என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளையன் கைது"

    • மேஷாக் என்பவரது வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 17 பவுன் நகை கொள்ளை போனது.
    • கொள்ளையில் ஈடுபட்டது செங்குன்றம் அடுத்த பம்மது குளம், சன்சிட்டி பகுதியை சேர்ந்த சிபி என்பது தெரியவந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த காக்களூர், மாருதி நியூடவுன், வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மேஷாக். இவரது வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 17 பவுன் நகை கொள்ளை போனது.

    இதுகுறித்து துணை போலீஸ் சூப்பரண்டு விவேகானந்தா சுக்லா, சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியை வைத்து விசாரணை நடத்தினர்.

    இதில் கொள்ளையில் ஈடுபட்டது செங்குன்றம் அடுத்த பம்மது குளம், சன்சிட்டி பகுதியை சேர்ந்த சிபி (31) என்பது தெரியவந்தது. அவனை போலீசார் கைது செய்தனர்.

    • தப்பி ஓடிய நபரை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு
    • கொள்ளை வழக்கில் தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பள்ளவிளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி வசந்தா (வயது 58).

    இவர் நேற்று காலை வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் வசந்தாவிடம் முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்தனர். அப்போது பைக்கில் இருந்த வாலிபர் ஒருவர் வசந்தாவின் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்தார். சுதாரித்துக் கொண்ட வசந்தா திருடன் திருடன் என கூச்சலிட்டார். அதற்குள் மர்மநபர்கள் தப்பி சென்றனர்.

    வசந்தாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்களை பிடிக்க முயன்றனர். பொதுமக்கள் துரத்தியதில் பைக்கில் இருந்து வாலிபர் ஒருவர் தவறி கீழே விழுந்தார். அவரை பொதுமக்கள் பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். வாலிபர் பிடிபட்டது குறித்து ஆசாரிப்பள்ளம் போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பொதுமக்கள் பிடியில் இருந்த வாலிபரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது பிடிபட்ட வாலிபர் நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (19) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

    தப்பி ஓடிய நபர் குறித்த விவரங்களை போலீசார் அவரிடம் கேட்டனர். ஆனால் அவர் சரிவர பதில் கூறவில்லை. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தப்பி ஓடிய வாலிபரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பிடிபட்ட அய்யப்பனுக்கு வேறு கொள்ளை வழக்கில் தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • நாகராஜன் (வயது 27). கிச்சிபாளையத்தில் நடந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய இவரை கிச்சிபாளையம் போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.
    • வழக்கு தொடர்பாக அவரை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு சேலம் கோர்ட்டு கடந்த 10 நாட்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.

    சேலம்:

    சேலம் மூன்றாம் கரடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 27). கிச்சிபாளையத்தில் நடந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய இவரை கிச்சிபாளையம் போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

    இதற்கு இடையே வழக்கு தொடர்பாக அவரை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு சேலம் கோர்ட்டு கடந்த 10 நாட்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.

    இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர் .

    இந்த நிலையில் நாகராஜன் நேற்று இரவு போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • பாஸ்கர் (வயது 40). இவர் மீது சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி உள்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • இவரை போலீசார் தேடி வந்தனர். கோர்ட்டிலும் அவர் ஆஜர் ஆகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

    சேலம்:

    அரியலூர் மாவட்டம் அந்தோணியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40). இவர் மீது சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி உள்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இவரை போலீசார் தேடி வந்தனர். கோர்ட்டிலும் அவர் ஆஜர் ஆகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப் பட்டது. இதனால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் சேலம் டவுன் ரெயில்வே போலீ சாரிடம் நேற்று இரவு அவர் சிக்கினார். அவரை ரெயில்வே போலீசார் அஸ்தம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், பாஸ்கரை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் மற்றும் போலீசார் ஊரப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • வீரமுத்து நண்பர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் மற்றும் போலீசார் ஊரப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக சுற்றிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் வீரமுத்து என்பதும் நண்பர்களுடன் சேர்ந்து தனியாக செல்பவர்களை குறிவைத்து நகை, செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து வீரமுத்துவை போலீசார் கைது செய்தனர். அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • விஜய் சென்னையில் பதுங்கி இருப்பதாக கோவை போலீசாருக்கு தகவல் கிடைத்தது
    • ஐயப்ப பக்தர் போல் விஜய் மாலை அணிந்து இருந்தார்.

