search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இண்டிகோ விமானம்"

    • இண்டிகோ விமான பணிப்பெண் தன்னை நபிரா சம்சி என்று அறிமுகப்படுத்தி கொண்டு தொடங்குகிறார்.
    • விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றும் தனது தாய் ராம் சம்சியை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்வதாக கூறி அவரை அழைக்கிறார்.

    அன்னையர் தினத்தையொட்டி இண்டிகோ விமான நிறுவனத்தால் பகிரப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதில், இண்டிகோ விமான பணிப்பெண் தன்னை நபிரா சம்சி என்று அறிமுகப்படுத்தி கொண்டு தொடங்குகிறார். பின்னர் அதே விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றும் தனது தாய் ராம் சம்சியை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்வதாக கூறி அவரை அழைக்கிறார். தொடர்ந்து, தனது தாயார் 6 வருடங்கள் கேபின் குழுவினராக வேலை செய்வதை பார்த்து வருவதாகவும், அவர் எனக்கு ஒரு உத்வேகமாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

    அவருக்கு முன்னால் நானும் ஒரு விமான பணிப்பெண்ணாக நிற்பதில் பெருமை கொள்வதாக கூறி தனது அன்னைக்கு அன்பு முத்தம் கொடுக்கிறார். அப்போது அவரது தாயின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தோடுகிறது. நபிரா இந்த அறிவிப்பை முடித்ததும் பயணிகள் இருவரையும் ஆரவாரம் செய்து, கை தட்டி பாராட்டுகின்றனர். இந்த வீடியோ அதிகமான பார்வைகளை குவித்து வருகிறது. ஏராளமானோர் உணர்ச்சிபூர்வமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • இண்டிகோ விமான நிறுவனம் இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றாகும்.
    • ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டில் 49 நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது.

    கொல்கத்தா :

    இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ விமான நிறுவனம் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இருந்து தினமும் 150க்கும் அதிகமான விமானங்களை இயக்கி சாதனை படைத்துள்ளதாக அந்த நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் சஞ்சீவ் ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, இதுப்பற்றி அவர் கூறுகையில் "இண்டிகோ இப்போது ஐதராபாத்தில் இருந்து தினசரி 150க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." என்றார்.

    இண்டிகோ விமான நிறுவனம் தற்போது ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டில் 49 நகரங்களுக்கும், வெளிநாடுகளில் 8 நகரங்களுக்கும் விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமானத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கோவை செல்ல இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • ஐதராபாத்தில் இருந்து, சென்னை வர வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து கோவைக்கு இன்று காலை 10 மணிக்கு புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கோவை செல்ல இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேப்போல் போதிய பயணிகள் இல்லாததால் இன்று மாலை 4:30 மணிக்கு, சென்னையில் இருந்து ஐதராபாத் செல்லும் விமானம் கோவையில் இருந்து இன்று பகல் 12:45 மணிக்கு சென்னை வர வேண்டிய விமானம், மாலை 3:15 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து, சென்னை வர வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சென்னையில் இன்று ஒரே நாளில் 4 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஓடுபாதையில் விமானம் சென்றபோது தீப்பொறிகள் வெளிப்பட்டது.
    • விமான பயணிகள் பத்திரமாக இருப்பதாக தகவல்.

    டெல்லி விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு இரவு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் (6E-2131)எஞ்சின் பகுதியில் தீப் பொறி பறந்ததால் மீண்டும் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

    எனினும் பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக கூறப்படுகிறது. விமானம் வானில் பறப்பதற்காக ஓடுபாதையில் சென்றபோது தீப்பொறிகள் வெளிப்படும் வீடியோ ஒன்றை அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இது சமூக வளைதளத்தில் வைரலானது. முன்னதாக வியாழன் அன்று, டெல்லிக்கு புறப்பட்ட மற்றொரு விமானம் மீது பறவை மோதியது, இதன் காரணமாக அந்த விமானம் இஞ்ஜின் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • விமானம் புறப்பட இருந்த நிலையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல்,
    • பயணிகள் வெளியேற்றப்பட்ட பின்னர் விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது.

    பாட்னா:

    இண்டிகோ நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று நேற்றிரவு 8.20 மணிக்கு, பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட தயாரானது. அப்போது விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

    இதையடுத்து விமானம் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன. மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார், விமானம் முழுவதையும் சோதனை இடப்பட்டது. 


    இதில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காத நிலையில் அது புரளி என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து வெடிகுண்டு புரளியை கிளம்பியதாக பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த விமானம் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×