search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நரேந்திரமோடி"

    • ஆசியான் மாநாட்டில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
    • நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஆசியா அமைப்பின் 19-வது உச்சி உச்சி மாநாடும் அங்கு நடைபெறுகிறது. இந்த மாநாடுகளில் பங்கேற்க 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி லாவோஸ் நாட்டுக்கு சென்றுள்ளார்.

    அங்கு நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

    பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நான் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன். இந்திய நாட்டை நான் நேசிக்கிறேன், மிகவும் மதிக்கிறேன். நியூசிலாந்தில் உள்ள இந்தியர்கள் திறமையாக செயலாற்றி வருகிறார்கள். அவர்கள் மிகுந்த உத்வேகம் அளிப்பவர்கள், கடின உழைப்பாளிகள்.

    பிரதமர் மோடியுடனான சந்திப்பு அற்புதமாக இருந்தது. என்னை இந்தியாவுக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். அதற்கான சரியான நேரத்தை நாங்கள் விரைவில் முடிவு செய்வோம். இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான உறவை மேலும் பலப்படுத்த தொடர்ந்து உழைப்போம்."

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
    • பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பின் முக்கியப் பிரச்சினை குறித்த எனது கடிதத்திற்கு நீங்கள் ஏன் பதிலளிக்கவில்லை?

    கொல்கத்தா:

    கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.

    இந்நிலையில் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக முக்கிய பிரச்சனை குறித்த எனது கடிதத்திற்கு தாங்கள் பதில் அனுப்பாதது ஏன்?

    பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நிலையை உணராது மத்திய அமைச்சர் எனது கடிதத்திற்கு பதில் அனுப்பியுள்ளார்.

    பாலியல் குற்றவாளிகளுக்கு முன்மாதிரியான தண்டனை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தரப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஐ.பி.எல் இறுதிப்போட்டியை காண திரைப்பிரபலங்கள் பலர் சென்றிருந்தனர்.
    • கனமழை காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெறம் என அறிவிக்கப்பட்டது.

    16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கியது. லீக் போட்டிகள் மே 21-ந் தேதியுடன் முடிந்தது. இதன் முடிவில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. பிளே ஆப்' சுற்று கடந்த 23-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடைபெற்றது. இதன் முடிவில் குஜராத் - சென்னை அணிகள் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.


    நரேந்திரமோடி மைதானம்

    ஐபிஎல் இறுதிப்போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் கனமழை தொடர்ந்து பெய்து வந்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெறம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இறுதிப்போட்டியை காண வந்த திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதில் ரசிகர்கள் பலர் அகமதாபாத் ரெயில் நிலையத்தில் உறங்கினர். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    நரேந்திரமோடி மைதானத்தில் விக்னேஷ் சிவன்

    இந்நிலையில் இன்று நடக்கவுள்ள இறுதிப் போட்டியை இயக்குனர் விக்னேஷ் சிவன் காணவுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "இன்று முழு போட்டி நடக்க பிரார்த்தனை செய்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். போட்டியின் போது மழை பெய்து, அது நின்றவுடன் ஓவர்கள் குறைவாக வைத்து விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


    • மோடியின் அரசியல் வாழ்க்கையை சேதப்படுத்தும் வகையில் அகமது படேல் செயல்பட்டார்.
    • கலவர வழக்கு தொடர்ந்த செடல்வாட்டிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

    குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்துக்கு மறுநாள் நரோடா பாட்டியா என்ற இடத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. இதில் 97 சிறுபான்மையினர் கோரமாக கொல்லப்பட்டனர்.

    இந்த வழக்கில் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடி மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை கடந்த மாதம் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு, மோடி குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கியது.

    இந்த வழக்கில் போலி ஆவணங்களை தயாரித்து மக்களை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், குஜராத் கலவர வழக்கில் மோடியை சிக்க வைக்கும் சதியின் பின்னணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருந்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

    இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளதாவது:

    சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் மறைந்த அகமது படேல், குஜராத் மாநிலத்தில் பாஜக அரசை சீர்குலைக்கவும், மோடியின் அரசியல் வாழ்க்கையை சேதப்படுத்தும் வகையிலும் செயல்பட்டார். எனினும் அவர் சோனியாகாந்தியால் இயக்கப்பட்டார்.

    சிறப்புப் புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்ட டீஸ்டா செடல்வாட், நீதிமன்றத்தின் முன் அளித்த வாக்குமூலத்தில் அகமது பட்டேல் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக தனிப்பட்ட பயன்பாட்டிற்காக செடல்வாட் மனைவியிடம் 30 லட்சம் ரூபாய் பணத்தை படேல் வழங்கியதாக சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பணம் சோனியாகாந்தி வழங்கியது.

    குஜராத் கலவர வழக்குகளைத் தொடர்ந்த செடல்வாட்டிற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

    தேசிய ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் அவர் சேர்க்கப்பட்டார். இது குறித்து சோனியா காந்தி விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு சம்பித் பத்ரா குறிப்பிட்டுள்ளார்.

    ×