search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 245827"

    • அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அம்மனுக்கு சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்க ளால் அபிஷேகம் நடைபெற்றது.
    • மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அம்மனுக்கு சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்க ளால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன், மாசாணி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் நன்செய் இடையாறு மகா மாரியம்மன், பரமத்திவேலூர் மகா மாரியம்மன், செல்லாண்டி அம்மன், பேட்டை பகவதி அம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மகா மாரியம்மன், சேளூர் மகா மாரியம்மன், அய்யம்பாளையம் மாரியம்மன், பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், செல்லாண்டி யம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், பகவதி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.

    ஈரோடு:

    ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையை யொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மகா தீபாராதணை காண்பிக்கப்ப ட்டது. கருங்கல்பாளையம் சோளீஸ்வரர்கோவில் வில்வேஸ்வரர், புஷ்பநாயகி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    இதேபோல், சின்னமாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கொங்காலம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆடி 2-ம் வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் மிகவும் புகழ்பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று அதிகாலையிலே நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடை பெற்றது.

    சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பொதுமக்களுக்கு அருள் பாலித்தார். பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் தண்டு மாரியம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. தாளவாடியில் உள்ள மாரியம்மன் கோவில், பவானி கருமாரியம்மன் கோவில், புகழ்பெற்ற செல்லியாண்டி அம்மன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    கோபிசெட்டிபாளையம் கொண்டத்து காளியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய ப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.

    சாரதா மாரியம்மன் கோவில், அந்தியூரில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    • ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடும் நடத்தப்படும். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். குறிப்பாக பெண்கள் திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.

    இந்நிலையில், இன்று ஆடி மாத முதல் வெள்ளி க்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதணை காண்பி க்கப்பட்டது.

    ஈரோடு கருங்கல்பாளையம் சோளீ ஸ்வரர்கோயிலில் வில்வே ஸ்வரர், புஷ்பநாயகி அம்ம னுக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்த னர்.

    இதேபோல், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கொங்காலம்மன், எல்லை மாரியம்மன் வீரப்பன் சத்திரம் மாரிய ம்மன், ராஜாஜிபுரம் மாகாளிய ம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் ஆடி முதல் வெள்ளியையொட்டி இன்று சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் மிகவும் புகழ்பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பொதுமக்களுக்கு அருள் பாலித்தார்.

    பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர். இதேபோல் சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவிலிலும் இன்று ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

    தாளவாடியில் உள்ள மாரியம்மன் கோவில் பவானியில் கருமாரியம்மன் கோவில், புகழ்பெற்ற செல்லியாண்டி அம்மன் கோவிலிலும் பக்தர் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இதேபோல் சாரதா மாரியம்மன் கோவில் அந்தியூரில் உள்ள பத்தி ரகாளி அம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    கோபிசெட்டிபாளையம் கடைவீதியில் உள்ள சாரதா மாரியம்மன் கோவிலில் காலை 6 மணி அளவில் அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்கள் அடங்கிய அபிஷேகங்கள் நடைபெற்றன.

    இதைத் தொடர்ந்து அம்மனுக்குஅலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதியிலிருந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

    மேலும் கோபி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், கொளப்பலூர் பச்சை நாயகிஅம்மன் கோயில், அளுக்குளி செல்லாண்டி யம்மன் கோவில், காசிபாளையம் கரிய காளியம்மன் கோவில், கோபி புதுப்பாளையம் மகா மாரியம்மன் கோவில், சீதாலட்சுமிபுரம் தண்டு மாரியம்மன் கோவில், மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    • சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி இன்று அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

     ஈரோடு:

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். குறிப்பாக பெண்கள் திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.

    இந்நிலையில் இன்று ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதில், ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது.

    ஈரோடு கருங்கல்பாளையம் சோளீஸ்வரர்கோவிலில் வில்வேஸ்வரர், புஷ்பநாயகி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    இதேபோல், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கொங்காலம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் ஆடி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது.

    இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் மிகவும் புகழ்பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி இன்று அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பொதுமக்களுக்கு அருள் பாலித்தார்.பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் தண்டு மாரியம்மன் கோவிலிலும் இன்று ஆடி மாத பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. தாளவாடியில் உள்ள மாரியம்மன் கோவில், பவானி கருமாரியம்மன் கோவில், புகழ்பெற்ற செல்லியாண்டி அம்மன் கோவிலிலும் பக்தர் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இதேபோல் கோபியில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

    நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசை நின்று அம்மனை வழிபட்டனர். இதேபோல் சாரதா மாரியம்மன் கோவில் அந்தியூரில் உள்ள பத்தரகாளியம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. 

    ×