search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல்"

    • அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார்.
    • அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம் அணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை வேப்பேரி, ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.எ. ஆடிட்டோரியத்தில் வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடைபயண தொடக்க விழாவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டு பேசியதாக எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் கிடைத்துள்ளது.
    • எந்த மாவட்டத்திலும் அ.தி.மு.க.வினர் வர வேற்கவில்லை.


    ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை என்ற அண்ணாமலையின் பேச்சால் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் எகிறி இருக்கிறது. அண்ணாமலை எப்போதும் இப்படித்தான். அவர் அ.தி.மு.க.வில் குழப்பம் நீடித்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். பா.ஜனதா மேலிட தலைவர்கள் நம்மிடம் நல்லாத்தான் இருக்கிறார்கள். ஆனால் இங்கு அண்ணாமலை தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் என்று தனக்கு நெருக்க மானவர்களிடம் கூறி ஆதங்கப்பட்டுள்ளார்.

    மேலும் நடைபயண தொடக்க விழாவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டு பேசியதாக எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே தான் அமித்ஷா கூட்டத்தில் பங்கேற்காமல் தனது சார்பில் ஆர்.பி.உதயகுமாரை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தங்கள் மாவட்டத்துக்கு நடைபயணம் வரும் போது கூட்டணி தர்மத்துக்காக அண்ணாமலையை வாழ்த்தலாமா? என்று மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்கள். அதற்கு வேண்டாம் என்று வாய் வழியாக உத்தரவிட்டுள்ளார். அதனால்தான் எந்த மாவட்டத்திலும் அ.தி.மு.க.வினர் வர வேற்கவில்லை.

    • அ.தி.மு.க. பா.ஜனதாவோடு கூட்டணி வைக்க கூடாது.
    • அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் தலைமை வலிமையற்ற தலைமை.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நேற்று திடீரென்று மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். அவர் அ.தி.மு.க. பற்றியும், பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது பற்றியும் அன்று சொன்னதும்... இன்று சொல்வதும்... கட்சியினர் மத்தியில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

    அன்று... பா.ஜனதா அரசு சி.ஏ.ஏ. சட்டத்தை கொண்டு வந்த போது அ.தி.மு.க. ஆதரித்தாலும் அன்வர் ராஜா பாராளுமன்றத்தில் அதை எதிர்த்து பேசினார். பா.ஜனதா சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி. அ.தி.மு.க. பா.ஜனதாவோடு கூட்டணி வைக்க கூடாது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் தலைமை வலிமையற்ற தலைமை. கட்சி வலுப்பட சின்னம்மா வரவேண்டும்.

    இன்று... குழுவோடு ஒத்துபோக தெரியாதவன் உயிரோடு இருந்தாலும் செத்தவர்களுக்கு சமம் என்று திருவள்ளுவர் கூறி இருக்கிறார். நான் அ.தி.மு.க. காரன்தான். இடையில் ஏற்பட்ட ஒரு சிறிய சறுக்கலால் இந்த நிலை ஏற்பட்டது. இப்போது மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளேன். கட்சியின் சட்டத்திட்டங்கள் எனக்கு தெரியும். அதற்கு உட்பட்டு பணியாற்றுவேன். பா.ஜனதாவோடு எந்த கட்சிதான் கூட்டணி வைக்கவில்லை. காங்கிரஸ் தவிர எல்லா கட்சிகளும் பா.ஜனதாவோடு கூட்டணி கட்சிகள்தான். வருகிற தேர்தலில் ராமநாதபுரத்தில் பா.ஜனதா போட்டியிட்டால் பா.ஜனதாவுக்கு ஆதரவாகவும் வாக்கு கேட்பேன்.

    அரசியல்ன்னா இப்படித்தான்.

    • அண்ணாமலை என்பவர் தமிழக பா.ஜனதாவின் தலைவர் அவ்வளவு தான் என்று கூறியிருந்தார்.
    • எனக்கு எல்லா பதவிகளும் படிப்படியாக தான் வந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில் இருக்கிறேன்.

    மதுரை:

    தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கும், பா.ஜனதா கட்சிக்கும் இடையே கூட்டணி இருந்ததால் அவ்வப்போது சலசலப்புகளும் ஏற்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது.

    சமீபத்தில் மதுரையில் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, எங்களுக்கு பா.ஜனதா என்றால் மோடி ஜி, நட்டா ஜி, அமித்ஷா ஜி மட்டும் தான். அண்ணாமலை என்பவர் தமிழக பா.ஜனதாவின் தலைவர் அவ்வளவு தான் என்று கூறியிருந்தார்.

