என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழுகை"

    • அதன் பிறகுதான் அவர் தனது கடையைத் திறக்க அனுமதிக்கப்படுவார்.
    • அவரை சுத்தப்படுத்துவதாகக் கூறி இந்து அமைப்பினர் அவர்மீது கங்கை நீரைத் தெளித்திருக்கின்றனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் மாமு பன்ஜா பகுதியை சேர்ந்தவர் சுனில் ரஜனி. இவர் மின்சாரப் பொருட்களை விற்கும் கடையை நடத்தி வருகிறார்.

    இந்துவான இவர் தனது முஸ்லீம் நண்பர்களுடன் சேர்ந்து கடந்த மார்ச் 27 ஆம் தேதி உள்ளூர் மசூதியில் மாலை தொழுகையில் ஈடுபட்டிருக்கிறார். இதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட அது வைரலானது. இதைத்தொடர்ந்து இந்து அமைப்புகள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

    இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (BJYM) உள்ளூர் தலைவரான மோனு அகர்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுனில் ரஜனி இந்து மதத்தின் புனிதத்தை பாழ்படுத்தியதாகவும் அதற்கு பொது மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

    மேலும் அப்பகுதியில் உள்ள கோயிலில் அவரை வைத்து பரிசுத்தப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் அதன் பிறகுதான் அவர் தனது கடையைத் திறக்க அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

    மேலும் ரஜனி மசூதியில் இருந்து வெளியே வந்தபோது அவரை சுத்தப்படுத்துவதாகக் கூறி இந்து அமைப்பினர் அவர்மீது கங்கை நீரைத் தெளித்திருக்கின்றனர். ஆர்வத்தின் பேரிலேயே தான் மசூதிக்கு சென்றதாக சுனில் தெரிவித்துள்ளார்.

    • தொழுகைகளை உள்ளூர் மசூதிகளில் நடத்த வேண்டும்.
    • நீதிமன்றத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) இல்லாமல் புதிய பாஸ்போர்ட்டை பெறுவது கடினமாகிவிடும்.

    உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன்னதாக, சாலைகளில் தொழுகை நடத்துபவர்களுக்கு எதிராக காவல்துறை கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. எச்சரிக்கையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக மீரட் எஸ்.பி. ஆயுஷ் விக்ரம் சிங் கூறுகையில், தொழுகைகளை உள்ளூர் மசூதிகளில் நடத்த வேண்டும் என்றும், யாரும் சாலைகளில் தொழுகை நடத்தக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். எச்சரிக்கையை மீறுபவர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    மத்திய அமைச்சரும் ராஷ்டிரிய லோக் தளம் தலைவருமான ஜெயந்த் சிங் சவுத்ரி கூறுகையில்,

    தனிநபர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், அவர்களின் பாஸ்போர்ட்டுகள் மற்றும் உரிமங்கள் ரத்து செய்யப்படும். நீதிமன்றத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) இல்லாமல் புதிய பாஸ்போர்ட்டை பெறுவது கடினமாகிவிடும்.

    நீதிமன்றத்தால் தனிநபர்கள் விடுவிக்கப்படும் வரை அத்தகைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

    மீரட் மூத்த காவல் கண்காணிப்பாளர் விபின் தடா கூறுகையில், மாவட்ட மற்றும் காவல் நிலையங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டு, அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடியதன் அடிப்படையில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பதட்டம் மிக்க பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அமைதியைப் பேணுவதற்கும், வரவிருக்கும் பண்டிகைகளை சீராகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்கும், நிர்வாகம் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மதத் தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    • ஏழைகளுக்கும் வசதியற்றவர்களுக்கும் கருணையோடு உதவி செய்வது இப்பண்டிகையின் சிறப்பாகும்.
    • உலக மக்கள் அனைவரும் நோயின்றி வாழ பிரார்த்தனை செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் துவங்கியதை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை சகோதரத்து வத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக முஸ்லிம்களால் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.

