search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலோசனைக் கூட்டம்"

    • மின் அமைப்பாளர்கள் சங்க கொடியேற்று விழா நடந்தது.
    • செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் மின்சார அலுவலகம் முன்பு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்க அலங்காநல்லூர் கிளை சார்பில் தொழிலாளர் தினத்தையொட்டி கொடியேற்று விழா நடந்தது.

    தலைவர் ரவி தலைமை தாங்கினார். கவுரவ தலைவர்கள் அலிமுதின், சுப்பாரயலு, செயலாளர் வெள்ளைகங்கை, பொருளாளர் ஆனந்த் முன்னிலை வகித்தனர். கவுரவ ஆலோசகர் விநாயக ராஜா வரவேற்றார்.

    அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து சங்கத்தின் பெயர் பலகை திறக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    மாவட்ட பிரதிநிதி ஜெயபிரகாஷ், சத்தியசீலன் ஆகியோர் நன்றி கூறினர்.

    • தி.மு.க., அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர் மீது கூறியுள்ள ஊழல் புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • தி.மு.க., ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்ட வகையில் வி.ஏ.ஓ.,வை அலுவலகத்திலேயே கொலை செய்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், கட்சி வளர்ச்சி குறித்தும், உறுப்பினர் சேர்க்கை குறித்தும், மேதின விழாவை நடத்துவது குறித்தும், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன் தலைமை வகித்தார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளரும், கிருஷ்ணகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ. அசோக்குமார் உறுப்பினர் சேர்க்கை புத்தகம் வழங்கி ஆலோசனை வழங்கினார்.

    கூட்டத்தில், கட்சி அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்வது.

    கிழக்கு மாவட்டத்தில் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். நாளை (மே1) கட்சி சார்பில் மே தின விழாவை கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்த சிறப்பான முறையில் நடத்த வேண்டும்.

    தி.மு.க., அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர் மீது கூறியுள்ள ஊழல் புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் வகையில் குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி உள்ள தொழிலாளர்கள் விரோத தி.மு.க., அரசை வன்மையாக கண்டிப்பது.

    தி.மு.க., ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்ட வகையில் வி.ஏ.ஓ.,வை அலுவலகத்திலேயே கொலை செய்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், மாவட்ட இணை செயலாளர் மனோரஞ்சிதம் நாகராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னரசு, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தங்கமுத்து, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் மக்பூல், ஐ.டி., பிரிவு செயலாளர் வேலன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    போளூர்:

    போளூர் அருகே கேளூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார், ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார், மாவட்ட செயலாளர் வேலாயுதம் அனைவரையும் வரவேற்றார்.

    வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு குறித்து தமிழக முதல்வருக்கு வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் ஒரு லட்சம் கடிதம் அனுப்புவது.

    அனைத்து கடைகளின் பெயர் பலகை தமிழில் வைக்கக் அன்போடு கோருதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் போளூர் நகர செயளாலர் கே.சி. குமரன், ஒன்றிய செயலாளர் துரை ராஜ், விஜயன், பாபு, தினேஷ், பரத், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

    • நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்குதல் குழு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
    • பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து உயர்கல்வி தொடராத மாணவர்கள் உயர்கல்விக்கு வழிகாட்டும் இந்த ஆலோசனை குழுவை அணுகி உயர்கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சார்பில் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்குதல் குழு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பள்ளி படிப்பை முடித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டி வருகிறது.

    நடப்பாண்டில் நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்படவிருக்கும் பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டல், ஆலோசனை வழங்குதல் குழு (Career Guidance Cell) வருகின்ற 8.6.2023 முதல் செயல்படவுள்ளது.

    மேலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத, பள்ளி இடைநின்ற மாணவர்கள் தமது கல்வியைத் தொடரத் தகுந்த வாய்ப்பை உருவாக்குகின்ற வகையில் தலைமையாசிரியர் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர் தலைமையில் முன்னாள் மாணவர்கள் ஆதரவு பெறவும்,

    பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர்களை வலுப்படுத்தவும் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் வழிகாட்டலில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இணைந்து செயல்படவும், பயிற்சிகள் வழங்கவும் மாநிலக் கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் 18.04.2023 மற்றும் 19.04.2023 சென்னையில் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து, மாவட்ட அளவிலான பயிற்சிகள் வருகின்ற ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் மே மாதம் 5ஆம் தேதி வரை மாணவர்களின் நலன் மற்றும் முழு வளர்ச்சியில் வெவ்வேறு பங்குரிமையர்களான (Stakeholders) தலைமையாசிரியர்கள்.

    பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், பள்ளி மேலாண்மைக் குழு கல்வியாளர். பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், வட்டார வள மைய பயிற்றுநர்கள் மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள், மாணவர்கள் ஆகியோர் இணைந்து செயல்படவும், தொடர் பங்களிப்பை வழங்கிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன்படி தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பயிற்சிகள் 24.4.2023 முதல் 5.5.2023 வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து உயர்கல்வி தொடராத மாணவர்கள் உயர்கல்விக்கு வழிகாட்டும் இந்த ஆலோசனை குழுவை அணுகி உயர்கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம்.

    மேலும் இந்த குழுக்கள் இது போன்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் பணிகளை சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் கல்லூரி கல்வி இணை இயக்குநர் ராமலட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ஜெயபிரகாசம், கேசவ க்குமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் ரவிக்குமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தொண்டர்கள் கடுமையாக உழைக்க வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்: 

    நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேந்தமங்கலம், ஆட்டுப்பாக்கம், சம்பத்ராயன் பேட்டை, சித்தேரி உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான வடிவேல் தலைமை தாங்கினார். அப்போது நிர்வாகிகள் அனைவருக்கும் தங்கள் பகுதியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க விண்ணப்பம் வழங்கப்பட்டது.

    இதில் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் திமுகவுக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.வருகின்ற லோக்சபா தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

    இளம் வாக்காளர்களை அதிகளவில் தி.மு.க.வில் இணைக்க கிளை நிர்வாகிகள் தொடர்ந்து பாடுபட வேண்டும்.பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இதில் சயனபுரம் பஞ்சாயத்து தலைவர் பவானி, பொதுக்குழு உறுப்பினர் அப்துல் நசீர், புருஷோத்தமன், அரிகி ருஷ்ணன், வடகண்டிகை பாபு உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பேரூர் கழகச் செயலாளருமான வெங்க டேசன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • மேலும் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் சிறப்புரையாற்றினார்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி தி.மு.க. பேரூர் கழக சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கிளைச் செயலா ளர்கள் ஆலோ சனைக் கூட்டம் பேரூராட்சி தலைவரும், பேரூர் கழகச் செயலாளருமான வெங்க டேசன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தமிழ்மாறன் முன்னிலை வகித்தார்.

    மேலும் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் சிறப்புரையாற்றினார்.

    அப்போது மாரண்டஅள்ளியில் உள்ள 8 வாக்குச்சா வடிகளிலும் நியமிக்கப்பட்டுள்ள முகவர்கள் தங்கள் பணிகளை எப்படி மேற்கொள்வது என்பது குறித்தும், தலைமை கழகம் அறிவித்துள்ள ஒரு கோடி உறுப்பி னர்களை சேர்ப்பது தொடர்பாக 15 வார்டு கிளைச் செயலாளர்களுக்கும் ஆலோ சனை வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் ராஜகுமாரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், காரிமங்கலம் மேற்கு ஓன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோபால், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், மாவட்ட விவசாய அணி ரவி, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பாம்பே சக்தி, மாரண்டஅள்ளி பேரூராட்சி துணைத்தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம், கவுன்சிலர்கள் கார்த்தி கேயன், யதிந்தர், வெங்கடேசன், சத்யா சிவகுமார், ரீனா லட்சுமி, கீதா, அபிராமி மற்றும் தி.மு.க. பிரதிநிதிகள் குழந்தைவேலு, வடிவேலு, காந்தி, முனிராஜ், ரமேஷ் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    • உறுப்பினர் சேர்க்கை பணியை விரைந்து முடித்து அதற்கான படிவங்களை மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
    • தமிழக அரசின் சாதனை களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி ஆதரவு திரட்ட வேண்டும்

    தருமபுரி,

    தருமபுரி நகர தி.மு.க. நிர்வாகிகள் ஆலோ சனைக் கூட்டம், கட்சி அலுவ லகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகர அவை தலைவர் அழகுவேல் தலைமை தாங்கினார். நகர செயலாளர் நாட்டான் மாது வரவேற்று பேசினார். மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர் ரேணுகாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி, மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் டாக்டர் தருண் ஆகியோர் கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினர்.

