search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பச்சிளம் பெண் குழந்தை"

    • மதுரை அருகே பிறந்து 47 நாளில் பச்சிளம் பெண் குழந்தை உயிரிழந்தது.
    • அந்த குழந்தைக்கு திடீரென சளி, காய்ச்சலால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கர்ப்பிரியாக இருந்த முத்துலட்சுமிக்கு கடந்த 47 நாட்களுக்கு முன்பு 2-வதாக பெண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் அந்த குழந்தைக்கு திடீரென சளி, காய்ச்சலால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் காய்ச்சல் குறையவில்லை.

    இதையடுத்து மேல் சிகிச்சைக்காக குழந்தையை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பச்சிளம் பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை நகரில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் பிறந்த பச்சிளம் குழந்தை காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. மழை காலத்தில் வேகமாக பரவும் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்றவற்றை தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    • பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை விற்பனையை செய்யப்பட்டதா என விசாரணை நடந்து வருகிறது.
    • 5 பெண்களிடம் நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாரி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது உசிலம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்த சின்னப்பாண்டி மனைவி பாண்டியம்மாள் (வயது60) என்பவர் பச்சிளம் பெண் குழந்தையுடன் பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தார்.

    போலீசார் அவரிடம், குழந்தை குறித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். இதனால் பாண்டி யம்மாள் மீது சந்தேகம் வலுத்தது. இதையடுத்து போலீசார் குழந்தையை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து பாண்டியம்மாளை போலீஸ் நிலை யத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்பனை செய்ய வந்தது தெரியவந்தது. இதற்கு அந்த குழந்தையின் தாய் மற்றும் மாலதி, கருப்பசாமி மனைவி அழகுபாண்டி, கரும்பாலை நாகராஜன் மனைவி பாண்டியம்மாள் ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வறுமை அல்லது பெண் என்பதால் குழந்தையை விற்க முற்பட்டார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிதம்பரம் தில்லைகாளியம்மன் கோவில் எதிரே குளத்தில் பச்சிளம் பெண் குழந்தை பிணமாக மிதந்தது.
    • பெண்குழந்தை உடலை மீட்ட போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லைகாளியம்மன் கோவில் எதிரே குளம் உள்ளது. இந்த குளத்தில் இன்று காலை பிறந்து 2 நாளே ஆன பச்சிளம் குழந்தை பிணம் மிதந்தது. இந்த குழந்தை உடல் குளத்தில் வடக்கு கரை ஓரம் கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் விரைந்தனர். பெண்குழந்தை உடலை மீட்ட போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் குழந்தையை வீசி சென்றது யார் ?பிறந்ததால் வீசி சென்றாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×