என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கன்னியாகுமரி கோவில்"
- குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் 490 கோவில்கள் உள்ளன.
- உரிமம் தனி நபருக்கு ஏலம் விடப்படுவது வழக்கம்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் உள்பட 490 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் உரிமம் தனி நபருக்கு ஏலம் விடப்படுவது வழக்கம்.
அதன்படி நேற்று சுசீந்திரத்தில் உள்ள மாவட்ட திருக்கோவில் நிர்வாக அலுவலகத்தில் இணை ஆணையர் ஞானசேகர தலைமையில் ஒரு ஆண்டிற்கான பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் உரிமத்திற்கான ஏலம் நடந்தது. உதவி ஆணையர் தங்கம் முன்னிலை வகித்தார்.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் பிரசாதம் விற்பனை செய்யும் உரிமம் ரூ.8 லட்சத்து ஆயிரத்திற்கும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தேங்காய், பழம் விற்பனை செய்யும் உரிமம் ரூ.7 லட்சத்து 18 ஆயிரத்து 200-க்கும், பூ, மாலை விற்பனை செய்யும் உரிமம் ரூ.5 லட்சத்திற்கும் என மொத்தம் ரூ.20 லட்சத்து 19 ஆயிரத்து 200-க்கும் ஏலம் விடப்பட்டது.
இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
- மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன்ராவ் கராத்குமரி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
- முக்கடல் சங்கமம் பகுதிக்கு சென்று கடற்கரையில் அமர்ந்து சூரியன் உதயமான காட்சியை கண்டு ரசித்தார்.
கன்னியாகுமரி:
மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன்ராவ் கராத் 3 நாள் சுற்றுப்பயணமாக கன்னியாகுமரிக்கு வந்தார். அவர் குமரி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளுடன் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் இன்று அதிகாலையில் தனது மனைவியுடன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு உள்ள ஸ்ரீகாலபைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள பகவதி அம்மன்சன்னதி, இந்திரகாந்த விநாயகர் சன்னதி, பாலசௌந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்ம சாஸ்தா அய்யப்பன் சன்னதி, ஸ்ரீநாகராஜன் மற்றும் ஸ்ரீ சூரிய பகவான் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அதன்பின்னர் முக்கடல் சங்கமம் பகுதிக்கு சென்று கடற்கரையில் அமர்ந்து சூரியன் உதயமான காட்சியை கண்டு ரசித்தார். பின்னர் அங்கு இருந்து கார் மூலம் கோவளம் கடற்கரைக்கு சென்று சூரிய அஸ்தமன பகுதி கடற்கரையினை சுற்றிப்பார்த்தார்.
அப்போது பா.ஜ.க. அகஸ்தீஸ்வரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சி.எஸ்.சுபாஷ் உடன் இருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்