    தருமபுரி நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் தலைமை கழகம் அறிவித்தப்படி உறுப்பினர் சேர்க்கை பணியை விரைந்து முடித்து அதற்கான படிவங்களை மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    தமிழக அரசின் சாதனை களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி ஆதரவு திரட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் நகர துணை செயலாளர்கள் முல்லைவேந்தன், அன்பழகன், கோமளவள்ளி ரவி, நகர பொருளாளர் சம்மந்தம், மாவட்ட பிரதிநிதிகள் கனகராஜ், சுருளிராஜன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் காசிநாதன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவுதம், மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவி, மாவட்ட தொண்டரணி செயலாளர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் என்.ஏ. மாது தலைமை தாங்கினார்.
    • புதிய உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைத்தல், வாக்கு சாவடி முகவர்கள் அமைப்பது ஆகியவை குறித்து விளக்கி பேசினர்

    தருமபுரி,

    தருமபுரி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடுப்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் என்.ஏ. மாது தலைமை தாங்கினார். மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் மெடிக்கல் சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான பி.பழனியப்பன், தலைமை கழக தொகுதி பார்வையாளர் அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைத்தல், வாக்கு சாவடி முகவர்கள் அமைப்பது ஆகியவை குறித்து விளக்கி பேசினர்.

    கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் லட்சுமணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் செல்லதுரை, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் பிரபு ராஜசேகர், ராசு தமிழ்ச்செல்வன், கட்சி நிர்வாகிகள் பாலாஜி, சோலை முனியப்பன் சர்கரை மற்றும் கிளை செயலாளர்கள், வாக்குசாவடி முகவர்கள் கலந்துக் கொண்டனர்.

    • ஈரோட்டில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் நேற்று இரவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ சார்பில் 3 கட்ட போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

    ஈரோடு:

    ஈரோட்டில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் நேற்று இரவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பி.சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணை ப்பா ளர்கள் விஜயமனோகரன், வீராகார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் நேரு பேசியதாவது:-

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

    7-வது ஊதியக்குழு, 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ சார்பில் 3 கட்ட போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

    முன்ன தாக நம் கோரிக்கை நிறை வேற்றாவிட்டால் வரும் 11-ந் தேதி சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். இப்போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் பங்கேற்பார்கள்.மேலும் நமது கோரிக்கை மனுவை தமிழகத்தில் உள்ள 234 தொகுதி எம்.எல்.ஏ.க்க ளிடமும் வழங்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எந்திரங்களைக் கொண்டு தான் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
    • எக்காரணத்தைக் கொண்டும் வெறும் கைகளால் சுத்தம் செய்யக்கூடாது

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் மனித கழிவுகளை அகற்றும் பணி குறித்து பணியாளர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

    அதில் பேசிய பேரூராட்சி செயல்அலுவலர் டார்த்தி தூய்மை பணியாளர்கள் மறுவாழ்வு சட்டம் 2013 படி அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் பாதாள சாக்கடை, செப்டிக் டேங்க், மனித மலம் ஆகியவற்றை கைகளால் சுத்தம் செய்யக்கூடாது.

    எந்திரங்களைக் கொண்டு தான் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் வெறும் கைகளால் சுத்தம் செய்யக்கூடாது என்பதனையும் எவர் கூறினாலும் உத்தரவிட்டாலும் மனித கழிவை கைகளால் அகற்ற கூடாது என அறிவுரை வழங்கினார்.