    இதற்கு பதிலளித்த பா.ஜனதா மாநிலத்தலைவர் அண்ணாமலை தன்னை அரசியல் விஞ்ஞானியாக நினைத்துக்கொண்டு பேசுகின்ற நபர்களுக்கு பதில் சொல்லி என்னுடைய தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என்று கூறினார்.

    இந்த நிலையில் அண்ணாமலைக்கு மீண்டும் செல்லூர் ராஜூ பதிலடி கொடுக்கும் வகையில் கூறியதாவது:-

    பா.ஜனதா ஒரு தேசிய கட்சி. அந்த கட்சியின் கூட்டணி உள்பட முக்கிய முடிவுகளை எல்லாம் அதன் தேசிய தலைவர்கள் தான் எப்போதும் எடுப்பார்கள். அந்த அடிப்படையில் தான் எங்களுக்கு மோடி, நட்டா, அமித்ஷா முக்கியம் என்றேன். நான் அரசியல் விஞ்ஞானிக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என்று அண்ணாமலை என்னை கூறுகிறார்.

    அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக்கும் தெரியும். கட்சியில் சேர்ந்து ஒரு ஆண்டில் தலைவராக பதவியேற்று இருக்கிறார். ஆனால் நான் அப்படி அல்ல. ஆரம்பத்தில் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர், வட்ட செயலாளர், பகுதி செயலாளர், மாவட்ட செயலாளர் ஆனேன். அதே போல் மக்கள் பதவிகளில் கவுன்சிலர், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர், அதன்பின் அமைச்சர் ஆனேன். இன்றைக்கு அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளராக பதவி வகிக்கிறேன். எனக்கு எல்லா பதவிகளும் படிப்படியாக தான் வந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில் இருக்கிறேன்.

    என்னை பற்றியும், நான் மக்களுக்கு ஆற்றிய பணிகள் குறித்தும் மதுரை மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றாக தெரியும். என்னை பொறுத்தவரை அண்ணாமலையின் கருத்துகளைநான் பொருட்படுத்துவதில்லை. நீங்களும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நான் ஏற்கனவே தெளிவாக கூறியிருக்கிறேன், எங்கள் மீது துரும்பு எறிந்தால்கூட நாங்கள் பதிலுக்கு இரும்பை வீசுவோம்.

    தமிழகத்தில் அதிக நாள் ஆட்சியில் இருந்த கட்சி அ.தி.மு.க. தான். அதே போல் 2 கோடி தொண்டர்கள் கொண்ட ஒரே கட்சி அ.தி.மு.க. தான். எனவே அ.தி.மு.க.வை விமர்சிப்பவர்கள், தமிழக அரசியலில் தங்களுக்கான இடம் என்ன? என்பதை அறிந்து விமர்சித்தால் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செல்லூர் ராஜூவின் இந்த பேட்டி பா.ஜ.க.வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
    • தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    திருப்பத்தூர்:

    மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், அண்ணாமலை பா.ஜ.க. மாநிலத் தலைவர் மட்டும் தான். எங்களுக்கு மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோர் மட்டுமே முக்கியம். டெல்லியில் நடந்த கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, மோடி அருகில் அமர வைத்தார். மோடிக்கு தெரிந்த எடப்பாடியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை என்று கூறினார். செல்லூர் ராஜூவின் இந்த பேட்டி பா.ஜ.க.வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் நேற்று இரவு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபயணம் மேற்கொண்ட பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். குடியிலும், கடனிலும் நம்பர் 1 மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. 30 சதவீதம் கமிஷன் கேட்பதால் எந்த ஒரு தொழிற்சாலையும் தமிழகத்திற்கு வருவதில்லை. பிரதமர் மோடி மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    உலகில் பொருளாதார வளர்ச்சியில் 5-வது நாடாக இந்தியா உருவாகியுள்ளது. இஸ்லாமியர்களுக்கும் மோடி எண்ணற்ற சலுகைகளை வாரி வழங்குகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நிருபர்கள் செல்லூர்ராஜூ பேட்டி குறித்து அண்ணாமலையிடம் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், யார் பேச்சுக்கு பதில் சொல்வது என்று ஒரு தரம் உள்ளது. அரசியல் விஞ்ஞானியான செல்லூர் ராஜூக்கெல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்தி கொள்ள முடியாது.மேலும்,நாங்கள் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. மக்களை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறோம். மக்களே எங்களுக்கு எஜமானர்கள்.