    இதற்காக ரமலான் மாதத்தில் 30 நாட்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை பகலில் நோன்பிருந்து இரவில் தாராவீஹ் என்ற சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபடுவார்கள்.

    பிறை தென்பட்டதால் வளைகுடா நாடுகளில் இன்று ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து, ரமலான் மாதம் துவங்கியதை முன்னிட்டுமுஸ்லிம்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க துவங்கினர்.

    நோன்பு காலம் துவங்கியதை அடுத்து உலக புகழ் பெற்ற நாகப்பட்டிணம் மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா சிறப்பு தொழுகை நடைபெற்றது

    அதிகாலை முதல் நோன்பை கடைபிடிக்க உள்ள இஸ்லாமியர்கள், இந்த நோன்பு காலங்களில் காலங்களில் பசியுடன் இருந்து, வீண் விவாதங்களை தவிர்த்து இறை பக்தியுடன் ஜகாத் எனும் ஏழைகளுக்கும் வசதியற்றவர்களுக்கும் கருணையோடு உதவி செய்வது இப்பண்டிகையின் சிறப்பாக உள்ளது.

    மேலும் அதிக நேரம் இறை வழிபாட்டில் ஈடுபடும் இஸ்லாமியர்கள் சாதி மத பேதமின்றி உலகில் அனைவரும் சுபிட்சமாக வாழவும் மீண்டும் கொரோனா அச்சம் தொற்றியுள்ள நிலையில் உலக மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் நோய் நொடி இல்லாமல் வாழவும் பிரார்த்தனை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

    நாகை மாவட்டத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லா மியர்கள் பங்கேற்றனர்.

    • ரம்ஜான் நோன்பை தொடங்கிய இஸ்லாமியர்கள் தொடங்கினர்.
    • பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

    ராமநாதபுரம்

    இஸ்லாமிய மக்களின் 5 முக்கிய கடமைகளில் நோன்பு நோற்பது முக்கிய மானதாக கருதப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

    ரம்ஜான் மாதத்தில் முதல் பிறை பார்த்த பின்னர் நோன்பு உறுதி செய்யப்படும். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு பிறை தென்பட்டது. இதையடுத்து இன்று (24-ந் தேதி) முதல் நோன்பு நோற்கும்படி இஸ்லாமிய மக்களுக்கும், அனைத்து பேஷ் இமாம்க ளுக்கும் மாவட்ட அரசு சலாஹூத்தீன் தகவல் தெரிவித்தார்.

    முன்னதாக நேற்று இரவு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்க ளிலும் தராவீஹ் எனப்படும் சிறப்பு தொழுகை நடை பெற்றது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் பெண்களுக்கான தொழுகை பெண்கள் பள்ளிவாசல்களிலும், அரபி மதராசக்களிலும் நடை பெற்றன.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் ராமநாதபுரம், கீழக்கரை, தொண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் இன்று முதல் நோன்பு விரதத்தை தொடங்கினர். அதிகாலை முதல் மாலை 6 மணி வரை உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். பின்பு மாலையில் தொழுகை செய்து பள்ளிவாசல்களில் வழங்கப்படும் நோன்பு கஞ்சி உட்கொண்டு விர தத்தை முடித்துக் கொள் வார்கள். இதே போல் தொடர்ந்து 30 நாட்கள் நோன்பு விரதத்தை இஸ்லா மியர்கள் கடைப்பிடிப்பார்கள்.

    • .கன்வென்ஷன் சென்டரில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
    • தொழில் அதிபருமான ஜாகிர்உசேன் தொடங்கிவைத்து நோன்பின் மாண்பு பற்றி பேசினார்.