    இந்நிகழ்வில் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமை தாங்கினார். தூய்மை பேரூராட்சி தலைவர் துப்புரவு ஆய்வாளர் ரவிந்திரன், மற்றும் அனைத்து தூய்மை பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

    • பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    • அடிப்படை வசதிகள் செய்து தருவது உட்பட பல்வேறு பாதுகாப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கோபி:

    சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி யம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா மிகவும் விமர்சையாக நடந்து வருகிறது.

    இந்த விழாவில் ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமி ன்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். இதையொட்டி சத்திய மங்கலம், கோபிசெட்டி பாளையம், பவானி உள்பட மாவட்டத்தின் பல பகுதி களில் இருந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    இந்த நிலையில் இந்தாண்டுக்கான குண்டம் விழா நடத்து வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதையொட்டி பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நட வடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் வரு வாய்துறை, போலீஸ், வன த்துறை, அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, சுகா தாரத்துறை, போக்கு வரத்துதுறை உட்பட பல்வேறு துறை சார்ந்த அதி காரிகள் கலந்து கொண்ட னர்.

    இதில் கார், இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இட வசதி, கண்காணிப்பு கோபுரம் அமைப்பது, வாகப் போக்குவரத்தை திருப்பி விடுவது, கூட்ட த்தைக் கட்டுப்படுத்துவது, குண்டம் இறங்கும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் செய்து தருவது உட்பட பல்வேறு பாதுகாப்பு கள் குறித்து விவாதிக்க ப்பட்டது.

    இக்கூட்டத்தில் சத்தியமங்கலம் ஏ.எஸ்.பி. ஐமன் ஜமால், தாசில்தார் சங்கர் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    • புத்தக திருவிழா ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடந்தது.
    • மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரை புத்தக திருவிழா நடக்க உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் புத்தக திருவிழா ஆலோசனைக் கூட்டம் சேவை சங்கங்கள், தமிழ் சங்கங்கள், தன்னார்வு நிறுவனங்கள் மற்றும் பொதுநல அமைப்புக்கள், அரசுத்துறை அலுவலர்க–ளுடன் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு வாசிப்புத்திறனை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாவட்டம் தோறும் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் எதிர்வரும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரை புத்தக திருவிழா நடத்தப்படவுள்ளது. இத்திருவிழா சிறப்பாக நடைபெற உங்களை சார்ந்த குடும்பங்கள், நண்பர்கள் அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும்.

    இதுகுறித்த புரிதல் மற்றும் விழிப்புணர்வு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உங்கள் ஒவ்வொருக்கும் பங்கு உள்ளது. பள்ளி மாணவர்களிடையே வசிப்பு திறன் மேன்படுத்தும் ஒன்றாக இந்த புத்தக திருவிழா அமையும். அரசு பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த புத்தக திருவிழாவில் உள்ளுர் கலைஞர்கள், புத்தக வெளியீட்டாளர்கள், சொற்பொழிவாளர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும். அனைத்து தரப்பினரும் புத்தக திருவிழா வெற்றி பெற பங்கெடுத்து கொள்ள வேண்டும்.

    எதிர்கால சங்கதிகளிலிருந்து புதிய ஆளுமைகளை உருவாக்கும் நாற்றாங்களாக புத்தக திருவிழா அமைவதற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஒவ்வொருவரும் தன்முனைப்போடும், அர்பணிப்போடும் புத்தக கண்காட்சி நடத்த சீரோடும், சிறப்போடும் மாநில அளவில் பாராட்டக்கூடிய அளவில் அமைவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக புத்தக திருவிழா லோகோவினை மாவட்ட கலெக்டர்.சாருஸ்ரீ வெளியிட்டார். இவ்ஆலோசனைக் கூட்டத்தில் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, தமிழ் சங்கம், விவசாயிகள் சங்கம், கல்லூரி முதல்வர்கள், அமைப்பு சாரா நிறுவனங்களின் பிரிதிநிதிகள், மற்றும் வர்த்தக சங்கம், அனைத்து தரப்பு பிரிதிநிதிகள், அனைத்து அரசுத்துறை உயர் அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×