    கோவை:

    கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 28-ந் தேதி 4½ கிலோ நகை கொள்ளை போனது. போலீஸ் விசாரணையில் தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த விஜய் (வயது 25) என்பவர் முகமூடி அணிந்து கடைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக விஜய்யின் மனைவி நர்மதாவை போலீசார் கைது செய்தனர். அத்துடன் விஜய் கொள்ளையடித்த நகையை குப்பை மற்றும் சாலையோரம் புதைத்து வைத்த விஜய்யின் மாமியார் யோகராணியும் கைது செய்யப்பட்டார். அவர் புதைத்து வைத்து இருந்த 4 கிலோ 300 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டன.

    இந்த நிலையில் விஜய் சென்னையில் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக கோவை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார் சென்னை வந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி விஜய்யை கைது செய்தனர்.

    அப்போது அய்யப்ப பக்தர் போல் விஜய் மாலை அணிந்து இருந்தார். ஆனாலும் போலீசார் அவரை அடையாளம் கண்டு மடக்கி பிடித்தனர். இதையடுத்து விஜய்யை கோவைக்கு அழைத்து சென்றனர்.

    • கும்பல் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் என்பதை போலீசார் அறிந்தனர்.
    • போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற நிலையில் ஒருவர் மட்டுமே சிக்கினார்.

    நெல்லை:

    பொங்கலையொட்டி நெல்லை மாநகர பகுதியில் சந்திப்பு உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் தலைமையில் போலீசார் கடந்த 13-ந் தேதி நள்ளிரவில் ரோந்து சென்றனர்.

    அப்போது தச்சநல்லூர் பாலபாக்யா நகர் பகுதியில் 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பதை அறிந்த உதவி கமிஷனர், அதனை பின் தொடருமாறு ஜீப் டிரைவரான ஏட்டு சரவண பிரகாஷிடம் தெரிவித்துள்ளார். மேலும் அந்த கும்பலை பின்னால் மோட்டார் சைக்கிளில் ரோந்து வந்த பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணணும் பின்தொடர்ந்துள்ளார்.

    போலீசார் பின் தொடர்வதை அறிந்த அந்த கும்பலை சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோர் பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த கும்பல் போலீசார் 2 பேரையும் இரும்பு கம்பி மற்றும் கல்லால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றது. அந்த கும்பலை பிடிக்க கமிஷனர் மூர்த்தி உத்தரவின்பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது, 3 பேரில் 2 பேரின் உருவங்கள் தெளிவாக தெரிந்தது. அந்த கும்பல் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் என்பதை போலீசார் அறிந்தனர்.

    அந்த புகைப்படங்களை தமிழகம் முழுவதும் உள்ள போலீசாருக்கு அனுப்பி வைத்து தேடி வந்தனர். தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டு இருந்தனர்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் தூத்துக்குடி 2-ம் கேட் சத்திரம் தெருவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக்கில் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் ஊழியர்கள் கடையை பூட்டி சென்ற நிலையில் அந்த கடையில் நேற்று அதிகாலை கடை முன்பக்க ஷட்டர் உடைக்கப்பட்டு பணம் மற்றும் மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது இதில் 5 பேர் கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நேற்று இரவு வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி பழைய பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற 5 வடமாநில வாலிபர்களை பிடிக்க முயன்றபோது அந்த கும்பல் போலீசாரை தள்ளிவிட்டு தப்பியோட முயன்றது.

    உடனே சுதாரித்துக் கொண்ட போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற நிலையில் ஒருவர் மட்டுமே சிக்கினார். மற்ற 4 பேரும் தப்பி ஓடி விட்டனர். தொடர்ந்து பிடிபட்டவர் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ராய்சிங்(வயது 30) என்பதும், தூத்துக்குடியில் நேற்று முன்தினம் இரவு நடந்த டாஸ்மாக் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலில் ஒருவர் என்பதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து கொண்டிருந்தனர்.