    மெஜாரிட்டி, மைனாரிட்டி பாலிடிக்ஸ் தான் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளதாக தெரிவித்த அண்ணாமலை, மைனாரட்டி மெஜாரிட்டி என்பது ஒரு புரிதலுக்காக கொண்டு வரப்பட்டது என்றும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மைனாரிட்டி என்ற வார்த்தைகளுக்கு மட்டும்தான் சிறப்பு சலுகைகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

    • 2016-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார்.
    • நடிகை ஜெயசுதாவிற்கு தேர்தலில் போட்டியிட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

    திருப்பதி:

    நடிகை ஜெயசுதா தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோருடன் நடித்துள்ளார்.

    ஒருங்கிணைந்த ஆந்திராவின் காங்கிரஸ் தலைவரான ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி முதலமைச்சராக இருந்த போது நடிகை ஜெயசுதா காங்கிரஸில் இணைந்தார்.

    இதையடுத்து செகந்திராபாத் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஜெயசுதா வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

    ஓய்.எஸ் ராஜசேகர ரெட்டியின் மறைவிற்கு பிறகு அரசியலில் இருந்து விலகி இருந்தார்.

    பின்னர் 2016-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். 2019-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

    நடிகை ஜெயசுதாவிற்கு தேர்தலில் போட்டியிட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் விரக்தில் இருந்தார்.

    இந்த நிலையில் நடிகை ஜெயசுதாவை பா.ஜ.க. கட்சியின் இணைப்பு குழு தலைவரும், ஈட்ல ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் இணைய அழைப்பு விடுத்தார்.

    ஐதராபாத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் நடிகை ஜெயசுதா அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைவார் என கூறப்பட்டது. ஆனால் நடிகை ஜெயசுதா பா.ஜ.க.வில் இணையவில்லை.

    இந்த நிலையில் நடிகை ஜெயசுதா நேற்று தெலுங்கானா பா.ஜ.க மாநில தலைவர் கிஷன் ரெட்டியை சந்தித்தார்.

    விரைவில் அவர் பா.ஜ.க.வில் இணைகிறார். இதனால் தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • தமிழகம் முழுவதும் அ.ம.மு.க. தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வார்கள் என்றும் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் பங்கேற்பதால் இருவரும் பாராளுமன்ற தேர்தலின் போது கை கோர்ப்பார்கள் என்றே தெரிகிறது.

    சென்னை:

    கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தருவோம் என கூறிய தி.மு.க. இதுவரை அதை நிறைவேற்றவில்லை என்றும் இதை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் 1-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து இருந்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அ.ம.மு.க. தனது ஆதரவை தெரிவித்திருந்த நிலையில், தேனியில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ். உடன் இணைந்து டி.டி.வி.தினகரன் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தமிழகம் முழுவதும் அ.ம.மு.க. தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வார்கள் என்றும் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இவர்கள் இருவரும் இணைவது பாராளுமன்றத் தேர்தலின் போது தேவர் சமுதாய வாக்கு வங்கியை உறுதிப்படுத்தும் உத்தியாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

    அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் அழைக்கப்படாத சூழலில், எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு வந்திருந்தது. அதன் பேரில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    ஆனாலும் பா.ஜனதா தன்னுடனான உறவை முறித்துக் கொள்ளும் வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கமாகவே இருப்பேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வந்தார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி. டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    எடப்பாடி பழனிசாமி பாரதிய ஜனதா கட்சியுடன் நெருக்கம் வைத்துள்ள காரணத்தால் ஒ.பன்னீர்செல்வத்துடன் டி.டி.வி.தினகரன் இப்போது கைகோர்க்க தொடங்கி விட்டார்.

    சமீபத்தில் தினகரனை ஒ.பன்னீர்செல்வம் சென்று சந்தித்து பேசிய நிலையில் இப்போது ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் பங்கேற்பதால் இருவரும் பாராளுமன்ற தேர்தலின் போது கை கோர்ப்பார்கள் என்றே தெரிகிறது.

