படி கூறியதன் அடிப்படையில் ஜான்சன், கடந்த வாரம் வியாழக்கிழமை பதவி விலகினார்.

    எனினும், புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை அவர் இந்த பதவியில் தொடருவார். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் ஜான்சன் இருந்த நிலையில், கட்சி தலைவர் பதவியில் இருந்தும் அவர் விலகினார். எனவே கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் விரைவில் தொடங்க உள்ளன.

    போரிஸ் ஜான்சன் பதவி விலகலை தொடர்ந்து புதிய பிரதமருக்கான பதவிக்கு பல்வேறு நபர்கள் போட்டியில் இறங்கியுள்ளனர். அவர்களில் ஜான்சன் மந்திரி சபையில் நிதி மந்திரியாக பதவி வகித்த, இந்திய வம்சாவளி எம்.பி.யான ரிஷி சுனாக் கடந்த வெள்ளி கிழமை புதிய பிரதமர் போட்டிக்கான தனது அறிவிப்பினை வெளியிட்டடார்.

    இதேபோன்று, அமைச்சரவையில் இருந்து பதவி விலகிய பாகிஸ்தான் வம்சாவளி சுகாதார மந்திரி சஜித் ஜாவித், போக்குவரத்து மந்திரி கிராண்ட் ஷேப்ஸ், முன்னாள் வெளியுறவு மந்திரி ஜெரிமி ஹண்ட் ஆகியோரும் போட்டியில் உள்ளனர். மேலும் அட்டார்னி ஜெனரல் சுயல்லா பிரேவர்மென், ஈராக் வம்சாவளி நதீம் ஜகாவி, நைஜீரிய வம்சாவளி கெமி பெடனாக், டாம் டுகெந்தாட் ஆகியோரும் வேட்பாளர் ஆனார்கள்.

    இந்த போட்டியில் வர்த்தக மந்திரி பென்னி மோர்டான்டும் இணைந்து உள்ளார். இந்த சூழலில், இங்கிலாந்து புதிய பிரதமர் பதவிக்கான போட்டியில் அந்நாட்டு வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் இறங்கியுள்ளார். கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

    இதற்காக, இந்தோனேசியாவில் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற அவர், உடனடியாக அதனை முடித்து கொண்டு லண்டனுக்கு திரும்பினார். எம்.பி. ரகுமான் சிஸ்டி போட்டியில் உள்ள சூழலில், லிஸ்சின் அறிவிப்பு ஆகியவற்றால், இங்கிலாந்து நாட்டின் அடுத்த பிரதமருக்கான போட்டி வேட்பாளர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.

    58 வயது நிறைந்த ஜான்சன் 3 ஆண்டுகளாக அதிகாரத்தில் நீடித்து வந்த நிலையில், கட்சிக்கு நன்கொடை அளிப்பவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளார் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. அடாவடித்தனத்தில் ஈடுபட்ட மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தனது ஆதரவாளர்களை பாதுகாத்து வந்துள்ளார். நாடாளுமன்றத்தினை தவறாக வழிநடத்தியதுடன், பொதுமக்களுக்கு நேர்மையற்ற முறையில் நடந்து கொண்டார்.

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கு விதிகளை மீறி நடந்து கொண்டார் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுப்பப்பட்டன. எனினும், வருகிற அக்டோபர் வரை அவர் பதவியில் நீடிக்க கூடும் என கூறப்படுகிறது. அதன்பின்னரே கன்சர்வேடிவ் கட்சியின் வருடாந்திர கூட்டம் நடத்தப்பட்டு ஜான்சனுக்கு பதிலாக மற்றொரு நபரை தேர்வு செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து போக்குவரத்து மந்திரி கிராண்ட் ஷேப்ஸ், முன்னாள் சுகாதார மந்திரி சஜித் ஜாவித் மற்றும் வெளியுறவு மந்திரி ரகுமான் சிஸ்டி ஆகிய 3 பேர் வாபஸ் பெற்று விட்டனர். இதனால், இந்த தேர்தலில் இறுதியாக 8 பேர் போட்டியில் உள்ளனர்.

