search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 245675"

    • அமைச்சர்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி ஆகியோர் ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வந்தார்.
    • சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.67 கோடி மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. 8 மாடிக்கொண்ட கட்டிடத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் எ.வ வேலு, சு.முத்துசாமி ஆகியோர் இன்று ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வந்தார்.

    அங்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியாக சென்று கட்டிடம் தரமாக கட்டப்பட்டுள்ளதா? என்ற ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஈரோடு தலைநகரில் அமைந்துள்ள மருத்துவ மனையில் கூடுதலாக 350 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரூ. 67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. 11.3.2021 ஆம் ஆண்டு கட்டிட பணி தொடங்கியது.

    கட்டுமான பணிகள் தரமாக உள்ளதா என்பது குறித்து செய்தோம். தரமான பொருட்களை பயன்படுத்தி தான் கட்டப்பட்டுள்ளது. இன்னும் சிறு சிறு பணிகள் மட்டும் உள்ளது. ஒரு மாத காலத்திற்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும்.

    சாலை பணியாளர்கள் நியமனம் செய்யும்போதே சாலை பணிகளுக்கு தான் என்றும் அவர்களுக்கு பதவி உயர்வு என்பது அரசாங்க விதிகளிலே இல்லை.

    கோபியில் சங்கம் என்ற பெயரில் சாலை பணியாளர்களை தூண்டி விட்டு போராட்டம் செய்து வருகின்றனர்.போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ள சாலை பணியாளர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெருந்துறையில் அதிக விபத்து ஏற்படுவதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையின்படி நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

    அடுத்த முறை டெல்லிக்கு செல்லும் போது பாலம் வருவதற்கு வலியுறுத்தி தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்கும்.நெடுஞ்சாலை துறையில் பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் கடைநிலை ஊழியர்களுக்கு ஆண்டு தோறும் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்படும் நிலையில் இளநிலை உதவியாளர், உதவியாளர் மற்றும் மேற்பார்வை யாளர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட வில்லை என்ற கேள்விக்கு, நெடுஞ்சாலை துறையில் 2003க்கு பின்னால் இருப்பவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க கூடாது எனவும் தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    இதனை தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது . ஆய்வின் முடிவில் முதல்வர் ஆணையின் படி பதவி உயர்வு வழங்கப்படும்.விதிக்கு உட்பட்டு அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, அந்தியூர் செல்வராஜ் எம்.பி. பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • தாராபுரம் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் கட்டிடப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
    • ரூ.24 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

    தாராபுரம் : 

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனை யில் ரூ.24 கோடியில் நடந்து வரும் கூடுதல் கட்டிடப்ப ணிகளை கலெக்டர் வினீத் தலைமையில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:-

    தாராபுரம் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் கட்டிடப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தாராபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.24 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.இதில் தரைத்த ளம் 865 ச.மீட்டரிலும், முதல் தளம் 820 ச.மீட்டரிலும், 2-ம் தளம் 820 ச.மீட்டரிலும், 3-ம் தளம் 820 ச.மீட்ட ரிலும், 4-ம் தளம் 820 ச.மீட்டரிலும், 5-ம் தளம் 820 ச.மீட்டரிலும், 6-ம் தளம் 820 ச.மீட்டரிலும் கட்டப்பட்டு வருகிறது.தாராபுரம் அரசு மருத்துவமனையில் தரைத்தளத்தில் வரவேற்பறை, கதிரியக்க அறை, சி.டி.ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் அறை ஆய்வகம் 2 எண்ணிக்கையி லும், அல்ட்ரா கதிர்வீச்சு அறை வெளிப்புற நோயாளிக ளுக்கான இருதய சிகிச்சை அறை-மருந்தக இருப்பு அறைகளும், முதல்தளத்தில் டயாலிசிஸ் வார்டு பணி மருத்துவர் அறை பணி செவிலியர் அறை, தீவிர சிகிச்சை பிரிவு பதிவறை, மருந்து இருப்பு அறை, சாய்த ளம் கழிவறை வசதிகளுடன் கட்டப்படுகிறது.2-ம் தளத்தில் அறுவை அரங்கு 2 எண்கள், நோயா ளிகள் அறுவை சிகிச்சைக்கு தயார்படுத்தும் அறை, பணி மருத்துவர் அறை பணி செவிலியர் அறை, கழிவறை மற்றும் சாய்தள வசதிகளுடனும். 3-ம் தளத்தில் பெண் களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு (எலும்பு பிரிவு) ஆண்களுக்கான அறுவை சிகிச்சை வார்டு மருத்துவ சிகிச்சை பிரிவு, பணி மருத்துவர் அறை, பணி செவிலியர் அறைகள்.