    கடலூர்:

    பண்ருட்டி இஸ்லாமிக் பைத்துல்மால்டிரஸ்ட் சார்பில் பண்ருட்டி, எல்.என்.புரம் சென்னை சாலை ஆர்.கே.எம்.கன்வென்ஷன் சென்டரில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில் இஸ்லாமிக் பைத்துல்மால் டிரஸ்ட் செயலாளரும், தொழில் அதிபருமான ஜாகிர்உசேன் தொடங்கிவைத்து நோன்பின் மாண்பு பற்றி பேசினார். மதார்ஷா பள்ளி மாணவர்கள் கிராத் ஓதினர்.

    விழாவில் சிறப்பு அழைப் பாளர்களாக பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, வர்த்தக சங்க தலைவர் சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றினார். இதில் இந்து, முஸ்லீம், கிருஷ்த்துவ சமுதாய தலைவர்கள், அரசுதுறை அதிகாரிகள், நூர் முகமது ஷா அவுலியா தர்கா கமிட்டி தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், முஸ்லிம் ஜமாத்தார்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதி நிதிகள், ரோட்டரி, அரிமா, எக்ஸ்னோரா, செந்தமிழ், முத்தமிழ் சங்கம், வர்த்தக சங்க நிர்வாகிகள், பள்ளி வாசல் பொறுப் பாளர்கள் திரளாக கலந்து கொண்ட னர். முன்னதாக அனைவரை யும் பண்ருட்டி இஸ்லாமிக் பைத்துல் மால் டிரஸ்ட் தலைவர் வக்கீல் இதயத்துல்லா வரவேற்றார். முடிவில் பைத்துல்மால் டிரஸ்ட் பி.எம்.டி.இ. நவாஸ் நன்றி கூறினார். தொடர்ந்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சிறப்பு தொழுகை நடந்தது.

    • பள்ளிவாசல்களில் புனித இரவு தொழுகை நடந்தது.
    • திரளானோர் பங்கேற்றனர்.

    கீழக்கரை

    ரம்ஜான் மாதத்தில் லைலத்துல் கத்ரு எனப்படும் புனித இரவில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து இரவு முழுவதும் தூங்காமல் பள்ளிவாசல்களில் திருக்குரான் ஓதி சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். இதன்படி நேற்று புனித இரவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி , பெரியபட்டணம், பனைக்குளம், திருப் புல்லாணி உள்பட மாவட் டத்தின் பல்வேறு பகுதி களிலும் உள்ள ஜும்மா பள்ளி வாசல்களில் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    இதில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து நறுமணம் பூசி தொழுகை மற்றும் சிறப்பு துஆவில் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பின் உலக நன்மைக்காகவும், மக்கள் அனைவரும் நலமுடன் வாழவும், திருக்குர்ஆன் ஓதி சிறப்பு துஆ செய்தனர். அதனை தொடர்ந்து நேற்று இரவு பள்ளிவாசல்களில் விடிய விடிய இஸ்லாமிய மக்கள் திருக்குர்ஆன் ஓதி இறைவனை தொழுதனர்.

    அனைத்து ஊர்களிலும் ஜமாத் நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதிகாலை அனைத்து பள்ளி வாசல் களிலும் நோன்பு நோற்பதற்காக சகர் உணவு வழங்கப் பட்டது. பெண்களுக்கான தொழுகை மதரசாக்களிலும், வீடுகளிலும் நடந்தது.

    • இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான புனித ரமலான் பண்டிகை ஆண்டு தோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடபடுவது வழக்கம்
    • ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் ரமலான் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடபடுகிறது.


    கடலூர்:

    இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான புனித ரமலான் பண்டிகை ஆண்டு தோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடபடுவது வழக்கம் . ஈகையின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் ரமலான் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடபடுகிறது.

    இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மிக உயர்வான கடமையான நோன்புடன் தொடங்கும் இந்த பண்டிகை நிறைவாக ரமலான் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்று விருத்தாசலம் ஆலடி ரோட்டில் அமைந்துள்ள நவாப் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்கு பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து உற்சாகத்துடன் ரமலான் திருநாள் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர் .

    • நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடபட்டு வருகிறது.
    • நூர்முகமது ஷா அவுலியா தர்காவிலிருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக வந்தனர்.

    கடலூர்:

    நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடபட்டு வருகிறது. பண்ருட்டியில் ரம்ஜானை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பண்ருட்டி கடலூர் ரோட்டிலுள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை இன்று காலை நடந்தது.இதனைமுன்னிட்டு பண்ருட்டி காந்திரோடு நூர்முகமது ஷா அவுலியா தர்காவிலிருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக வந்தனர்.   பின்னர் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் சென்னை ஜேப்பியார் ஸ்டீல்ஸ் அதிபர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட ஏராளமானமுஸ்லிம்கள் திரளாக கலந்துகொண்டுவழிபாடு செய்தனர். பெரிய பள்ளிவாசல் இமாம் இஸ்மாயில் தொழுகை நடத்தினர் தொழுகை முடிந்து திரும்பிய முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டிதழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். ஏழை, எளியோருக்கு உதவி பொருள்களை வழங்கி உதவினர். ஈத்கா கமிட்டி தலைவர் அனீஸ் மற்றும் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். 

    இதேபோல், திண்டிவனம் நகரில் உள்ள அனைத்து மசூதிகளிலிருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்று செஞ்சி ரோட்டில் உள்ள ஈக்தா மைதானத்தில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் 3000-த்திற்க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.தொழுகையை நியாஸ் அஹமத் தொழ வைத்தார். தொழுகை முடிந்ததும் உலக நன்மை வேண்டியும் மழை பொழிய வேண்டும் என்று ( துஆ) பிரார்த்தனை செய்தனர். அதன் பிறகு ஒருவருக்கு ஒருவர் கட்டி அணைத்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர்.திண்டிவனம் டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மதுரையில் பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி திடல்களில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடந்தது.
    • ஒருவரை ஒருவர் ஆரத்தழு வியும், கை கொடுத்தும் ரம்ஜான் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    மதுரை

    இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று- ரமலான் மாத நோன்பு. நோன்பின்போது அவர்கள் அதிகாலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பார்கள்.

    ரமலான் மாதம் முதல் நாள் தொடங்கி 30 நாட்க ளும் கடுமையாக நோன்பு கடைபிடிக்கும் முஸ்லிம்கள், மற்றொரு கடமையான ஏழை-எளியோருக்கு ஜகாத் உதவிகளை வழங்கி வரு வார்கள்.

    ரமலான் 30 நாள் நோன்பு முடிவடைந்த பிறகு, ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் ரமலான் பண்டிகை கோலாகலமாக கொண்டா டப்படும். அதன்படி மதுரை மாவட்டத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் அதிகாலை முதலே மசூதிகளுக்கு சென்று தொழுகை நடத்தி னர். இதனைத்தொடர்ந்து இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து 'ஈதுல் பித்ர்' என்னும் பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    மதுரையில் பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி திடல்களில் நூற்றுக்கணக்கா னோர் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடந்தது. அதன்படி மாப்பாளையம், நெல்பேட்டை, ஹாஜிமார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடந்த தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதனைத்தொடர்ந்து இஸ்லாமிய பெருமக்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழு வியும், கை கொடுத்தும் ரம்ஜான் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னார்கள். ரம்ஜான் சிறப்பு தொழுகை முடிவில் உலக அமைதி வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், கொரோனா தொற்று போன்ற பேரிடர்கள் நீங்க வேண்டியும் இஸ்லாமியர்கள் சிறப்பு துஆ செய்தனர்.

    • ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
    • ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    ஈரோடு:

    இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு விரதம் இருந்தனர்.

    30 நாட்களாக விரதம் இருக்கும் இஸ்லாமியர்கள் தங்களது ஒரு வருட சேமிப்பில் இரண்டரை சதவீதம் ஏழை மக்களுக்காக ஜகாத் எனும் இஸ்லாமிய வரியை செலுத்துவார்கள்.