    இதற்கிடையே நெல்லை சந்திப்பு போலீசாரை தாக்கிவிட்டு சென்றதாக நெல்லை மாநகர போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட 3 பேர் கும்பலின் புகைப் படங்களை தூத்துக்குடி போலீசார் பார்த்தபோது அதில் ஒருவரின் புகைப்படம், டாஸ்மாக் கொள்ளையில் வடபாகம் போலீசார் கைது செய்த ராய்சிங்கின் புகைப்படமாக இருந்தது.

    அவர்கள் நெல்லை மாநகர போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர் கைதான ராய்சிங் போலீசாரிடம் கூறுகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் நான் நெல்லைக்கு வந்தேன். என்னை எனது நண்பர் பரத் அழைத்து வந்தார்.

    தமிழகத்தில் ஏராளமான இடங்களில் கொள்ளையடிக்கலாம். அதனை வைத்து சொகுசாக வாழலாம் என்று கூறி அழைத்து வந்தார். இதையடுத்து நாங்கள் நேற்று முன்தினம் ரெயிலில் நெல்லை வந்துவிட்டு அங்கிருந்து திருட்டு மோட்டார் சைக்கிளில் சென்றபோது சந்திப்பு போலீசார் எங்களை பிடிக்க முயன்றதால் அவர்களை தாக்கிவிட்டு தூத்துக்குடிக்கு வந்துவிட்டோம்.

    பின்னர் இங்குள்ள டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த நிலையில், தொடர்ந்து தமிழகம் முழுவதும் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்குள் போலீசார் என்னை கைது செய்துவிட்டனர் என்றார். இதையடுத்து அவரிடம் சக கூட்டாளிகள் யார்? யார் ? என்பது குறித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே தூத்துக்குடி பழைய பஸ்நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய மற்ற 4 பேர் சென்னைக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

    • தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று சித்தூர் மாவட்டம் புத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த கொள்ளையனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    • ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று பூட்டிகிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடிச் சென்று உள்ளான்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில் நகைக்கடை நடத்தி வருபவர் மகாவீர் சந்த். கடந்த சில நாட்களுக்கு முன்பு பூட்டி இருந்த இவரது வீட்டின் பூட்டை உடைத்து 182 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளைபோனது. இதே போல் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் வீட்டில் 15 பவுன் நகை திருடு போனது. இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தபோது இந்த 2 கொள்ளையிலும் ஈடுபட்டது ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளையன் சதீஷ் ரெட்டி என்பது தெரிந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று சித்தூர் மாவட்டம் புத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த அவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவன் மீது ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே 80 வழக்குகள் இருப்பது தெரிந்தது. இப்போது 81-வது முறையாக கொள்ளை வழக்கில் சதீஷ் ரெட்டி பிடிபட்டு உள்ளார். பல கொள்ளை வழக்குகளில் அவர் பிடிபடாமல் சுற்றி வந்த நிலையில் காஞ்சிபுரம் கொள்ளை வழக்கில் பிடிபட்டு இருக்கிறான்.

    அவனிடம் இருந்து 88 பவுன் நகை, ரூ.36 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று பூட்டிகிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடிச் சென்று உள்ளான். ஒரே இடத்தில் கைவரிசை காட்டினால் சிக்கிக்கொள்வோம் என்பதால் இடத்தை அடிக்கடி மாற்றியதாகவும் கூறி உள்ளான்.

    கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    • கார் பழனி அருகே வந்தபோது அதனை சுற்றி வளைத்தனர்.
    • காரில் வந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு காரில் வந்து மர்ம நபர் திருடிச் செல்லும் சம்பவம் அதிகரித்து வந்தது. அவர் வந்த காரின் எண்ணை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அதே பதிவெண் கொண்ட கார் திருப்பூரிலும் நடமாடி வந்தது. மேலும் அந்த காரில் இருந்த மர்மநபர் திருப்பூர் மாவட்டத்திலும் பல்வேறு வீடுகளில் கைவரிசை காட்டி வந்துள்ளார். இவரை பிடிக்க திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில் பழனி டி.எஸ்.பி. தனஞ்செயன் மேற்பார்வையில் பழனி தாலுகா இன்ஸ்பெக்டர் தென்னரசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் கார்த்திகேயன், முபாரக் கொண்ட தனிப்படையினர் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது சம்மந்தப்பட்ட பதிவெண் கொண்ட கார் பழனி அருகே வந்தபோது அதனை சுற்றி வளைத்தனர். காரில் வந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்ததில் அவர் சிவகங்கை மாவட்டம் தெற்கு தமராக்கி பகுதியை சேர்ந்த அய்யனார் மகன் அதிபதிராஜா (வயது 23) என தெரியவந்தது.

    இவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து விதவிதமான கார் பதிவெண்களை கொண்டு பகல் நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து அவரிடமிருந்து 2 கார்கள், போலி பதிவெண்கள், கையுறை, முகமுடி, பூட்டை உடைக்க பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் ஆகியவற்றை கைப்பறினர்.

    மேலும் அதிபதிராஜாவை பழனி கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காட்டை சேர்ந்த பல கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய சுள்ளான் அகிலன், நித்தீஸ், கேடி கண்ணன், மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த அராத் என்ற பாசில் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • உங்களின் லேப்-டாப் மற்றும் போன் வேண்டுமானால் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்’ என ஒரு எண்ணையும் எழுதி வைத்திருந்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சில மணி நேரங்களிலேயே அந்த திருடனை கைது செய்தனர்.

    திருட செல்வதை கூட போஸ்டர் அடித்து ஒட்டிய காட்சிகளை சினிமாவில் பார்த்திருக்கிறோம். ஆனால் சீனாவில் ஒரு திருடன், திருடிய வீட்டில் குறிப்பு எழுதி வைத்து வந்ததால் சிக்கிக்கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

    சீனாவின் ஷாங்காய் பகுதியில் உள்ள ஒரு அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்-டாப் திருட்டு போனது. அலுவலகத்திற்குள் நுழைந்து அவற்றை திருடிய கொள்ளையன் புறப்படும் போது குறிப்பு ஒன்றை எழுதி வைத்து சென்றுள்ளார். அதில், 'டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்-டாப்பை எடுத்துக் கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் தொழிலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து நான் எல்லா போன்களையும், லேப்-டாப்களையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்-டாப் மற்றும் போன் வேண்டுமானால் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்' என ஒரு எண்ணையும் எழுதி வைத்திருந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சில மணி நேரங்களிலேயே அந்த திருடனை கைது செய்தனர். அவரிடம் இருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்த தகவல்கள் வலைதளங்களில் பரவிய நிலையில் பயனர்கள் சிலர், 'நல்ல திருடன்' என பதிவிட்டுள்ளனர்.

    • கைதான காளிதாஸ் மதுரவாயல் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கைவரிசை காட்டி வந்து உள்ளார்.
    • காளிதாஸ் வயதானவர் என்பதால் அவர் மீது போலீசாருக்கு பெரிய அளவில் சந்தேகம் ஏற்படவில்லை.

    போரூர்:

    மதுரவாயல் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த வர் ராஜதுரை. அதே பகுதியில் "போட்டோ ஸ்டூடியோ" கடை நடத்தி வருகிறார்.

    கடந்த 11-ந் தேதி ஸ்டூடியோவின் ஷட்டர் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள கேமரா மற்றும் ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில் முதியவர் ஒருவர் கொள்ளையில் ஈடுபடுவது பதிவாகி இருந்தது.

    இதனை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளையன் காளிதாஸ் (வயது55) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கேமரா பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான காளிதாஸ் மதுரவாயல் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கைவரிசை காட்டி வந்து உள்ளார்.

    ஷட்டர் பூட்டை உடைத்து கொள்ளை அடிப்பதில் கைதேர்ந்த காளிதாஸ் மீது ஆந்திரா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 100க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    காளிதாஸ் வயதானவர் என்பதால் அவர் மீது போலீசாருக்கு பெரிய அளவில் சந்தேகம் ஏற்படவில்லை. இதனால் அவர் போலீசில் சிக்காமல் இருந்தார். கண்காணிப்பு கேமரா காட்சியால் பிடிபட்டுள்ள அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பண்ருட்டியில் மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
    • சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டுஇருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஆசாமியிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாககூறியதால்.விசாரணை யில்பண்ரு ட்டி அருகே பகண்டை கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி விவசாயி. இவரதுவீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து நீதி மன்றத்தில் ஆஜர்செய்து சிறையில் அடைத்தனர்.

    ×