    4-ம் தளத்தில் ஆண்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, எலும்பு பிரிவு பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு, பணி மருத் துவர்அறை, பணி செவிலியர் அறை சாய்தளம் கழிவறை வசதிகளுடனும், 5-ம் தளத்தில் குழந்தைகளுக்கான பிரிவு, காப்பீடு திட்ட பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்கள் பணி மருத்துவர் அறை, பணி செவிலியர் அறை, சாய்த ளம் கழிவறை வசதிகளுடனும் 6-ம் தளத்தில் கண் சிகிச்சை பிரிவு (ஆண்கள் மற்றும் பெண்கள்),ரத்த வங்கி, கூட்ட அரங்கம், சாய்தளம் கழிவறை வசதிகளுடனும் கட்டப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

    தாராபுரம் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப் பட்டு வரும் கூடுதல் கட்டிடப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு. பணிகளை விரைந்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அமைச்சர்.மு.பெ.சாமிநாதன் அறிவு றுத்தினார்.ஆய்வின் போது திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்ட லத்தலைவரும்,தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன், தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன், தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் செந்தில்குமார், இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) கனகராணி, செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) தியாகராஜன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு செய்தனர்.
    • 1,500-க்கும் மேற்பட்ட பருவகால தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

    தமிழக அரசின் நேரடி நிர்வாகம் மூலம் வாலி நோக்கத்தில் 1974-ம் ஆண்டு தமிழ்நாடு உப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது. வணிக ரீதியாக 1978-ம் ஆண்டு முதல் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சுமார் 5,236 ஏக்கர் நிலப்பரப்பளவில் செயல்படுகின்றன.

    1,500-க்கும் மேற்பட்ட பருவகால தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் முதல்வர் உத்தரவுக்கிணங்க சட்ட மன்றத்தில் அறிவித்த படி அயோடின் கலந்த கல் உப்பு மற்றும் சுத்திக ரிக்கப்பட்ட அயோடின் கலந்த தூள் உப்பு ஆகியவற்றை நெய்தல் உப்பு என்ற வணிகப் பெயரில் வெளிச்சந்தையில் உற்பத்தி செய்திட ஏதுவாக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

    இதுவரை 25 டன் நெய்தல் உப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளது மேலும் அயோடின் செரியூட்டப்பட்ட உப்பு மற்றும் இருவித செரியூட்டப்பட்ட உப்பினை பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் வேலை வாய்ப்பு அதிகரிக்க தேவையான உட் கட்ட மைப்புகளை மேம்படுத்த மாவட்ட கலெக்டர் மூலம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் இப்பகுதியில் பொதுமக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஆய்வின்போது உப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜாமணி, மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், தமிழ்நாடு அரசு நிறுவன தனி அலுவலர் தில்லி குமார், திட்ட மேலாளர் விஜயன், துணை மேலாளர்கள் ராமகிருஷ்ணன், வெங்கடேசன், முத்து செல்வன், மேலக்கிடாரம் ஒன்றிய கவுன்சிலர் பார்வதி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜெயபாலன், ஆப்பனூர் ஆறுமுகவேல், குலாம் முகைதீன் அமைச்சரின் நேர்முக உதவியாளர் கண்ணன், முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலக அலுவலர்கள் சத்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • சென்னிமலையில் திருப்பூர் குமரனுக்கு உருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது குறித்து ஆய்வுமேற்கொள்ள ப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலையில் பிறந்து நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த தியாகி திருப்பூர் குமரனுக்கு சென்னிமலையில் நினைவு அரங்கம் அமைக்க வேண்டும் என சென்னிமலை நகர மக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    தற்போது தியாகி குமரனுக்கு நினைவு அரங்கம் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் சென்னிமலையில் உருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கு 3 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அமைச்சர்கள் பேசியதாவது:

    சென்னிமலையில் பிறந்து திருப்பூரில் 1932-ம் ஆண்டு நடந்த சுதந்திர போரட்டத்தில் பங்கேற்று தேசத்திற்காக தன் இன்னுயிரை துறந்த திருப்பூர் குமரனை பெருமைப்படுத்தும் விதமாக கடந்த 2017-ம் ஆண்டு முதல் அவரது பிறந்த நாள் விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப் பட்டு வருகிறது.

    தொடர்ந்து முதல்- அமைச்சர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சம்பத்நகர் பிரதான சாலைக்கு தியாகி குமரன்சாலை, சம்பத்நகர் என்று பெயர் சூட்டி சிறப்பு சேர்த்துள்ளார். அந்த வகையில் திருப்பூர் குமரனுக்கு மேலும் பெருமைப்படுத்தும் வகையில், சென்னிமலையில் உருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது குறித்து ஆய்வுமேற்கொள்ள ப்பட்டது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட கவுன்சிலரும், சென்னிமலை மேற்கு ஒன்றிய செயலாளருமான எஸ்.ஆர்.எஸ்.செல்வம், சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் பி.செங்கோட்டையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.பிரபு, நகர செயலாளர் ராமசாமி, சென்னிமலை யூனியன் சேர்மேன் காயத்ரி இளங்கோ, டவுன் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீ தேவி அசோக், பொதுக்குழு உறுப்பினர் சா.மெய்யப்பன், வெங்கமேடு ஈஸ்வரமூர்த்தி,