    அதனைத்தொடர்ந்து இன்று ரம்ஜான் பண்டி கையையொட்டி காலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து தொழுவதற்கு முன்பு ஏழை மக்களின் வீட்டிற்கு சென்று ஒரு நபருக்கு 90 ரூபாய் என்ற அடிப்படையில் பித்ரா என்னும் வரியை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ரம்ஜான் சிறப்பு தொழு கையில் பங்கேற்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் 40 ஈத்கா மைதானங்களில் இன்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதேபோல் மாவட்டம் முழுவதும் 240 -க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் இன்று காலை ரம்ஜான் பண்டி கையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஈரோடு மாவட்ட அரசு தலைமை ஹாஜி முகமது ஜிபாயத்துல்லா தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    ஏராளமான சிறுவர்களும் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டு ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இதற்காக வ.உ.சி. மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல் போடப்பட்டிருந்தது.

    இதேபோல் பெண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு தொழுகை ஈரோடு மாவட்டத்தில் 11 இடங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்தது.

    இதில் ஈரோடு பெரியார் நகரில் நடந்த சிறப்பு தொழுகையில் பெண்கள் நூற்றுக்கணக்கா னோர் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் பிரியா ணியை தங்களது உறவினர்க ளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.

    இதேபோல் கோபிசெட்டி பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். கோபியில் ஈதுஹா பள்ளி வாசலிலும், சாமிநாதபுரம் பள்ளிவாசலி லும் ஊர்வ லமும், சிறப்பு தொழுகையும் நடை பெற்றது. இஸ்லாமி யர்கள் தொழுகை முடிந்தவு டன் ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்து க்களை பரிமாறிக் கொண்ட னர்.

    அந்தியூர் பர்கூர் சாலையில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இருந்து அந்தியூர் பெரிய ஏரி சாலையில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்திற்கு இஸ்லாமியர்கள் டாக்டர்.சாகுல் ஹமீது தலைமையில், சையத் சையது கவுஸ் இமாம் முன்னிலையில் ஊர்வ லமாக சென்று ரம்ஜான் சிறப்பு தொழுகை செய்த னர்.

    பின்னர் கட்டி தழுவி ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதில் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    சத்தியமங்கலத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் சத்தியமங்கலம் மணி கூண்டு திடலில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்ப ட்டோர் புறப்பட்டு ஊர்வல மாக சென்று பழைய மார்க்கெட் வீதி, கோட்டு வீராம்பாளையம் ஆகிய முக்கிய இடங்களில் ஊர்வல மாக சென்று கோட்டு வீராம்பாளையம் அருகே உள்ள ஈத்கா திடலில் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    • ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படுகிறது.
    • 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.

    சரவணம்பட்டி,

    ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

    ரமலான் பண்டிகையையொட்டி கோவையை அடுத்த சர்க்கார் சாமகுளம் பேரூராட்சி கோவில்பாளையத்தில் உள்ள மதரஸா மஸ்ஜிதேநூர் பள்ளி வாசலில் முன்பு உள்ள சாலையில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இதில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். புத்தாடைகள் அணிந்து தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி ரமலான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    • நாட்டு நலனுக்காகவும், உலக அமைதி வேண்டியும், சமத்துவம் வேண்டியும் தொழுகையில் ஈடுபட்டனர்.
    • ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    மதுக்கூர்:

    இன்று ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் கீற்று சந்தை அருகில் உள்ள திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இதில் ஏராளமான முஸ்லீம்கள் நாட்டு நலனுக்காகவும், உலக அமைதி வேண்டியும், சமத்துவம் வேண்டியும் தொழுகையில் ஈடுபட்டனர்.

    இதனை அடுத்து தொழுகையில் ஈடுபட்டவர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    இதில் பெண்கள் உட்பட சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஹாஜா ஜியாவுதின் மார்க்க பயான் தொழுகையுடன் நிறைவு பெற்றது.

    ×