    இதன் மூலம் தென் மாவட்டங்களில் தேவர் சமுதாயம் வலுவாக உள்ள 10 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி, தோல்வியை இவர்கள் இருவரும் நிர்ணயிப்பார்கள் என்று முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ்.சின் அரசியல் ஆலோசகருமான பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

    அ.தி.மு.க.வில் சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சேர்க்க மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறி வருவதால் பாராளுமன்ற தேர்தலில் தங்களது செல்வாக்கை நிரூபிக்க தேவர் சமுதாய வாக்கு வங்கியை தக்க வைப்பதற்காக ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் இணைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • கடந்த 15-ந்தேதி ஈரோட்டில் நடந்த த.மா.கா. பொதுக் கூட்டத்தில் 20 ஆயிரம் பேர் பங்கேற்றார்கள்.
    • அரசியல் நாகரீகம் இல்லாத அரசியல் தலைவர் இளங்கோவனுக்கு நாவடக்கம் தேவை.

    சென்னை:

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை விமர்சித்ததற்கு த.மா.கா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில துணை தலைவர் விடியல் சேகர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 15-ந்தேதி ஈரோட்டில் நடந்த த.மா.கா. பொதுக் கூட்டத்தில் 20 ஆயிரம் பேர் பங்கேற்றார்கள். அதை தாங்கி கொள்ள முடியாமல் நிலை தடுமாறி பேசியது கண்டிக்கத்தக்கது. அரசியல் நாகரீகம் இல்லாத அரசியல் தலைவர் இளங்கோவனுக்கு நாவடக்கம் தேவை.

    ஈரோடு மற்றும் திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டபோது ஜி.கே.வாசன் பிரசாரத்துக்கு வர வேண்டும் என்று கெஞ்சியதை காலம் மாறியதும் மறக்கலாமா?

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • உதயநிதியின் வளர்ச்சியை பார்த்து பிரமித்ததோடு உளவுத்துறை பணிகளிலும் தனிகவனம் செலுத்தும் படி கூறியிருக்கிறார்.
    • கிட்டத்தட்ட சின்னவர் கையில் உளவுத்துறை வந்துவிட்டதாகவே கூறுகிறார்கள்.

    உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு நிர்வாக ரீதியான பணிகளில் தீவிரம் செலுத்தி வந்ததோடு நிர்வாகத்தில் சில குளறுபடிகளையும் ஆய்வு செய்து உளவுத்துறையின் செயல்பாடு சரியில்லை என்று தந்தை மு.க.ஸ்டாலினிடம் பிட்டு பிட்டு வைத்துள்ளார்.

    அதைகேட்டதும் உதயநிதியின் வளர்ச்சியை பார்த்து பிரமித்ததோடு உளவுத்துறை பணிகளிலும் தனிகவனம் செலுத்தும் படி கூறியிருக்கிறார். அதனால் இப்போது கிட்டத்தட்ட சின்னவர் கையில் உளவுத்துறை வந்துவிட்டதாகவே கூறுகிறார்கள். இதனால் உளவுத்துறையினரும் உஷார் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

    • பாரதிய ஜனதா கையில் வைத்திருப்பது மக்களுக்கு விரோதமான கொள்கைகள்.
    • ஒரு எய்ம்ஸ் கல்லூரியை அறிவித்தார்கள். அதையும் இது வரை கட்டவில்லை.

    சென்னை:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தொடங்கும் யாத்திரையை அவர் உருண்டு புரண்டாலும் மக்கள் ஏற்க போவதில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக விமர்சித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த யாத்திரை செல்வதாக கூறியிருக்கிறார். அவர்களது யாத்திரை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

    பாரதிய ஜனதா கையில் வைத்திருப்பது மக்களுக்கு விரோதமான கொள்கைகள். அதை மக்கள் எப்படி ஏற்பார்கள்? அதுமட்டுமல்ல 9 ஆண்டுகால ஆட்சியில் அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்தது என்ன? பெரிய அளவிலான சாலை வசதிகளோ, புதிய ரெயில்வே திட்டங்களோ, துறைமுகங்களோ என்று எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஒரு எய்ம்ஸ் கல்லூரியை அறிவித்தார்கள். அதையும் இது வரை கட்டவில்லை.

    காமராஜர் தலைமையிலான அமைச்சரவை 9 ஆண்டுகளில் பெல் தொழிற்சாலை, துப்பாக்கி தொழிற்சாலை, பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை, பவானி அணை என்று பல நல்ல திட்டங்களை நிறைவேற்றினார். ஆனால் பா.ஜனதா அந்த மாதிரி ஏதாவது ஒரு திட்டமாவது கொண்டு வந்திருக்கிறதா? அப்படி இருக்கும்போது எந்த முகத்தோடு மக்களை சந்திக்க போகிறார்கள்?