    முன்னாள் மாணவர் அணி நிர்வாகி தி.சேகர், இளைஞர் அணி நிர்வாகிகள் குமராவலசு இளங்கோ, பிடாரியூர் சதீஸ், கொடுமணல் கோபால், நகர இளைஞர் அணி அசோக், ரமேஷ் என்கிற குணசேகரன், மெற்குறி தங்கவேல், அம்மா பாளையம் ஈஸ்வரமூர்த்தி, முகாசி பிடாரியூர் சி.கே. ஆறுமுகம், குமரன் பேரவை விஸ்வநாதன், சிவக்குமார், முருங்கத்தொழுவு மு.சி., துரைசாமி, எக்கட்டாம் பாளையம் அல்லி முருகன், கவுண்டிச்சிபாளையம் முருகேசன் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிள் உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சுமார் 3,500 மாணவர்களின் சான்றிதழ்கள் தீக்கிரையானது.
    • இதுவரை 22 சிறார்கள் உள்ளிட்ட 278 பேர் கைது, கைது நடவடிக்கை தொடரும்.

    சின்னச்சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து நிகழ்ந்த கலவரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி சூறைப்பட்டப்பட்டது.

    அந்த பள்ளியில் இன்று தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தீக்கிறையான பள்ளி அறைகள் மற்றும் அலுவல அறைகளை அவர்கள் பார்வையிட்டனர்.

    பின்னர் கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல்துறையினரை சந்தித்த அவர்கள் ஆறுதல் கூறினார்.

    தொடர்ந்து செய்தியாளர்களை அமைச்சர்கள் சந்தித்தனர். அப்போது அமைச்சர் ஏ.வ.வேலு பேசியதாவது:

    மாணவி இறப்பு தொடர்பாக சமூக வலைதளத்தின் மூலம் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் ஒன்று கூடி தவறான முடிவை எடுத்து விட்டனர்.

    தவறான தகவலால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வளவு பேர் திரள்வார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த வன்முறையில் 37 பேருந்துகள் உட்பட 67 வாகனங்கள் தீக்கிரையானது.

    சுமார் 3,500 மாணவர்களின் சான்றிதழ்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குள் இருந்த மாணவர்களுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளித்தனர். போராட்டத்தை காவல்துறை சிறப்பாக கையாண்டு உள்ளது.

    வன்முறை தொடர்பாக இதுவரை 22 சிறார்கள் உள்ளிட்ட 278 பேர் கைது. கைது நடவடிக்கை தொடரும். தவறு யார் செய்தாலும், இந்த அரசு அதை அனுமதிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஊட்டியில் தலைக்குந்தா பகுதியில் மரங்கள் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள இடங்களை அமைச்சா்கள் பாா்வையிட்டனர்.
    • மின் இணைப்புகள் சேதமடை–ந்த பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மின் ஊழி–யா்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, முதல்-அமைச்சரின் உத்தரவின்படி பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு மேற்கொள்ள தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி மற்றும் நில நிா்வாக ஆணையா் எஸ்.கே.பிரபாகா் ஆகியோா் ஊட்டி வந்தனர்.

    வனத்துறை அமைச்சா் ராமச்சந்திரனுடன் ஊட்டி மற்றும் கூடலூா் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அவர்கள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

    ஊட்டியில் தலைக்குந்தா பகுதியில் மரங்கள் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள இடங்களை அமைச்சா்கள் பாா்வையிட்டனர்.

    பின்னர் வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் நிருப–ர்களிடம் கூறியதாவது:-

    மாவட்டத்தில் மழையால் எந்தெந்த இடங்களில் பாதிப்புகள் அதிகம் உள்ளதோ அந்த இடங்களில் எதிா்காலத்தில் பாதிப்பு ஏற்படாதவாறு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    வெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்த பின், அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பணிகள் மேற்கொள்ளப்படும்.

    பேரிடா் மீட்புக் குழுவினா் 80 போ் அரக்கோணத்தில் இருந்து நீலகிரிக்கு வந்துள்ளனா். இவா்களில் 40 போ் உதகையிலும், 40 போ் கூடலூரிலும் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு–ள்ளனா். தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாகவும் பேரிடா் மீட்புப் படையினா் வரவழைக்கப்படுவா்.

    கூடலூா் பகுதிகளில் மழையால் பாதிப்படைந்து முகாம்களில் தங்க–வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளது. மின் இணைப்புகள் சேதமடை–ந்த பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மின் ஊழி–யா்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

    சனிக்கிழமைக்குள்(இன்று) இந்த சீரமைப்புப் பணிகள் நிறைவடையும்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி மற்றும் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் உடனிருந்தனா்.

    ×