    இவர்கள் அனைவரும் கன்சர்வேடிவ் கட்சியின் 20 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் முதல் சுற்று வாக்கெடுப்பில் போட்டியிடுவார்கள். தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களின் முன்பதிவு நிறைவடைந்து விட்டது. முதல் சுற்று தேர்தலில் 30 எம்.பி.க்களின் ஆதரவை பெற தவறும் எந்தவொரு வேட்பாளரும் வெளியேற்றப்படுவார்.

    புதிய கன்சர்வேடிக் தலைவர் 2 நிலையிலான தேர்தல் முறையில் தேர்வு செய்யப்படுவார். இதற்காக 358 உறுப்பினர்கள், அடுத்தடுத்து நடத்தப்படும் வெளியேற்றுதல் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வேட்பாளர்களின் எண்ணிக்கையை குறைத்து கொண்டே வருவார்கள். இறுதியில் 2 வேட்பாளர்கள் என்ற நிலைக்கு கொண்டு வரப்படும். இந்த தேர்தலில் போட்டியிடும் பலரும், கார்ப்பரேசன் வரி, வருமான வரி உள்ளிட்ட வரிகளை குறைப்போம் என உறுதி கொடுத்து உள்ளனர். இங்கிலாந்தில் விரி விதிப்பு மக்களுக்கு நெருக்கடியாக உள்ள சூழலில் அதனை வேட்பாளர்கள் கையில் எடுத்துள்ளனர்.

    • இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.
    • இவர் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ஆவார்.

    லண்டன்:

    ஆளுங்கட்சியில் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து அந்நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.

    ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் தான் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதால் கட்சி தலைமைக்கு கடும் போட்டி வலுத்து வருகிறது.

    இதில் போரிஸ் ஜான்சன் மந்திரி சபையில் நிதி மந்திரியாக இருந்தவரும், இந்திய வம்சாவளி எம்.பி.யுமான ரிஷி சுனக், இந்திய வம்சாவளியை சேர்ந்த சூவெல்லா பிரேவர்மன், பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சாவித் ஜாவித், ஈராக் வம்சாவளியை சேர்ந்த நாதிம் சாகவி உள்பட 10 பேர் போட்டியில் உள்ளனர்.

    இவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். இவர் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ஆவார்.

    ரிஷி சுனக் தனது பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாம் அனைவரும் இணைந்து நம்பிக்கையை மீட்டெடுப்போம். பொருளாதாரத்தை மீண்டும் கட்டமைப்போம். நாட்டை ஒற்றுமைப்படுத்துவோம். இந்த தருணத்தில் சரியான முடிவுகள் எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.

    இந்த வீடியோ 3 நிமிடங்கள் வரை ஓடுகிறது. அதில் ரிஷி சுனக் தனது பெற்றோர், குடும்ப பாரம்பரியம் பற்றி கூறி உள்ளார். அதோடு தனது பெற்றோர் எப்படி போராடினார்கள்? அவர்களுக்கு பிரிட்டன் எப்படி சிறந்த எதிர்காலத்தை அளித்தது என்பது பற்றியும் ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனா காலத்தில் தான் மேற்கொண்ட பணிகள் பற்றியும் ரிஷி சுனக் பேசி உள்ளார்.

    தற்போதைய தகவல்படி ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் மொத்தம் உள்ள 358 எம்.பி.க்களில் 8 சதவீதம் பேர் ரிஷி சுனக்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இதுதவிர பென்னி மார்டன்டுக்கு 6 சதவீத ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. சுகாதார மற்றும் சமூக நலக்குழு தலைவர் ஜெரிமி ஹன்டுக்கு 6 சதவீத ஆதரவும் உள்ளது. அதிக எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதால் ரிஷி சுனக் பிரதமராக தேர்வாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

    • கன்சர்வேடிவ் கட்சியில் எம்.பி.க்களின் ஆதரவுடன் இறுதி செய்யப்பட்ட 2 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.
    • பிரதமர் தேர்வு போட்டியில் பங்கேற்பதாக ரிஷி சுனக் அறிவிப்பு.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமர் மற்றும் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்த நிலையில், அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.