    அண்ணாமலை மாநிலம் முழுவதும் உருண்டு, புரண்டாலும் மக்கள் ஏற்கமாட்டார்கள்.

    முதலில் ஆக்கப்பூர்வமான பணிகளை செய்ய வேண்டும். அப்படியானால் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும். தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்காளர்களை சந்திக்க திட்டமிட்டால் மக்கள் ஏற்கமாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13-ந் தேதி வரை நடைபெற்றது.
    • மணிப்பூர் கலவரம் விவகாரம் பாராளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்று கருதப்படுகிறது.

    புதுடெல்லி:

    2023-ம் ஆண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந் தேதி தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி அவையை தொடங்கி வைத்தார். அதன் பிறகு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    பாராளுமன்ற கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13-ந் தேதி வரை நடைபெற்றது. 2-வது அமர்வு மார்ச் 13-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெற்றது. அதானி விவகாரத்தால் பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி இருந்தன.

    இந்த நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் நாளை (வியாழக்கிழமை) கூடுகிறது. மழைக்கால கூட்டத்தொடர் 20-ந் தேதி முதல் ஆகஸ்ட் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக மணிப்பூர் கலவரம் விவகாரம் பாராளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்று கருதப்படுகிறது.

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைத்தேயி, குகி சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. 2 மாதங்களாக நடந்த வன்முறையில் 150-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இது தொடர்பாக எதிர்கட்சிகள் ஏற்கனவே விமர்சனம் செய்து இருந்தன. பாராளுமன்றத்தில் மணிப்பூர் கலவர பிரச்சினையை எதிர்க்கட்சிகள் ஆக்ரோஷத்துடன் எழுப்பும்.

    மேலும் விலைவாசி உயர்வு, விசாரணை அமைப்புகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களையும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் ஒன்று பட்டுள்ளன. இந்த கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பாராளுமன்றத்தில் பா.ஜனதாவுக்கு நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய பாராளுமன்ற கூட்டத்தில் நடைபெறும் இந்த கூட்டத் தொடர் 15 அமைப்புகளை கொண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 21 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளன. மேலும் 7 பழைய மசோதாக்கள் விவாதத்துக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

    டிஜிட்டல் தனிநபர் தரவு மசோதா, வன (பாதுகாப்பு) திருத்த மசோதா, பல மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா. தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் தாக்கல் ஆகும் என்று கருதப்படுகிறது.

    பாராளுமன்றம் சுமூகமாக நடைபெறுவதற்காக பாராளுமன்றம் கூடுவதற்கு முந்தைய தினம் அனைதது கட்சி கூட்டம் நடைபெறும். அதன்படி மத்திய அரசு இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடக்கிறது.

    • கிருஷ்ணா கொலை செய்யப்பட்டது குறித்து அவர்களது ஊர் முழுவதும் தகவல் பரவியது.
    • வெங்கட நாயுடு மற்றும் கூலிப்படையினரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், வெல்கம் மண்டலம் ஊட்டவோலுவை சேர்ந்தவர் கிருஷ்ணா.அங்குள்ள உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கட நாயுடு. இருவரும் ஒரே அரசியல் கட்சியில் நிர்வாகிகளாக இருந்து வந்தனர்.

    மேலும் வெங்கட நாயுடு அரசு கட்டிடங்களை கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். தனது அரசியல் வளர்ச்சிக்கு கிருஷ்ணா இடையூறாக இருப்பதாக வெங்கட நாயுடு எண்ணினார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் தனது பைக்கில் பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை காரில் பின் தொடர்ந்து சென்ற வெங்கட நாயுடு மற்றும் கூலிப்படையினர் உங்களது காரில் கிருஷ்ணாவின் பைக் மீது மோதினர். இதில் கிருஷ்ணா நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.

    அப்போது தாங்கள் கொண்டு வந்த இரும்பு ராடால் கிருஷ்ணாவை சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். கிருஷ்ணா கொலை செய்யப்பட்டது குறித்து அவர்களது ஊர் முழுவதும் தகவல் பரவியது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் வெங்கட நாயுடுவின் வீட்டின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கட நாயுடுவின் குடும்பத்தினரை பின்பக்க வாசல் வழியாக பத்திரமாக மீட்டு சென்றனர்.

    வெங்கட நாயுடு மற்றும் கூலிப்படையினரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×