    அடுத்த வாரம் இது தொடர்பான கால அட்டவணை வெளியிடப்படும் என கன்சர்வேடிவ் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கூறி உள்ளார். கன்சர்வேடிவ் கட்சியில் எம்.பி.க்களின் ஆதரவுடன் இறுதி செய்யப்பட்ட 2 வேட்பாளர்கள் தலைமை பொறுப்புக்கு போட்டியிடுவார்கள்.

    இந்த நிலையில், இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் போட்டியில் தாம் பங்கேற்க உள்ளதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அறிவித்துள்ளார். கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவராகவும், உங்கள் பிரதமராகவும் நான் நிற்கிறேன் என்றும், தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், நாட்டை மீண்டும் ஒன்றிணைப்பதற்கும் இது சரியான தருணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ஆவார். வடக்கு யோர்க்-ஷயர் தொகுதியில் இருந்து கடந்த 2015-ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தேர்வானார். அமைச்சராகவும், வருவாயை கையாளும் கருவூலக அதிகாரியாகவும் இவர் பணியாற்றினார். மேலும் கொரோனா தொற்று காலத்தில் ஆற்றிய பணிகளால் பிரபலமானார்.

    இதேபோல அமைச்சரவை அட்டர்னி ஜெனரலும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான சூவெல்லா பிரேவர்மேனும் புதிய பிரதமர் பதவிக்கு போட்டியிடபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எனினும் ரிஷி சுனக் முன்னணியில் உள்ளதால் அவர் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • இங்கிலாந்தில் அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.
    • அடுத்த வாரம் இது தொடர்பான கால அட்டவணை வெளியிடப்படும் என கன்சர்வேடிவ் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கூறி உள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்து வந்த போரிஸ் ஜான்சன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    கொரோனா பெருந்தொற்றை சரிவர கையாளாதது, கொரோனா காலத்தில் மது விருந்து நடத்தி கொண்டாடியது, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசு துணை தலைமை கொறடா மீது தாமதமாக நடவடிக்கை எடுத்தது என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிய போரிஸ் ஜான்சனுக்கு சொந்த கட்சியான கன்சர்வேடிவ் கட்சியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதைத்தொடர்ந்து போரிஸ் ஜான்சனின் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது அமைச்சரவையில் இருந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த நிதி மந்திரி ரிஷி சுனக், சுகாதார மந்திரி சாவித் ஜாவித் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.

    அவர்களை தொடர்ந்து முக்கிய பதவிகளில் இருந்த பலரும் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால் வேறு வழியில்லாமல் போரிஸ் ஜான்சன் நேற்று கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தார்.

    அதே நேரம் மற்றொரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில், தாம் பிரதமர் பதவியில் தொடரப் போவதாகவும் கூறினார்.

    இதைத்தொடர்ந்து இங்கிலாந்தில் அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.

    அடுத்த வாரம் இது தொடர்பான கால அட்டவணை வெளியிடப்படும் என கன்சர்வேடிவ் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கூறி உள்ளார்.

    கன்சர்வேடிவ் கட்சியில் எம்.பி.க்களின் ஆதரவுடன் இறுதி செய்யப்பட்ட 2 வேட்பாளர்கள் தலைமை பொறுப்புக்கு போட்டியிடுவார்கள் எனவும் அவர்களில் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனால் இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறும் 2 பேர் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் முன்னணியில் உள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் ஆவார். வடக்கு யோர்க்-ஷயர் தொகுதியில் இருந்து கடந்த 2015-ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தேர்வானார்.

    அதற்கு முன்னதாக வருவாயை கையாளும் கருவூலக அதிகாரியாகவும் இவர் பணியாற்றினார். மேலும் கொரோனா தொற்று காலத்தில் ஆற்றிய பணிகளால் பிரபலமானார்.

    இதேபோல அமைச்சரவை அட்டர்னி ஜெனரலும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான சூவெல்லா பிரேவர்மேனும் புதிய பிரதமர் பதவிக்கு போட்டியிடபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    இவர்கள் தவிர புதிய நிதி அமைச்சர் நாதிம் ஸஹாவி, வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ், பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ், முன்னாள் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித், இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், உள்துறை அமைச்சருமான பிரீதி படேல் உள்ளிட்டோரும் பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

    ×